Skip to main content

1128 results found

சென்னை>சென்னை>வேளச்சேரி
On the south wall of the Śelliyamman temple. Chōla -Uttamachōla r. y. 4. (974 A. D. ) Records a gift of land as mañjikkam by the sabha of Velichchēri in Puliyur-kōṭṭam for the maintenance of a perpectual lamp and for offerings during the two services in the temple of Kālā-Bhaṭāri. புலியூர்க் கோட்டத்து வெளிச்சேரி சபையார் இவ்வூரிலுள்ள காளா பிடாரி இறைவிக்கு ஒரு நந்தா விளக்குக்கும் திருஅமுதுக்கும் வேண்டிப் பயிரிடப்படாத நிலம் (மஞ்சிக்கம்) ஒன்றினைக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பள்ளிக்கரணை
On the north wall of the central shrine in the temple. 16th C. A. D. States that the daily service had been done by Dēvaṇ Pandithar, Sattanathan, Sapthanathan, Madhava Pandithar, Narasayan, Sēvagapperumal, Tigamalar-udiyan, Ponnambala Natha Pandithar. இக்கோயில் இறைவனுக்கு சேவை செய்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேவன் பண்டிதர், சத்தநாதன், சப்தநாதன், மாதவ பண்டிதர், நரசயன், சேவகப்பெருமாள், திகமலர் உடையான், பொன்னம்பலநாத பண்டிதர் ஆகியோரின் பெயர்கள் காணப்படுகின்றன.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பள்ளிக்கரணை
On the north wall of the central shrine in the temple. 16th C. A. D. States that the daily service had been done by Dēvaṇ Pandithar, Sattanathan, Sapthanathan, Madhava Pandithar, Narasayan, Sēvagapperumal, Tigamalar-udiyan, Ponnambala Natha Pandithar. இக்கோயில் இறைவனுக்கு சேவை செய்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேவன் பண்டிதர், சத்தநாதன், சப்தநாதன், மாதவ பண்டிதர், நரசயன், சேவகப்பெருமாள், திகமலர் உடையான், பொன்னம்பலநாத பண்டிதர் ஆகியோரின் பெயர்கள் காணப்படுகின்றன.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பள்ளிக்கரணை
On the north wall of the central shrine in the temple. 16th C. A. D. States that the daily service had been done by Dēvaṇ Pandithar, Sattanathan, Sapthanathan, Madhava Pandithar, Narasayan, Sēvagapperumal, Tigamalar-udiyan, Ponnambala Natha Pandithar. இக்கோயில் இறைவனுக்கு சேவை செய்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேவன் பண்டிதர், சத்தநாதன், சப்தநாதன், மாதவ பண்டிதர், நரசயன், சேவகப்பெருமாள், திகமலர் உடையான், பொன்னம்பலநாத பண்டிதர் ஆகியோரின் பெயர்கள் காணப்படுகின்றன.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பள்ளிக்கரணை
On the north wall of the central shrine in the temple. 16th C. A. D. States that the daily service had been done by Dēvaṇ Pandithar, Sattanathan, Sapthanathan, Madhava Pandithar, Narasayan, Sēvagapperumal, Tigamalar-udiyan, Ponnambala Natha Pandithar. இக்கோயில் இறைவனுக்கு சேவை செய்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேவன் பண்டிதர், சத்தநாதன், சப்தநாதன், மாதவ பண்டிதர், நரசயன், சேவகப்பெருமாள், திகமலர் உடையான், பொன்னம்பலநாத பண்டிதர் ஆகியோரின் பெயர்கள் காணப்படுகின்றன.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பம்மல்
On the south wall of the Dharmapuriśvara temple. Chōla Vikramachōlan r. y. Nil. Registers to the god Tiruchchuramuḍaiya Mahādēva. Other details are lost. இக்கல்வெட்டின் பின்பகுதி கட்டடப்பகுதிக்குள் மறைந்துள்ளது. திருச்சுரமுடைய மகாதேவர் இறைவன் பெயர் மட்டும் அறியமுடிகிறது.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பம்மல்
On the south wall of the Dharmapuriśvara temple. Chōla Tribhuvana Śri Rājādhirāja dēva - (Rājārāja III) r. y. 16 (1232 a. d. ). Registers gift of 6 cows to the temple of god Aluḍaiyār Tiruchchuramuḍaiyar for burning a twilight lamp by Kuḍipalli Sāttan Mahādēva, of Manimangalam in Surattūr-nādu. மணிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்த குடிப்பள்ளி சாத்தன் மகாதேவன் என்பவன் ஆளுடையார் திருச்சுரமுடையார் இறைவனுக்கு ஒரு சந்தி விளக்கெரிக்க ஆறு பசுக்கள் தானமளித்துள்ளான். ஒரு பசுவுக்கு நாலு ஆடுகள் வீதம் ஆறு பசுக்களுக்கு 24 ஆடுகளைக் கொண்டு தினமும் நெய்யளக்க மாங்காட்டு நாட்டு மலையம்பாக்கம் ஊரினனான இடையன் கருணாகரக் கோன் உறுதியளித்துள்ளான்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பம்மல்
On the north wall of the Dharmapuriśvara temple. Chōla - Tribhuvana. Kulottunga Chōla dēva (Kulottunga-III) r. y. 31 (1201 A. D. ). Registers gift of ten buffaloes for a perpetual lamp by Tiruchchurak-kannappan Adinathan Manavaliya-mugandan alias Chittiramēli munaiyadaraiyan to the temple of Aluḍaiyār Tiruchchuram-uḍaiyār in Pallāpuram in Śurattūr-nādu. திருச்சுரக்கண்ணப்பன் ஆதிநாதன் மனவாலைய முகந்தன் என்கிற சித்திரமேழி முனையதரையன் என்பவன் செயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க்கோட்டத்துச் சுரத்தூர் நாட்டுப் பிரிவு பல்லாபுரம் எனும் வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து ஆளுடையார் திரிச்சுரமுடையார் கோயில் இறைவனுக்குத் திருநந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு 10 எருமைகள் வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பம்மல்
On the south wall of the Dharmapuriśvara temple. Chōla Vikramachōlan r. y. 14 (1132 a. d. ). Registers a sale-deed made by the ur of Kachavampākkam in Pērūr nāḍu in Puliyūrk-kōṭṭam. The land was purchased by Kannappan Pon-thambi Mukuntan alias Vikramachōla-Malaiyaraiyan of Tiruchchuram to the temple of god Tiruchchuram-uḍaiya Mahādēva for certain services to Palliyarai-Nambirāṭṭiyār in the temple. ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டு புலியூர்க் கோட்டத்து பேறூர் நாட்டுப் பிரிவைச் சார்ந்த கசவம்பாக்கத்து ஊர் நிர்வாகத்தினர், சுரத்தூர் நாட்டுப் பல்லாபுரம் என்கிற வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து திருச்சுரமுடைய மகாதேவர் கோயில் பள்ளியறை நம்பிராட்டியார் இறைவிக்கு திருப்படிமாற்று வழிபாட்டிற்காக, திருச்சுரம் ஊரைச் சார்ந்த கண்ணப்பன் பொன் தம்பி முகுந்தன் எனும் விக்கிரமசோழ மலையரையன் என்பவன் 1000 குழி நிலத்தினை விலைக்கு வாங்கி, கோயிலுக்கு விற்றுக்கொடுத்த நிலவிலையாவணம் ஆகும்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பம்மல்
On the south wall of the Dharmapuriśvara temple. Chōla Kulōttunga-I r. y. Nil. (1070-1120 A. D. ) Registers a sale-deed made by the local mahāsabhā of Sembiyan- Tirumangalam in Pulal- nāḍu, a sub-division of Rajendrachōla Valanādu. The land was purchased by Tirumangalakkilāṇ Śiyārūr- Velaiyan alias Tennavan Pallavarayan of the same village and he gifted it to the temple for the Ardhayama services to the god. The land was exempted from payment of certain taxes and dues. ராஜேந்திரசோழ வளநாட்டுப் புழல் நாட்டுச் செம்பியன் திருமங்கலம் ஊர்த்தலைவன் சீயாரூர் வெள்ளி என்கிற தென்னவன் பல்லவராயன் என்பவனுக்கு இக்கோயில் இறைவனுக்கு திருஅர்த்தசாம பூசை வழிபாட்டிற்காக நிலம் ஒன்றினை மகாசபையினர் விற்று நிலவிலை ஆவணம் செய்துக் கொடுத்துள்ளனர். இந்நிலத்தின் மீது வசூலிக்கப்படும் வரிகளையும் நீக்கி வழங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பம்மல்
On the north wall of the Dharmapuriśvara temple. Chōla Sungantavirtha Kulōttunga Chōla dēva (Kulōttunga-I) r. y. 39 (1109 A. D. ). Records an royal order of Kulōttunga chōla making a gift of land in Munnalur consisting of 41 vēli of wet and dry lands as iraiyili dēvadāna to the temple of Tiruchchuram-uḍaiya Nāyanār at Pallapuram alias Vanavan-Mahādēvich-chaturvēdimangalam in Śurattūr-nāḍu a sub-division in Puliyūr-kōṭṭam alias Kulōttunga Chōla Valanādu in Jayangondachōla mandalam, for the Vaikasi festival. Certain taxes and dues including paddy and cash were made payable to the temple. The gift village was renamed Tirunirru- chōla-nallūr. The record is attested by Kulōttunga chōla Mūvēndavēlāṇ, a tirumandira-ōlai officer of the king. சுங்கந்தவிர்த்த குலோத்துங்க சோழன் திருச்சுரம் உடைய நாயனார் கோயில் பதிபாத மூலப்பட்டுடை பஞ்சாசாரியர், தேவகன்மி, ஸ்ரீமாகேசுவரக் கண்காணி, கோயிற் கணக்கன் ஆகியோருக்கு அனுப்பிய அரசாணையாகும். ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க் கோட்டம் எனும் குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டுப்பிரிவில் உள்ள பல்லாபுரம் என்கிற வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து உடையார் திருச்சுரமுடைய நாயநார் கோயிலில் திருவைகாசித் திருநாளன்று திருவெழுச்சிப்படிக்காக முந்நலூர் ஊரிலுள்ள நீர்நிலம் முப்பது வேலியும், கொல்லை நிலம் பதினொரு வேலியும் சேர்த்து திருநீற்றுச்சோழ நல்லூர் என்னும் பெயரிட்டு புதிய ஊரினை உருவாக்கி இறையிலித் தேவதானமாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் மூலம் பெறப்படும் கடமை, குடிமை ஆகியவற்றினைக் கோயிலுக்கு அளித்திட வழிவகைச் செய்துள்ளான்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>பம்மல்
On the south wall of the Dharmapurīśvara temple. Chōla Kōrājakēsarivarman alias Uḍaiyār Śri Rājēndra Chōla dēva (Kulōttunga-I) r. y. 3 (1073 A. D. ) Registers of 150 kalam of paddy Mannikondachōla-Pallavaraiyan of Chembūr-nāḍu in Chembur- kōṭṭam for services; worship and food offerings to the temple of Tiruchchuram-uḍaiya Nayanar at Chōla Divākara- Chaturvēdimangalam. in Śurattūr-nāḍu a subdivision of Puliyūr- kōṭṭam the Śivabrāhmanās under-took to do the needful including the offer of mandirapushpa to the deity of the temple. The record was drawn by Anantan-Tuttuvan, the madhyasthan of the village. செம்பூர்க் கோட்டத்து செம்பூர் நாட்டுக் கலிகுளத்துவாயுடையான் கோயில் மண்ணைகொண்டசோழ பல்லவராயன் என்பவனிடமிருந்து புலியூர்க் கோட்டத்து சுரத்தூர் நாட்டுச் சோழதிவாகரச் சருப்பேதி மங்கலத்து திருச்சுரமுடையார் கோயில் சிவபிராமணர்கள் 150 கலம் நெல் பெற்றுக்கொண்டு, ஆண்டுக்கு இதன் வட்டியாக வரும் 37 கலம் நெல்லிலிருந்து திருச்சுரமுடையார் இறைவனுக்கு அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, திருவாதிரை ஆகிய நாட்களில் சிறுகாலைச் சந்தியின்போது பஞ்சகவ்யம், பால், தயிர், கோமூத்திரம், கோமயம் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம், திருமஞ்சனம், திருவாராதனை, திருவமுது செய்வதாகவும், தினமும் மந்திர புஷ்பம் சாத்துவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>திருநீர்மலை
On the west wall of the Ramar sannathi in the same temple. Pandya Māravarman Tribhuvana Kulasekharadēva, r. y. 37 (1304 A. D. ). Records gift of the village Vadakkupaṭṭu surnamed Kumāragōpāla nallur to the temple Pammanakka- Nāyanar at Pammal in Surattur- nādu, a district of Puliyur-koṭṭam alias Kulōttungachōla valanādu which was a subdivision of Jayangonḍachōla maṇḍalam by Pañchanadivāṇan Tiruvēgamban alias Nilagangan in order to celebrate a festivel on the day of the asterism Hasta in the month of Panguni, in which he was born. The village was purchased from the residents of Perumbakkam alias Rājarāja nallur in Kālpāy- nāḍu of the same division. பஞ்சநதிவாணன் திருவேகம்பன் என்கிற நீலகங்கன் என்பவன், தான் பிறந்த பங்குனி மாதம் ஹஸ்தம் நாளன்று ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர் கோட்டம் எனும் குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு பம்மல் என்னும் ஊர் கோயில் இறைவன் பம்மநக்க நாயனாருக்கு வழிபாடுகள் நடத்திடுவதற்கு புலியூர்க் கோட்டத்து கால்பாய் நாட்டு வடக்குப்பட்டு என்னும் ஊரிற்கு தனது பெயரால் குமாரகோபால நல்லூர் என்ற பெயரிட்டுத் தானமாக வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>திருநீர்மலை
On two detached slabs fixed into the main gōpurā, left entrance of the same temple. Chōla - Tribhuvana Sri Virarājēndra Chōla dēva (Kulottunga-III) r. y. nil. Records apparently a gift of 12 vēli and 8 mā land in Taṇnyalattur by Pañchanadivāṇaṇ Nilagangaraiyan to a temple at Pallippadai Agaram. ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு மடப்புறம் தண்ணியாலத்தூர் என்கிற ஊரில் உள்ள பள்ளிப்படை அகரத்து விஸ்வேஸ்வர நாயனார் இறைவனுக்குப் பூசை மற்றும் கோயில் திருப்பணிகளுக்காக பஞ்சநதிவாணன் நீலகங்கரையன் என்பவன் 12 வேலி எட்டு மா அளவு நிலம் தானமளித்துள்ளான்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>திருநீர்மலை
On the south wall of the Ramar sannathi in the Nirvanṇar temple. Chōla - Tribhuvana Sri Virarajendra Chōla dēva (Kulottunga- III) r. y. 34 (1212 A. D. ). Records assignment of taxes on tirumaḍaivilāgam in the temple by Pañchanadivāṇan Nallanāyaṇ alias Chōlaganga devan in order to celebrate a festival in the month of Vaigāsi to the temple of Pammanakka Nāyanār at Pammal in Surattūr-nāḍu, subdivision of Puliyur-koṭṭam alias Kulttungachōla valanādu in Jayangondachōla mandalam. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டம் என்கிற குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டுப் பிரிவிலுள்ள பம்மல் ஊர்க் கோயிலின் இறைவன் பம்ம நக்க நாயனாற்கு திருவைகாசி திருநாள் வழிபாட்டுச் செலவினங்களுக்காக, திருமடைவளாகத்தில் இருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியினைப் பயன்படுத்திக் கொள்ள பஞ்சநதிவாணன் நல்லநாயன் என்கிற சோழகங்கதேவன் ஏற்பாடு செய்துள்ளான்.
காஞ்சிபுரம்>தாம்பரம்>திருநீர்மலை
On the west of Narasimhaśvamin shrine in the Nirvanṇar temple on the hill. Chōla - Tribh. Vīrarājendra (Kulōttunga-III). r. y. 3 (1181 A. D. ). Records gift of one gandagopalan mādai for a twilight lamp to the temple of Singapperumal at Tirunirmalai by an oil mōnger named Ayiravannan Atkondavilli alias Tirukkachchi- Nāmbi dasan of Pūvirundavalli-nagaram. திருநீர்மலை சிங்கப்பெருமாள் இறைவனுக்கு பூவிருந்தவல்லி நகரத்தைச் சார்ந்த வாணியன் ஆயிரவண்ணன் ஆள்கொண்ட வில்லி எனும் திருக்கச்சிநம்பி தாசன் என்பவன் ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான். இக்கோயிலைச் சார்ந்த நம்பிமாரில் நயிமிசை யஜ்ஞ நாராயண பட்டன் என்பவன் கண்டகோபாலன் மாடை ஒன்று இவனிடமிருந்து பெற்றுக்கொண்டுச் சந்தி விளக்கு ஒன்று எரிக்கச் சம்மதித்துள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவானைக் கோயில்
On two stones built into the east and south walls of the prākārā of the Tiruvālīśvara temple. Śaka 1286 (1364 A. D. ) Seems to register some provision made by Kampanṇa Uḍaiyār, son of Vira Pokkana Uḍaiyār and a certain Lingaraya for worship and repairs in the temple, with effect from the month of Panguni. துண்டுக்கல்வெட்டுகளாக உள்ளன. கம்பண உடையார் குமாரன் விருப்பண்ண உடையார் திருவாலக்கோயிலுக்கு சில தானங்கள் வழங்கியுள்ளார். மேலும், லிங்கராயர் என்பவர் இக்கோயிலில் பங்குனி மாதம் இறைவனுக்குப் பூசை மற்றும் கோயில் திருப்பணிக்காகவும் சில தானங்கள் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவானைக் கோயில்
On the south wall of the Artha mandapa in the Tiruvālīśvara temple. Chōla - Rājārāja II r. y. 4 (1150 A. D. ) Registers gift of one twilight lamp to the temple of Tiruvalakkōyiluḍaiyā-Mahādēva at Kalattür in Kalattūr-kōṭṭam, a sub-division of Jayangondachōla mandalam by Vaḍuga Vānigan Šēntan Vaḍugan, a merchant of Tirumailappil in Puliyūr-kōṭṭam Jñānarāśi Panditha and Śailarasi Panditha of Kālāmugan kōmaḍam agreed to maintain the lamp. ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க் கோட்டத்து திருமயிலாப்பில் ஊரைச் சார்ந்த வியாபாரி வடுக வாணிகன் சேந்தன் வடுகநாதன் என்பவன் களத்தூர்க் கோட்டத்து களத்தூர் ஊர் திருவாலக்கோயில் மகாதேவர் இறைவனுக்கு ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான். காளாமுகன் கோமடத்தைச் சார்ந்த ஞானராசி பண்டிதன், சயிலராசி பண்டிதன் ஆகிய இருவரும் இவ்விளக்கினைத் தொடர்ந்து எரிப்பதாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவானைக் கோயில்
On the north wall of the central shrine in the Tiruvālīśvara temple. Chōla - Vikrama chōla r. y. 9 (1127 A. D. ). Records gift of a lamp to the temple god Tiruvālakkōyil dēvar of Kalattur in Kalattūr-kōṭṭam, a sub-division of Jayangondachōla mandalam by Kollandai dēvan Uttippon, an oil monker of this village. The gift was entrusted to the Sailarasi Pandithar of the kōmaḍam. ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்துக் களத்தூர் திருவாலக்கோயில் இறைவனுக்கு இவ்வூரிலுள்ள சங்கரப்பாண்டியான் (எண்ணெய் வணிகர்) கொள்ளந்தை தேவன் உத்திப்பொன் என்பவன் ஒரு நந்தா விளக்கு வைத்துள்ளான். இவ்விளக்கினை எரிக்கும் பொறுப்பு கோமடத்து சைலராசி பண்டிதர் மற்றும் இம்மடத்தைச் சார்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவானைக் கோயில்
On the west wall of the central shrine in the Tiruvālīśvara temple. Chōla Kulottunga I r. y. 12 (1082 A. D. ). Registers an order of the King to present certain lands in the village of Arumbakkam, a suburb of Ulalur alias Rājārāja nallur in Kalattur- kōṭṭam clubbed together under the new name Aṇapāya nallur, for maintaining worship in the temple of Tiruvalakkōyiluḍaiyā- Mahādēva. ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்துக் களத்தூர் திருவாலக் கோயிலுடைய மகாதேவர் இறைவன் வழிபாட்டிற்காக, இக்கோட்டத்து உழலூர் என்கிற இராசராசநல்லூர் ஊரின் புற ஊரான அரும்பாக்கம் ஊரின் நிலங்களிலிருந்து குறிப்பிட்ட நிலங்களைப் பிரித்து ‘அநபாயநல்லூர்’ என்ற புதிய ஊரினை உருவாக்கி, மன்னன் தனது பெயரினைச் சூட்டி கோயிலுக்குத் தானமளித்துள்ளான்.