Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | மயிலாடுதுறை |
Taluk | மயிலாடுதுறை | குத்தாலம் |
Village | திருவேள்விக்குடி | திருவேள்விக்குடி |
Location | மணவாளேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்கிரமசோழன் | |
Regnal Year | 5 | |
Historical Year | 1123 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதி பின்புறம் வடக்குச் சுவர் | |
Summary | கல்வெட்டு எண் : 2, மற்றும் 3-ல் கூறப்பட்ட அதே ஞானசிவர் எடுப்பித்த திருக்கேதாரம் என்ற கோயிலில் பிரதிஷ்டை பண்ணின இறைவனுக்குத் திருவமுது உள்ளிட்ட நிமந்தங்கள் படைப்பதற்கும். அக்கோயிலில் கும்பிட வந்த மாஹேஸ்வரர்களுக்கு வேடிய செலவுகள் தொடர்பாகவும் அதே பூலோக மாணிக்கச் சபையார் நிலம் விற்றுக் கொடுத்தனர். இந்நிலமும் முன்னர் கூறியபடி இறையிலியாக வழங்கப்பட்டதால் விலைப் பொருளும் இறைப் பொருளும் சேர்த்து 61 காசுகள் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. மேற்கூறிய 3 கல்வெட்டுகளும் ஞானசிவரால் எடுக்கப்பட்ட திருக்கேதாரம் என்னும் கோயில் தொடர்பாக உள்ளது. மேலும் இந்த ஞானசிவர் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடும்போது. திருவாவடுதுறையில் திருவாய்மொழிந்தருளி திருமேனிக்கும் திருக்குலத்துக்கும் நன்றாக பூஜித்திருக்கும் ஞானசிவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியமானது. திருவாய்மொழிந்தருளி - என்பது மன்னனின் ஆணையையே குறிப்பிடல் வேண்டுமாதலால், அரசனது நன்மைக்காகவும் அரசனது குலமாகிய சோழ குலத்தின் நன்மைக்காகவும் ஞானசிவர் திருவாவடுதுறையில் பூஜித்து வந்தார் என்பது தெளிவுள்ளது. மேற்கூறிய நிலம் அக்கோயிலில் வேதங்களும் சாஸ்திரங்களும் ஓதுவது உள்ளிட்டவை தொடர்பாகவும் வாங்கப்பட்டது என்பதை. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 149/1926 கூறுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை படியெடுத்த போது இப்பகுதிகள் கிடைக்கவில்லை. |