Skip to main content

54 results found

விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Records gift of taxes on a salt-pan for two lamps to the temple of Tiruppumīccuramuḍaiyār at Manakkānam. Marakkāṇam is mentioned as Manakkāṇam alias Rājarājapēralam in Pattinanāḍua sub division of Ōyma-nāḍu, by the tenants (alakkuḍikal) and Ātittan the superintendent of accounts of the salt pan (alattukku kaṇakku kaṇkāņi nāyakam). Four Śivabrāhmaṇās have agreed to light the lamp. ஓய்மா நாட்டு பட்டின நாட்டு மநக்கானம், ராஜராஜப்பேரளம் என்ற பெயருடன் விளங்கியிருக்கிறது. இங்கமைந்த திருப்பூமீஸ்வரமுடையார் கோயிலுக்கு உப்பளக்குடிகளும், இந்த அளத்துக் கணக்கு கண்காணிநாயகம் செய்கின்ற ஆதித்தன் என்பவரும் விளக்கு எரிப்பதற்காக ஒரு உப்பளத்தின் வரிவருவாயினை வழங்கியுள்ளனர். இதனை நான்கு சிவபிராமணர்கள் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
விழுப்புரம்>திண்டிவனம்>மரக்காணம்
Registers the gift of one kācu per salt-pan to Bhūmīśvaram uḍaiyār temple at Rājarājapēralam in Manakkānam for a lamp by salt-pan tenants (alakkudikal) and Rāman Kumaran Cōlā Mūvēndavēlār the supervisor (kaņkāni) of Rājarāja-pēralam. The other salt- pans that existed as the boundaries and channel that irrigated it are mentioned with specific names. This gives us a picture of salt production in salt-pans on those days. The inscription has lost continuity as the flooring of the temple was raised in a later time. கோயிலின் சுற்றுத் தரைப்பகுதி பிற்காலத்தில் உயர்த்திக் கட்டப்பட்டதால் கல்வெட்டின் தொடர்ச்சி விடுபட்டுள்ளது. மனக்கானத்து இராஜராஜ பேரளத்து பூமீஸ்வரத்து இறைவனுக்கு ஒரு உப்பளத்துக் குடிகளும் கண்காணிப்பாளரான இராமன்குமரன் சோழமூவேந்தவேளாரும் விளக்கெரிக்க அளத்துக்கு ஒரு காசு வீதம் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட அளத்தின் நான்கு எல்லைகளில் அமைந்த உப்பளங்களின் பெயர்களும் அளங்களுக்கு நீர்பாய்ந்த பெருவாய்க்காலும் சொல்லப்பட்டுள்ளது.
விழுப்புரம்>திண்டிவனம்>கிழ்சேவூர்
Records an oral order of the king denoting with the term phrase Kōnēriņmai koṇḍān. This is an order of tax exemption issued on the request of Etirilicōla Sambuvarayar. Tax exemption on 10 vēli of land in Pūtēri the hamlet (pidākai) of Cevūr was given in the presence of Tiruvakattiśvaram temple authorities, Śrikariyam ceyvār, Dēvakanmis and Mähēśvarakaṇkāņi. This tax exemption copy called ulvari was issued by the land record officials varikkūru ceyvar and variyilar after registering in land register. Names of tirumantira ōlai (Royal scibe) and other officials who signed this document are mentioned. As the Etirilicōla Sambuvarāyar mentioned here is also mentioned in the next inscription of Rājādhirājā so we can fix this inscription belong to Rājādhirājā s time. இது மன்னன் பெயர் இல்லாத அரசனின் வாய்மொழி ஆணை. எதிரிலிச் சோழசம்புவரையர்கேட்டுக்கொண்டபடி அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சேவூரின் பிடாகையான பூதேரியில் 10 வேலி நிலம் தேவதான இறையிலியாக வரி நீக்கிக் கொடுக்கப்பட்டது. சேவூரான ஸ்ரீகரணநல்லூர் திருவகத்தீஸ்வரமுடையார் கோயில் தேவகன்மிகள், மாகேஸ்வரக் கண்காணிகள், ஸ்ரீகாரியம் செய்வார் ஆகியோர் முன்னிலையில் இறையிலியாகத் தந்த முடிவு நிறைவேற்றப்பட்டது. அரசு அதிகாரிகளான வரிக்கூறு செய்வார், வரியிலார், திருமந்திர ஓலை ஆகியோர் ஆணையை நிறைவேற்றிய நடைமுறையில் குறிக்கப்படுகின்றனர். அடுத்த இராஜாதிராஜன் கல்வெட்டிலும் இந்த எதிரிலிச் சோழசம்புவரையர்குறிக்கப்படுவதால் இக்கல்வெட்டு இராஜாதிராஜன் காலத்தியது எனலாம்.
விழுப்புரம்>விழுப்புரம்>திருவாமத்தூர்
It states that Maruntan Arasan Rājanārāyaṇan alias Rājarāja Mūvēndaraiyaṇ inspected the temple jewels and in the presence of certain members of the assemblies of Rājarāja chaturvēdimangalam, Jananātha chaturvēdimangalam, officers of the temple, devotees and a local merchant had them melted and got certain new ornaments made of gold for the god. மருந்தன் அரசன் இராஜநாராயணன் ஆன இராஜராஜ மூவேந்தரையன் என்னும் அதிகாரி இக்கோயில் பண்டாரத்தில் இருந்த ஆபரணங்களை இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து சபை உறுப்பினர் தாமப்பட்டர், ஜநநாதச் சதுர்வேதி மங்கலத்து சபை உறுப்பினர் வட்டமணி பட்டர், இக்கோயில் நிர்வாகிகளான ஸ்ரீமாகேசுவரக் கண்காணி, ஸ்ரீகாரியம், தேவர்கன்மி, கோயிற் கணக்கன், பக்தர்கள், இரு உள்ளூர் வியாபாரிகள் ஆகியோர் முன்னிலையில் பரிசோதித்து அந்த ஆபரணங்களை உருக்கி புதிதாக ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளச் செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
விழுப்புரம்>விழுப்புரம்>திருவாமத்தூர்
Records the gift of 20 kalañju of gold for burning two perpetual lamps in the Perumaṇaḍigal temple at Tiruvāmāttūr, a dēvadāna in Vāvalūr-nāḍu in the mīvāļi of Aruvā- nāḍu by Aṛivālan kēņi alias Chembiyan Kaṭṭimāṇaḍikal. The gift was entrusted to the sabha and ur of Tiruvāmattūr and was placed under the protection of the kaṭṭimāns the kaṭṭi māppātti nāṭṭārs, the nāḍu of Vāvalur -nāḍu and the paṇmāhēśvarās. It also refers to the construction of a compound wall to the temple and the gift of the pāḍikāval- kūli for the maintenance of the cleaners (tirualagu, tirumelukku iḍuvar) by the same donor. அருவா நாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் ஊரிலுள்ள பெருமானடிகள் கோயிலில் இரண்டு நந்தா விளக்கெரிக்க அறிவாளன் கேணி எனும் செம்பியன் கட்டிமானடிகள் என்பவன் இருபது கழஞ்சுப் பொன்னினை திருவாமாத்தூர் சபையாரிடம் அளித்து தினம் உரி அளவு நெய் வழங்கிட ஏற்பாடு செய்துள்ளான். திருவாமாத்தூர் சபையாரும், ஊராரும் இரண்டு நந்தா விளக்குகளைத் தொடர்ந்து எரிப்பதை கட்டிமான்கள், கட்டிமாப்பாத்தி நாட்டார், வாவலூர் நாட்டார் மற்றும் பன்மாகேசுவரர்கள் ஆகியோர் கண்காணிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கோயிலில் திருச்சுற்று மண்டபம் செம்பியன் கட்டிமானால் எடுக்கப்பட்டுள்ளது. பாடிகாவல் வரியினை இக்கோயிலில் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ளும் திருஅலகு, திருமெழுக்கு செய்வார்களுக்கு அளித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்>திருக்கோயிலூர்>திருவெண்ணைநல்லூர்
Records gift of gold and a lamp-stand by Seyyasamanthan Gängeyan of Visaiyur for burning a perpetual lamp to the temple. திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர்க்கு நுந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு பொன்னும், அவ்விளக்கு எரிப்பதற்குரிய இரண்டு நிலை குத்துவிளக்கு ஒன்றும் விசையூரிலிருக்கும் செய்ய சாமந்தன் காங்கேயன் என்பவர் வழங்கியுள்ளார். இவற்றைப் பெற்றுக்கொண்ட இக்கோயில் சிவபிராமணர்கள் இத்திருநுந்தா விளக்கு எரிக்கச் சம்மதித்து உள்ளனர்.
இந்த நுந்தாவிளக்கு கோயிலில் தவறாமல் எரிக்கப்படுகிறதா என்பதை இக்கோயிலில் தினந்தோறும் பூசிக்கும் நம்பிமார்கள், கவனித்து பூசிக்க வேண்டும் என்றும் அதற்காக அவர்களுக்குத் தட்சிணையாக ஒன்றேகால் கழஞ்சு பொன் அளிக்கப்பட்டது. இந்த நுந்தாவிளக்கைத் தவறாமல் எரிப்பிக்கச் செய்யும் பணியை கோயிலில் மாகேஸ்வரக் கண்காணி செய்வார்களும், தேவகந்மிகளும், கோயில் கணக்கநும் சந்திதோறும் ஆராய்ந்து செய்ய வேண்டும். அதற்காக இவர்களுக்கு அரைக்கழஞ்சே மஞ்சாடி பொன் தட்சிணையாக அளிக்கப்பட்டது போன்ற செய்திகளைக் கூறுகிறது இக்கல்வெட்டு.
திருவண்ணாமலை>வந்தவாசி>மடம்
On the south wall of the mandapa infront of the central shrine in the Taṭākapurīśvara temple. Sakalalōkachakravartin Rājanārāyaṇ. r. y. 6. Assignment of the appointment of accountant of the interior section of the same temple. முந்தைய கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று குளத்தூர் திருவக்னீசுவரமுடைய மகாதேவர் கோயிலில் உட்கண்காணியாக உள்ள புவனேகவாகு தேவர் என்பவருக்கு வழங்கப்பட்ட சலுகை.
திருவண்ணாமலை>வந்தவாசி>மடம்
On the west wall of the mandapa infront of the central shrine in the Taṭākapuriśvara temple. Vijayanagara. Kampaṇa Uḍaiyār son of Vira Bokkaṇa Uḍaiyār. Registers the assignment of the service of the accountant of the temple of Kulandai-Andār, on one of the Mahēśvaras of the temple. குளந்தையாண்டார் கோயில் உட்கண்காணியாக இருக்கும் புவனேகவாகுதேவர் என்பவரை மன்னன் இராசநாராயணன் நியமித்து கோயில் தானத்தார்க்கு தெரிவிக்கும் ஆணை.
திருவண்ணாமலை>வந்தவாசி>மடம்
On the east wall of the Amman shrine in the second prakāra of the Taṭakapuriśvara temple. Tamil verse. குளந்தையாண்டாருக்கு தேவதானங்களாக உள்ள உள்ளூர் நிலங்கள், மழவூர், வஞ்சி நல்லூர் ஆகிய ஊர்களில் சிறுபாடிகாவல், பெரும்பாடி காவல், வெட்டி கண்காணி ஆகிய வரிகளின் மூலம் வசூலிக்கப்படும் நெல்லினை, இக்கோயிலில் நடைபெறும் திருஅர்த்தசாம பூசைக்கு பயன்படுத்திக் கொள்ள செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் என்கிற ராசேந்திரசோழ சம்புவரையர்ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்.
திருவண்ணாமலை>செய்யாறு>பிரம்மதேசம்
On the north wall of the mandapa. Chōla. Kulōttungachōla I: Year 48, 1118 A. D Incomplete. Registers an agreement made by certain Sivabrāhmaṇās of the temple of Pōndai- uḍaiyār at Diṇachintāmaṇi-chatūrvēdimangalam in Dāmar- nādu, a sub-division of Dāmar-kōṭṭam, with the Srimāhēsvara, kaṇkāṇiseyvār, kōil-vāriyapperumakkaļ and the karaṇattār, for burning two lamps from the interest on gold received from a native of Paruttikkuḍi, a sub-division of Misengili- nāḍu in chintāmaṇni-valanādu of Sōlamaṇḍalam. சோழ மண்டலத்து சிந்தாமணி வளநாட்டு மீசெங்கிளி நாட்டு பருத்திக்குடி ஊரைச் சார்ந்த கோயில் கொண்டான் என்பவனிடமிருந்து தாமர் நாட்டு தினசிந்தாமணி சதுர்வேதி மங்கலத்து போந்தை உடையார் கோயிலில் திருநந்தா விளக்கெரிக்க இக்கோயில் சிவபிராமணர்கள், ஸ்ரீமாகேசுவரர்கள் கண்காணி செய்வார், கோயில் வாரிய பெருமக்கள் ஆகியோர் 100 காசுகள் பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாக உடன்படிக்கை செய்து கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை>செய்யாறு>பிரம்மதேசம்
On the north wall of the central shrine. Chōla. Pārthivēndravarman: year 13, day 120 : 972 A. D. This inscription records the gift of thirty kalañju of gold [Tulai-Niraip-pōn] for two perpetual lamps to the temple of Śri Pōndaip-perumānadigal by Caturan Müväyiravan, an arbitrator [Trairajyaghatikā Madhyasthan] and also an officer who belongs to the Rājamallach-chaturvedimangalam of Tiruvēgampapuram in Dāmar-Kōṭṭam. This money has been utilized (as deposit) for making the temple land as tax-free and from the yield of that land, the Mahāsabha accepted to maintain the perpetual lamps through the assembly (Gaṇavāriyapperumakkal). திரைராஜ்ய கடிகாவின் மத்யஸ்தன் (கணக்கர்) சதுரன் மூவாயிரவன் என்பவன் ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் இரண்டு நந்தா விளக்குகள் வைப்பதற்கு 30 கழஞ்சு துளைநிறைப் பொன் தானமளித்துள்ளான். கணப்பெருமக்கள் நந்தா விளக்கு ளிப்பதைக் கண்காணிக்கவும், ளிக்கவில்லை எனில் தெண்டம் வசூலிக்கவும் சிரதாமந்தர் எனும் நிர்வாகப்பிரிவினருக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>செய்யாறு>பிரம்மதேசம்
On the south wall of the central shrine. Parthivēndravarman : year 12, day 184: 971 A. D. The inscription records the gift of 525 kuli of land by Pōttan Maḍuvuḍaiya Veliyan Nulamban Viśuddhamati Pandita as tax free for the sacred bath of Śri Pōndaipperumānaḍikal, three times (santis) daily and midnight (Ardhayama) by a person who ́ well- versed in Vēdas. This must be supervised by great-persons of gana, who look after the temple (kōyil gaṇa- variyāpperumakkal). வெளியன் நுளம்பர் விசுத்தமதி பண்டிதர் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனை மூன்று சந்தியும், அர்த்த யாமத்திலும் வேதத்தில் வல்லவனாய் உள்ளவன் அபிஷேகம் செய்வதற்காக 525 குழி நிலத்தினை வரிநீக்கிப் பெற்று தானமாக அளித்துள்ளான். கணப்பெருமக்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>செய்யாறு>திருவோத்தூர்
On the east wall of the first prākāra in the same temple. Visvävasu 15th century A. D. Records the conferment of the hereditary office of supervisor of stores (pala-pandangal) of the temple on Āriyan mudali alias Tiruvanaikkavuḍaiyān of Sandilya gōtrā. திருவோத்தூர் கோயிலில் இருந்த பல பண்டங்கள் கடையை கண்காணிக்கும் சாண்டில்ய கோத்திரத்து ஆரியன் முதலியார் திருவானைக்காவுடையன் என்பவன் கோயிலுக்குக் கொடுக்கும் பொருட்களை அதே அளவு அளித்து, தொடர்ந்து நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தினை கோயில் கணக்கர் நாற்பத்து எண்ணாயிர பிரம்மராயன் எழுதியுள்ளான்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பம்மல்
On the north wall of the Dharmapuriśvara temple. Chōla Sungantavirtha Kulōttunga Chōla dēva (Kulōttunga-I) r. y. 39 (1109 A. D. ). Records an royal order of Kulōttunga chōla making a gift of land in Munnalur consisting of 41 vēli of wet and dry lands as iraiyili dēvadāna to the temple of Tiruchchuram-uḍaiya Nāyanār at Pallapuram alias Vanavan-Mahādēvich-chaturvēdimangalam in Śurattūr-nāḍu a sub-division in Puliyūr-kōṭṭam alias Kulōttunga Chōla Valanādu in Jayangondachōla mandalam, for the Vaikasi festival. Certain taxes and dues including paddy and cash were made payable to the temple. The gift village was renamed Tirunirru- chōla-nallūr. The record is attested by Kulōttunga chōla Mūvēndavēlāṇ, a tirumandira-ōlai officer of the king. சுங்கந்தவிர்த்த குலோத்துங்க சோழன் திருச்சுரம் உடைய நாயனார் கோயில் பதிபாத மூலப்பட்டுடை பஞ்சாசாரியர், தேவகன்மி, ஸ்ரீமாகேசுவரக் கண்காணி, கோயிற் கணக்கன் ஆகியோருக்கு அனுப்பிய அரசாணையாகும். ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க் கோட்டம் எனும் குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டுப்பிரிவில் உள்ள பல்லாபுரம் என்கிற வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து உடையார் திருச்சுரமுடைய நாயநார் கோயிலில் திருவைகாசித் திருநாளன்று திருவெழுச்சிப்படிக்காக முந்நலூர் ஊரிலுள்ள நீர்நிலம் முப்பது வேலியும், கொல்லை நிலம் பதினொரு வேலியும் சேர்த்து திருநீற்றுச்சோழ நல்லூர் என்னும் பெயரிட்டு புதிய ஊரினை உருவாக்கி இறையிலித் தேவதானமாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் மூலம் பெறப்படும் கடமை, குடிமை ஆகியவற்றினைக் கோயிலுக்கு அளித்திட வழிவகைச் செய்துள்ளான்.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவீழிமிழலை
- திருவீழிமிழலை உடையார் கோயிலில் உள்ள நின்றருளிய நாயனாரும், நெறி வார்க் குழலியும் எழுந்தருளியிருக்கும் சந்நிதியிலும் மேலும் இக்கோயிலிலுள்ள நாயன்மார் திருக்கோயில்களிலும் திருப்பணிக் குறைகள் இருந்தது. அதனால் இவ்வூரிலுள்ள தச்சாசாரியன் நந்துணையாழ்வானான திருச்சிற்றம் பல ஆசாரியன் என்பவன், திருவீழிமிழலை உடையார் கோயிலிலுள்ள, ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களையும், ஸ்ரீகாரியஞ்செய்வார்களையும், தேவர் கன்மிகளையும், கோயில் கணக்களையும் சந்தித்து மேற்கூறிய திருப் பணிக் குறைகளை (repairs] தான் செய்வதாகவும், கோயில் தச்சாசாரியக் காணி நிலத்தை தனக்குத் தச்சாச்சார்யக் காணியாகவும் பிரதிஷ்டை செய்வதற்கான அன்பளிப்பாகவும் இறையிலி செய்து தர வேண்டுமென்று கேட்க, அவர்களும் அவ்வாறே ஆசாரியனுக்கும் அவன் வழிவந்தார்க்கும் கோயில் குடிமை அந்தராயம் போன்ற வரிகளைத் தவிர்த்து இறையிலியாக வழங்கிய செய்தி கூறப்படுகிறது. அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலம் காலும், குடியிருப்பு மனை நிலம் குழி இருபதும் ஆகும். இந்நிலங்களை கோயில் மாஹேஸ்வரக் கண்காணி திருவீதிகோட்பிலியாண்டானும், ஸ்ரீகாரியம் தில்லையம்பல மூவேந்த வேளானும் கையெழுத்திட்டு கொடுத்தனர் என்றும் தெரிய வருகிறது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவீழிமிழலை
- இராசேந்திர சோழனின் இருபத்து மூன்றாவது ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. குலோத்துங்கச் சோழ வளநாட்டு திருநறையூர் நாட்டு இராஜராஜபுரத்தில் திருச்சத்திமுற்றமுடையார் கோயிலில் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் கோயில் உள்ளது. இக்கோயிலின் கீழைத் திருமட விளாகத்தில் திருஞானசம்பந்தர் மடம் இருந்தது. இம்மடத்தில் பூஜை கொண்டருளுகிற மாருதிப் பெருமாள் சந்தானத்து திருச்சத்திமுற்ற முதலியாரின் தொண்டர்களில் (சிஷ்யர்) ஒருவரான தவப் பெருமாள் என்ற ஞானசிவர் திருவீழிமிழலையுடைய நாயனார் கோயில் திருமடைவிளாகத்துத் திருமஞ்சண ஒழுக்கைக்குக் கீழ்ப்புறத்தில் திருச்சிற்றம்பல முடையார் திருமடம் என்னும் ஒரு மடம் அமைத்தார். இம்மடத்துக்கு இறையிலி நத்தங்கள் கொடுக்கப் பட்டன. அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலத்தின் மொத்த அளவு நூற்றி அய்ம்பத்தாறே கால் குழியாகும். இந்நிலத்தினை திருவீழிமிழலை உடையார் கோயில் கணக்கு, தேவர் கன்மி, மாஹேஸ்வரக் கண்காணி, ஸ்ரீகாரியம் ஆகியோர் கையொப்பமிட்டு திருச்சிற்றம்பலமுடையார் மடத்திற்கு எழுதிக் கொடுத்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவீழிமிழலை
- ஊர் வாரியப் பெருமக்கள் வசம் இறைவனுக்குத் திருநாமத்துக் காணியாய் கொடுத்து விளக்கெரிக்கும்படி ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த கால் நிலம் வெள்ளம் புகுந்து பயிர் செய்விக்க முடியாமையில். திருவீழிமிழலை உடையார் கோயில் ஸ்ரீகாரியஞ் செய்வார்களும், மாகேஸ்வரக் கண்காணி செய்வார்களும் தேவர்கன்மி கோயில் கணக்கரும் பரிவர்த்தனையாக வேறு இடத்தில் நிலம் கொடுத்த செய்தியும், பரிவர்த்தனைப் பிரமாண விலைப்படி காசு பதினாயிரமும் ஸ்ரீபண்டாரத்திலே கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவீழிமிழலை
- திருவீழிமிழலை உடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளும் சீகாரியம் செய்வார்களும் ஸ்ரீமாகேஸ்வர கண்காணி செய்வார்களும் சேர்ந்து திருவீழிமிழலையிலுள்ள திருச்சுவக்க முடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவ கன்மிகளுக்கு 7000 அன்றாடு நற்காசுகளுக்கு நிலம் விற்று விலைப் பிரமாணம் செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>நன்னிலம்>திருவீழிமிழலை
- விஷ்ணுவர்த்தனபுரத்து நகரத்தார்கள். அந்நகரத்திலுள்ள நிலங்களுக்கு முன்னர் கிராமகாரியம் பேசினபடி கோயிலுக்குத் தர வேண்டிய இறையைச் செலுத்த முடியாத காரணத்தால், கோயில் தேவகன்மிகள், மாகேஸ்வர கண்காணி செய்வார் ஆகியோரை அழைத்து விவரத்தைக் கூறி அந்நிலங்களைக் கோயிலுக்கே விற்று இறையிலி செய்து கொடுத்து விலைக் காசுகளைப் பெற்றுக் கொண்ட செய்தியும், அந்நிலங்களின் எல்லைகள் மற்றும் அந்நிலத்து வருவாயிலிருந்து எந்தெந்த இறைவனுக்கு அமுது படைக்கப் பட்டது என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
Damaged. Registered the purchase of house site to the temple. Signatures of the temple authorities are seen. திருவலஞ்சுழி உடையார் கோயிலுக்கு மனை விலைக்கு வாங்கப்பட்டிருத்தல் வேண்டும். மனைக்கு எல்லைகள் கூறப்பட்டிருக்கின் றன. கோயில் ஆதி சண்டேசுவர தேவகன்மிகளும். கணக்கமை தேவகன்மிகளும், ஸ்ரீமாகேசுவர கண்காணி செய்வார்களும் கையெழுத்திட்டுள்ள ஓர். கல்வெட்டின் நடுவில் சில பகுதிகள் சிதைந்துள்ளன.