கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பிள்ளை புரோசைக் குடையூர் 10 results found)
ஆதிரைப் பிள்ளையார் நோன்பு |
: | திருவாதிரை, பிள்ளையார் சதுர்த்தி முதலிய உற்சவங்களுக்கான செலவுக்கு இறுக்கும் தொகை |
---|---|---|
சிறுப்பிள்ளை |
: | அரண்மனை ஊழியன் ; வேலையாள் |
சின்னப்பிள்ளையாண்டான் |
: | அடைப்பம் என்னும் அரசனுடைய அதிகாரியின் கீழ் ஊழியம் செய்பவன் ; அரண்மனை ஊழியன் |
திருஞானம் பெற்ற பிள்ளையார் |
: | திருஞானசம்பந்த நாயனார் |
திருமாளிகைப்பிள்ளை |
: | கோயில் காரியங்களை நிர்வகிப்பவன் |
திருமாளிகைப் பிள்ளையார் |
: | சண்டேசுவரர் |
பிள்ளைகள் தனம் |
: | இராஜ குடும்பத்து இளைய பரம்பரையைச்சேர்ந்த வர்களைக் கொண்டு உருவாகிய அதிகார வர்க்கம் |
பிள்ளையார் நோன்பு |
: | விநாயக சதுர்த்தி; கோயிலில் அந்த உற்ச வத்தை நடத்தி வைப்பதற்காக விடப்பெற்ற மானியம் அல்லது இறுக்கப்பெறும் பணம் ; பிள்ளையார் நோன்புத் தேவை, பிள்ளையார் நோன்புப்பச்சை எனவும் குறிக்கப்பெறும் |
பிள்ளை வரி |
: | குமாரர் அல்லது பிள்ளைகள் (இராஜகுமாரர்) என்று குறிக்கப்பெறும் சிற்றரசர் (அதிகாரி) வர்க்கத்தாருக்காக இறுக்கும் வரி ; குமார கச்சாணம் என்பதும் இதுவே போலும்; (கல்யாண புரத்திலிருந்து அரசாண்ட மேலைச் சாளுக்கிய சாசனங்களில் காணும் குமார விருத்தி என்பதை ஒப்பிட்டுக் காண்க) |
முதலிப்பிள்ளை |
: | தலைமை முதலிப்பதவியில் உள்ளவனுக்கு அடுத்தபடியாக உள்ளவன் போலும் |
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பிள்ளை புரோசைக் குடையூர் 5 results found)
சேமப்பிள்ளை |
: |
|
---|---|---|
பிள்ளையார் |
: |
|
பிள்ளை வரி |
: |
|
காரியப்பிள்ளை |
: |
|
பிள்ளையார் நோன்பு தேவை |
: |
|
Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பிள்ளை புரோசைக் குடையூர் 184 results found)
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பிள்ளை புரோசைக் குடையூர் 1 results found)
Village Name | King | Period | Inscription | Notes |
---|---|---|---|---|
நல்லாம்பிள்ளைப் பெற்றார் | சுமார் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டு | கன். கல். தொகுதி 2. தொ. எ. 1968-141 | (இதே பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்திலும் ஓர் ஊர் இருக்கிறது) |
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (பிள்ளை புரோசைக் குடையூர் 2 results found)
பிள்ளையார்
ஈசனருளாலே தோன்றிய பிள்ளையாரும் முருகனும் தமிழ்நாடெங்கும் வணங்கப் பெறுவர். ஒவ்வொரு சிவா லயத்திலும் அவ் விருவருக்கும் தனித் தனி இடமுண்டு. கோயில் இல்லாத சிற்றூர்களிலும் சிற்றூர்களிலும் பிள்ளையார் என்னும் விநாயகர் ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரம் முதலிய இடங்களில் அமர்ந்திருப்பார். அப் பெருமானுக்குரிய பல பெயர்களுள் பிள்ளையார், கணபதி என்ற இரண்டும் ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம்.6
6. சங்க நூல்களில் பிள்ளையாரைப்பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கவில்லை. பிடியதன் உரு உமைகொள்
என்ற தேவாரத்தில், கணபதி வர அருளினன்
என்று பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.
பிள்ளையார்பட்டி
பாண்டி நாட்டில் குன்னக்குடிக்கு அருகேயுள்ளது பிள்ளையார்பட்டி என்னும் ஊர்.7 முற்காலத்தில் அது மருதங்குடி என்று வழங்கியதாகத் தெரிகின்றது. அங்குப் பழமை யான குகைக் கோயில் ஒன்றுண்டு. அச் சிவாலயத்தின் ஒரு சார் உள்ள பாறையில் பிள்ளையார் வடிவம் அமைக்கப்பட்டது. நாளடைவில் கற்பகப் பிள்ளை யார் என்னும் பெயர் வாய்ந்த அப் பெருமான் வரதமுடைய மூர்த்தியாக வணங்கப்பட்டார்; அவர் பெயரே ஊருக்கும் அமைவதாயிற்று.8
நெல்லை நாட்டிலுள்ள பிள்ளையார் குளமும், சேலம் நாட்டிலுள்ள கணபதி நல்லூரும், வட ஆர்க்காட்டிலுள்ள கணபதி மடுவும், தஞ்சை மாநகரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள கணபதி நகரமும் விநாயகர் பெயர் தாங்கி நிலவும் ஊர்களாகும்.
7. இராமநாதபுரம் நாட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளது பிள்ளையார்பட்டி
8. M.E.R., 1935-36.