Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (திருக்காட்டுப்பள்ளி 1 results found)
Word Book Name TNARCH Data Page

திருக்காட்டுப்பள்ளி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 588 41-5
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (திருக்காட்டுப்பள்ளி 1 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (திருக்காட்டுப்பள்ளி 2 results found)
கீழைக் திருக்காட்டுப்பள்ளி

காட்டுப்பள்ளி யென்னும் பெயருடைய தலங்கள் இரண்டு உள்ளன. ஒன்று காவிரியாறு கடலிற் பாயும் இடத்திற்கு அணித்ததாக உள்ளது.

பலபல வாய்த்தலை யார்த்து மண்டிப்
பாய்ந்திழி காவிரிப் பாங்கரின் வாய்க் கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி
என்று அதன் வளத்தைக் குறித்தருளினார் திருஞான சம்பந்தர். பாடல் பெற்ற திருவெண் காட்டுக்கு மேற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள இக்காட்டுப் பள்ளி, இப்பொழுது ஆரணியேசுரர் கோயிலென வழங்குகின்றது.

மேலைத் திருக்காட்டுப்பள்ளி

காவிரி யாற்றினின்று குடமுருட்டியாறு பிரிந்து செல்லும் இடத்தில் உள்ள மற்றொரு திருக்காட்டுப்பள்ளியும் பாடல் பெற்றதாகும்.

கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே
என்று பணித்தார் திருநாவுக்கரசர். இக் காலத்தில் திருக்காட்டுப் பள்ளியிலுள்ள ஆலயம் அக்கினீசுரர் கோயில் என்ற பெயர் கொண்டு நிலவுகின்றது.