Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திருக்கோயிலூர் | திருவெண்ணெய்நல்லூர் |
Village | திருவெண்ணைநல்லூர் | திருவெண்ணைநல்லூர் |
Location | கிருபாபுரீசுவர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜ சோழன் 3 | |
Regnal Year | 19 | |
Historical Year | 1235 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கிருபாபுரீசுவர் கோயில் முன்மண்டபம் நடராஜர் சன்னதி வடப்புறச் சுவர் | |
Summary | சோழ மண்டலத்து விக்கிரம சோழ வளநாட்டு விறையான அகளங்கபுரத்தைச் சேர்ந்த பிரான் திருநட்டப்பெருமாள் என்பவர் திருவெண்ணைநல்லூர் ஆட்கொண்ட தேவர்க்கு திருநுந்தா விளக்கு ஒன்று, தினந்தோறும் எரிப்பதற்கு 120 காசுகளும், இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் ஆவணித் திருவிழாக்களில் கூத்தாடு நாயனார் திருவெழுச்சி எழுந்தருளும்போது திருக்காப்பு நாண் சாத்தி அமுது படையல் செய்வதற்கு 30 காசுகளும் ஆக 150 காசுகள் வழங்கி தவறாமல் நுந்தா விளக்கும், அமுது படையலும் செய்ய வேண்டும் என அக்கோயில் ஸ்தானபதிகளாகிய சிவபிராமணர்கள் வசம் கொடுத்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு. |