Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருவாரூர் Thiruvarur
Taluk மன்னார்குடி Mannargudi
Village திருமக்கோட்டை Thirumakkottai
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசராசன் I Rajarajan I
Header Detail
Regnal Year 13
Historical Year 998
ARIE 266/1917
Pre Published -
Village No 11
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3570
Book Name Tamilnadu Kalvettukal - 2005: Volume - 2
Author Rajagopal. S; Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சதுர்வேதி மங்கலம்
Locus : திருமெய்ஞானபுரீசுவரர் கோயில் மகா மண்டபத் தூண்.
Summary : இக்கல்வெட்டின் துவக்கப்பகுதி கிரந்த எழுத்துக்களிலும் பின்பகுதி தமிழிலும் உள்ளது. தென்கரை பழைய செம்பியன் மகாதேவி சதுர்வேதிமங்கலத்து மகா சபையோர், (எ) பார்க்கிழவன் நந்திதாயனாகிய வீரகேசரி விழுப்போரையர் என்பவருக்கு நிலம் விற்றுக் கொடுத்தனர். இவ்வாறு விற்றுக் கொடுத்தது மதினேறி எழுந்தருளின் கோராஜகேசரிவர்மனின் 4-வது ஆட்சியாண்டில் ஆகும். அந்நிலம் குலமாணிக்க பேரேரியிலிருந்து நீர் பாய்ந்து விளைகின்ற நிலமாகும். முன்னர் விற்றுக் கொடுத்த நிலம் பற்றிப் பின்னர் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டில் கூறப்பட்டிருக்கிறது. இந்த விற்பனைத் தொடர்பான ஆவணம் தொலைந்து விட்ட காரணத்தினால் மீண்டும் ஆவணம் எழுதியிருப்பதாக இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. சமஸ்கிருதப் பகுதி மிகவும் சிதைந்துள்ளது. இத்தூண் தற்போது தலைகீழாக நிறுத்தப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate