Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District நாகப்பட்டினம் Nagapattinam
Taluk மயிலாடுதுறை Mayiladuthurai
Village திருவேள்விக்குடி Thiruvelvikudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 4
Historical Year 1122
ARIE 144/1926
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3744
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, எல்லை, சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னிதி பின்புறம் மகா மண்டப வடக்குச் சுவர்.
Summary : பூலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் திருவேள்விக்குடி உடையார் கோயிலில் கூடியிருந்து திருவாவடுதுறைக் கோயில் ஆதிசண்டேஸ்வரர்க்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்தனர். திருவாவடுதுறைக் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் தபஸ்வியாகிய இராஜராஜ வளநாட்டுப் பரவை நாட்டு அழகவிடங்கன் உய்ய வந்தானான ஞானசிவர் என்பவர். இவ்வூரில் திருக் கேதாரம் என்ற பெயரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து கோயில் எடுப்பதற்காக இந்நிலம் வாங்கப்பட்டது, இந்நிலத்திற்காக ஞானசிவரிடமிருந்து 20 காசுகள் பெற்றுக்கொண்டு இறையிலி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலத்தில் ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் திருநந்தவனமும் திருமடைவளாகமும்க திருக்குளமும் உள்ளிட்டு வேண்டுவன செய்து கொள்ளலாம் என்பதும் அந்நிலத்திற்கு எல்லைகளும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன. இந்த நிலத்தை ஞானசிவரும், அவர் வர்க்கத்தாரும் முன்னின்ற மாஹேஸ்வரருமே இறையிலியாக அனுபவிக்கப் பெறுவார்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. மஹாசபை உறுப்பினர்கள் இறுதியில் கையெழுத்திட்டுள்ளனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate