Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | பாபநாசம் | Papanasam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1100 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 4 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3362 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
கொடை, காசு, பள்ளி |
Locus | : | நூற்றெட்டு சிவாலயம் இராமலிங்கேஸ்வரசாமி கோயில் - அம்மன் சன்னிதி கருவறைநிலையின வலப்புறம். |
---|---|---|
Summary | : | ஆரம்பமும் முடிவும் காணப்படவில்லை. ஐய்பசி சதைய தினத்தன்று இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும், அச்சதையத் திருவிழாவின்போது இறைத்திருமேனி எழுந்தருளுகின்ற சமயத்தில் திருக்காப்பு சாத்துதல், சிவகருந்தாடல் போன்ற வற்றிற்கும், அன்று பெருந்திருவழுது [படையல்] படைப்பதற்கும் தேவையான நெய், தயிர், வெற்றிலை போன்றவற்றிற்கும், திருமேனியுடன் கூடிய திருவாசி கையில் செங்கழுநீர்ப் பள்ளித்தாமம் சாத்துவதற்கும், அன்றைய தினத்தில் விளக்கெரிவதற்கு வேண்டிய எண்ணைக்கும் பிறவற்றிற்கும் வேண்டிய செலவுகளுக்கு நாற்பது காசுகள் கொடையளிக்கப்பட்டது. ஒரு காசிற்கு ஓராண்டிற்கு 1⁄4 காசு வட்டியாக வசூலிக்கப்பட வேண்டுமென்று கணக்கிட்டு, நாற்பது காசிற்கு வட்டியாக வரும் 10 காசு கொண்டு மேற்கூறிய செலவுகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. ஐய்பசி ரீசதையத்திருவிழா, முதலாம் இராஜராஜ சோழனின் பிறந்த நாள், ஆகையால், அத்திருவிழாவைக் கண்டு களிப்பதாகக் கூறப்பட்டிருக்கும் பெரிய தேவர், முதலாம் இராஜராஜ சோழனாகவே இருத்தல் வேண்டும். அவரைப் பெரிய தேவர் என இக்கல்வெட்டு குறிப்பிடுவதால் இக்கல்வெட்டு முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இராஜராஜனுக்கு எடுக்கப்பட்டிருந்த சிலை கண்டு களித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது என்று ஊகிக்கும் வகையில், அவருக்குப் பரியட்டத்(மேலாடை)திற்கும் வகை செய்திருந்த ஏற்பாடு அமைகிறது, [s. எண்கள் : 7, 8, 9, 10 ஆகியவற்றைக் காண்க] |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |