கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (சபாவினியோகம் 1 results found)

சபாவினியோகம்

: கிராமச் சபையினால் இறை நீக்கப்பெற்ற நிலங்களின் வரிப்பணத்தை ஊரார் ஏற்று இறுப்பதிலே வரும் பங்கு; சபையார் செலவுக்கான பணத்துக்கு இறுக்கும் பங்கு
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (சபாவினியோகம் 1 results found)

சபாவினியோகம்

:
  • கிராமசபையார். சபைவழிச் செய்யும் கிராமப் பொதுச் செலவினங்கள். இதற்குரிய வருவாயாக மக்களிடம் சபாவினியோக வரி என்ற பெயரால் வரிவிதித்துப் பெறுவர்.

  • திருமாலிருஞ்சோலை யாழ்வார் கோயிலில் கூட்டங் குறை பறக் கூடியிருந்து எங்களுக்கு விநியோகக் குறைப்டுத்த ஸபான்னி யோசத்துக்கு வேறு திரவியமில்லயைால், எங்களூரிலே சிறிது நிலம் விற்றாகிலும், அதேத விதியாகமும் விநியோகிக்க வேண்டினமையால்

  • தெ. கல். தொ. 8. கல். 305

  • ஸபாவி நியோகம் வரிக்கொள்ளுமிடத்து மடக்கு ஒருமாவுக்கு கார் நாற்பதும்; பசானம் என்பதும் வரிக்கொண்டு இறுக்கக் கடவோமாகவும்

  • தெ. கல். தொ. 6. கல். 48