கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (பிடாகை 1 results found)

பிடாகை

: படாகை; உட்கிடை கிராமம்
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (பிடாகை 3 results found)

பிடாகை

:
  • சிற்றூர். ஒரு பெரிய நகரையோ, தலை நகரையோ சூழ்ந்துள்ள சிற்றூர்கள் பிடாகை என்று பெயர் பெறுவனவாகும்.

  • பெரும்பற்ற புலியூர்ப் பிடாகைகளில்

  • தெ. கல். தொ. 12. கல். 245

  • சோழாந்தகச் சதுர்வேதி மங்கலத்து மேல்பிடாகை பட்டக் குறிச்சி

  • தெ. கல். தொ. 5. கல். 294

பிடாகை வலஞ்செய்து கொடுத்தல்

:
  • தான சாசனத்தினைப் பெண் யானையின் மீது வைத்து, தானத்திற்குரிய கிராம அல்லது ஊரின் எல்லைகளை வலமாகச் சூழ்ந்து நடத்திக் கொடுத்தல்.

  • மஹாவலி வாணராயர் பிடாகை வலஞ்செய்து குடுத்த

  • தெ. கல். தொ. 3 : 1. பக். 91

  • பிடிசூழ்ந்து பிடாகை வலம் செய்தல் - பார்க்க.

பிடி சூழ்ந்து பிடாகை நடத்தல்

:
  • அரசன் தானம் செய்த ஊர், கிராமம், நிலங்கள் ஆகியவற்றிற்கமைந்த ஊர்ச்சபைப்பெரு மக்கள், அந்நாட்டார், புரவுவரி கரணத்தான் ஆகியோர் கூடி ஊர் நிலக்கணக்குப்படி நிலங்களை அளந்து, பிடி யானையினை எல்லைகள் வழியே செல்லவிடுத்து அதன்மீது அவ்வூர்ப் பெரு மகனொருவன் ஏறியமர்ந்து எல்லைகளை முறையாகக் காட்டிச் செல்ல தொடர்ந்து யாவரும் எல்லை கோலி, எல்லைகளில் கல்லும் கள்ளியும் நாட்டிச் செய்விக்கும் செயல்.

  • இவ்வானை மங்கலம் பிடி சூழ்ந்து பிடாகை நடக்கிற போது ஆனையேறி இன்னாட்டாரோடும் உடனின்று எல்லை தெரித்துக் காட்டினேன். இவ்வானை மங்கலத்திருக்கும் வெள்ளாளன் கோன் புத்தனேன்

  • ஆனைமங்கலச் செப்பேடு

  • மேல் வேம்பநாட்டு நாட்டாரும் பிர்மதேயக்கிழவரும் நலபுரத்து ஊராரும் உடனின்று நிலம் அளந்து பிடி சூழ்ந்து. கல். நாட்டி

  • (சிவகாசிச் செப்பேடுகள்)

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (பிடாகை 7 results found)
Word Book Name TNARCH Data Page

பிடாகை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2338 14

பிடாகை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3247 177

பிடாகை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 548 1-2

வடபிடாகை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3705 10-25

பிடாகை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4255 153

வடபிடாகை அழகியசோழச் சதுர்வேதிமங்கலம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4043 81-3

வடபிடாகை அழகியசோழச் சதுர்வேதிமங்கலம்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4056 94-2