Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk திருப்பெரும்புதூர் Sriperumbudur
Village சிவபுரம் Sivapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year 9
Historical Year 1021
ARIE 287/1959-1960
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3836
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பொன், மெய்க்கீர்த்தி
Locus : சிவன் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்
Summary : முதலாம் இராஜேந்திர சோழன் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய மஹாதேவர் கோயிலுக்கு அரசன் இராஜேந்திர சோழனே ஆபரணங்கள் செய்தளித்த தகவல் கூறப்பட்டுள்ளது. அணிகலன்களின் பெயர்களும் அவற்றின் எடையும் கூறப்பட்டதுடன், அணிகலன்களில் பதிக்கப்பட்ட மாணிக்கம், வயிரம், பச்சை, இளஞ்சிவப்புக்கற்கள், சிறிய மாணிக்கம் ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆபரணங்களுடன் வெண்சாமரை, 80 பொற்பூக்கள் போன்றனவும், இக்கோயில் ஆடவல்லார் அபிமாந மேரு விடங்க தேவருக்கு திருவபிஷேகம் செய்த பொன்னும் பொன்னாலான திருமாலை, தோடு, வாகு வலையம், திருக்கைய்க்காறை நான்கு, திருக்காற்காறை இரண்டு, பாதசாயல் இரண்டு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட பொன்னின் அளவுகளும் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. அதேபோல அத்தேவர் தேவியார்க்கும் திருமாலை, வாகு வலையம், பட்டிகை ஆகியனவும் அணிகலன்கள் கொடுக்கப்பட்ட விவரம் கூறப்பட்டுள்ளது. இஷபவாகன தேவருக்கும், அவர் தேவியார்க்கும் ஆபரணங்கள் மன்னன் பெயரிலேயே செய்தளிக்கப்பட்டிருக்கின்றன.
(1) ஸ்ரீராஜேந்திர சோழன் இட்ட பொற்பூ
(2) ஸ்ரீராஜேந்திர சோழன் பொன்னின் தளிகை
(3) ஸ்ரீராஜேந்திர சோழன் மண்டை
(4) ஸ்ரீராஜேந்திர சோழன் பட்டம்
(5) ஸ்ரீராஜேந்திர சோழன் வெண்சாமரை
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate