Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Village சோழமாதேவி Sholamadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1000
ARIE No/No
Pre Published -
Village No 11
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3712
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பள்ளி
Locus : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை வடக்குப்பட்டி.
Summary : இவ்வூர்க் கோயிலில் ஒரு நாளைக்கு மூன்று சந்தியிலும் அர்த்த சாமத்திலும் திருப்பள்ளி எழுச்சியின்போதும், பதினான்கு ஆட்கள் கொட்ட வேண்டும் என்றும் அது போல சங்கிராந்திகளிலும் கிரஹணங்களின் போதும் திருக்கல்யாணங்கள் நடக்கின்ற போதும் இதே பதினான்கு ஆட்களும் தவறாது கொட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொட்டுதல் என்பது பறை போன்ற வாத்தியக் கருவிகளை இசைத்தல் என்பதாகும். அவ்வாறு கொட்டத் தவறியவர்களிடம் இக் கோயிலில் அந்தந்த வருடங்களில் ஸ்ரீகார்யம் செய்வார்களே தண்டமாகப் பெற்று கோயில் பண்டாரத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் ஆரம்பமும் முடிவும் காணப்படவில்லையாதலால் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை. எந்த கோயிலுக்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடியவில்லையாயினும் 'திருக்கல்யாணங்கள்' என்பது பற்றிய தகவலால் இக்கோயில் இவ்வூரிலுள்ள நடுவில் ஸ்ரீகோயிலாகிய. விஷ்ணு கோயிலாக இருத்தல் வேண்டும் எனக் கொள்ளலாம்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate