கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (திருக் கொற்ற வாய்தல் 16 results found)

கொற்றிலக்கை

: கொற்றும் இலக்கையும்; அதாவது சோறும் தங்கும் இடமும்

கொற்று

: உணவு

திருக்கண்டவாணி

: கழுத்து அணி வகை

திருக்கண்ணாமடை

: அரிசி, சர்க்கரை, வாழைப் பழங்களால் ஆக்கப்பட்ட இனிய உணவு ; சர்க்கரைப் பொங்கல் வகை

திருக்கண்ணோக்கு

: சுவாமியின் விக்கிரகத்தை மண்டபப் படிக்கு எடுத்துச் செல்லுதல்

திருக் கலச முடித்தல்

: கும்பாபிஷேகம்

திருக்காவணக்கால்

: உரிமைப் பத்திரம் ; ஆதரவுச் சீட்டு ; தோரண ஸ்தம்பம் எனவும் ஆகும்

திருக் குகை

: துறவிகள் வாழும் இடம் ; மடம்

திருக் கேட்டைக் கிழத்தி

: மூதேவி ; ஜ்யேஷ்டாதேவி

திருக்கைக் கோட்டி, திருக்கையோட்டி

: கோயிலில் திருமுறை ஓதும் மண்டபம்; அங்கே திருமுறை ஓதுவார் திருக்கைக் கோட்டி யோதுவார் எனப் பெறுவர்

திருக்கை வழக்கம்

: கோயில் நித்தியப் படித்தரம்; பிரசாத வினியோகமும் ஆகும்

திருக்கொசகம்

: கோயிலில் அம்மன் விக்கிரகத்துக்குச் சாத்தும் கொய்சகம் போன்ற அணிவகை

திருக்கொடுக்கு

: ஆபரணவகை

திருக்கொள்கை

: ஆபரணம் ; விக்கிரகத்துக்கு இடும் கவசமும் ஆகும்

திருக் கொற்ற வாய்தல்

: அரண்மனை

வாய்தல்

: வாசல்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக் கொற்ற வாய்தல் 18 results found)

ஏறும்புகாணித் திருக் குத்துவிளக்கு

:
 • பீடத்திலிருந்து எழுந்துள்ள உலோகக் கம்பியில் மாட்டப்பெறும் நெய்யகலை வேண்டிய உயர அளவில் நிறுத்தி வைப்பதற்கமைந்ததாக, கம்பியில் உள்ள துளையில் புகு ஆணியிட்டு நிறுத்தி எரியவைக்கும் குத்துவிளக்கு. (புகு ஆணி - புகாணி)

 • “திருநந்தா விளக்கு எரிய நான் இட்ட ஏறும் புகாணித் திருநந்தாவிளக்கு ஒன்று”

 • தெ. கல். தொ. 4. கல். 860

கொற்று

:
 • தொழிலாளர் பலர் அமைந்த கூட்டம் (தொகதியர். கூட்டாளர். தொழில் குழு). ஒரு தொழிலுக்கமைந்த பலர் சேர்ந்த குழுவே கொற்று எனப்பட்டது. ஒருசிலர் சேர்ந்து செய்யும் ஊழியமும் கொற்ரனவே கூறப்பெறும். கொற்றும் கொத்தும் கல்வெட்டுக்களில் மயங்கக் கூறப்பெறினும் வேறுபட்ட பொருள் கொண்டனவேயாகும். கொத்திற்கும் கொற்றிற்கும் அமைந் தாருள் தனியாள் பெறும் கூலி அளவு இலக்கை என்பதாம். ஓராளின் உணவுக்கும் உடைக்கும் இலக்காக அளிக்கப்பெறும் ஊதியமாதலின்'இலக்கை' எனப் பெயர் பெற்றுள்ளது.
  இவ்விலக்கை, கொடுக்கப்பெற்ற வேலையின் தகுதிக்கேற்பத் தொகுதியாக அமைந்த பணியாளர்களில் ஆள் ஒன்றிற்கு நாள் உணவிற்குரிய நெல்லும் ஆண்டொன்றின் தேவைக்குரியதான ஆடைகளின் விலைக்குரிய காசும் அளிக்கப்பெற்ற இலக்கினைக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. கொற்று - தொழிலையும் உணர்த்தும். கூட்டம் என்ற பொருளையும் தரும். கூட்டுப்பணி அல்லது தொழில் கூட்டு என்றும் கூறலாகும்.

 • “இத்திரு நந்தவனம் செய்யவேண்டும் பேராய் நிச்சயித்த நாயகம் பேர் ஐஞ்சும் போ தொண்ணூர்றைஞ்சும் ஆகப்பேர் நூறு. இதில் நாயகம் பேர் ஐவர்க்கு கொற்றுக்கு நாள் ஒன்றுக்கு பேர் ஒன்றுக்கு முக்குறுணியாக நெலலு கலான முக்குற ணியும் புடவை முதல் ஆட்டைக்கு பேரால் மூன்றாகக் காசு பதினைஞ்சும்”
  பேர் தொண்ணூற்றைவர்க்கு கொற்றுக்க நாள் ஒன்றுக்கு பேர் ஒன்றுக்கு நெல்லு பதக்காக, புடவை முதல் ஆட்டைக்கு பேரால் காசு இரண்டாக காசு நூற்றுததொண்ணூறும”

 • தெ. கல். தொ. 8. கல். 55

 • “திருநந்தவனப்புறமாக விலை கொண்ட நிலத்து - ஊர்படி நிலம் ஏழுமாவும் கொற்றுக்கு உடலாகவும்”
  “திருநந்தவனத்துக்கும் திருநந்தவனப்புறமாக கொற்றுக்கும் விலை கொண்ட நிலம்”

 • தெ. கல். தொ. 12. கல். 151

 • “தோப்புக்கு இடநிச்சயித்த ஆள் பதி நாலுக்கும் - இவ்வுடலிலே இவர்களுக்கு இடநிச்சயித்த இலக்கை சதிரப்படியால் உள்ள நெல்லும் காசும்”

 • தெ. கல். தொ. 12. கல் - 206

 • “தட்டழி கொட்டடிகளுக்குக் கொற்று நெல்லு திங்கள் நாற்கலனேய் பதின் குறுணி”

 • தெ. கல். தொ. 14, கல், 16

கொற்றிலக்கை

:
 • கொற்று+இலக்கை. இவ்விரு சொற்றொடர் இரண்டு பொருளில் கல்வெட்டுக்களில் ஏற்ற இடங்களில் கூறப்பட்டுள்ளது.
  (1)உருபும் பயனும் பெறுதற்கமைந்த தொகை நிலையில், கொற் றுக்கு உரிய ஊதியமாகும் இலக்கை என்றும், பலர் கூடிச்செய்த பணியில் ஆள் ஒன்றிற்கமைந்த ஊதியம் என்றும் பொருள் தருவதோடு,
  (2)ஒரு துறைக்கமைந்த பல அதிகாரிகளின் பணியாகிய கொற் றுக்கு, அதிகாரி ஒருவர்க்கு அமைந்த ஊதியமாகப் பெறுதற்கு அரசால் அனுமதிக்கப்பட்ட ஊர்களின் வரி ஆயம் கடமை முத லிய வருவாய்களும் கொற்றிலக்கை என்ற பெயரால் கூறப் பெறும்.
  இவ்வாறாக, ஊழியத்தின் நாள் ஊதியமாகவும், அதிகாரிகள் பெறுதற்கமைந்த வரியின் பெயராகவும் கொற்றிலக்கை இடம் பெற்றுள்ளமையினைக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

 • “1. திருநந்தவனக்குடிகளுக்கு இலக்கைக்கும் கொற்றுக்கும் உட லான நிலம் இருபத்தஞ்சுமா”

 • தெ. கல். தொ. 8. கல். 56

 • “குலோத்துங்க சோழன் திருக்கோசாலை அனுக்கன் சுரவிகளுக்கு முதலாக விட்ட பசு நானூற்றொருபதினால் - முன்பிலாண்டுகளும் நெய் ஓட்டுக்கொண்டு வரும்படியே பசு நூற்றைம்பதுக்கு பேர் ஒன்றாக வந்த பேர் முதல் கொள்ளவும். இப்பேர்க்கு கொற்றுக்கு பேர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு பதக்காக வந்த நெல்லும் புடவை முதல் ஆட்டைக்குப் பேரால் ஒன்றரையாக வந்த காசுக்கு பதி னைங்கலப் பிடியால் வந்த நெல்லும்”

 • தெ. கல். தொ. 8. கல். 54

 • “கோயில் அதிகாரி கொற்றிலக்கையும்”
  “அதிகாரிப் பேறான கொற்றிலக்கையும்” (நாயக்கர் காலம் )”

 • தெ. கல். தொ. 17. கல். 269. 532

 • “அதிகாரிப் பேறான கொற்றிலக்கையும்”

 • தெ. கல். தொ. 17. கல். 269,532

திருக்கம்பி

:
 • கழுத்தணிகளுள் பொன்னால் செய்யப்பட்ட கம்பிக்காறை என்பதாகும். தெய்வத் திருமேனிகட்கு அணி விக்கும் அணிகலனாதலின் திருக்கம்பி என்னும் சிறப்புப்பெயர் பெறுவதாயிற்று.

 • “நங்கைபரவையார்க்குக்குடுத்தன திருக்கம்பி ஒன்று பொன் முக்காலே இரண்டு மஞ்சாடி குன்றி”

 • தெ. கல். தொ. 2 : 2. கல். 38

திருக்கற்றளி

:
 • கருங்கல்லால் கட்டப்பட்ட திருக்கோயில். கல் தளி கற்றளி.(தளி - கோயில்)

 • “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜேஸ்வரம்”

 • தெ. கல். தொ. 2. கல். 1

திருக்காவணம்

:
 • கோயில் திருவிழாக்களிலொன்றில் இறைவன் திருமேனி எழுந்தருளுவதற்குரியதாக சோலைகளின் நடுவே அமைக்கப்பெறும் ஒப்பனை செய்யப்பட்ட பந்தல். ஓலை, மா விலை, தாழைக்காய் தென்னைகுருத்து ஆகியவற்றால் ஒப்பனை செய்யப்பெற்று சோலையைப் போன்ற தோற்றம் கொள்வதால் காவணம் என்னும் பெயர் பெறுவதாயிற்று.

 • “திருமழபாடி உடையார் - காவேரி ஆற்றிற் கெழுந்தருளவும் ஆற்றிலே திருமண்டபம் கட்டி, திருக்காவணம் இட்டு”

 • தெ. கல். தொ. 5. கல். 628

திருக்காற்காறை

:
 • தெய்வத் திருமேனிகட்கு நவமணிகள் வைத்திழைக்கப் பெற்றதாக அணியப்பெறும் கால் காப்பூ (கொலுசு)

 • “நங்கை வரவையார்க்குக் குடுத்தன திருக்கைக்காறை திருக் காற்காறை”

 • தெ. கல். தொ. 2 : 2. கல். 38

திருக்குதம்பை

:
 • காதணிகளுள் ஒருவகை. குழை வடிவாக அமைக்கப்பெறும் காதணி.

 • தெ. கல். தொ. 2 : 2. கல். 34

திருக்குதம்பைத் தகடு

:
 • திருமேனிகளின் காதிற்கு ஒப்பனை யாகக் காதின் வடிவமாகவே பொன்னாலும், பொன்னில் மணிகள் வைத்திழைக்கப்பட்டதாகவும் செய்து சார்த்தப்படும் பொன் நகாசுத்தகடு.

 • “திருக்குதம்பைத்தகடு இரண்டு பொன் மஞ்சாடியுங்குன்றி”

 • தெ. கல். தொ. 2 : 2. கல். 43

திருக்கை ஒட்டி

:
 • திருக்கோயில்களில் கருவறைவாயிலினைத் தொடர்ந்து இணைப்பாக அமைக்கப்படும் பொருள் காப்பகப் புரையிடம். தெய்வப் பிரசாதத்தினை மரியாதையுடன் பெறும் கருவறைமுகப்பிடம்.

 • “தேவர் திருமுகம் வந்தமையில் இத்திருமுகம் திருக்கை ஒட்டிப் பண்டாரத்திலே கோத்துக் கொண்டு”(சேர்த்துக் கொண்டு)”

 • தெ. கல். தொ. 12. கல். 215

 • “இக்கோயிலிற் திருக்கை ஒட்டி திருமுன் ஓதுகையும்”

 • தெ. கல். தொ. 7. கல். 69

 • “விலைகொண்ட சாதனங்களும், நிலங்களில் பங்கு வரிகழிய பெரும்பற்றப் புலியூர் மூல பருஷையார் எழுதின நியோகமும் திருக்கை ஒட்டி பண்டாரத்து ஒடுக்கவும் இப்படிக்கு திருமாளிகை யில் கல்வெட்டக் கடவதாக”

 • தெ. கல். தொ. 12. கல் - 151

திருக்கைக் காறை

:
 • திருமேனிகளின் கையில் அணியப் பெறும் வேலைப்பாடமைந்த பொற்காப்பு.

 • தெ. கல். தொ. 2 : 2. கல். 34. 48

திருக்கைக்கோட்டி

:
 • தேவாரத்திருமுறைகளைப் பாதுகாத்துப் பூசிக்குமிடமும் தேவாரம் ஓதுதற்கமைந்த இடமுமாகத் திருக் கோயில்களில் அமைந்த மண்டபம்.

 • கல்வெட்டு அறிக்கை எண். 203, 414, 454 1908

திருக்கைப்பொட்டு

:
 • திருமேனிகளின் உள்ளங்கைகளில் பொருத்தப்படும் பொன் தகடு. நகாசு வேலைப்பாட்டுடன் வட்டமாக அமைக்கப்பெறுவது.

திருக்கை வழக்கம்

:
 • கையில் ஒப்படைக்கும் வழக்கம். வாய் மொழியாகச் செய்யும் உரிமை வழக்கம்.

 • “இவ்வீரர்கள் வீரப் பல்லவரையன் சாகையில் எனக்கு தேவர் திருக்கை வழக்கமாகத் தந்தருள நானும் உடையார் ஆட்கொண்ட தேவற்கு திருவிளக்குப் புறமாக விட்டருள”

 • தெ. கல். தொ. 12. கல். 189. பகு. 1

திருக்கொடிப் பிடவை

:
 • கோயில்களில் திருவிழாக்காலத் தொடக்கமாக ஏற்படும் கொடிக்குரிய ஆடை (பிடவை - புடவை)

 • “நாயனார் கோயிலுக்கு மூன்று திருநாளுக்கும் திருக்கொடிப் புடவை சந்திராதித்தவரை இடக்கடவோம்”

 • தெ. கல். தொ. 8. கல். 141

திருக்கோசாலை

:
 • திருக்கோயில் கட்குரிய பசுக்கள் காக்கப் பெறும் இடம். (கொட்டில்)

 • “திருக்கோசாலைச் சுரவிகளுக்கு வைக்கோல் கொண்டிடு கைக்கும்”

 • தெ. கல். தொ. 17. கல். 597

தேவாசிரியன் திருக்காவணம்

:
 • திருவாரூர்க் கோயிலில் உள்ள கருங்கல் திருப்பணியாக அமைந்த பெருமண்டபத்தின் சிறப்புப் பெயர். காவணம் - கல் மண்டபம்

 • “இவ்வனைவோம் தேவாசிரியன் திருக்காவணத்தே கூட்டம் குறைவறக்கூடி”

 • தெ. கல். தொ. 17. கல். 598

 • “தேவாசிரியன் எனுந் திருக்காவணம்”
  (பெரிய - என்பர் சேக்கிழாரடிகள்)”

வண்ணிகைத் திருக்கொற்றக் குடை

:
 • ஒப்பனை செய்ய பெற்ற கொற்றக் குடை.

 • “வண்ணிகைத் திருக்கொற்றக் குடை மகுடம் மொட்டு அடுத்து விளக்கின பறளை உள்பட ஒன்று”

 • தெ. கல். தொ. 2. கல். 1

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (திருக் கொற்ற வாய்தல் 192 results found)
Word Book Name Page

கொற்றிலக்கை

:

Azhagar Koil Kalvettiukkal

95

திருக்கண்ணான்

:

Azhagar Koil Kalvettiukkal

25

திருக்கண்ணுடையான்

:

Azhagar Koil Kalvettiukkal

62

திருக்களகுடி

:

Azhagar Koil Kalvettiukkal

152

திருக்குருகூர்

:

Azhagar Koil Kalvettiukkal

24

திருக்குழற் பணி

:

Azhagar Koil Kalvettiukkal

192

திருக்கானப்பேர்

:

Azhagar Koil Kalvettiukkal

51 53

திருக்கோட்டியூர்

:

Azhagar Koil Kalvettiukkal

24 97 101

திருக்கோபுரம்

:

Azhagar Koil Kalvettiukkal

103

கொற்றன்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

381

கொற்றந்தைகள்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

337 358

கொற்றமங்கலம்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

308 340

கொற்றுண்ணல்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

313

திருக்கபாலீஸ்வரமுடையநாயனார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

97

திருக்கார்த்திகை

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

79 198 211 262

திருக்காமக்கோட்டத்து

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

4 304

திருக்காமகோட்டமுடைய நாச்சியார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

305

திருக்கால்வளி பிள்ளையார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

331

திருக்கானப்பேறு

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

18

திருக்கொற்றவாசல்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 1

309 312

திருக்கற்றளி

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

45

திருக்கண்டியூர்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

98

திருக்காமக்‌ கோட்ட நாச்சியார்

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

5 8

திருக்காமக்‌ கோட்டம்‌

:

Coimbatore Mavatta Kalvettugal Thogudi 2

9

கொற்றிலக்கை

:

Madurai District Inscriptions Vol I

14 228

சிங்கன்‌ கொற்றி

:

Madurai District Inscriptions Vol I

27

திருக்காக்குடி

:

Madurai District Inscriptions Vol I

115

திருக்கண்ணபுரம்

:

Madurai District Inscriptions Vol I

231

திருக்காமக்கோட்ட திருமாமடந்தை

:

Madurai District Inscriptions Vol I

118

திருக்காய்குடி

:

Madurai District Inscriptions Vol I

116 118 147 148

திருக்காக்குடி

:

Madurai District Inscriptions Vol I

114

திருக்கானப்பேர் கூற்றம்‌

:

Madurai District Inscriptions Vol I

152

திருக்குறிப்புத்‌ தொன்டர்

:

Madurai District Inscriptions Vol I

42

திருக்கை வழக்கம்‌

:

Madurai District Inscriptions Vol I

33

திருக்கோடிசுர முடையார்

:

Madurai District Inscriptions Vol I

118

திருக்கோடீசுவரர்

:

Madurai District Inscriptions Vol I

145 116

ஸ்ரீவல்லத்திருக்கை

:

Madurai District Inscriptions Vol I

251

அரங்கன்‌ கொற்றன்‌

:

Madurai District Inscriptions Vol II

58

கொற்றிலக்கை

:

Madurai District Inscriptions Vol II

45

திருக்குடந்தை

:

Madurai District Inscriptions Vol II

37

திருக்குடை

:

Madurai District Inscriptions Vol II

51

திருக்குறு முள்ளூர்

:

Madurai District Inscriptions Vol II

174 177 179 183 191 197

திருக்குளனாதர்

:

Madurai District Inscriptions Vol II

155

திருக்கூட்டம்‌

:

Madurai District Inscriptions Vol II

25

திருக்கோபுரம்‌

:

Madurai District Inscriptions Vol II

19

கொற்ற வாயில்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

42

கொற்றனூர்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

103 155

கொற்றன்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

125

திருக்கட்டளை

:

Erodu Maavatta Kalvettukal Vol I

3

திருக்காவனம்

:

Erodu Maavatta Kalvettukal Vol I

49

கொற்றன்சிறுப்பிள்ளை

:

Erodu Maavatta Kalvettukal Vol II

109

கொற்றன்

:

Erodu Maavatta Kalvettukal Vol II

97

திருக்கட்டளையறுதியாக

:

Erodu Maavatta Kalvettukal Vol II

11

திருக்கழுமலநாடு

:

Erodu Maavatta Kalvettukal Vol II

39

திருக்கற்றளி

:

Erodu Maavatta Kalvettukal Vol II

91

திருக்கைம்மலர்

:

Erodu Maavatta Kalvettukal Vol II

38

திருக்கல்லியாணம்

:

Erodu Maavatta Kalvettukal Vol III

45

திருக்கார்த்திகை

:

Erodu Maavatta Kalvettukal Vol III

77

திருக்காமகோட்டம்

:

Erodu Maavatta Kalvettukal Vol III

59 60 65

கொற்றவேலி சர்க்கரை உத்தமகாமிண்ட மனறாடியார்

:

Thiruppur Mavattak Kalvettukal

34

கொற்றனூர்

:

Thiruppur Mavattak Kalvettukal

144

திருக்கடைக்குறிச்சி நாயனார்

:

Thiruppur Mavattak Kalvettukal

202

திருக்காமக்கோட்டநாச்சியார் அழகிய சொக்கி

:

Thiruppur Mavattak Kalvettukal

184 185

திருக்காவணம்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

220

திருக்கை வேலழகியார்

:

Thiruppur Mavattak Kalvettukal

189

திருக்கோயில்‌

:

Thiruppur Mavattak Kalvettukal

106

வடகரைத்‌ திருக்கழுமல நாடு

:

Thiruppur Mavattak Kalvettukal

147

கொற்று

:

Nagapattinam Mavatta Kalvettugal

2

கொற்று இலக்கை

:

Nagapattinam Mavatta Kalvettugal

9

செம்பியன்‌ கொற்றங்குடி

:

Nagapattinam Mavatta Kalvettugal

11

திருக்காப்பு நாள்‌

:

Nagapattinam Mavatta Kalvettugal

143

திருக்காம கோட்டம்‌

:

Nagapattinam Mavatta Kalvettugal

167

திருக்காமீஸ்வர முடையார்

:

Nagapattinam Mavatta Kalvettugal

19

திருக்காரோண நாடு

:

Nagapattinam Mavatta Kalvettugal

202

கொற்றவாயில் மகாதேவர்

:

Tamilnattu Kalvettukal Vol III

27

திருக்கடமை

:

Tamilnattu Kalvettukal Vol III

203

திருக்காமக்கோட்டம்

:

Tamilnattu Kalvettukal Vol III

165

கொற்றந்தை கோடன்கல்

:

Dharmapuri Kalvettukkal II

56

கொற்றமங்கலம்

:

Dharmapuri Kalvettukkal II

62 66

கொற்றன் காடன்

:

Dharmapuri Kalvettukkal II

19

கொற்றாடை

:

Dharmapuri Kalvettukkal II

93

தேசிநாதர் திருக்கோயில்

:

Dharmapuri Kalvettukkal II

11

ஊர்க்கணக்கந்திருக்கண்ணபுர முடையான தேவர்வல்லவன்‌

:

Papanasam Vattakkalvettukal Part I

125-3

திருக்கைஆயம்‌

:

Papanasam Vattakkalvettukal Part I

82-59

திருக்கற்றளி

:

Papanasam Vattakkalvettukal Part I

85-4

திருக்கிளாவடையார்

:

Papanasam Vattakkalvettukal Part I

10-3 13-7 18-35 20-51 24-34,36 28-30 33-3 37-34 42-6 45-5 48-20 50-9 51-31 54-21 55-26 57-14 60-7 64-10 65-16 68-12

திருமுடியால்‌ நடந்தாள்‌ திருக்குகை

:

Papanasam Vattakkalvettukal Part I

85-1

நி(௬)த்தமண்டப திருக்கற்றளி

:

Papanasam Vattakkalvettukal Part I

85-3

திருக்கருகாவூர்

:

Papanasam Vattakkalvettukal Part II

77-8

திருக்கருகாவூர் மகாதேவர்

:

Papanasam Vattakkalvettukal Part II

3-2 11-3 16-3 17-2 19-2 21-2 23-2 24-2 33-2 38-2 41-1 43-6 44-6

திருக்கருகாவூர் திருக்கற்றளி மகாதேவர்

:

Papanasam Vattakkalvettukal Part II

28-8 32-25 40-19

திருக்காப்பு

:

Papanasam Vattakkalvettukal Part II

58-18

திருக்குடமூக்கு

:

Papanasam Vattakkalvettukal Part II

1-3 6-10 9-3 11-3 14-4 19-2 33-2 36-1

திருக்கொள்கை நாச்சியார்

:

Papanasam Vattakkalvettukal Part II

175-2

திருக்கோயிலுடையார்

:

Papanasam Vattakkalvettukal Part II

1-3 11-7 107-1

திருக்கோயிலுடையான்‌

:

Papanasam Vattakkalvettukal Part II

207-6

திருக்கூத்து ஆடியபாதம்‌ தியாகப்பன்‌

:

Papanasam Vattakkalvettukal Part II

93-1

திருக்காரொளித் திருநாள்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

56-1

திருக்கொட்டுத் திருநாள்

:

Tanjavur Vattak Kalvettukal Vol I

54-1

கொற்றம்பூதி

:

Tamilnadu Kalvettukal 2004

55-1

கொற்றவன் கோ

:

Tamilnadu Kalvettukal 2004

40-2

திருக்கல்யாணம்

:

Tamilnadu Kalvettukal 2004

25-2

திருக்கற்றளி

:

Tamilnadu Kalvettukal 2004

116-2

திருக்கற்றளி முதல்

:

Tamilnadu Kalvettukal 2004

134-12

திருக்காரிகுடி பிறந்த நாள்

:

Tamilnadu Kalvettukal 2004

37-2,3

திருக்காரிகுடியான விக்கிரம சோழபுரம்

:

Tamilnadu Kalvettukal 2004

38-4

திருக்கேதாரம்

:

Tamilnadu Kalvettukal 2004

66-9 69-16 76-9

திருக்குளம்

:

Tamilnadu Kalvettukal 2004

71-42

பத்துமாறி திருக்காலச்சரித் துண்டம்

:

Tamilnadu Kalvettukal 2004

145-22

ஸ்ரீகரணத் திருக்கற்றளிப்பிச்சன்

:

Tamilnadu Kalvettukal 2004

117-5,6 138-23,24 140-6,7

கொற்ற நல்லூர் குலமாணிக்கப்பேரேரி

:

Tamilnadu Kalvettukal 2005

19-40,42

தராத்திருக்குத்தி விளக்கு

:

Tamilnadu Kalvettukal 2005

36-25,26,27

வீரகொற்றமங்கல நாடாழ்வான்

:

Tamilnadu Kalvettukal 2005

230-5

திருக்காணிஸ்வரமுடைய மகாதேவர்

:

Tamilnattu Kalvettukal Vol IV

51-5

திருக்காதிற் சாத்தி அருளும் தோடு

:

Tamilnattu Kalvettukal Vol IV

6-29

திருக்காற்க்காறை

:

Tamilnattu Kalvettukal Vol IV

7-31 7-46

திருக்கைய்காறை

:

Tamilnattu Kalvettukal Vol IV

7-30 7-45

திருக்கோயிலிற் படாரர்

:

Tamilnattu Kalvettukal Vol IV

66-22

பெருந்திருக்கோயில்

:

Tamilnattu Kalvettukal Vol IV

68-12

முடக்கொற்றன் கொல்லை

:

Tamilnattu Kalvettukal Vol IV

2-13

கொற்றங்குடி

:

Tamilnattu Kalvettukal Vol V

78-2

கொற்றமங்கலம்

:

Tamilnattu Kalvettukal Vol V

67-2

திருக்கரக்கோயில்

:

Tamilnattu Kalvettukal Vol V

9-4 141-4

திருக்காநாட்டு மூள்ளூரான திருச்சிற்றம்பலச் சதுர்வேதிமங்கலம்

:

Tamilnattu Kalvettukal Vol V

61-7,8

திருக்குறிப்புத்தொண்டர்

:

Tamilnattu Kalvettukal Vol V

178-18

திருக்கொடி தேவர்

:

Tamilnattu Kalvettukal Vol V

14-1

திருக்காமக் கோட்டம்

:

Krishnagiri mavatta Kalvettukkal

119

திருக்காவணம்

:

Krishnagiri mavatta Kalvettukkal

33

திருக்காளத்தி

:

Krishnagiri mavatta Kalvettukkal

209

திருக்கை

:

Krishnagiri mavatta Kalvettukkal

210

திருக்கோவலூர்

:

Krishnagiri mavatta Kalvettukkal

189

திருக்கோவிலூர்

:

Krishnagiri mavatta Kalvettukkal

191

திருக்கோபுரம்

:

Krishnagiri mavatta Kalvettukkal

211

கொற்ற மங்கலம்

:

Thiruthuraipoondi kalvettukkal

3-1 130-6

கோமனத்து திருக்கண்ண புரமூடையான் பட்டன்

:

Thiruthuraipoondi kalvettukkal

187-50

திருக்கச்சனம்

:

Thiruthuraipoondi kalvettukkal

17-5

திருக்கச்சனமுடைய நாயனார்

:

Thiruthuraipoondi kalvettukkal

11-3 12-1 13-1

திருக்கடவூர் உதைய திவாகர பட்டன்

:

Thiruthuraipoondi kalvettukkal

201-I,2

திருக்கடவூர் த்ரயம்பக பட்டன்

:

Thiruthuraipoondi kalvettukkal

183-1

திருக்கதயுடையான் பட்டன்

:

Thiruthuraipoondi kalvettukkal

32-5

பிதநத்தூர் திருக்கண்ண புரமுடையான் பட்டன்

:

Thiruthuraipoondi kalvettukkal

188-47

கொற்றங்குடி

:

Nanillam Kalvettugal Thougudi 1

110-2

கொற்றவாதல்

:

Nanillam Kalvettugal Thougudi 1

119-34

சோமத்தியக் கொற்றக் சீகண்ணன்

:

Nanillam Kalvettugal Thougudi 1

75-7

திருக்கற்றளி

:

Nanillam Kalvettugal Thougudi 1

60-73

திருக்கற்றளி சமைத்தான் ராமாண்டான்

:

Nanillam Kalvettugal Thougudi 1

2-9

திருக்கற்றளியில்லா

:

Nanillam Kalvettugal Thougudi 1

60-71

திருக்கண்ணபுரம்

:

Nanillam Kalvettugal Thougudi 1

69-30

திருக்கண்ணபுரத்து ஆள்வார்

:

Nanillam Kalvettugal Thougudi 1

125-6

திருக்காட்டுப்பள்ளி

:

Nanillam Kalvettugal Thougudi 1

41-5

திருக்காமக்கோட்டமுடைய சிவகாமசுந்தரி நாச்சியார்

:

Nanillam Kalvettugal Thougudi 1

9-5

திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார்

:

Nanillam Kalvettugal Thougudi 1

20-3

திருக்குத்தி விளக்கு

:

Nanillam Kalvettugal Thougudi 1

126-14

திருக்கோயிலுடைய மூன்றுகுடி

:

Nanillam Kalvettugal Thougudi 1

5-25

திருக்கோத்திட்டை உடையார்

:

Nanillam Kalvettugal Thougudi 1

128-2 130-2 3

திருக்கோத்திட்டை காயனார் கோயில்

:

Nanillam Kalvettugal Thougudi 1

129-2

திருக்கோத்துட்டை மஹாதேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 1

125-2,12

பிரான் திருக்கண்ணபுரமுடையான்

:

Nanillam Kalvettugal Thougudi 1

2-3

திருக்கண்ணபுர வாய்க்கால்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

312-6

திருக்கயிலைச்சிவன்

:

Nanillam Kalvettugal Thougudi 2

317-2

திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்

:

Nanillam Kalvettugal Thougudi 2

223-3

திருக்காமீஸ்வரமுடையார்

:

Nanillam Kalvettugal Thougudi 2

354-1

திருக்காமீஸ்வரமுடையான்

:

Nanillam Kalvettugal Thougudi 2

302-5

திருக்காவணம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 2

323-2

திருக்கேதாரமங்கலம்

:

Nanillam Kalvettugal Thougudi 2

354-2

உடையார் திருக்‌கொட்டாறுடையார் வெள்ளானைவிடங்க தேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

387-6

உடையார் திருக்கொட்டாறுடையார் திருநாமத்துக்காணி பட்டப்பாழ்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

388-2

உடையார் திருக்கோட்டாறு உடையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

385-12

உடையார் திருக்கோட்டீஸ்வரம்‌ உடையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

448-23

கூந்தலூர் தம்பிரானார் திருக்காட்டுறைவான்

:

Nanillam Kalvettugal Thougudi 3

477-2

கொற்ற மங்கலமான நீர் முளி

:

Nanillam Kalvettugal Thougudi 3

375-2

கொற்ற மங்கலங்கிமான்‌ திருவேகம்முடையின்‌ கருவூர் நாயகன்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

489-3

கொற்றியம்மை

:

Nanillam Kalvettugal Thougudi 3

424-3

கொற்றநாருடையார் நல்லூரிருந்தரான வில்லவராயர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

373-5

திருக்கண்ணபுரத்துப் பெளராணிய தேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

504-2

திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் ௮ழகய மங்கையற்

:

Nanillam Kalvettugal Thougudi 3

373-5

திருக்காமக்கோடடமுடைய நாச்சியார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

396-3

திருக்குளம்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

454-3

திருக்குத்தி விளக்கு

:

Nanillam Kalvettugal Thougudi 3

455-39

திருக்கைக்காணம்

:

Nanillam Kalvettugal Thougudi 3

409-II,5

திருக்கொட்டாறு

:

Nanillam Kalvettugal Thougudi 3

351-32

திருக்கொட்டாறு

:

Nanillam Kalvettugal Thougudi 3

387-14

திருக்கொட்டாறு தேவன்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

393-III,4

திருக்கொட்டாறுடையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

384-12

திருக்கொட்டாறான பழையக்குடி

:

Nanillam Kalvettugal Thougudi 3

391-9

திருக்கொள்ளம்பு தூருடையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

405-2

திருக்கோட்டாரான பழையகுடி

:

Nanillam Kalvettugal Thougudi 3

383-3

திருக்கோட்டாறு உடைய வேளான்விடங்கதேவர்

:

Nanillam Kalvettugal Thougudi 3

385-4

திருக்கோட்டிஉடையஉடையார்

:

Nanillam Kalvettugal Thougudi 3

449-5

நல்லரி திருக்காளீஸ்வரத்து மஹாதேவற்

:

Nanillam Kalvettugal Thougudi 3

398-2

பெருந்திருக்கோயில்‌ உடையான்‌

:

Nanillam Kalvettugal Thougudi 3

457-7

திருக்கஞ்சாத்து

:

Kanyakumari Kalvettukkal VI

452-31
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (திருக் கொற்ற வாய்தல் 46 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (திருக் கொற்ற வாய்தல் 21 results found)
திருக்கோலக்கா

சீகாழிக்கு அருகே திருக் கோலக்கா என்னும் சோலைப்பதி உள்ளது. அப் பதியில் இளங்கையால் தாள் மிட்டு இனிய தமிழ்ப்பாட் டிசைத்தார் திருஞானசம்பந்தர். இப் பாடலுக்கு இரங்கிய ஈசன் பிள்ளைப் பெருமானுக்குப் பொற்றாளம் பரிசாக அளித்தார் என்றும், அன்று முதல் கோலக்காவில் உள்ள கோயில் திருத்தாள முடையார் கோயில் எனப் பெயர் பெற்ற தென்றும் கூறுவர்.10

10. கோலம் என்பது இலந்தை மரத்தின் பெயர், எனவே, கோலக்கா இலந்தை வனம் ஆகும்.
திருஞான சம்பந்தர் பொற்றாளம் பெற்றதை வியந்து பாடியுள்ளார் சுந்தரர்.

நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு
இரங்கும் தன்மையாளனை - திருக்கோலக்காப் பதிகம், 8.

திருக்கொள்ளிக்காடு

திருநெல்லிக்காவுக்குத் தென் மேற்கேயுள்ளது கொள்ளிக் காடு. அப் பதியைப் பாடி யருளிய திருஞானசம்பந்தர்,

வெஞ்சின மருப்போடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே
என்று ஒரு பாசுரத்திற் குறித்தமையால் கரியுரித்த நாயனார் கோவில் என்னும் பெயர் அதற்கு அமைவதாயிற்று. இப்பொழுது அவ்வூர் தெற்குக் காடு என வழங்கும்.19

19. தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ளது, M.E.R., 1935-36.

திருக்காரைக்காடு

காஞ்சி மாநகரின் ஒருசார், காரைச் செடிகள் நிறைந்த கானகத்தில் ஒரு நறுமலர்ப் பொய்கையின் அருகே ஈசன் திருக்கோயில் எழுந்தது.

தேர்ஊரும் நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீர்ஊரும் மலர்ப்பொய்கை நெரிக்காரைக் காட்டாரே
என்ற தேவாரத் திருப்பாட்டில், அந் நகர வீதியின் அழகும், நன்னீர்ப் பொய்கையின் நீர்மையும் நன்கு காட்டப்பட்டுள்ளன. அப் பொய்கை இப்பொழுது வேப்பங்குளம் என்னும் பெயரோடு திருக்கோயிலுக்குத் தெற்கே நின்று நிலவுகின்றது.26

26. திருக்காரை யீசுரன் கோயில் என்பது திருக்காலீசுரன் கோயில் என மருவியுள்ளது. காரைக்காடு திருக்காலிக்காடு என வழங்கும்.

திருக்கழுக்குன்றம்

ஈசன் கோயில் கொண்ட ஏனைய மலைப்பதிகளும் திருஞான சம்பந்தர் தேவாரத்தால் விளங்குவனவாகும்.

கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம்
பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் பருப்பதம்
என்றெழுந்த திருவாக்கிலுள்ள கழுக்குன்றம் திருக்கழுக்குன்றம்5 என்னும் சிறந்த பதியாகும். பண்டை நாளில் தொண்டை நாட்டைச் சேர்ந்தது திருக்கழுக்குன்றம். தேவாரம், திருவாசகம் ஆகிய இரு பாமாலையும் பெற்ற அக்குன்றம்6 வேதாசலம் என்றும், வேதகிரி என்றும் வடமொழியில் வழங்கும். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாக அம் மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் இரு கழுகுகள் வந்து காட்சியளித்தலால் பட்சி தீர்த்தம் என்னும் பெயரும் அதற்கு அமைந்தது. கழுகு தொழு வேதகிரி என்று அருணகிரிநாதர் திருப்புகழில் இந் நிகழ்ச்சியை அறிவித்தருளினார்.7

5. பெரிய புராணம் - திருக்குறிப்புத் தொண்டர் புராணம்.
6.கன்றினொடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே - தேவாரம்.

எனையாண்டு கொண்டு, நின்தூய் மலர்க்கழல்தந்து ...காட்டினாய் கழுங்குன்றிலே
- திருவாசகம், திருக்கழுக்குன்றப் பதிகம்.
7. திருப்புகழ், 325.

திருக்கயிலாயமலை

விண்ணளாவி நிற்கும் இமயமலையில் வெள்ளியங்கிரியாக விளங்குவது திருக் கயிலாயம். ஈசனார் வீற்றிருக்கும் மலைகளுள் ஒரு மாமலையாய் இலங்கும் திருமாமலை அதுவே. கயிலாயம் இருக்கும் திசை நோக்கிப் பாடப்பட்ட தேவாரப் பதிகங்கள் பலவாகும். கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாயமலையே என்று ஆனந்தக் களிப்பிலே பாடினார் திருஞானசம்பந்தர். கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி, கயிலை மலையானே போற்றி போற்றி என்று உளங் கனிந்து பாடினார் திருநாவுக்கரசர். ஊழிதோ றூழி முற்றும் உயர் பொன்மலை என்று அதன் அழியாத் தன்மையை அறிவித்தார் சுந்தரர். இத் தகைய செம்மை சான்ற கயிலாச மலையின் இயற்கைக் கோலத்தையே தென்னாட்டுத் திருக்கோயில்கள் சுருக்கிக் காட்டும் என்பர்.

திருக்கோணமலை

இலங்கை யென்னும் ஈழ நாட்டிலுள்ள திருக் கோணமலையும் தேவாரப் பாமாலை பெற்றதாகும். தெக்கண கயிலாயம் என்று போற்றப்படும் தென்னாட்டு மலைகளுள் ஒன்று திருக்கோணமலை என்பர்.8 குரை கடல் சூழ்ந்த கோணமாமலை என்று தேவாரத்திற் புகழப் பெற்ற அம் மலை இன்று திருக்கணாமலை என வழங்கும்.9

8.

முன்னர் வீழ்ந்திடு சிகரிகா ளத்தியா மொழிவர்
பின்னர் வீழ்ந்தது திரிசிரா மலையெனும் பிறங்கல் அன்ன தின்பிற கமைந்தது கோணமா வசலம் இன்னன மூன்றையும் தக்கிண கயிலையென் றிசைப்பர்
- செவ்வந்திப் புராணம், திருமலைச் சருக்கம்.
9. திருக்கணாமலை என்பது ஆங்கிலத்தில் Trincomalee ஆயிற்று.

திருக்கற்குடி

கற்குடியார் விற்குடியார் கயிலாயத்தார் என்று தேவாரத்திற் போற்றப்படும் கற்குடி இக் காலத்தில் உய்யக் கொண்டான் திருமலை என வழங்குகின்றது.10 அம் மலையிற் கோயில் கொண்ட இறைவனை விழுமியார் என்று திருநாவுக்கரசர் போற்றியுள்ளார்.

கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
என்பது அவர் திருவாக்கு. அஃது உய்யக் கொண்டான் திருமலை யென்னும் பெயர் பெற்ற பொழுது, ஈசனும் உஜ்ஜீவநாதர் என்னும் திருநாமம் பெற்றார். அப் பெயர் இன்று உச்சி நாதர் என மருவி வழங்குகின்றது.11

10. உய்யக்கொண்டான் என்பது இராஜராஜனுடைய விருதுப் பெயர்களில் ஒன்று.
11. தேவாரத் திருமுறை : சுவாமிநாத பண்டிதர் பதிப்பு, ப. 365.

திருக்கோவலூர் வீரட்டம்

மற்றொரு வீரட்டானம் திருக்கோவலூர் ஆகும். அது பெண்ணை யாற்றின் தென்கரையில் உள்ளது. முன்னாளில் சேதி நாடென்றும், மலாடென்றும் பெயர் பெற்றிருந்த நாட்டின் தலைநகரமாகத் திருக் கோவலூர் விளங்கிற்று.2 பின்னாளில் அவ்வூர் மேலூர் என்றும், கீழுர் என்றும் பிரிவுற்றது. மேலூரே திருக்கோயிலூர் என இன்று வழங்கி வருகின்றது.3 தேவாரப் பாமாலை பெற்ற வீரட்டானம் கீழுரில் உள்ளது.

2. திருத் தொண்டர்களுள் ஒருவராகிய மெய்ப் பொருள் நாயனார் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநில மன்னர் என்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும்.

சேதிநன் னாட்டின் நீடு திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழிவரும் மலாடர் கோமான்
என்று அவர் குறிக்கப்படுகின்றார். மலையமான் நாடு மலாடென்றும், அந் நாட்டினர் மலாடர் என்றும், அவர்தம் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் கூறுவர். (திருத்தொண்டர் புராண வுரை, ப. 578.)
3. இப் பாகத்தில் ஆழ்வார்கள் மூவரால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற இடைக்கழி என்னும் பெருமாள் கோயில் இருக்கின்றது.

திருக்கடவூர் வீரட்டம்

மாசற்ற பூசை புரிந்த மார்க்கண்டனுக்காகக் காலனைக் காலால் உதைத்த ஈசனது பெருங் கருணைத் திறம் தேவாரத்தில் பல பாசுரங்களிற் பாராட்டப்படுகின்றது. திருக்கடவூரில் அமைந்த வீரட்டானம் அவ் வைதிகத்தைக் காட்டுவதாகும்.

மாலினைத் தவிர நின்ற
மார்க்கண்டர்க் காக அன்று
காலனை உதைப்பர் போலும்
கடவூர் வீரட்ட னாரே
என்று திருநாவுக்கரசர் அவ்வூரைப் பாடியுள்ளார். கடவூர் வீரட்டானத்து இறைவனைக் காலகால தேவர் என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.4

4. 22 of 1906.

திருக்கண்டியூர் வீரட்டம்

திருவையாற்றுக்குத் தென்பால் உள்ள திருக்கண்டியூரில் அமைந்த கோயிலும் வீரட்டான மாகும். பிரமதேவனது செருக்கை அழிக்கக் கருதிய சிவபெருமான் அவன் சிரங்களில் ஒன்றையறுத் திட்ட செய்தியை இப் பதியோடு பொருத்தித் தேவாரம் போற்றுகின்றது. அச் செயலை ஊரோடு நாடறியும் என்று அருளினார் திருநாவுக்கரசர்.5

5.

பண்டங் கறுத்ததொர் கையுடையான்
படைத்தான் தலையை உண்டங் கறுத்ததும் ஊரொடு
நாடவை தானறியும்
- திருக்கண்டியூர்ப் பதிகம், 3.

திருக்கடவூர் – மயானம்

திருக்கடவூர் மயானம் மூவர் தேவாரமும் பெற்றது. அங்கமர்ந்த இறைவன் திருநாமம் பெருமானடிகள் என்று குறிக்கப்படுகின்றது.

கரிய மிடறும் உடையார் கடவூர்
மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்எம்
பெருமான் அடிகளே
என்று பாடினார் திருஞான சம்பந்தர்.2 அம் மயானம் திருக்கடையூர் என வழங்கும் ஊருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது. திருமயானம் என்பது அதன் பெயர்.

2.

திருமால் பிரமன் இந்திரற்கும்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமாள் அடிகளே
- சுந்தரர் தேவாரம்

பெருந்திருக்கோயில்

வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் மருதநாடு என்ற பழமையான ஊரொன்று உள்ளது. அங்கமைந்த ஆலயத்தின் பெயர் பெருந்திருக் கோயில் என்பது சாசனத்தால் விளங்கு கின்றது. இராஜ ராஜன் முதலாய் பெருஞ் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில காலம் விக்கிரம சோழ நல்லூர் என்ற மறுபெயரும் அதற்கு வழங்கியதாகத் தெரிகின்றது. பெருந்திருக்கோயில் என்பது இக் காலத்தில் புரந்தீஸ்வரர் கோயில் எனத் திரிந்து வழங்குகின்றது.5

5. 407 of 1912.

சிறுதிருக்கோயில்

தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள எழும்பூர் என்னும் உருமூர் ஒரு பழமையான ஊர். இடைக் காலத்தில் விக்கிரம சோழ சதுர் வேதிமங்கலம் எனவும் அவ்வூர் வழங்கிற்று. அங்குள்ள கோயிலிற் கண்ட சாசனங்கள் சிறு திருக் கோயில் என்று அதனைக் குறிக்கின்றன.6 இப்பொழுது கடம்பவனேஸ்வரர் கோயில் என்று கூறப்படுவது அதுவே.

6.384 of 1913.

கீழைக் திருக்காட்டுப்பள்ளி

காட்டுப்பள்ளி யென்னும் பெயருடைய தலங்கள் இரண்டு உள்ளன. ஒன்று காவிரியாறு கடலிற் பாயும் இடத்திற்கு அணித்ததாக உள்ளது.

பலபல வாய்த்தலை யார்த்து மண்டிப்
பாய்ந்திழி காவிரிப் பாங்கரின் வாய்க் கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி
என்று அதன் வளத்தைக் குறித்தருளினார் திருஞான சம்பந்தர். பாடல் பெற்ற திருவெண் காட்டுக்கு மேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள இக்காட்டுப் பள்ளி, இப் பொழுது ஆரணியேசுரர் கோயிலென வழங்குகின்றது.

மேலைத் திருக்காட்டுப்பள்ளி

காவிரி யாற்றினின்று குடமுருட்டியாறு பிரிந்து செல்லும் இடத்தில் உள்ள மற்றொரு திருக்காட்டுப்பள்ளியும் பாடல் பெற்றதாகும்.

கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே
என்று பணித்தார் திருநாவுக்கரசர் . இக் காலத்தில் திருக்காட்டுப் பள்ளியிலுள்ள ஆலயம் அக்கினீசுரர் கோயில் என்ற பெயர் கொண்டு நிலவுகின்றது.

திருக்கோளிலி

இவ்வாறே, திருவாரூருக்குத் தென்கிழக்கே அமைந்த திருக்கோளிலி என்ற ஊரின் பெயரும் இறைவன் பெயராகவே தோற்றுகின்றது. கேடில்லாத பரம்பொருளைக் கோளிலி என்னும் சொல் குறிப்பதாகும். அவி நாசி யென்ற வடசொல்லுக்கும், கோளிலி யென்ற தமிழ்ச் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. இந்த நாளில் திருக்கோளிலி என்பது திருக் குவளை யெனச் சிதைந்து வழங்குகின்றது.

திருக்காரிக்கரை

தொண்டை நாட்டுத் தலங்களை வழிபட்ட திருஞான சம்பந்தரும் திருநாவுக் கரசரும் காளத்திநாதனைக் காணச் செல்லும் வழியில் திருக்காரிக் கரையைத் தொழுதார் என்று இருவர் வரலாறும் கூறுகின்றன. எனவே, திருக்காரிக்கரை தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றென்பது தெளிவாகும்.
அத் தலம் தொண்டை நாட்டுக் குன்றவர்த்தனக் கோட்டத்தில் உள்ளதென்று கல்வெட்டுக் கூறுகின்றது. குன்ற வர்த்தனக் கோட்டத்து நடுவில் மலையிலுள்ள திருக் காரிக்கரை யுடையார் என்பது சாசனத் தொடர்26 எனவே, காரிக்கரை என்பது திருக்கோயிலின் பெயராகத் தெரிகின்றது. இராஜராஜன் முதலாய பெருஞ் சோழ மன்னர்கள் அக் கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள் கல்வெட்டிற் காணப்படும். இந் நாளில் செங்கற்பட்டு நாட்டில் பொன்னேரி வட்டத்தில் ராமகிரி என்னும் பெயரால் அத் தலம் விளங்குகின்றது.

26. 646 of 1904.

திருக் கண்ணபுரம்

கண்ணனுக்குரிய திருப்பதிகளுள் விதந்தெடுத்துரைக்கப் படுபவன் ஐந்து. - அவை பஞ்ச கிருஷ்ணக்ஷேத்திரங்கள் என்று பாராட்டப்படும். தஞ்சை நாட்டு நன்னிலத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ள திருக்கண்ணபுரம் அவற்றுள் ஒன்று. மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான், அரணமைந்த மதிள் சூழ் திருக் கண்ண புரத்து ள்ளான் என்று நலமுறப் பாடியருளினார் நம்மாழ்வார். திருமங்கை யாழ்வார் நூறு திருப்பாசுரங்களால் அக் கண்ணபுரப் பெருமாளைப் போற்றினார். கருவரை போல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானை என்று அவர் பாடிய பாசுரத்தால் அப்பதியில் நின்று காட்சி தரும் நெடுமாலின் கோலம் நன்கு விளங்கும்.

திருக்கண்ணன்குடி

தஞ்சை நாட்டு நாகை வட்டத்தில் உள்ளது திருக் கண்ணன்குடி. அங்கு நின்றருளும் கண்ணனைத் திருமங்கை யாழ்வார் பாடியுள்ளார்.

செழுமையார் பொழில்கள் தழுவும் நன்மாடத்
திருக்கண்ணங் குடியுள் நின்றானே
என்பது அவர் திருவாக்கு.

திருக்கண்ணமங்கை

திருவாரூருக்கு வடமேற்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதி. கன்னலைக் கரும்பி னிடைத்தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண் டேனே என்று இப் பதியில் நின்றிலங்கும் பக்தவத்சலனைத் திரு மங்கை யாழ்வார் பாடித் தொழுதார்.

திருக்கோவலூர்

ஐந்தாம் கிருஷ்ண க்ஷேத்திரம் திருக்கோயிலூர் என வழங்கும் திருக்கோவலூர் ஆகும். வட மொழியில் அவ்வூர் கோபாலபுரம் எனப்படும். கோபாலனாகிய திருமால் எழுந்தருளி யிருக்கும் தலமாதலால் அதற்குக் கோவலூர் என்னும் பெயர் அமைந்த தென்பர். அது கோவல் எனவும் முன்னாளில் வழங்கிற்று.