கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கொற்றிலக்கை 1 results found)

கொற்றிலக்கை

: கொற்றும் இலக்கையும்; அதாவது சோறும் தங்கும் இடமும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கொற்றிலக்கை 1 results found)

கொற்றிலக்கை

:
  • கொற்று+இலக்கை. இவ்விரு சொற்றொடர் இரண்டு பொருளில் கல்வெட்டுக்களில் ஏற்ற இடங்களில் கூறப்பட்டுள்ளது.
    (1)உருபும் பயனும் பெறுதற்கமைந்த தொகை நிலையில், கொற் றுக்கு உரிய ஊதியமாகும் இலக்கை என்றும், பலர் கூடிச்செய்த பணியில் ஆள் ஒன்றிற்கமைந்த ஊதியம் என்றும் பொருள் தருவதோடு,
    (2)ஒரு துறைக்கமைந்த பல அதிகாரிகளின் பணியாகிய கொற் றுக்கு, அதிகாரி ஒருவர்க்கு அமைந்த ஊதியமாகப் பெறுதற்கு அரசால் அனுமதிக்கப்பட்ட ஊர்களின் வரி ஆயம் கடமை முத லிய வருவாய்களும் கொற்றிலக்கை என்ற பெயரால் கூறப் பெறும்.
    இவ்வாறாக, ஊழியத்தின் நாள் ஊதியமாகவும், அதிகாரிகள் பெறுதற்கமைந்த வரியின் பெயராகவும் கொற்றிலக்கை இடம் பெற்றுள்ளமையினைக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

  • 1. திருநந்தவனக்குடிகளுக்கு இலக்கைக்கும் கொற்றுக்கும் உட லான நிலம் இருபத்தஞ்சுமா

  • தெ. கல். தொ. 8. கல். 56

  • குலோத்துங்க சோழன் திருக்கோசாலை அனுக்கன் சுரவிகளுக்கு முதலாக விட்ட பசு நானூற்றொருபதினால் - முன்பிலாண்டுகளும் நெய் ஓட்டுக்கொண்டு வரும்படியே பசு நூற்றைம்பதுக்கு பேர் ஒன்றாக வந்த பேர் முதல் கொள்ளவும். இப்பேர்க்கு கொற்றுக்கு பேர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு பதக்காக வந்த நெல்லும் புடவை முதல் ஆட்டைக்குப் பேரால் ஒன்றரையாக வந்த காசுக்கு பதி னைங்கலப் பிடியால் வந்த நெல்லும்

  • தெ. கல். தொ. 8. கல். 54

  • கோயில் அதிகாரி கொற்றிலக்கையும்
    அதிகாரிப் பேறான கொற்றிலக்கையும் (நாயக்கர் காலம் )

  • தெ. கல். தொ. 17. கல். 269. 532

  • அதிகாரிப் பேறான கொற்றிலக்கையும்

  • தெ. கல். தொ. 17. கல். 269, 532

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (கொற்றிலக்கை 4 results found)
Word Book Name TNARCH Data Page

கொற்றிலக்கை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 95

கொற்றிலக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3141 45

கொற்றிலக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2928 14

கொற்றிலக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3061 228