Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | மரக்காணம் |
Village | மரக்காணம் | மரக்காணம் |
Location | பூமிஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜன் 1 | |
Regnal Year | - | |
Historical Year | 985 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பூமிஸ்வரர் கோயில் கருவறை தென்சுவர் | |
Summary | கோயிலின் சுற்றுத் தரைப்பகுதி பிற்காலத்தில் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளதால் முன் கல்வெட்டுகளைப் போலவே இக்கல்வெட்டின் தொடர்ச்சியும் விடுபட்டுள்ளது. சோழ அரசின் அதிகாரி அரைசூருடையான் ஆரூரன் உதைய திவாகரன் அருள்மொழி மூவேந்த வேளான் என்பவர் காநாட்டில் முகாமிருந்து ஊர்களின் குறைகளைக் கேட்டறிந்தபோது மரக்கானத்துக் கோயிலுக்கு தேவதான ஊர்களிலிருந்து வரவேண்டிய நெல் வருவாய் கிடைக்காமல் கோயில் நடைமுறைகள் தடைபட்டுள்ளதை அறிந்து கொண்டார். அந்நிலங்களை உழுத ஐந்து சபையாரையும் அழைத்துக் கேட்க அவர்கள் தாங்கள் பலரும் சேர்ந்துகொடுக்க வேண்டியிருந்ததாலும் போகம் இல்லாததாலும் தடைபட்டது என்று தெரிவித்துள்ளனர். கல்வெட்டுப்படி இனி கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அதிகாரி பங்குனி உத்திரத் திருவிழா ஏழுநாட்கள் நிகழ வேண்டிய நடைமுறைகளையும் செலவுகளையும் நிர்ணயித்துள்ளார். அடுத்த பகுதிக் கல்வெட்டு கோயில், கோயில் நிலங்கள், கோயில் சார்ந்தவர்களின் வீட்டு மனைகள் ஆகியவற்றில் உள்ள மா, தெங்கு, பலா முதலிய மரங்களிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருவாயினை நிர்ணயித்து அதனைக் கொண்டு சித்திரை, ஐப்பசி மாதப் பிறப்புகளின் போதும் உத்திர, தக்ஷிண அயனங்களின் போதும் தெய்வத்தை புனித நீராட்டி (ஸ்நபனம்) சிறப்பு வழிபாடுகள் நிகழ அதன் செலவுகளை நிர்ணயித்த செய்தியைக் குறிப்பிடுகிறது. கோயில் கருவறையை புதுப்பித்தல் தொடர்பாக ஸ்ரீவிமானம் புதுக்குப் புறம் என்ற பெயரில் நிலமிருந்ததாகவும் அறிய முடிகிறது. |