Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King ஸ்ரீ ரங்கதேவ மகாராயர் Srirangadeva Maharayar
Header Detail
Regnal Year No
Historical Year 1582
ARIE 479/1919
Pre Published -
Village No 225
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 224
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
கொடை, பணம், பொன்
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, பாறை, வடக்குச் சுவர்
Summary : ஜெயங்கொண்ட சோழமண்டலமான தொண்டைமண்டலத்து படைவீட்டு ராசியத்திலுள்ள நகரியல்‌ சீர்மை ராவுத்தநல்லூர்‌ மற்றும்‌ சந்திரகிரி ராசியத்திலுள்ள செங்கழுநீர்பட்டு சீர்மையிலுள்ள செறுக்கு பெத்துவூர்‌ ஆகிய இரு ஊர்களின்‌ வருவாயிலிருந்து 570 பொன்னினை திருவிழா நாட்களுக்குக்‌ கொடையளித்த செய்தி. பேரருளாளர்‌, அஷ்டபுஜத்தெம்பெருமான்‌, சொன்னவண்ணம்‌ செய்தபெருமாள்‌, பெருந்தேவியார்‌ சேரகுலவல்லி நாச்சியார்‌, மகாலெட்சுமி சூடிக்‌ கொடுத்த நாச்சியார்‌ மற்றும்‌ ஆழ்வார்களுக்கு நடைபெறும்‌ சிறப்பு திருநாட்களின்‌ வழிபாட்டிற்காக இப்பணம்‌ கொடையரளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி உறயடி விழா, வனபோசனம்‌, தேர்த்‌ திருவிழா, திருத்தோப்புக்கு எழுந்தருளுதல்‌ முதலிய விழாக்களும்‌ அவற்றின்‌ செலவுகளும்‌ விரிவாகச்‌ சொல்லப்பட்டுள்ளன. வேங்கடபதி ராஜாவின்‌ தளவாய்‌ தொப்பூர்‌ திருமலை நாயக்கர்‌ அவர்களும்‌, இக்கோயில்‌ பண்டாரத்தார்‌ மற்றும்‌ கோயில்‌ நிர்வாகியான எட்டுர்‌ திருமலைகுமார தத்தாசாரி - அய்யன்‌ ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம்‌ ஏற்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate