கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கடை 16 results found)

அஸ்திகடை

: கடும்போர்

கடைக்காட்சி

: கண்காணித்தல்

கடைக் கூட்டல்

: முடிவுகட்டி வசூலித்தல் (பொலி யூட்டுப் பொன் கடைக்கூட்ட வந்தார்க்கு நிசதி இரண்டு சோறு கொடுப்போ மானோம்)

கடைக்கூட்டு

: காரிய நிருவாகம்

கடைக்கூட்டிலக்கை

: கடைக்கூட்டுவார் வசிப்பதற்கான இடம்

கடைக் கூட்டுத் தானத்தார்

: கோயில் அதிகாரிகள்

கடை கூட்டு(த்) தானத்தார்

: நானாதேசி வியாபாரிகளைக் குறிப்பிடும் பெயர்களுள் ஒன்று; அவர்களிலே ஒரு பிரிவினர்போலும்

கடைத் தொழில்

: பதக்கத்தில் ஒருபாகம், கடைசல் பிடிக்கப்பட்டது போலும்

கடைநீர்

: கடைசியாக உள்ள நிலத்துக்குப் பாயும் தண்ணீர்

கடைப்பாட்டம்

: அங்காடிப் பாட்டம் எனக் கொள்வர்; கடைசித் தரமான வரியையும் குறிக்கும்; கடைப்பூ எனவும் ஆகும்

கடைப் பூ

: கடைசியான மூன்றாம் போகம்

கடையடைக்காய்

: விற்பனைக்குக் கொணர்ந்த பாக்கின் மீது இறுக்கும் வரி போலும்

கடையிறை

: கடைசித்தரமான, அதாவது மிகவும் குறைவான வரி; (வருஷ) முடிவாகக் கொடுக்கும் வரியையும் குறிக்கும் போலும்; கடைப்பாட்டம் எனவும் கொள்வர்

கடையீடு

: அரசனது முடிவான உத்தரவு; கீழ் அதிகாரிகளின் உத்தரவும் ஆகும்

கடையூறு

: முடிவாக வரும் தடை; முடியாத தடை

மனைக்கடையான்

: மனையிலேயே கடை வைத்து வியாபாரம் செய்பவன
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கடை 18 results found)

கடைக்கட்டு இலக்கை

:
  • அங்காடிக்கடைகள் அமைத்துக் கொள்வதற்குரிய இடத்திற்குச் செலுத்தும் வரி.

கடைக்காட்சி

:
  • நேர்பார்வையில் ஆராய்ந்து சபையார் செய்யும் தீர்ப்பு.

  • இவ்வூர் தர்மிகளோம் சபையார் கடைக்காட்சியாக இப்பரிசு செய்து

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 95

கடைக் காண்பார்

:
  • நேர் பார்வை செய்வார். தாமே உடனிருந்து உண்மை அறிந்து செயற்படும் கிராமசபையார். கண் காணிப்பார்.

  • இத்தர்மம் - ஆசந்ரகாலமும், முட்டாமை ஊட்டுவிப்பதாக இப் பெருமக்களே கடைக்காண்பாரானார்

  • நிருபதுங்க பல்லவன்

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 104

கடைக்கூட்ட வந்தார்

:
  • தவணை நாளில் வட்டி செலுத்திக் கொடுக்க நேரில் வந்தவர்.

  • இப்பொலியூட்டுப் பொன் கடைக்கூட்ட வந்தார்க்கு நிசதி இரண்டு சோறு குடுப்போமானோம்

  • தெ. கல். தொ. 12. பகு. 1. கல். 91. 100

கடைக்கூட்டிலக்கை

:
  • பொதுவிடத்திலோர் பகுதியை தேவை கட்கேற்ப அவ்வப்போது பயன்படுத்துவார் ஆண்டொன்றிற்குக் கூடிய தொகையாகச் செலுத்தும் இடவரி. வரி, கடமை செலுத்து வதற்கு வந்தவர்கட்குத் தங்குவதற்கு இடமும் உணவும் அளித்தற்குரியதாகப் பெறும் வரி.

கடைத்தொழில்

:
  • பொன்மாலையாகச் செய்யப்படும் அணிகலன்களின் இரு தலைப்பிலும் அமைக்கப்பெறும் சுரை வேலைப் - பாடு.

  • ஏகவல்லி வடம் ஒன்றினால், நெல்லிக்காய் முத்து நூறும் கடைத் தொழில் இரண்டும், இவை கோத்த நூலும் உள்பட இதில் அலகு நிலைப்படி எடை நூற்று முப்பதின் சழஞ்சு

  • தெ. கல். தொ. 8. கல். 121

கடை நீர்

:
  • கடைசியாக - விளை நிலங்களுக்கு விடப்பெறும் பாசன முறை நீர்.

கடைப்பலகை

:
  • பொன் அணிகலன்களிலொன்றான மாலையின் இரு முனைகளிலும் அமைக்கப் பெறும் தகட்டிணைப்பு. முகப்புத் தகடுகள்.

  • திருமலையில் நாலி நாற்பத்தொன்றும் கடைப்பலகை இரண்டும்

  • முதல் இராசேந்திரன்

  • தெ. கல். தொ. 23. கல். 46

கடைப்பாட்டம்

:
  • ஆண்டொன்றில், பருவகாலங்கட்கேற்பப் பயிரிடப் பெறும் பயிர் வகையில், கடைசியாக விளைவு செய்து பெறும் மகசூல். கடைப்பாட்டம் என்ற வரியுமாகும். பாட்டம் - பருவகால விளைவு.

  • இறைநீக்கி நின்ற கடைப்பாட்டத்தால் வந்த கடமை

  • தெ. கல். தொ. 8. கல். 288

கடைப்பூ

:
  • பருவகால ஆண்டகவையில் கடைசியாக விளையும் போகம் (பயிர்) மூன்றாவது போகம். இதனைச் சித்திரைக் குறுவை என்றும் கூறுவர்.

கடைமடை

:
  • விளை நிலங்களின் வரப்புக்களில் அமைக்கப் பெறும் நீர்வடிகால் பறிப்புப்பாதை

  • தலைமடையாலே நீர்பாயவும் கடைமடையாலே விழவும்

  • தெ. கல். தொ. 23. கல். 490

கடையடைக்காய்

:
  • கடையிடத்து விற்பனை செய்யப்பெறும் பாக்கிற்கு விதிக்கப்பெறும் வரி.

கடையிறை

:
  • அரசுக்குத் தொடரும் ஆண்டுகளில், ஒவ்வோராண்டின் கடைசியாகக் கொடுக்கும் வரி, அங்காடிக் கடைகட்குரியவரியுமாகும்.

கடையீடு

:
  • முதன்மைக் கட்டளை. சிறப்பு ஆணை. தவறாமல் நிகழச் செய்யும் இறுதியான தனி உத்தரவு.

  • திருமாளிகையில் கல்வெட்டுவித்தல் செய்யப்பெற்றதில்லை. யென்று தானத்தார் சொல்லுகையாலே இது இந்நாளிலே இப்படி செய்வதென்று கடையீடு தந்தருளினார்.

  • தெ. கல். தொ. 12. கல். 254

காரும் மறுவும் ஒரு பூவும் கடைப்பூவும்

:
  • கறுவைப்பயிரும், தாளடிப்பயிரும், ஒரு போகச் சம்பாப் பயிரும். சித்திரைக் குறுவை யும் (நெற்பயிர்வகை).

  • தெ. கல். தொ. 17. கல். 127

கடை கொட்டிகள்

:
  • தம்பட்டம் அடிப்பவர்கள். கோயில் விழாக் களில் தம்பட்டம் (பறை) அடிப்பவர்கள் உவச்சர்க்கு உட்பட்டவர். ராவர் இவர்கள் உவச்சு என்ற பெயரால் காணியாட்சி பெறுவர்.

  • உவச்சுக்கு உட்படும் - மேற்படி சகடை கொட்டிகளில் சாத்தன் அம்பலத்துக்கு தன்னேற்றம் ஆள் பதினோராவர்க்கும் பேரால் பங்கு அரை

  • தெ. கல். தொ. 2. கல். 66

விலங்கடைத்தல்

:
  • பாசன வாய்க்காலில் நீர் உயர்ந்து நிலத்திற்குப் பாய, வாய்க்காலில் மடை வாயிலைச் சார்ந்து வளைவாக அடைத்து நீரேற்றங் கொள்ள விடுதல்.

  • இந்நிலத்துக்கு விலக்கடைக்கவும் குறங்கறுத்து விடவும் பெறாதோமாகவும்.

  • தெ. கல். தொ. 8. கல். 1

கடைச்சரக்குத் தீர்வை

:
  • மிளகு, மஞ்சள், பாக்கு, சுக்கு, கடுக்காய், சர்க்கரை, சீரகம், வெந்தயம், மற்றும் உண்டான கடைச் சரக்குகளின் மீது பெறும் கட்டணம்.

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (கடை 62 results found)
Word Book Name TNARCH Data Page

எண்ணைக்கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2413 89

கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2413 89

காசு கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2413 89

சில்லரை கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2413 90

முத்துக்கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2413 89

எண்ணைக்கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 92

சுகந்த கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 92

பணியாரக்கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 92

பலசரக்கு கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 93

பவளக்கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 93

பிடவை கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 93

முத்துக்கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 92

கடைக்கட்டிலக்கை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 95

பலசரக்கு கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 94

பவளக்கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 94

பித்தளைக்கடை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 94

தகடைநாடு

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2239 160

கடைக்காட்டூர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2253 175

தகடைநாடு

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2267 191

கடைக்கோட்டூர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2272 197

தகடைநாடு

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2272 196

தகடைநாடு

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2272 197

தகடைநாட்டோம்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2275 200

கடைக்கோட்டூர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2287 216

தகடைநாடு

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2288 217

தகடைநாடு

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2306 238

கடைவயநீர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3196 116

கடைக்கோடி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3205 127

திருவேங்கடைய்யன்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3225 153

கடைமை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2925 8

கடை கூட்டிலக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2928 14

கடை கூட்டிலக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2943 44

கடை கூட்டிலக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2948 53

பொற்கோட்டம்‌ கிழக்கடைய நிலம்‌

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 936 386-3

கடைக்கூட்டு பிள்ளை ஆதித்த தேவர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 556 9-7

செனைக்கடை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 556 9-13

கடையூடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3283 34-21

பண்டாரக்கடை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 79-16

இரட்டைத்தலைக்கடை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1785 5

கடைகணார்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1800 29

சேனைக் கடைக் கைக்கோளர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3604 88-3,4

சேனைக்கடையார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3830 234-27

மனைப் புழைக்கடைகள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3903 108-4

கடையிடூ

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3974 7-48

கடைக்குறிச்சி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5078 4

திருமழுவு டையானான கடைக்குறிச்சி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5080 7

திருமழபாடியுடையானான கடைக்குறிச்சி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5084 11

நம்பி கடைக்குறிச்சி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5088 15

திருமழபாடியுடையானான கடைக்குறிச்சி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5090 17

திருமழபாடியுடையானான கடைக்குறிச்சி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5091 18

கடைக்குறிச்சி பால்வணத்தான்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5092 19

கடைக்கூட்டு

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5159 95

திருக்கடைக்குறிச்சி நாயனார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5246 202

இமைத்திருகடை மாளிகை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 504 191-2

தகடை மன்நன்

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5439 13

தகடைநாடு

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5442 16

கற்க கடைவையரிய நாந வியளன் மற படை கண்ட நான இராசேந்திர சோழ விரியூர் நாடுடையாநான உத்தம சோழப் புறமலை நாடாழ்வேன்

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5484 54

கடைக்குறிச்சி ஆண்டவன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2661 1

கடைக்குறிச்சி ஆண்டவன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2668 10

கடைக்குறிச்சி ஆண்டவன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2675 17

கடைகூடடு

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 200 201-10

வேகடைத் தகடு

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 200 201-7
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (கடை 2 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (கடை 1 results found)
கடை

ஊர்களின் அமைப்பைக் கருதி, தலை, இடை, கடை என்னும் அடைமொழிகள் அவற்றின் பெயரோடு இணைக்கப்படுவ துண்டு. தலையாலங், கானம், தலைச் செங்காடு என்னும் பாடல் பெற்ற ஊர்களின் பெயரில் தலையென்னும் அடைமொழி அமைந்துள்ளது. சேலம் நாட்டில் தலைவாசல் என்பது ஓர் ஊர். தஞ்சையில் தலைக்காடு என்னும் ஊரும், ஆர்க்காட்டில் தலைவாய் நல்லூர் என்னும் ஊரும் காணப்படுகின்றன.
இடையென்னும் அடைமொழியைக் கொண்ட ஊர்களில் மிகப் பழமை வாய்ந்தன திருவிடைமருதூர், திருவிடைச் சுரம், இடையாறு முதலியனவாம். இவை மூன்றும் தேவாரப் பாடல் பெற்றுள்ளன. இடைக்காடு என்ற ஊரிலே பிறந்த புலவர் ஒருவர் இடைக்காடர் என்று பண்டை இலக்கியத்தில் பேசப்படுகின்றார். அரிசில் ஆற்றுக்கும் திருமலைராயன் ஆற்றுக்கும் இடையேயுள்ள ஊர், இடையாற்றங்குடி என்னும் பெயர் பெற்றுளது. இடையென்று பொருள்படுகின்ற நடு என்னும் சொல், நெல்லை நாட்டிலுள்ள நடுவக்குறிச்சி, சோழ நாட்டிலுள்ள நடுக்காவேரி முதலிய ஊர்களின் பெயரில் அமைந்திருக்கக் காணலாம்.
இனி, கடையென்னும் அடையுள்ள ஊர்ப் பெயர்கள் சில உண்டு. சேலம் நாட்டிலுள்ள கடைக் கோட்டூரும், தென் ஆர்க்காட்டிலுள்ள கடைவாய்ச் சேரியும், நெல்லை நாட்டிலுள்ள கடையமும் இதற்கு எடுத்துக்காட்டாகும்.