Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Taluk | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Village | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் |
Location | காயாரோகனமுடையார் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் II | |
Regnal Year | 10 | |
Historical Year | 1156 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திருக்காயாரோகணமுடையார் கோயில் மகாமண்டப வடபுறக் குமுதம் | |
Summary | கெயமாணிக்க வளநாட்டுப் பட்டினக் கூற்றத்து நாகப்பட்டினம் ஆகிய சோழகுலவல்லிப் பட்டினத்து. (உடையார் திருக் காரோணமுடையாருக்கு) என்றென்றும் ஒரு திரு நொந்தா விளக்கு எரிப்பதற்காக, வேட்டைக்காரர், தெரிந்த வில்லிகள், அணுக்க வில்லிகள், ராஜராஜன் வேளைக்காரர், ராஜேந்திரசிங்கன் வேளைக் காரர், [குலோ]த்துங்க சோழன் வேளைக்காரர், குதிரைச்சேவகர், சேனாபதிகள், தண்டநாயகம் உள்ளிட்ட அகம்படி நியாயங்களிலார்கள் அனைவரும், இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர்களிடம். 83 அன்றாடு நற்காசுகளை வழங்கியதையும், அதன் பொலிசை காகி இரண்டாம் பகுதி, வேளைக்காரர் உள்ளிட்ட பல்வகை கொத்துகளுடன் (பணியாளர்கள்), தனிநபர் சிலரும் சேர்ந்து நொந்தா விளக்கெரிக்கச் செய்த ஏற்பாட்டினைக் குறிக்கிறது. முதற் கல்வெட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம். |