கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (கொற்று 1 results found)

கொற்று

: உணவு
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (கொற்று 1 results found)

கொற்று

:
  • தொழிலாளர் பலர் அமைந்த கூட்டம் (தொகதியர். கூட்டாளர். தொழில் குழு). ஒரு தொழிலுக்கமைந்த பலர் சேர்ந்த குழுவே கொற்று எனப்பட்டது. ஒருசிலர் சேர்ந்து செய்யும் ஊழியமும் கொற்ரனவே கூறப்பெறும். கொற்றும் கொத்தும் கல்வெட்டுக்களில் மயங்கக் கூறப்பெறினும் வேறுபட்ட பொருள் கொண்டனவேயாகும். கொத்திற்கும் கொற்றிற்கும் அமைந் தாருள் தனியாள் பெறும் கூலி அளவு இலக்கை என்பதாம். ஓராளின் உணவுக்கும் உடைக்கும் இலக்காக அளிக்கப்பெறும் ஊதியமாதலின்இலக்கை எனப் பெயர் பெற்றுள்ளது.
    இவ்விலக்கை, கொடுக்கப்பெற்ற வேலையின் தகுதிக்கேற்பத் தொகுதியாக அமைந்த பணியாளர்களில் ஆள் ஒன்றிற்கு நாள் உணவிற்குரிய நெல்லும் ஆண்டொன்றின் தேவைக்குரியதான ஆடைகளின் விலைக்குரிய காசும் அளிக்கப்பெற்ற இலக்கினைக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. கொற்று - தொழிலையும் உணர்த்தும். கூட்டம் என்ற பொருளையும் தரும். கூட்டுப்பணி அல்லது தொழில் கூட்டு என்றும் கூறலாகும்.

  • இத்திரு நந்தவனம் செய்யவேண்டும் பேராய் நிச்சயித்த நாயகம் பேர் ஐஞ்சும் போ தொண்ணூர்றைஞ்சும் ஆகப்பேர் நூறு. இதில் நாயகம் பேர் ஐவர்க்கு கொற்றுக்கு நாள் ஒன்றுக்கு பேர் ஒன்றுக்கு முக்குறுணியாக நெலலு கலான முக்குற ணியும் புடவை முதல் ஆட்டைக்கு பேரால் மூன்றாகக் காசு பதினைஞ்சும்
    பேர் தொண்ணூற்றைவர்க்கு கொற்றுக்க நாள் ஒன்றுக்கு பேர் ஒன்றுக்கு நெல்லு பதக்காக, புடவை முதல் ஆட்டைக்கு பேரால் காசு இரண்டாக காசு நூற்றுததொண்ணூறும

  • தெ. கல். தொ. 8. கல். 55

  • திருநந்தவனப்புறமாக விலை கொண்ட நிலத்து - ஊர்படி நிலம் ஏழுமாவும் கொற்றுக்கு உடலாகவும்
    திருநந்தவனத்துக்கும் திருநந்தவனப்புறமாக கொற்றுக்கும் விலை கொண்ட நிலம்

  • தெ. கல். தொ. 12. கல். 151

  • தோப்புக்கு இடநிச்சயித்த ஆள் பதி நாலுக்கும் - இவ்வுடலிலே இவர்களுக்கு இடநிச்சயித்த இலக்கை சதிரப்படியால் உள்ள நெல்லும் காசும்

  • தெ. கல். தொ. 12. கல். 206

  • தட்டழி கொட்டடிகளுக்குக் கொற்று நெல்லு திங்கள் நாற்கலனேய் பதின் குறுணி

  • தெ. கல். தொ. 14. கல். 16

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (கொற்று 3 results found)
Word Book Name TNARCH Data Page

கொற்று

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1060 2

கொற்று இலக்கை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1066 9

கொற்றுண்ணல்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2033 313