Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (நல்லூர் 267 results found)
Word Book Name TNARCH Data Page

நாச்சி நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2318 4

நல்லூர் அரையன்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2337 12

மண்டலாதித்த நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2340 17

மதுரோதைய நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2340 17

விசயாலைய நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2340 18

இராச சூளாமணி நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2345 27

பெருமாள் நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2345 27

மதுராயுத நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2347 32

அழகிய பாண்டியன் நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2372 46

இராசராச நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2374 51

உலகளந்த சோழ நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2374 51

இராசராச நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2375 53

உலகளந்த சோழ நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2375 53

திருமாலிருஞ்சோலை நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2377 57

சக்கரபாணி நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2400 67

இராசராச நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2406 75

திருமாலிருஞ்சோலை நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2415 94

எறிபடை நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2420 105

விச்சாதிர நல்லூர்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2489 159

காக்குநாயக நல்லூர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2128 35

சிகாமணி நல்லூர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2162 74

மாநவ சிகாமணி நல்லூர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2168 80

விடுகாதழகிய நல்லூர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2286 215

அத்தாணி நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3119 2

வில்லி நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3128 20

நாட்டாயுத ராம நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3129 21

குலசேகர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3141 45

குலசேகர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3143 49

குலசேகர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3145 53

ஆயுதவீம நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3151 62

குலசேகர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3154 66

பராந்தக நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3157 70

அக்க அரிகேசரி நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3169 83

திரு நல்லூர் தீபன்‌ கெளசிகன்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3204 126

குலசேகர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3268 199

சிவபாத சேகர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3268 199

இறங்கல் மீட்டபெருமாள்‌ நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2924 6

சிவதிராக்குடியான வேதநாயக நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2924 6

வலங்கை மீகாம நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2927 11

சோனாடு கொண்ட பெருமாள் நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2931 20

வீரபாண்டிய நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2938 34

சிறுகுளமான வேதநாயக நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2939 37

தேவ நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2940 39

வேலங்குடியான தேவர்கள்‌ தேவ நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2943 44

செங்குளமான நாற்பத் தெண்ணாயிர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2946 50

கற்குழியான வேதநாயக நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2950 55

ஆய்க்குடியான அழகிய பாண்டிய நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2958 69

மண்டலீகர் தேகம்மீர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2958 70

சக்கரபாணி நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2968 84

அம்பலத்தாடி நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2978 96

பகையனேரியான அழகப் பெருமா நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3011 141

ஆனந்தூரான அவிதாய சுந்தர நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3016 152

பெருங்காரைக்குடியான குடிதாங்கி நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3024 166

கலிகுடியான திருமறை நாயக நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3028 176

காப்புக்கால் நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3033 183

வேழகுலநாரை அண்ட நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3036 191

கீர்த்தி விசரலய நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3085 264

புரவுவரி நல்லூர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3085 264

செய்பியன்‌ கிளி நல்லூர் விளைநிலம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1125 101

இளையான்‌ குடியான இந்திராபதி நல்லூர்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1130 108

இளையான்‌ குடியான இந்திராபதி நல்லூர்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1137 125

விக்கிரம சோம நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 757 206-6

திருப்பத்தடி நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 760 209-6

கடாரபிராந்தக நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 775 223-1

நந்தி கேஸ்வர நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 775 223-2

புற்றிடங்‌ கொண்ட நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 775 223-2

வில்லிய நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 818 266-2

சோமனாக நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 839 288-2

மீனவ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 846 296-2

ராஜேந்கதிர சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 848 298-3

ராஜேந்கதிர சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 852 302-2

ராஜேந்கதிர சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 855 305-2

ராஜேந்கதிர சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 857 307-5

ராஜேந்கதிர சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 858 308-5

சுந்தர சோம நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 868 318-10

ராஜேந்கதிர சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 872 322-1,2,4 6

ராஜேந்கதிர சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 875 325-23

மதுராந்தக நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 879 329-11,13

சிவபாதசேகர நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 904 354-3

தீன சிந்தாமணி நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 904 354-1

சிவபாதசேகர நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 914 364-1

குலோத்துங்க சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1005 454-4

குலோத்துங்க சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1007 456-3

புரவரி நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1011 460-II,3

சிற்றம்‌ பல நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1015 464-V,3

நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1018 467-V,4

விராக்க நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1020 469-II,4

சோழகுலவல்லி நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1021 470-1

விராக்க நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1022 471-I,2

இராசா நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1051 500-2

பொன்மெந்த பெருமாள் நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 556 9-10

விரையா விடங்க நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 556 9-9

சிவபாத சேகர நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 628 79-91

சிவபாதசேகர நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 628 79-226

திருநீற்றுச் சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 628 79-54

குலோத்துங்க சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 674 124-14

குலோத்துங்க சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 675 125-8,12

குலோத்துங்க சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 676 126-2

குலோத்துங்க சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 678 128-2,3

திருநீற்றுச் சோழ நல்லூர்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 225

வீரசோழ நல்லூர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3278 14-40

வீரசோழ நல்லூர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3279 19-38

பிராண உபகாரி நல்லூர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3283 33-8

பெரு நல்லூர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3283 33-5

சிந்தாமணி நல்லூர் உடையார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3325 135-13

குந்தவை நல்லூர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3365 64-1

கிளிய நல்லூர்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3375 76-4

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3411 135-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3413 138-1

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3413 138-1

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3414 141-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3415 143-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3416 145-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3417 148-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3418 151-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3419 153-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3420 156-2

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3421 157-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3422 159-1

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3423 161-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3424 163-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3425 165-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3426 167-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3427 169-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3428 171-1

திரு நல்லூர் ஆண்டார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3429 173-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3429 173-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3430 175-1

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3430 175-1

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3431 177-6

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3431 177-8

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3433 184-2

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3438 193-1

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3439 195-1

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3440 198-IV,2

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3448 215-9

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3449 217-2

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3454 225-2

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3462 242-10

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3463 243-2

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3464 244-4

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3467 257-12

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3468 259-9,23

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3471 266-9

திரு நல்லூர் நாடு

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3487 292-1

திரு நல்லூர் நாயனார்

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3491 297-3

நிலைமை அழகிய சோழ நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1782 1

குலசேகர நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1790 14

இராசராசடியான வீரசோழ நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1837 74

சோழ நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1837 74

நல்லூர்க்கா

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1879 126

உக்கிரமாந வீரசோழ நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1889 137

வீரபாண்டிய நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1905 156

இராசராச நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1908 159

இராஜராஜ நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1958 214

இராசராச நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1973 231

அதிசய சோழ நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1977 236

அரியபிராட்டி நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1992 258

நல்லூர்க்கா

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1992 258

வீரகேரள நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1994 261

வீரகேரள நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1995 262

பெருமாடகனாச்சி நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1998 265

வீரகேரள நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2001 269

அமரபுயங்க் நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2006 276

அமரபுயங்க் நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2021 296

வீர்ராசேந்திர நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2022 298

வீரகிராசேந்திர நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2024 303

விக்கிரம சோழ நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2026 305

இராசராச நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2041 321

அமரபுயங்க் நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2044 325

அரியபிராட்டி நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2061 348

நல்லூர்க்கா

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2061 348

இராசராச நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2063 350

கடி கூவலானன வானவன்மாதேவி நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2073 365

அரியபிராட்டி நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2077 371

அரியபிராட்டி நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2098 400

கொற்ற நல்லூர் குலமாணிக்கப்பேரேரி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3570 19-40,42

மருதா நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3679 217-2

ஊற்றங்கரையான அழகிய கூத்த நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3721 39-6,18,19

செந்தாமரைக் கண்ண நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3727 48-1

ஸ்ரீகரண நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3737 58-27,28

குலோத்துங்க சோழ நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3827 224-7

கரிகால சோழ நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3828 225-2

சோழபாண்டிய நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3828 226-6

அருமொழிதேவ நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3829 229-12,14

நல்லூர்ப்பற்று

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3830 232-7

கூவமான தியாக சமுத்திர நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3838 12-3

கூவமான மதுராந்தக நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3840 15-10

கடவூர் அரிந்தம நல்லூர் உடையான் நீலன் வெண்காடன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3843 24-26

ஜயங்கொண்ட சோழ நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3895 99-4

நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3897 100-2

ஸ்ரீ கரண நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4251 149

வீரநாராயண நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3973 2-13

மேல்கரை வீரநாராயண நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3974 6-28

வீரபாண்டிய நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3976 11-3

பூவேன் திர சோழ நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3992 27-2

பூவேன் திர சோழ நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4010 45-2

உத்தமசோழ நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4038 76-3

திராவட நல்லூர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4147 210-11

இராசகேசசோழ நல்லூர்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5780 1-2

இராசகேசசோழ நல்லூர்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5781 3-3,7

தியாகமுத்திர நல்லூர்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5820 51-1

விக்கிரமசோழ நல்லூர்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5820 51-1

சுந்தரபாண்டிய நல்லூர்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5823 56-1

கருந்திட்டைக்குடியான சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5831 67-14

ஏத்தகிரி கொண்ட சோழ நல்லூர்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5845 93-2

ஏத்தகிரி கொண்ட சோழ நல்லூர்

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5846 95-3

வீரபாண்டிய நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2548 8

வீரபாண்டிய நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2548 9

நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2596 58

நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2610 72

நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2647 117

அரியபிராட்டி நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2650 120

கண்டரவீம நல்லூர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2660 132

இரவி நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5080 7

கொங்கூரான ஜயங்கொண்ட சோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5142 74

கொங்கூரான ஜயங்கொண்ட சோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5144 76

கொங்கூரான ஜயங்கொண்ட சோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5145 77

கொங்கூரான ஜயங்கொண்ட சோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5147 79

கொங்கூரான ஜயங்கொண்ட சோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5148 80

கொங்கூரான ஜயங்கொண்ட சோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5149 81

மகாமண்டல வொணதாய நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5149 81

கொங்கூரான ஜயங்கொண்ட சோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5150 83

அலங்கியமான உத்தமசோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5153 86

அலங்கியமான உத்தமசோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5154 88

அலங்கியமான உத்தமசோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5155 90

அலங்கியமான உத்தமசோழ நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5159 95

அனுந்த நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5244 200

‌சங்கிராம நல்லூர்

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5259 215

ஆதனூர் குலோத்துங்க சோழ நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 311 4-25

பாகம் பிரியாத நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 311 4-19

புரவரி நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 311 4-28

நந்தி நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 358 50-3

கிரி நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 407 99-4

எதிரிலி சோழ நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 426 118-IX,4

சோமன் மாருதி நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 432 124-6

மாருதி நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 440 132-6

சிகரண நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 494 181-15

விக்கிரம சோழ நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 494 181-11,13

கொன்ற ஈலூரான தேவும் இருவும் உடைய நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 500 187-18

குலோத்துங்க சோம நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 501 188-16

கொன்ற ஈலூரான தேவும் இருவும் உடைய நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 503 190-18

பராந்தக நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 507 194-28

பணிய நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 509 196-46

பந்தாண்டி நல்லூர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 511 198-127,161

கம்பய நல்லூர்

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5436 10

இடங்கை மாசவண நல்லூர்

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5491 61

கண்டர் சூரிய நல்லூர்

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5578 148

சித்தம்பல நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1517 44

திருச்சிற்றம்பல நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1518 46

புல்லி நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1520 48

கண்டிய தேவ நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1521 49

தலைய நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1536 66

தலைய நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1538 68

தலைய நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1540 70

தலைய நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1541 71

தலைய நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1543 74

தலைய நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1544 75

தலைய நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1546 77

நாகசுர நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1568 105

மாதவ நல்லூர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1595 136

அகரம்‌ நற்றான்‌ நல்லூர்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 210 211-8

தாங்கிய நல்லூர்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 216 217-4

சென்றிய நல்லூர்‌ ஏரி

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 266 267-3

படைப்பற்றான தேவப்பெருமாள்‌ நல்லூர்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 284 285-2

திருமஞ்சன நல்லூர்‌ அப்பன்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 295 296-4

படைப்பற்று ஆனந்தப் பெருமாள்‌ நல்லூர்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 298 299-13
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (நல்லூர் 120 results found)
தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (நல்லூர் 10 results found)
நல்லூர்

தமிழ் நாட்டு ஊர்களை நல்லூர் என்றும் புத்தூர் என்றும் வகுத்துக் கருதலாகும். பெண்ணையாற்றங்கரையில் அமைந்தது திருவெண்ணெய் நல்லூர். அது சுந்தர மூர்த்தியைத் தடுத்தாட் கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ள இடம். 97 சைவ சமய ஞான நூலாகிய சிவஞான போதத்தை அருளிச் செய்த மெய்கண்ட தேவர் பிறந்தருளும் பேறு பெற்ற நல்லூரும் அதுவே. கும்பகோணத்துக்கருகே நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அமர் நீதி என்னும் அடியார் அவ்வூரில் தொண்டு செய்து சிவப் பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகிறார். மண்ணியாற்றங்கரையில் முருகவேளின் பெயரால் அமைந்த சேய் நல்லூர் இந் நாளில் சேங்கனூர் என்று வழங்கும். 98 வட ஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய் நல்லூர் சேனூர் எனப்படும்.
தமிழ் நாட்டை ஆண்ட அரசர் பலர் தம் பெயர் விளங்குமாறு பல நல்லூர்களை உண்டாக்கினார்கள். பாண்டி நாட்டில் வீரபாண்டிய நல்லூர், அரிகேசரி நல்லூர், மானா பரண நல்லூர், செய்துங்க நல்லூர் முதலிய ஊர்கள், பாண்டிய குலத்தைச் சேர்ந்த மன்னர் பெயரை விளக்கி நிற்கின்றன. சோழ நாட்டில் பெருஞ் சோழ மன்னர்கள் உண்டாக்கிய நல்லூர்களைச் சாசனங்களிற் காணலாம். முடி கொண்ட நல்லூர், அநபாய நல்லூர், திருநீற்றுச் சோழ நல்லூர், திருத்தொண்டத் தொகை நல்லூர், சிவபாத சேகர நல்லூர், கலி கடிந்த சோழ நல்லூர் முதலிய நல்லூர்கள் சோழ மன்னருடைய விருதுப்பெயர் பெற்ற பதிகளாகும்.

97. பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் சுந்தரர் தேவாரம்.
98. சேயடைந்த சேய்ஞலூர் என்பது தேவாரம். சூரனோடு போர் செய்யக் கருதி எழுந்த முருகவேள். சிவபெருமானை வழிபட்டுச் சர்வ சங்காரப் படைக்கலம் பெற்ற ஸ்தலம் சேய்நல்லூர் (சேய்ஞலூர்) என்று கந்த புராணம் கூறும் - குமாரபுரிப் படலம், 14-15, 75-76.

திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறை

பெண்ணையாற்றின் கரையில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் ஈசன் கோயில் கொண்டருளும் இடம் அருட்டுறை எனப்படும். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தியை ஆட்கொண்ட துறை அவ் அவர் தேவாரத்தால் அறியலாம். வருட்டுறையேயாகும். இதனை பித்தா பிறைசூடி என்று அவர் எடுத்த திருப்பதிகத்தில் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா என்று பாடும் பான்மையால் ஆண்டவன் உறைவிடம் அருட்டுறை என்றும் போற்றப்படுகின்றது. 17

17. தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டியும் கோயிலடியாகப் பிறந்த ஊர்ப்பெயராகத் தெரிகின்றது. திருத்துறையென்ற ஆலயத்தையுடைய பூண்டி திருத்துறைப்பூண்டியாயிற்று போலும்; 477 of 1912. இவ்வாறன்றித் திருத்தருப்பூண்டி யென்னும் பெயரே திருத்துறைப்பூண்டியெனத் திரிந்தது என்று கொள்வாரும் உளர்.

அந்துவ நல்லூர் ஆலந்துறை

காவிரியின் வடகரையில் அமைந்தது புள்ள மங்கை ஆலந்துறை. அந் நதியில் தென்கரையிலும் ஓர் ஆலந்துறை உண்டென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும். காவிரி யாற்றின் தென் கரையில் அமைந்த திருக்கோயில்களை வழிபடப் போந்த திருஞான சம்பந்தர் திருவாலந்துறை முதலாய தலங்களை வணங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். 19 எனவே, அவர் குறித்த ஆலந்துறை திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஏழு மைல் அளவில் காவிரியின் தென் கரையில் அமைந்த அந்துவநல்லூர் என்ற ஊரில் உள்ள ஆலயமே ஆதல் வேண்டும். இக்காலத்தில் அந்த நல்லூர் என வழங்குகின்ற அந்துவநல்லூரில் ஆலந்துறை யென்னும் பழமையான ஆலயம் உண்டென்று சாசனம் கூறும். 20 அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் வடதீர்த்த நாதர் என்று பிற்காலக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படுதலும் இதனை வலியுறுத்துவதாகும். வடதீர்த்தம் என்பது ஆலந்துறையைக் குறிக்கும் வடசொல்

