கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (காவணம் 1 results found)

காவணம்

: சோலை ; நந்தவனம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (காவணம் 2 results found)

திருக்காவணம்

:
  • கோயில் திருவிழாக்களிலொன்றில் இறைவன் திருமேனி எழுந்தருளுவதற்குரியதாக சோலைகளின் நடுவே அமைக்கப்பெறும் ஒப்பனை செய்யப்பட்ட பந்தல். ஓலை, மா விலை, தாழைக்காய் தென்னைகுருத்து ஆகியவற்றால் ஒப்பனை செய்யப்பெற்று சோலையைப் போன்ற தோற்றம் கொள்வதால் காவணம் என்னும் பெயர் பெறுவதாயிற்று.

  • “திருமழபாடி உடையார் - காவேரி ஆற்றிற் கெழுந்தருளவும் ஆற்றிலே திருமண்டபம் கட்டி, திருக்காவணம் இட்டு”

  • தெ. கல். தொ. 5. கல். 628

தேவாசிரியன் திருக்காவணம்

:
  • திருவாரூர்க் கோயிலில் உள்ள கருங்கல் திருப்பணியாக அமைந்த பெருமண்டபத்தின் சிறப்புப் பெயர். காவணம் - கல் மண்டபம்

  • “இவ்வனைவோம் தேவாசிரியன் திருக்காவணத்தே கூட்டம் குறைவறக்கூடி”

  • தெ. கல். தொ. 17. கல். 598

  • “தேவாசிரியன் எனுந் திருக்காவணம்”
    (பெரிய - என்பர் சேக்கிழாரடிகள்)”