Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | மயிலாடுதுறை |
Taluk | மயிலாடுதுறை | குத்தாலம் |
Village | திருவேள்விக்குடி | திருவேள்விக்குடி |
Location | மணவாளேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்கிரமசோழன் | |
Regnal Year | 4 | |
Historical Year | 1122 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதி வடக்குச் சுவர் | |
Summary | பூலோக மாணிக்க சதுர்வேதி மங்கலத்துச் சபையார் திருவேள்விக்குடிக் கோயிலில் - கூடியிருந்து, திருவாவடுதுறைக் கோயிலுக்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்தனர். கல்வெட்டு எண்: 2ல் கூறப்பட்ட ஞானசிவர் என்பவர் எடுத்த திருக்கேதாரம் என்னும் கோயிலில் கும்பிட வருகின்ற அபூர்விகள் மற்றும் மாஹேஸ்வரர்கள் ஆகியோருக்கு உணவளிப்பதற்காக இந்நிலம் வாங்கப்பட்டது. இந்நிலத்திற்கான விலையும், இந்நிலத்தின் மேல் விதிக்கப்பட்டிருக்கிற வரிகளை நீக்கித் தருவதற்காகவும் சேர்த்து 90 காசுகள் கொடுத்து நிலம் வாங்கப்பட்டது. இந்நிலத்திற்கான வரிகளுக்கும் சேர்த்து காசு பெற்றுக் கொண்ட பூலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரே செலுத்தினர். இந்நிலத்தை ஞான சிவரும் அவர் வற்கத்தாரும், முன்னின்ற மாகேஸ்வரர்களாகிய சிவனடியார்களும், இத்தர்மத்தைப் பராமரிக்கும் பொறுப்பை அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. |