Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (இராஜராஜன் 6 results found)
Word Book Name TNARCH Data Page

இராஜராஜன்‌ வேளைக்காரர்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1184 205

இராஜராஜன்‌ வெள்ளிக் காளம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1195 226

ப்ரம்மஸ்தானம் இராஜராஜன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3706 12-6

ப்ரம்மஸ்தானம் இராஜராஜன் பேரம்பலம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3711 22-5

பேரம்பலம் இராஜராஜன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3806 177-7

இராஜராஜன்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 431 123-2
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (இராஜராஜன் 2 results found)
இராஜராஜன்

உறந்தையைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னருள் சிறந்தவன் திருமாவளவன் என்று தமிழ் இலக்கியம் கூறுவது போலவே, தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட சோழர் குலத்தைத் தலையெடுக்கச் செய்தவன் இராஜராஜன் என்று சாசனம் அறிவிக்கின்றது. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் அரசாளத் தொடங்கிய இம் மன்னன் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து தமிழ் நாட்டின் பெருமையைப் படிப்படியாக உயர்த்தினான்.

இராஜராஜன்

தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்தில் உள்ள தாதாபுரம் என்னும் ஊர் இராஜராஜபுரமேயாகும். 79 நெல்லை நாட்டிலுள்ள இராதாபுரமும் இராஜராஜபுரமே என்று சாசனம் கூறுகின்றது. 80 ஈழநாட்டுப் பாலாவி நதிக்கரையில் திருக்கே தீச்சரம் என்னும் பாடல் பெற்ற திருக் கோவிலைத் தன்னகத்தேயுடைய மாதோட்டம் இராஜராஜபுரமென்னும் பெயர் பெற்றது. 81

79. அங்குச் சுந்தர சோழன் திருமகளாகிய குந்தவைப் பிராட்டியார் இரவிகுல மாணிக்க ஈச்சரம் என்ற சிவாலயமும், குந்தவை விண்ணகர் என்ற திருமால் கோவிலும், குந்தவை ஜினாலயம் என்னும் ஜைனக் கோயிலும் கட்டினாள். (8 of 1919). இரவிகுல மாணிக்கம் என்பது இராஜராஜனது விருதுப் பெயர்.
80. M. E. R.
81. 616 of 1912.