கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (திருக்கை 3 results found)

திருக்கைக் கோட்டி

: கோயிலில் திருமுறை ஓதும் மண்டபம்; அங்கே திருமுறை ஓதுவார் திருக்கைக் கோட்டி யோதுவார் எனப் பெறுவர்

திருக்கையோட்டி

: கோயிலில் திருமுறை ஓதும் மண்டபம்; அங்கே திருமுறை ஓதுவார் திருக்கைக் கோட்டி யோதுவார் எனப் பெறுவர்

திருக்கை வழக்கம்

: கோயில் நித்தியப் படித்தரம்; பிரசாத வினியோகமும் ஆகும்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருக்கை 5 results found)

திருக்கை ஒட்டி

:
  • திருக்கோயில்களில் கருவறைவாயிலினைத் தொடர்ந்து இணைப்பாக அமைக்கப்படும் பொருள் காப்பகப் புரையிடம். தெய்வப் பிரசாதத்தினை மரியாதையுடன் பெறும் கருவறைமுகப்பிடம்.

  • தேவர் திருமுகம் வந்தமையில் இத்திருமுகம் திருக்கை ஒட்டிப் பண்டாரத்திலே கோத்துக் கொண்டு(சேர்த்துக் கொண்டு)

  • தெ. கல். தொ. 12. கல். 215

  • இக்கோயிலிற் திருக்கை ஒட்டி திருமுன் ஓதுகையும்

  • தெ. கல். தொ. 7. கல். 69

  • விலைகொண்ட சாதனங்களும், நிலங்களில் பங்கு வரிகழிய பெரும்பற்றப் புலியூர் மூல பருஷையார் எழுதின நியோகமும் திருக்கை ஒட்டி பண்டாரத்து ஒடுக்கவும் இப்படிக்கு திருமாளிகை யில் கல்வெட்டக் கடவதாக

  • தெ. கல். தொ. 12. கல். 151

திருக்கைக் காறை

:
  • திருமேனிகளின் கையில் அணியப் பெறும் வேலைப்பாடமைந்த பொற்காப்பு.

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 34. 48

திருக்கைக்கோட்டி

:
  • தேவாரத்திருமுறைகளைப் பாதுகாத்துப் பூசிக்குமிடமும் தேவாரம் ஓதுதற்கமைந்த இடமுமாகத் திருக் கோயில்களில் அமைந்த மண்டபம்.

  • தொஆஅ எண் 203, 414, 454 1908

திருக்கைப்பொட்டு

:
  • திருமேனிகளின் உள்ளங்கைகளில் பொருத்தப்படும் பொன் தகடு. நகாசு வேலைப்பாட்டுடன் வட்டமாக அமைக்கப்பெறுவது.

திருக்கை வழக்கம்

:
  • கையில் ஒப்படைக்கும் வழக்கம். வாய் மொழியாகச் செய்யும் உரிமை வழக்கம்.

  • இவ்வீரர்கள் வீரப் பல்லவரையன் சாகையில் எனக்கு தேவர் திருக்கை வழக்கமாகத் தந்தருள நானும் உடையார் ஆட்கொண்ட தேவற்கு திருவிளக்குப் புறமாக விட்டருள

  • தெ. கல். தொ. 12. கல். 189. பகு. 1

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (திருக்கை 9 results found)
Word Book Name TNARCH Data Page

திருக்கை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2280 210

திருக்கை வழக்கம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2938 33

ஸ்ரீவல்லத்திருக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3077 251

திருக்கைக்காணம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 960 409-II,5

திருக்கைஆயம்‌

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 82-59

திருக்கைய்காறை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3836 7-30

திருக்கைய்காறை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3836 7-45

திருக்கை வேலழகியார்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5236 189

திருக்கைம்மலர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2690 38
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (திருக்கை 2 results found)