கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (திருமெழுக்கு 1 results found)

திருமெழுக்கு

: கோயிலை மெழுகுதல்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருமெழுக்கு 2 results found)

திருமெழுக்குப்புறம்

:
  • கோயிற் பகுதிகளையும் திருமுற்றத்தினையும் நாளும் தண்ணீர் தெளித்தும், சாணமிட்டும் மெழுகு வார்க்கு அளிக்கப்பெறும் இறையிலி நிலம். நிவந்தம்.

  • “திருமெழுக்கு இடுவாளொருத்திக்கு நெல்லு நாழிஉரியும்”

  • தெ. கல். தொ. 5. கல். 578

திருவலகு திருமெழுக்கு

:
  • கோயிற் பகுதிகளைத் தூய்மை செய்ய நாளும் பெருக்குதல், திருவலகிடுதல் சாணமிட்டு மெழுகு தல், திருமெழுக்கிடுதல் என்பதாம். இப்பணியினைப் பெண்கள் புரிவர்.

  • “திருவலகு திருமெழுக்கிவாளொருத்திக்கு நெல்லு நாழி உரியும்”

  • தெ. கல். தொ. 5. கல் 578

  • “திருவலகிட்டுத் திருமெழுக்கு இடுவார் இருவர்க்கு நிசதம் நெல்லு “அறுநாழி”

  • தெ. கல். தொ. 17. கல். 243

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (திருமெழுக்கு 1 results found)