19. திருஞான சம்பந்தர் புராணம், 342.
20. I. M. P. , Trichinopoly, 371, 374

நல்லூர் பெருமணம்

சைவ உலகம் தலைக் கொண்டு போற்றும் திருத் தொண்டராகிய திருஞான சம்பந்தர் இறைவனது சோதியிற் கலந்த இடம் நல்லூர்ப் பெருமணம் என்று அவர் வரலாறு கூறுகின்றது. நல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தின் பெயர் பெருமணம் என்பதாகும்.

நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன் தாள் தொழ வீடெளி தாமே.
என்று திருஞான சம்பந்தர் பாடுதலால் இவ்வுண்மை விளங்கும். பெருமணம் என்னும் சிறந்த திருக்கோயிலைத் தன்னகத்தே யுடைய நல்லூர், பெருமணநல்லூர் என்றும் வழங்கலாயிற்று. இந் நாளில் அப் பழம் பெயர்கள் மறைந்து ஆச்சாபுரம் என்று அவ்வூர் அழைக்கப்படுகின்றது.

சேய்நல்லூர்

சோழ நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் விளங்கும் சீர்மை வாய்ந்த சிவப் பதிகளுள் ஒன்று சேய் நல்லூர். அசுர வீரனாகிய சூரனை வென்றழிக்கப் போந்த முருகப்பெருமான் மண்ணியாற்றங்கரையில் தங்கி ஈசனார்க்குப் பூசனை இயற்றிய காரணத்தால் அவ்விடம் சேய் நல்லூர் என்று பெயர் பெற்ற தென்பர். 10 அறுபத்து மூன்று சிவனடியார்களுள் சிறப்பாக ஆலயங்களில் வணங்கப்படுகின்ற சண்டேச்சுரர் பிறந்த ஊர் இந்த ஊரே யாகும். அவ்வூரைப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர். திருச்சேய் நல்லூர் என்னும் பெயர் இப்பொழுது திருச் செங்கனூர் என மருவி வழங்குகின்றது.
வட ஆர்க்காட்டிலுள்ள சேனூரும் முருகனோடு தொடர்புடையதாகத் தோன்றுகின்றது. முன்னாளில் அவ்வூர் சேய் நல்லூர் என வழங்கிற்று. 11 அப் பெயரே சேனூர் என்று மருவியுள்ளது.

10. ஏந்தும் அயில்வேல் நிலை காட்டி
இமையோர் இகல்வெம் படைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்
என்று சேக்கிழார் கூறியருளினார். (சண்டேசுரர் புராணம், 1)
இப் பதியில் ஆறுமுகப் பெருமான் பூசனை புரிந்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாறு கந்த புராண உற்பத்திக் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
11. 394 of 1811.

திருஆலவாய் நல்லூர்

மதுரையில் அமைந்துள்ள சிவாலயம் திரு ஆலவாய் ஆகும். அத் திருக் கோயிலின் பெயரைக் கொண்ட திரு ஆலவாய் நல்லூர் என்ற ஊர் மதுரை நாட்டு நிலக் கோட்டை வட்டத்தில் உள்ளது.

ஏமநல்லூர்

ஏம நல்லூர் ஒரு வைப்புத் தலம் என்பது, எச்சிலிளமர் ஏமநல்லூர் என்னும் திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். தஞ்சைப் பெருங்கோயிற் சாசனம் ஒன்றில், மண்ணி நாட்டு ஏம நல்லூராகிய திரை லோக்கிய மகாதேவி சதுர் வேதி மங்கலம் என்ற வாசகம் வாசகம் வருகின்றது. 5 அச் சாசனத்தால் முற்காலத்தில் ஏம் நல்லூர் என்று பெயர் பெற்றிருந்த ஊர் பிற்காலத்தில் ஒரு மாதேவியின் பெயர் கொண்ட மங்கல மாயிற் றென்பது விளங்கும். இந் நாளில் தஞ்சை நாட்டுக் கும்ப கோண வட்டத்திலுள்ள திரை லோக்கி என்ற ஊரே பழைய ஏமநல்லூர்.

5. S. I. I. Vol. II. 345, 336.

பொய்கை நல்லூர்

தொண்டை நாட்டுத் தாமற் கோட்டத்தில் பொய்கை நல்லூர் என்ற பழமையான ஊர் உள்ளது. அவ்வூரில் அமைந்த அகத்தீச்சுரம் என்னும் சிவாலயத்திற்கு வயிர மேகவர்மன் வழங்கிய நிவந்தம் ஒரு சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய இப் பொய்கைநல்லூர் இப்போது அரக்கோண வட்டத்திற் காணப்படும். 25

25. Pallavas, P. 144.

திருநீற்றுச் சோழ நல்லூர்

மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு என்று திருஞான சம்பந்தர் பாடியருளிய திருநீறு சைவர்கள் அணிந்து போற்றும் சிவ சின்னமாகும். சைவப் பெரு மன்னர் இருவர் தம்மைத் திருநீற்றுச் சோழன் என்று கூறிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அவருள் ஒருவன் முதற் குலோத்துங்க சோழன். அம் மன்னன் செங்கற்பட்டைச் சேர்ந்த முன்னலூர் என்னும் ஊருக்குத் திருநீற்றுச் சோழ நல்லூர் என்று பெயரிட்டு, அதனைத் திருசூலத்திலுள்ள சிவாலயத்திற்கு நன்கொடை யாக வழங்கினான் என்று ஒரு சாசனம் கூறும். 6
இரண்டாம் குலோத்துங்க சோழனும் திருநீற்றுச் சோழன் என்னும் விருதுப் பெயர் பூண்டான். அவன் செங்கற்பட்டைச் சேர்ந்த களத்தூரில் உள்ள திரு ஆலக் கோயில் என்னும் சிவாலயத்திற்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச் சோழ நல்லூர் என்ற ஊரைத் தேவ தானமாகக் கொடுத்தான்7
தஞ்சை நாட்டில் திருக்கண்ணபுரத்துக்கு அண்மையில் திருநீற்றுச் சோழபுரம் என்ற ஊர் இருந்ததாகத் தெரிகின்றது. 8 சிதம்பரக் கோயிற் சாசனத்தில் திருநீற்றுச் சோழ மங்கலம் குறிக்கப்படுகின்றது. 9 திருநீறு என்னும் பெயருடைய ஊர் ஒன்று திருப்பாசூர்ச் சாசனத்திற் கூறப்பட்டுள்ளது. திருநீறு என்ற ஊரில் வாழ்ந்த வணிகர், மற்றும் ஒன்பதூர் வணிகருடன் சேர்ந்து, ஓர் ஊரை விலைக்கு வாங்கித் திருப்பாசூர்க் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கிய செய்தியைக் கூறுவது அச் சாசனம். 10

6. 312 of 1901.
7. 3630 1911.
8. 505 of 1922
9. 2800 1913.
10. 120 of 1930. Cholas Vol. II. p. 418.

சம்பங்கி நல்லூர்

வட ஆர்க்காட்டு வேலூர் வட்டத்திலுள்ள ஊர் ஒன்று சம்பங்கி நல்லூர் என வழங்கப் படுகின்றது. செண்பகப் பெருமாள் நல்லூர் என்னும் பெயரே இங்ஙனம் சிதைந்துள்ள தென்பது கல்வெட்டுக்களால் விளங்கும். 23 வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்தில் சோழிங்கர் என்ற ஊர் உள்ளது. சோழ சிம்மபுரம் என்னும் பெயரே அவ்வாறு மருவிற்றென்று குரு பரம்பரை கூறும்24 அவ்வூரிலுள்ள கடிகாசலம் சோழிங்கர் என்ற குன்றின் மீது கோயில் கொண்டுள்ள நரசிங்கப் பெருமாளை பேயாழ்வாரும், திருமங்கை யாழ்வாரும் பாடியுள்ளார்கள். இந் நாளில் கடிகாசலப் பெருமாள் கோவில் சாலச் சிறப்புற்று விளங்குகின்றது.

23. S. I. I. , p. 74.
24. சோழலிங்கபுரம் என்ற பெயரே சோழங்கிபுரம் ஆயிற்றென்றும் கூறுவர். (N. A, Manual. II, p. 435) அவ்வூரின் நடுவே உள்ள சோழேச்சுரத்திலுள்ள சுயம்பு லிங்கம் அதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது.