சுழி கோலம்

 

சுழி கோலமானது வளைகோடுகளால் புள்ளிகளைச்  சுற்றி வரையப்படும் கோலமாகும். ஒரே கோட்டால் முழு கோலமும் வரையப்படுவது இக்கோலத்தின் சிறப்பு. முழு கோலமும் ஒரே கோட்டால் கையை எடுக்காமல் வரைய வேண்டுமாதலால் இக்கோலம் வரைவதற்கு சற்று கடினம். சுழி கோலம் என்பது வரைபவரின் கற்பனைத்திறனைப் பொறுத்தது. சுழி கோலம் வரைய கடினமே ஆனாலும் வரைபவரின் கற்பனைத்திறனுக்கு ஏற்ப அவர் முதலில் புள்ளிகளை வைத்து அதனைச் சுற்றிலும் ஒரு கோடால் சுழி கோலத்தை ஒரு தாளில் வரைந்து அதன் முன் மாதிரியை பார்த்துக் கொள்வதுகோலத்தை வரைய எளிமையாக இருக்கும்.

சுழி கோலம்  வரைய கடினமானதாகையால் ஒருமித்த மனதும் கடுமையான முயற்சியும் அவசியமானதாகிறது. கற்பனைத்திறனுடன் கூடிய முயற்சி மட்டுமே ஒருவரை சுழி கோலம் நன்கு வரைய உதவி புரியும். சுழி கோலமானது வெவ்வேறு வடிவமைப்புகளிலோ அல்லது உருவ அமைப்புகளிலோ வரையலாம். இவ்வாறு விதவிதமான வடிவமைப்புடனும் உருவ அமைப்புடனும் சுழி கோலம் வரையும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்  ஒரே கோடால் கையை எடுக்காமல் புள்ளிகளைச் சுற்றி அக்கோலம் வரையப்பட வேண்டும் என்பதே. இங்கு விதவிதமான வடிவில் உதாரனத்திற்காக சில சுழி கோலங்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.