கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (நிபந்தம் 1 results found)

நிபந்தம்

: கோயில் நிர்வாகத்திற்கான திட்டம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (நிபந்தம் 1 results found)

நிபந்தம்

:
  • திருக்கோயில்களில் வேதாகம விதிப்படி வழிபாடு முதலான செயல்கள் தான் நியமித்தவாறு நிகழ்தற்குரிய கட்ட ளைச் செலவினங்கட்கமைந்த வருவாயாகவும் மூலதனமாகவும் நிறுவப்பெறும் அறச்செயல். இச்சொல் கல்வெட்டுக்களில் நிமந் தம் என்றும் குறிக்கப்பெறுகின்றது. நிலமாகவும், வருவாயாகவும், வரியாகவும், காசாகவும் இருக்கும். கடமையைச் செய்தார் பெறும் கூலியும் நிபந்தம் என்று குறிக்கப்பெறும்.

  • கூத்தாடும் தேவர்க்கும் இவர் நம் பிராட்டியார்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தங்களுக்கும். பிரமாணம் பண்ணிக் குடுத்த - பாடகம்
    (நிலம்) நிவந்தம் பார்க்க.

  • தெ. கல். தொ. 5. கல். 294

  • இடபவாஹன தேவர்க்கும் நம் பிராட்டியார்க்கும் திருமஞ்சனப் படிகளுக்கும், திருவமுது படிக்கும் வேண்டும் நிபந்தங்களுக்கு நிபந்தம் செய்து குடுத்தோம்
    பூதநாதர் புற்றிடங்கொள் புனிதர்க்க முதுபடி முதலாம் நீதிவளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் மீது த ழ இருந்தமைத்தான் வேதா. ம நூல் விதி விளங்க

  • (பெரிய புராணம். நமிநந்தியடிகள் - பாடல் - 19)