Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (சோமனாக நல்லூர் 171 results found)
Word Book Name Page

அழகிய பாண்டியன் நல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

46

இராச சூளாமணிநல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

27

இராசராசநல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

51 53 75

உலகளந்த சோழநல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

51 53

எறிபடைநல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

105

சக்கரபாணி நல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

67

திருமாலிருஞ்சோலை நல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

57 94

நல்லூர் அரையன்

:

Azhagar Koil Kalvettiukkal

12

நாச்சிநல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

4

பெருமாள் நல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

27

மண்டலாதித்த நல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

17

மதுராயுதநல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

32

மதுரோதைய நல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

17

விச்சாதிர நல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

159

விசயாலைய நல்லூர்

:

Azhagar Koil Kalvettiukkal

18

அதிசய சோழ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

236

அமரபுயங்க்‌ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

276 296 325

அரியபிராட்டி நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

348 258 371 400

இராசராச நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

159 231 321 350

இராசராசடியான வீரசோழ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

74

இராஜராஜ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

214

உக்கிரமாந வீரசோழ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

137

கடி கூவலானன வானவன்மாதேவி நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

365

குலசேகர நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

14

சோழ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

74

நல்லூர்க்கா

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

126 258 348

நிலைமை அழகிய சோழ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

1

பெருமாடகனாச்சி நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

265

பெருமாடகனாச்சி நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

265

விக்கிரம சோழ நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

305

வீரகிராசேந்திர நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

303

வீரகேரள நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

261 262 269

வீர்ராசேந்திர நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

298

வீரபாண்டிய நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

156

அரியபிராட்டி நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

120

கண்டரவீம நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

132

நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

58 72 117

வீரபாண்டிய நல்லூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

8 9

அம்பலத்தாடி நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

96

ஆய்க்குடியான அழகிய பாண்டிய நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

69

ஆனந்தூரான அவிதாய சுந்தர நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

152

இறங்கல்‌ மீட்டபெருமாள்‌ நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

6

கலிகுடியான திருமறை நாயக நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

176

கற்குழியான வேதநாயக நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

55

காப்புக்கால்‌ நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

183

கீர்த்தி விசரலயநல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

264

சக்கரபாணி நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

84

சிறுகுளமான வேதநாயக நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

37

சிவதிராக்குடியான வேதநாயக நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

6

செங்குளமான நாற்பத் தெண்ணாயிர நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

50

சோனாடு கொண்ட பெருமாள் நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

20

தேவநல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

39

பகையனேரியான அழகப்‌ பெருமா நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

141

புரவுவரி நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

264

பெருங்காரைக்குடியான குடிதாங்கி நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

166

மண்டலீகர் தேகம்மீர நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

70

வலங்கை மீகாம நல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

11

வீரபாண்டியநல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

34

வேலங்குடியான தேவர்கள்‌ தேவநல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

44

வேழகுலநாரை அண்டநல்லூர்

:

Madurai District Inscriptions Vol I

191

அக்க அரிகேசரி நல்லூர்

:

Madurai District Inscriptions Vol II

83

அத்தாணி நல்லூர்

:

Madurai District Inscriptions Vol II

2

ஆயுதவீம நல்லூர்

:

Madurai District Inscriptions Vol II

62

குலசேகர நல்லூர்

:

Madurai District Inscriptions Vol II

45 49 53 66 199

சிவபாத சேகர நல்லூர்

:

Madurai District Inscriptions Vol II

199

திருநல்லூர் தீபன்‌ கெளசிகன்‌

:

Madurai District Inscriptions Vol II

126

நாட்டாயுத ராமநல்லூர்

:

Madurai District Inscriptions Vol II

21

பராந்தக நல்லூர்

:

Madurai District Inscriptions Vol II

70

வில்லிநல்லூர்

:

Madurai District Inscriptions Vol II

20

கண்டிய தேவ நல்லூர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

49

சித்தம்பல நல்லூர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

44

தலைய நல்லூர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

66 68 70 71 74 75 77

திருச்சிற்றம்பலநல்லூர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

46

நாகசுர நல்லூர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

105

புல்லிநல்லூர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

48

மாதவ நல்லூர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

136

அலங்கியமான உத்தமசோழ நல்லூர்

:

Thiruppur Mavattak Kalvettukal

86 88 90 95

அனுந்த நல்லூர்

:

Thiruppur Mavattak Kalvettukal

200

இரவி நல்லூர்

:

Thiruppur Mavattak Kalvettukal

7

கொங்கூரான ஜயங்கொண்ட சோழநல்லூர்

:

Thiruppur Mavattak Kalvettukal

74 76 77 79 80 81 83

‌சங்கிராம நல்லூர்

:

Thiruppur Mavattak Kalvettukal

215

மகாமண்டல வொணதாய நல்லூர்

:

Thiruppur Mavattak Kalvettukal

81

இளையான்‌ குடியான இந்திராபதி நல்லூர்

:

Nagapattinam Mavatta Kalvettugal

108 125

செய்பியன்‌ கிளிநல்லூர் விளைநிலம்‌

:

Nagapattinam Mavatta Kalvettugal

101

ஸ்ரீ கரணநல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol III

149

இடங்கை மாசவண நல்லூர்

:

Dharmapuri Kalvettukkal II

61

கம்பய நல்லூர்

:

Dharmapuri Kalvettukkal II

10

கண்டர் சூரியநல்லூர்

:

Dharmapuri Kalvettukkal II

148

சிந்தாமணி நல்லூர் உடையார்

:

Papanasam Vattakkalvettukal Part I

135-13

பிராண உபகாரி நல்லூர்

:

Papanasam Vattakkalvettukal Part I

33-8

பெருநல்லூர்

:

Papanasam Vattakkalvettukal Part I

33-5

வீரசோழநல்லூர்

:

Papanasam Vattakkalvettukal Part I

14-40 19-38

கிளியநல்லூர்

:

Papanasam Vattakkalvettukal Part II

76-4

குந்தவைநல்லூர்

:

Papanasam Vattakkalvettukal Part II

64-1

திருநல்லூர் ஆண்டார்

:

Papanasam Vattakkalvettukal Part II

173-1

திருநல்லூர் நாடு

:

Papanasam Vattakkalvettukal Part II

135-1 138-1 143-1 145,1 148-1 151-1 153-1 156-2 157-1 159-1 163-1 165-1 167-1 169-1 171-1 173-1

திருநல்லூர் நாடு

:

Papanasam Vattakkalvettukal Part II

175-1 177-6 215-9 217-2 225-2 242-10 243-2 244-4 257-12 259-9,23 266-9 292-1

திருநல்லூர் நாயனார்

:

Papanasam Vattakkalvettukal Part II

138-1 141-1 161-1 175-1 177-8 184-2 193-1 195-1 198-IV,2 297-3

இராசகேசசோழ நல்லூர்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

1-2 3-3,7

ஏத்தகிரி கொண்ட சோழநல்லூர்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

95-3 93-2

கருந்திட்டைக்குடியான சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

67-14

சுந்தரபாண்டிய நல்லூர்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

56-1

தியாகமுத்திர நல்லூர்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

51-1

விக்கிரமசோழ நல்லூர்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

51-1

அருமொழிதேவநல்லூர்

:

Tamilnadu Kalvettukal 2004

229-12,14

ஊற்றங்கரையான அழகிய கூத்த நல்லூர்

:

Tamilnadu Kalvettukal 2004

39-6,18,19

கரிகால சோழநல்லூர்

:

Tamilnadu Kalvettukal 2004

225-2

குலோத்துங்க சோழ நல்லூர்

:

Tamilnadu Kalvettukal 2004

224-7

செந்தாமரைக் கண்ண நல்லூர்

:

Tamilnadu Kalvettukal 2004

48-1

சோழபாண்டிய நல்லூர்

:

Tamilnadu Kalvettukal 2004

226-6

நல்லூர்ப்பற்று

:

Tamilnadu Kalvettukal 2004

232-7

ஸ்ரீகரண நல்லூர்

:

Tamilnadu Kalvettukal 2004

58-27,28

கொற்ற நல்லூர் குலமாணிக்கப்பேரேரி

:

Tamilnadu Kalvettukal 2005

19-40,42

மருதா நல்லூர்

:

Tamilnadu Kalvettukal 2005

217-2

கடவூர் அரிந்தமநல்லூர் உடையான் நீலன் வெண்காடன்

:

Tamilnattu Kalvettukal Vol IV

24-26

கூவமான தியாக சமுத்திர நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol IV

12-3

கூவமான மதுராந்தக நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol IV

15-10

நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol IV

100-2

ஜயங்கொண்ட சோழ நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol IV

99-4

உத்தமசோழ நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol V

76-3

திராவட நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol V

210-11

பூவேன் திர சோழ நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol V

27-2 45-2

மேல்கரை வீரநாராயண நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol V

6-28

வீரநாராயண நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol V

2-13

வீரபாண்டிய நல்லூர்

:

Tamilnattu Kalvettukal Vol V

11-3

காக்குநாயக நல்லூர்

:

Krishnagiri mavatta Kalvettukkal

35

சிகாமணி நல்லூர்

:

Krishnagiri mavatta Kalvettukkal

74

மாநவ சிகாமணி நல்லூர்

:

Krishnagiri mavatta Kalvettukkal

80

விடுகாதழகிய நல்லூர்

:

Krishnagiri mavatta Kalvettukkal

215

ஆதனூர் குலோத்துங்க சோழநல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

4-25

எதிரிலி சோழநல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

118-IX,4

கிரி நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

99-4

குலோத்துங்க சோம நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

188-16

கொன்ற ஈலூரான தேவும் இருவும் உடைய நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

187-18 190-18

சிகரண நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

181-15

சோமன் மாருதி நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

124-6

நந்திநல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

50-3

பணிய நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

196-46

பந்தாண்டி நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

198-127,161

பராந்தக நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

194-28

பாகம் பிரியாத நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

4-19

புரவரி நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

4-28

மாருதி நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

132-6

விக்கிரம சோழ நல்லூர்

:

Thiruthuraipoondi kalvettukkal

181-11,13

குலோத்துங்க சோழ நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

124-14 125-8,12 126-2 128-2 3

சிவபாத சேகர நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

79-91

சிவபாதசேகர நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

79-226

திருநீற்றுச் சோழநல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

79-54 225

பொன்மெந்த பெருமாள் நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

9-10

விரையா விடங்கநல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

9-9

கடாரபிராந்தகநல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

223-1

சிவபாதசேகர நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

354-3

சிவபாதசேகர நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

364-1

சுந்தர சோம நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

318-10

சோமனாக நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

288-2

திருப்பத்தடி நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

209-6

தீன சிந்தாமணி நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

354-1

நந்தி கேஸ்வர நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

223-2

புற்றிடங்‌ கொண்ட நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

223-2

மதுராந்தக நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

329-11,13

மீனவ நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

296-2

ராஜேந்கதிர சோழ நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

298-3 302-2 305-2 307-5 308-5 322-1,2,4 6 325-23

விக்கிரம சோம நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

206-6

வில்லிய நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 2

266-2

இராசா நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

500-2

குலோத்துங்க சோழ நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

454-4 456-3

சிற்றம்‌ பல நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

464-V,3

சோழகுலவல்லி நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

470-1

நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

467-V,4

புரவரி நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

460-II,3

விராக்க நல்லூர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

469-II,4 471-I,2
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சோமனாக நல்லூர் 120 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (சோமனாக நல்லூர் 10 results found)
நல்லூர்

தமிழ் நாட்டு ஊர்களை நல்லூர் என்றும் புத்தூர் என்றும் வகுத்துக் கருதலாகும். பெண்ணையாற்றங்கரையில் அமைந்தது திருவெண்ணெய் நல்லூர். அது சுந்தர மூர்த்தியைத் தடுத்தாட் கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ள இடம்.97 சைவ சமய ஞான நூலாகிய சிவஞான போதத்தை அருளிச் செய்த மெய்கண்ட தேவர் பிறந்தருளும் பேறு பெற்ற நல்லூரும் அதுவே. கும்பகோணத்துக்கருகே நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அமர் நீதி என்னும் அடியார் அவ்வூரில் தொண்டு செய்து சிவப் பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகிறார். மண்ணியாற்றங் கரையில் முருகவேளின் பெயரால் அமைந்த சேய் நல்லூர் இந் நாளில் சேங்கனூர் என்று வழங்கும்.98 வட ஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய் நல்லூர் சேனூர் எனப்படும்.
தமிழ் நாட்டை ஆண்ட அரசர் பலர் தம் பெயர் விளங்குமாறு பல நல்லூர்களை உண்டாக்கினார்கள். பாண்டி நாட்டில் வீரபாண்டிய நல்லூர், அரிகேசரி நல்லூர், மானா பரண நல்லூர், செய்துங்க நல்லூர் முதலிய ஊர்கள், பாண்டிய குலத்தைச் சேர்ந்த மன்னர் பெயரை விளக்கி நிற்கின்றன. சோழ நாட்டில் பெருஞ் சோழ மன்னர்கள் உண்டாக்கிய நல்லூர்களைச் சாசனங்களிற் காணலாம். முடி கொண்ட நல்லூர், அநபாய நல்லூர், திருநீற்றுச் சோழ நல்லூர், திருத்தொண்டத் தொகை நல்லூர், சிவபாத சேகர நல்லூர், கலி கடிந்த சோழ நல்லூர் முதலிய நல்லூர்கள் சோழ மன்னருடைய விருதுப்பெயர் பெற்ற பதிகளாகும்.

97. பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் சுந்தரர் தேவாரம்.
98. சேயடைந்த சேய்ஞலூர் என்பது தேவாரம். சூரனோடு போர் செய்யக் கருதி எழுந்த முருகவேள். சிவபெருமானை வழிபட்டுச் சர்வ சங்காரப் படைக்கலம் பெற்ற ஸ்தலம் சேய்நல்லூர் (சேய்ஞலூர்) என்று கந்த புராணம் கூறும் - குமாரபுரிப் படலம், 14-15, 75-76.

திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறை

பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் ஈசன் கோயில் கொண்டருளும் இடம் அருட்டுறை எனப்படும். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தியை ஆட்கொண்ட துறை அவ் அவர் தேவாரத்தால் அறியலாம். வருட்டுறையேயாகும். இதனை பித்தா பிறைசூடி என்று அவர் எடுத்த திருப்பதிகத்தில் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா என்று பாடும் பான்மையால் ஆண்டவன் உறைவிடம் அருட்டுறை என்றும் போற்றப்படுகின்றது.17

17. தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டியும் கோயிலடியாகப் பிறந்த ஊர்ப்பெயராகத் தெரிகின்றது. திருத்துறையென்ற ஆலயத்தையுடைய பூண்டி திருத்துறைப்பூண்டியாயிற்று போலும்; 477 of 1912. இவ்வாறன்றித் திருத்தருப்பூண்டி யென்னும் பெயரே திருத்துறைப்பூண்டியெனத் திரிந்தது என்று கொள்வாரும் உளர்.

அந்துவ நல்லூர் ஆலந்துறை

காவிரியின் வடகரையில் அமைந்தது புள்ள மங்கை ஆலந்துறை. அந் நதியில் தென்கரையிலும் ஓர் ஆலந்துறை உண்டென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும். காவிரி யாற்றின் தென் கரையில் அமைந்த திருக்கோயில்களை வழிபடப் போந்த திருஞான சம்பந்தர் திருவாலந்துறை முதலாய தலங்களை வணங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.19 எனவே, அவர் குறித்த ஆலந்துறை திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஏழு மைல் அளவில் காவிரியின் தென் கரையில் அமைந்த அந்துவநல்லூர் என்ற ஊரில் உள்ள ஆலயமே ஆதல் வேண்டும். இக்காலத்தில் அந்த நல்லூர் என வழங்குகின்ற அந்துவநல்லூரில் ஆலந்துறை யென்னும் பழமையான ஆலயம் உண்டென்று சாசனம் கூறும்.20 அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் வடதீர்த்த நாதர் என்று பிற்காலக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படுதலும் இதனை வலியுறுத்துவதாகும். வடதீர்த்தம் என்பது ஆலந்துறையைக் குறிக்கும் வடசொல்

19. திருஞான சம்பந்தர் புராணம், 342.
20. I. M. P., Trichinopoly, 371, 374

நல்லூர் பெருமணம்

சைவ உலகம் தலைக் கொண்டு போற்றும் திருத் தொண்டராகிய திருஞான சம்பந்தர் இறைவனது சோதியிற் கலந்த இடம் நல்லூர்ப் பெருமணம் என்று அவர் வரலாறு கூறுகின்றது. நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தின் பெயர் பெருமணம் என்பதாகும்.

நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன் தாள் தொழ வீடெளி தாமே.
என்று திருஞான சம்பந்தர் பாடுதலால் இவ்வுண்மை விளங்கும். பெருமணம் என்னும் சிறந்த திருக்கோயிலைத் தன்னகத்தே யுடைய நல்லூர், பெருமணநல்லூர் என்றும் வழங்கலாயிற்று. இந் நாளில் அப் பழம் பெயர்கள் மறைந்து ஆச்சாபுரம் என்று அவ்வூர் அழைக்கப்படுகின்றது.

சேய்நல்லூர்

சோழ நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் விளங்கும் சீர்மை வாய்ந்த சிவப் பதிகளுள் ஒன்று சேய் நல்லூர். அசுர வீரனாகிய சூரனை வென்றழிக்கப் போந்த முருகப்பெருமான் மண்ணியாற்றங் கரையில் தங்கி ஈசனார்க்குப் பூசனை இயற்றிய காரணத்தால் அவ்விடம் சேய் நல்லூர் என்று பெயர் பெற்ற தென்பர்.10 அறுபத்து மூன்று சிவனடியார்களுள் சிறப்பாக ஆலயங்களில் வணங்கப்படுகின்ற சண்டேச்சுரர் பிறந்த ஊர் இந்த ஊரே யாகும். அவ்வூரைப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர். திருச்சேய் நல்லூர் என்னும் பெயர் இப்பொழுது திருச் செங்கனூர் என மருவி வழங்குகின்றது.
வட ஆர்க்காட்டிலுள்ள சேனூரும் முருகனோடு தொடர்புடையதாகத் தோன்றுகின்றது. முன்னாளில் அவ்வூர் சேய் நல்லூர் என வழங்கிற்று.11 அப் பெயரே சேனூர் என்று மருவியுள்ளது.

10. ஏந்தும் அயில்வேல் நிலை காட்டி
இமையோர் இகல்வெம் படைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்
என்று சேக்கிழார் கூறியருளினார். (சண்டேசுரர் புராணம், 1)
இப் பதியில் ஆறுமுகப் பெருமான் பூசனை புரிந்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாறு கந்த புராண உற்பத்திக் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
11. 394 of 1811.

திருஆலவாய் நல்லூர்

மதுரையில் அமைந்துள்ள சிவாலயம் திரு ஆலவாய் ஆகும். அத் திருக் கோயிலின் பெயரைக் கொண்ட திரு ஆலவாய் நல்லூர் என்ற ஊர் மதுரை நாட்டு நிலக் கோட்டை வட்டத்தில் உள்ளது.

ஏமநல்லூர்

ஏம நல்லூர் ஒரு வைப்புத் தலம் என்பது, எச்சிலிளமர் ஏமநல்லூர் என்னும் திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். தஞ்சைப் பெருங்கோயிற் சாசனம் ஒன்றில், மண்ணி நாட்டு ஏம நல்லூராகிய திரை லோக்கிய மகாதேவி சதுர் வேதி மங்கலம் என்ற வாசகம் வாசகம் வருகின்றது.5 அச் சாசனத்தால் முற்காலத்தில் ஏம் நல்லூர் என்று பெயர் பெற்றிருந்த ஊர் பிற்காலத்தில் ஒரு மாதேவியின் பெயர் கொண்ட மங்கல மாயிற் றென்பது விளங்கும். இந் நாளில் தஞ்சை நாட்டுக் கும்ப கோண வட்டத்திலுள்ள திரை லோக்கி என்ற ஊரே பழைய ஏமநல்லூர்.

5.S.I. I. Vol. II. 345,336.

பொய்கை நல்லூர்

தொண்டை நாட்டுத் தாமற் கோட்டத்தில் பொய்கை நல்லூர் என்ற பழமையான ஊர் உள்ளது. அவ்வூரில் அமைந்த அகத்தீச்சுரம் என்னும் சிவாலயத்திற்கு வயிர மேகவர்மன் வழங்கிய நிவந்தம் ஒரு சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய இப் பொய்கைநல்லூர் இப்போது அரக்கோண வட்டத்திற் காணப்படும்.25

25. Pallavas, P. 144.

திருநீற்றுச் சோழ நல்லூர்

மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு என்று திருஞான சம்பந்தர் பாடியருளிய திருநீறு சைவர்கள் அணிந்து போற்றும் சிவ சின்னமாகும். சைவப் பெரு மன்னர் இருவர் தம்மைத் திருநீற்றுச் சோழன் என்று கூறிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அவருள் ஒருவன் முதற் குலோத்துங்க சோழன். அம் மன்னன் செங்கற்பட்டைச் சேர்ந்த முன்னலூர் என்னும் ஊருக்குத் திருநீற்றுச் சோழ நல்லூர் என்று பெயரிட்டு, அதனைத் திருசூலத்திலுள்ள சிவாலயத்திற்கு நன்கொடை யாக வழங்கினான் என்று ஒரு சாசனம் கூறும்.6
இரண்டாம் குலோத்துங்க சோழனும் திருநீற்றுச் சோழன் என்னும் விருதுப் பெயர் பூண்டான். அவன் செங்கற்பட்டைச் சேர்ந்த களத்தூரில் உள்ள திரு ஆலக் கோயில் என்னும் சிவாலயத்திற்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச் சோழ நல்லூர் என்ற ஊரைத் தேவ தானமாகக் கொடுத்தான்7
தஞ்சை நாட்டில் திருக்கண்ணபுரத்துக்கு அண்மையில் திருநீற்றுச் சோழபுரம் என்ற ஊர் இருந்ததாகத் தெரிகின்றது.8 சிதம்பரக் கோயிற் சாசனத்தில் திருநீற்றுச் சோழ மங்கலம் குறிக்கப்படுகின்றது.9 திருநீறு என்னும் பெயருடைய ஊர் ஒன்று திருப்பாசூர்ச் சாசனத்திற் கூறப்பட்டுள்ளது. திருநீறு என்ற ஊரில் வாழ்ந்த வணிகர், மற்றும் ஒன்பதூர் வணிகருடன் சேர்ந்து, ஓர் ஊரை விலைக்கு வாங்கித் திருப்பாசூர்க் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கிய செய்தியைக் கூறுவது அச் சாசனம்.10

6. 312 of 1901.
7. 3630 1911.
8. 505 of 1922
9. 2800 1913.
10. 120 of 1930. Cholas Vol. II. p. 418.

சம்பங்கி நல்லூர்

வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஊர் ஒன்று சம்பங்கி நல்லூர் என வழங்கப் படுகின்றது. செண்பகப் பெருமாள் நல்லூர் என்னும் பெயரே இங்ஙனம் சிதைந்துள்ள தென்பது கல்வெட்டுக்களால் விளங்கும்.23 வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்தில் சோழிங்கர் என்ற ஊர் உள்ளது. சோழ சிம்மபுரம் என்னும் பெயரே அவ்வாறு மருவிற்றென்று குரு பரம்பரை கூறும்24 அவ்வூரிலுள்ள கடிகாசலம் சோழிங்கர் என்ற குன்றின் மீது கோயில் கொண்டுள்ள நரசிங்கப் பெருமாளை பேயாழ்வாரும், திருமங்கை யாழ்வாரும் பாடியுள்ளார்கள். இந் நாளில் கடிகாசலப் பெருமாள் கோவில் சாலச் சிறப்புற்று விளங்குகின்றது.

23. S.I. I., p. 74.
24. சோழலிங்கபுரம் என்ற பெயரே சோழங்கிபுரம் ஆயிற்றென்றும் கூறுவர். (N. A, Manual. II, p.435) அவ்வூரின் நடுவே உள்ள சோழேச்சுரத்திலுள்ள சுயம்பு லிங்கம் அதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது.