Skip to main content

1128 results found

காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>திருவானைக் கோயில்
On the north kumuda of the Artha mandapa in the Tiruvālīśvara temple. Chōla. - Tribhuvana King Kulōttunga to Kōnēriņmaikondān (Kulōttunga-I) r. y. 12 (1082 A. D. ). Registers an order of the chief Tondaimāṇ to grant some lands in the village of Neņmali in Valla nādu, clubbed together under the new name Kulōttungachōlan Tirunirruchōla nallur for maintaining worship in the temple. வல்ல நாட்டு நென்மலி ஊரிலுள்ள நஞ்சை புஞ்சை நிலங்கள் சிலவற்றினைச் சேர்த்து ‘குலோத்துங்க சோழன் திருநீற்றுச்சோழ நல்லூர்’ என்னும் பெயரிட்டு புதிய ஊர் ஒன்றினை உருவாக்கி திருவாலக்கோயில் மகாதேவர் கோயில் இறைவன் வழிபாட்டுக்காக மன்னன் குலோத்துங்கள் வழங்கிய நேரடி ஆணையாகும். இவ்வாணையை தொண்டைமான் என்னும் குறுநிலத் தலைவன் செயல்படுத்திட ஆணையிட்டுள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>புலிப்பாக்கம்
On the south wall of the Vyagrapuriśvara temple. Telugu Chōla. Vijayagandagōpāla. r. y. 12 (1262 A. D. ) Registers the royal order, remitting certain taxes due on kuḍinēngā dēvadāṇa lands belonging to Kanakarāyān the madhyastha of the Pulippakkam for offernings to Sundara Pandya Nayakar and Nachchiyar set by him in the temple. புலிப்பாக்கம் ஊர்க்கணக்கன் நூற்றெண்மப் பிரியன் பூமாங்கழல் பிச்சதேவன் பொன்மலை உடையான் கனகராயன் என்பவன் புலிப்பாக்கம் என்கிற சோளசிகாமணிச் சதுர்வேதி மங்கலத்து பொன்மலை உடையார் கோயிலில் இவன் எழுந்தருளித்த சுந்தரபாண்டிய நாயகர்க்கும், நாச்சியார்க்கும் அமுதுபடி மற்றும் சாத்துப்படி வழிபாட்டுத் தேவைகளுக்காகக் குடிநீங்கா தேவதானமாக அளித்து, அந்நிலத்தின் வழியாகக் கொடுக்கப்படும் வரிகளையும் நீக்கி கோயிலுக்குத் தானமாக அளித்துள்ள மன்னனின் ஆணையாகும். மேற்படி, மத்யஸ்தன் கனகராயன் என்பவன் விசயகண்ட கோபலனின் 14-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளான். இக்கல்வெட்டில் இவர் எடுப்பித்துள்ள இறைவனுக்குச் சுந்தரபாண்டியர் நாயகர் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளதால், இக்கல்வெட்டு சுந்தரபாண்டியன் காலத்தியது என உணரலாம். எனவே விசையகண்டகோபாலனின் காலத்திற்கு சமகாலத்தவனான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு இது எனலாம்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>புலிப்பாக்கம்
On the north wall of the same temple. Telugu Chōla. Vira Gaṇḍagōpāladēva. r. y. 5 (1248-47 a. d. ) Registers a gift of three cows by Narpattēņṇāyira Vēlān, the madhyastha of the village for a twilight lamp to the god Ponmalai udaiya Nayanar at Pulippakkam alias Chōlaśikhāmaṇi chaturvēdi mangalam in Valla nādu, a sub-division of Kalaṭṭūrk-kōṭṭam in Jayangondachōla mandalam. களத்தூர் கோட்டத்து வல்லநாட்டு புலிப்பாக்கம் என்றழைக்கப்படும் சோழ சிகாமணிச் சதுவேதிமங்கலத்து பொன்மலை உடைய நாயனார் கோயில் இறைவனுக்கும் புலிப்பாக்கத்துக் கணக்கன் (மத்யஸ்தன்) பெரியான் எனும் நாற்பத்ததெண்ணாயிர வேளான் என்பவன், ஒரு சந்தி விளக்கு எரிக்க இக்கோயிலில் காணியுடைய சிவபிராமணர்களிடம் மூன்று பசுக்கள் தானமளித்துள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>புலிப்பாக்கம்
On the south wall of the Vyaghrapuriśvara temple. Chōla. Rājarājadēva--III r. y. 26 (1242 A. D. ) Registers an agreement given by the Sivabrahmanas of the temple of Ponmalai-Udaiyar to provide for worship and offerings to the image of Atkondadeva setup in the tirunadai-maligai by Kuravaśeri Sōmideva-Bhattan Āṭkondān alias Tondaimandalap-pillai, for 10 kalañju of gold received from him. புலிப்பாக்கம் என்கிற சோழ சிகாமணிச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபொன்மலை உடையார் கோயில் திருநடைமாளிகையில் இவ்வூரைச் சார்ந்த குரவசேரி சோமிதேவ பட்டன் ஆட்கொண்டான் என்றழைக்கப்படும் தொண்டை மண்டலத்துப் பிள்ளை என்பவன் தனது பெயரால் ‘ஆட்கொண்டதேவர் (சிவலிங்கம்) உருவினை எடுப்பித்துள்ளான். இந்த இறைவனுக்குப் பூசை, அமுது மற்றும் கறியமுது போன்றவற்றிற்காக 10 கழஞ்சுப் பொன்னினை இக்கோயில் சிவப்பிராமணர்களிடம் கொடுத்துள்ளான். இப்பொன்னின் மூலம் தினமும் தூணிப் பதக்கு அளவு திருமஞ்சனமும், திருப்பளித்தாமமும் (இறைவனுக்கு சாத்தும் மாலை), இரண்டு சந்தி விளக்கும், நான்கு நாழி அளவு அரிசி திருவமுதும், கறியமுதும் வைத்து இறைவனுக்கு வழிபாடு செய்வதாக இக்கோயில் சிவப்பிராமணர்கள் உறுதியளித்து உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>புலிப்பாக்கம்
On the south wall of the Vyaghrapuriśvara temple. Chōla. Rājarāja-III r. y. 22 (1238A. D. ) Registers a gift of three cows by Sembiyadaraiyan, a native of Neydalvay in Payyur-koṭṭam for a twilight lamp to Ponmalai-udaiya-Nāyānar at Pulippakkam alias Chōlasikhamanich-chaturvedimangalam in Kalattūrk-kōṭṭam. களத்தூர்க் கோட்டத்துப் புலிப்பாக்கம் எனும் சோழ சிகாமணிச் சதுர்வேதி மங்கலத்துப் பொன்மலை உடைய நாயனார் கோயில் இறைவனுக்கு ஒரு சந்தி விளக்கு வைக்க பைய்யூர் கோட்டத்து நெய்தல்வாயில் ஊர் தலைவன் செம்பியதரையன் என்பவன் மூன்று பசுக்களைத் தானமளித்துள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>புலிப்பாக்கம்
On the south wall of the Vyaghrapuriśvara temple. Chōla. Rājarājadēva-III r. y. 13 (1230 A. D. ). Registers an agreement given by Kanjikuri Kausikan Pichchan alias Tirujñanasambandan, a sivabrāhmaṇas of the temple of burn a twilight lamp infront of the god Śriponmalai-uḍaiya-Nāyanār at Pulippakkam alias Chōla Śikhamanich-chaturvēdimangalam for a gift of one cow and 2 calves received from Atkondan alias Tondaimandalap-pillai, a local resident. புலிப்பாக்கம் என்கிற சோழ சிகாமணிச் சதுர்வேதி மங்கலம் ஊரிலுள்ள ஸ்ரீபொன்மலை உடைய நாயனார் கோயில் இறைவன் முன் ஒரு சந்தி விளக்கு எரிப்பதற்கு, இவ்வூரைச் சார்ந்த குரவசேரி ஆட்கொண்டான் என்னும் தொண்டை மண்டலப் பிள்ளை என்பவரிடமிருந்து ஒரு பசுவும், நாகு (பெண் கன்று) இரண்டும் இக்கோயில் காணியுடைய காஞ்சிக்குறிக் கவுசிகன் பிச்சன் எனும் திருஞானசம்பந்த பட்டன் என்பவன் பெற்றுக் கொண்டு விளக்கெரிப்பதாக உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>புலிப்பாக்கம்
On the south wall in the kumudha of the Vyaghrapuriśvara temple. Chōla. Rājarāja-III r. y. 14 (1230 A. D. ) Registers a gift of three palankāsu for a twilight lamp to god of Śriponmalai-uḍaiya- Nāyanar at Pulippakkam alias Chōlasikhāmaṇich- chaturvedimangalam, by Kuravacheri Aṭkondan alias Tondaimandalap-pillai, a resident of the village. புலிப்பாக்கம் எனும் சோழ சிகாமணிச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபொன்மலை உடைய நாயனார் கோயில் இறைவன் முன் சந்தி விளக்கு ஒன்று எரிக்க, இவ்வூரைச் சார்ந்த குரவசேரி ஆட்கொண்டான் என்கிற தொண்டை மண்டலத்து பிள்ளை என்பவன் மூன்று பழங்காசுகளை இக்கோயில் சிவபிராமணன் சந்திரசேகர பட்டன் என்பவனிடம் வழங்கி சந்திவிளக்கு எரிக்க வழிவகைச் செய்துள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>புலிப்பாக்கம்
On the north wall of the Vyaghrapuriśvara temple. Chōla. Virarājēndra chōla dēva (Kulōttunga-III) r. y. 6. (A. D. 1184). Registers a gift of three cows by Tiruchchirrambalamuḍaiyan, a devotee residing in the tirumadaivilagam of the temple for a twilight lamp to Sriponmalai-Uḍaiyā Nāyaṇār at Pulippakkam alias Chōla Sikāmaṇi Chaturvedimangalam sub-division of Kalattur-kōttam in Jayangonda- chōla-mandalam. ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் களத்தூர் கோட்டத்து புலிப்பாக்கம் என்கிற சோழ சிகாமணி சதுர்வேதி மங்கலத்து ‘ஸ்ரீபொன்மலை உடைய நாயனார் இறைவன் முன் நெய் விளக்கெரிக்க, இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிக்கும் பக்தர் திருவையாறு ஊரைச் சார்ந்த திருச்சிற்றம்பலமுடையான் என்பவன், இக்கோயில் சிவபிராமணன் காக்கும் பிரான்பட்டன் என்பவனிடம் மூன்று பசுக்களைத் தானமாக வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>பாலூர்
On the south wall of the same shrine. Chōla-Kulōttunga -III r. y. 29 (1207-08 A. D. ) Registers the King s royal order, issued at the instance of Nandiyarāyar, remitting certain taxes in kind and coine due on some devadāna lands belonging to the temple of Tiruppatangadu-udaiyar- for worship and repairs theirin. சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனின் அதிகாரி நந்தியராயன் என்பவன் ஊற்றுக்காட்டுக் கோட்டத்துப் பாலையூர் நாட்டு பாலையூர் என்கிற இராசேந்திர சோழ நல்லூர் திருப்பதங்காடுடையார் கோயிலுக்குரிய திருநாமத்துக்காணி, தேவதானம் ஆகிய நிலங்கள் மீது வசூலிக்கப்படும் வரிகள், தறிஇறையாகப் பெறப்படும் காசு, செக்குக்குடியினர் கொடுக்கும் எண்ணெய் மற்றும் காசுகள் ஆகியவற்றினை, இக்கோயில் இறைவனின் பூசைக்கும், கோயில் திருப்பணிக்கும் முதலீடாக வைத்துக் கொள்ள மன்னனிடம் கேட்டுக் கொண்டார். மன்னனும் இருபத்தொன்பதாவது ஆண்டு முதல் திருப்பணிக்கும், பூசைக்கும் முதலீடாக வைத்துகொள்ள ஆணை வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>பாலூர்
On the east wall of the mandapa infront of the same shrine. Chōla Kulōttunga chōla dēva-III r. y. 24 (1202 A. D. ). Ends of lines built in. Registers an agreement made by two sivabrāhmaṇas of the temple to burn two perpetual lamps before the god, for a grant of 2000 kuli land and one well made for the purpose by some residents of the village. கல்வெட்டு வரிகளின் இறுதிப்பகுதி கட்டடப் பகுதிக்குள் மறைந்துள்ளது. இக்கோயிலைச் சார்ந்த சிவப்பிராமணர்கள் இருவர் இவ்வூரினர் சிலரிடமிருந்து இரண்டாயிரம் குழி நிலம் மற்றும் கிணறு ஒன்றும் பெற்றுக்கொண்டு, இறைவன் முன் இரண்டு திருநந்தா விளக்குகள் விளக்கெரிப்பதாகச் சம்மதித்து உடன்படிக்கைச் செய்து கொடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>பாலூர்
On the south wall of the mandapa infront of the central shrine in the Patangēśvara temple. Chōla-Vikramachōla r. y. 5 (1123 A. D. ). Registers a grant of land made by Abimānamērup- pallavaraiyan, a resident of Kurichi in Pāṇḍyakulāśini vaļanādu, a sub-division of śōla mandalam, for feeding apurvin in the matha called Achārasilan-matha on the days of amāvāsya. ஊற்றுக்காட்டுக் கோட்டத்துப் பாலையூர் நாட்டு பாலையூர் என்கிற இராசேந்திரசோழ நல்லூர் திருப்பதங்காடு உடைய மகாதேவர் கோயிலுக்கு, அமாவாசை அன்று யாத்திரை மேற்கொண்டு இறைவனைத் தரிசிக்க வரும் பிராமணர்களுக்கு ஆசாரசீலன் மடத்தில் உணவளிப்பதற்காக, சோழ மண்டலத்து பாண்டிகுலாசனி வளநாட்டு குறிச்சி ஊரைச் சார்ந்த அபிமானமேரு பல்லவரையன் என்பவன் மடப்புறமாக நிலம் ஒன்றினை வழங்கியுள்ளான்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>பாலூர்
On the south wall of the central shrine in the Patangēśvara temple. Chōla. Kulottunga Chōla-I r. y. 38 (1108 A. D. ). States that the gift of oil made by Sangarapāḍiyār (oil monkers) of Rājēndrasolapuram in Maiyyūr-nādu, a sub-division of Kalattur-kōttam for a perpetual lamp in the temple of Tiruppatangaḍudaiya- Mahādēva at Pālaiyūr, alias Rājēndrasolanallur an Urrukkāṭṭuk-kōṭṭam, a sub-division of Jayankonda chōla-mandalam commences with the introduction Pugalmādu vilanga after a few words beginning with Viramē-tuṇaiyāgavum of Vīrārajēndra s euology. முதல் இரு வரிகள் வீரமே துணையாகத் தொடங்கும் மெய்க்கீர்த்தி வீரராசேந்திரனுக்கு உரியதாகும். அதனைத் தொடர்ந்து முதலாம் குலோத்துங்கனின் புகழ்மாது விளங்க என்னும் மெய்க்கீர்த்தியோடு இடம்பெறுகிறது இக்கல்வெட்டு.
ஊற்றுக்காட்டுக் கோட்டத்து பாலையூர் எனும் இராசேந்திரசோழ நல்லூர் திருபதங்காடு மகாதேவர் இறைவனுக்கு விளக்கெரிக்க மைய்யூர் நாட்டு இராசேந்திரபுரத்து எண்ணெய் வாணியர் (சங்கரபாடியார்கள்) எண்ணெய் தானமாக வழங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம்>செங்கல்பட்டு>ஆத்தூர்
On the north wall of the central shrine in the Muktiśvara temple. Chōla - Rājārāja III r. y. 28 (1244 A. D. ). Registers the order of Madurāntaka-Pottappichchōlan, which was executed by the residents of Āṛrūr alias Rājārāja-Nallūr directing the grant of 2 vēli of land, free of taxes, to the temple of Valittunaiyappaṇīśvaram- Uḍaiyār of Ārṛūr. The record is signed by Gaṇḍagōpāla refers to the 28th year, probably of Rājārāja III. ஆற்றூர் என்கிற இராசராசநல்லூர் ஊர் மக்களுக்கு மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் ஆணையிட்டுள்ளச் செய்தி. இவ்வூர் வழித்துணையப்பன் ஈசுவரமுடையார் கோயிலுக்கு இரண்டு வேலி நிலம் குடிநீங்கா தேவதானமாக இறையிலியாகக் கொடுத்துள்ளான். இந்நிலங்களின் வரிவருவாயினை கோயில் தானத்தாரிடம் அளிக்க ஊர்ச் சபையினருக்கு ஆணையிட்டுள்ளான். இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள 28-வது ஆட்சி ஆண்டு மூன்றாம் இராசராசனுக்குரியது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>பெருநகர்
On the south wall of the same temple. 1942. Registers a gift of land to the god of Arumuga Swamy in the prākāra of the Brahmiśvara temple for Abishaka and offerings by Thangavēlu Mudaliyār son of Pachchaiyappa mudaliyār, a local resident. காஞ்சிபுரம் தாலுக்கா பெருநகர் ஊரில் உள்ள பிரமீசர் கோயில் திருச்சுற்றில் உள்ள ஆறுமுகசுவாமி இறைவனுக்கு கிருத்திகை நாள் அன்று அபிஷேகம், ஆராதனை செய்வதற்குப் பச்சையப்ப முதலியார் மகன் தங்கவேலு முதலியார் நிலம் தானமாக வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>பெருநகர்
On the left wall (out side) of the gopura infront of the temple. Vijayanagara. Krishnadeva Mahārāya. Śaka 1441 (1519 A. D. ) Records a gift of money by Tōḍikkarai Pērayyaka Pillaiyār for the expenses of the sixth day of the festival in the month of Vaigāsi. பெருநகர் கோயில் ஆளுடைய பிரமீசுரமுடைய நயினார் இறைவனுக்கு வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் திருநாள் அன்று வழிபாட்டுச் செலவினங்களை தோடிக்கரை பேரய்யாக பிள்ளையார் என்பவன் ஏற்றுக்கொண்டுள்ளான்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>பெருநகர்
On the north wall of the Brahmapuriśvara temple. Pāṇḍya. Ravivanmar Tribh. Sri Vīrapāṇḍya. r. y. 4+1. (13th C. A. D. ) Records gift of six lamps by Kakkunāyakan Vijayan Sembiyadaraiyan. The lamps were to be burn before the deity, mudaliyār Kākkunāyakar setup in the temple of Brahmiśvaram at Perunagar in Perunagar Nāḍu, a sub-division of Veņkuṇrak-kōṭṭam by Iruppaipakkilän Kāli Kākku nāyakan, a local resident. ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து பெருநகர் நாட்டுப் பிரிவு பெருநகர் ஊரில் உள்ள ஆளுடையார் பிரமீசுவரமுடைய’ நாயனார் கோயிலில் இவ்வூரைச் சார்ந்த காழி காக்கு நாயகன் என்பவன் எடுப்பித்துள்ள ‘முதலியார் காக்கு நாயகர் என்னும் இறைவனுக்கு காக்கு நாயகன் விசையன் செம்பியதரையன் என்பான் ஆறு சந்தி விளக்குகள் வைத்துள்ளான். முன்னாளில் சேத்துப்பட்டு என்னும் ஊரில் திருநந்தா விளக்குபட்டியாக இருந்த நிலத்தினை அடைமானம் வைத்து வாங்கின 40 பணம் மற்றும் இதனின் வட்டியால் வந்த பணம் உட்பட 60 பணத்தினைக் கொண்டு இந்த ஆறு விளக்குகள் எரிப்பதாக இக்கோயில் சிவப்பிராமணர்கள் உடன்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>பெருநகர்
On the south wall of the central shrine in the same temple. Sambuvaraya. Rājarāja Sambuvarāya. Registers the order of Ālappirandān alias Rājarāja Sambuvarāyan making arrangements for the revival of the festival in the month of Vaigasi which had been instituted by Vijayagandagōpāladēva and which has been subsequently discontinued, after examining the earlier stone records making gifts for the purpose. விசையகண்டகோபால தேவர் தனது 21-ஆவது ஆட்சியாண்டில் இக்கோயில் இறைவனுக்கு வைகாசி விசாகத் திருநாளன்று திருவிழா எடுப்பதற்காக 47 கழஞ்சுப் பொன் அளித்து, அதனின் வாயிலாக வரும் வட்டியைக் கொண்டு நடத்திட வழிவகைச் செய்திருந்தார். இந்த வைகாசி திருநாள் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்துள்ளது. வீரப்பெருமாள் மகன் ஆளப்பிறந்தான் என்னும் இராசராச சம்புவராயன் என்பவன் இரு தூண்களில் இருந்த பழையக் கல்வெட்டு ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர் மீண்டும் இத்திருவிழாவினை நடத்திடுவதற்கு 47 கழஞ்சின் வழியாக வரும் ஏழு கழஞ்சு இரண்டு மஞ்சாடி நாலு மா வட்டியினைக் கொண்டு தானத்தார், நியாயத்தார், நியாய முதலிகள் நடத்திட வேண்டுமென இத்தானத்தினைப் புதுப்பித்து ஆணை வழங்கியுள்ளான்.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திருச்சின்னம்பூண்டி
On the pillar. Nandivarman-II - 9th C. A. D. Records the gift of 6. 25 kalanju of gold by Adigal Kandan Marampavaiyar, the Queen. The provisions were made for the sacred bath on the days of Aippasi and chittrai vishu and feeding 10 brahmins, 5 bachelors (mani) and others. The gold was deposited with the cloth merchants of Srikandapuram and they were in- structed to cross check the routine. நந்திவர்மனின் மனைவி அடிகள் கண்டன் மாறம்பாவையாரென்பவர். 61/4 கழஞ்சுப் பொன் கொடுத்து, ஒவ்வொரு பூவிற்கும் (விளைச்சல்) ஒரு கழஞ்சுக்கு அரைக்கால் பொன் வீதம் வரும் முக்காலே ஐந்துமாப் பொன்னால், ஐப்பசி, சித்திரை மாதப்பிறப்பு நாள்களில் (விஷு) இறைவன் திருநீராட்டுக்கு நெய், பால், தயிர் ஆகியன 5 நாழி வீதமும் பூ, சந்தனம், குங்கிலியம், இளநீர் ஆகியனவும் வழங்குவதோடு, திருவமிர்துக்கு 20 வாழைப்பழம், சர்க்கரை வழங்கவும் கோயிற் பணியாளர் உள்ளிட்ட, பிராம்மணர் 10 பேர், பணிசெய்யும் பிரம்மச்சாரிகள் [மாணிகள்] 5 பேர் அடிகள்மார் பணிசெய்யும் பிறர் ஆகியோர் உண்ணவும் ஏற்பாடு செய்து சிரிகண்டபுரத்து துணி [அறுகை] வாணிகரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஆறு மாதங்களுக்கொருமுறை இவ்வறப்பணியினை மேற்பார்வை யிடவும் வணிகருக்கு ஆணையிடப்பட்டது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திருச்சின்னம்பூண்டி
Inscribed on two pillars - Nandivarman-II - A. D. 9thc. Records the gift 17. 25 kalanju of gold by Adigal Kandan Marampavaiyar, the Queen for the celebrations of 7 day Magha festival in the month of Masi. The break of expenditure and the provisions to be supplied for sacred bath, sacred food and flowers are detailed. இரண்டாம் நந்திவர்மனின் தேவியார் அடிகள் கண்டன் மாறம்பாவையார், திருக்கடைமுடி மகாதேவர்க்கு, மாசிமகத் திருவிழாக் கொண்டாட 17 1/4 கழஞ்சுப் பொன் வழங்கியதைக் குறிக்கிறது. அதில் 10 கழஞ்சுப் பொன்னால், விழாவின் முதல் நாளில் இறைவன் திருநீராட்டுக்கு நெய், பால், தயிர், இளநீர் ஆகியவற்றை வழங்கவும் திருவமிர்து. திருவிளக்குக்கு ஏற்பாடு செய்யவும், பிராமணரும் அடிகள்மாரும் உண்ணவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மிகுந்து நின்ற பொன்னில், இரு கழஞ்சுக்கு ஆண்டுக்கு அரைக் கழஞ்சு வீதம் வட்டி பெற்று, தினமும் மலர்மாலையும் சந்தனமும் அளிக்கவும். அடுத்த கால் கழஞ்சுக்கு ஆண்டுக்கு வரும் வட்டியான 12 நாழி உரி நெய்யால் பிராம்மணர், அடிகள்மார் உண்பதற்கும் வைக்கப்பட்டது. மீதமுள்ள பொன்னின் வட்டியான 1/4 கழஞ்சுப் பொன்னால், திருநீராட 108 கலசம் வாங்கியளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பொன் எயில்நாட்டுத் தேவதானம் சிரிகண்டபுரத்துத் துணி வணிகர்களிடம் பொறுப்புக்காக ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திருச்சின்னம்பூண்டி
On the same wall. Parantaka-I-A. D. 937. Sayirriyan Dayan alias Diran, on behalf of his father-in-law Omayindan Anandasayana Miduni alias Suvaran Ganattan, made arrangements to supply Panchakavya for the sacred bath of the deity on the day of Ardra in the festival of Magha in the month Masi and the sacred food by donating one ma of land. That land had been purchased from the sabaiyar of Pambur and was made tax-free also. திருச்சடைமுடி மகாதேவன் கோயில் உபாசகனான ஓமயின்தன் அனந்தசயன மிதுணி ஆகிய சுவரங்கணத்தானுக்காக, அவன் மருமகன் சைற்றியன் தாயனான தீரன் என்பவன் மாசிமகத் திருவிழாவின்போது திருவாதிரை திருவாதிரை நாளன்று இறைவனின் திருநீராட்டுக்காக நெய், தயிர், பால், கோமயம், கோமூத்திரம் ஆகிய பஞ்சகவ்யம் அளிப்பதற்கும், அன்றைய நாள் அமுதுபடிக்குத் தேவையான பொருள்களை வழங்கவும், புறக்கிளியூர் நாட்டு பாம்பூர் சபையாரிடம் விலைக்கு ஒருமா நிலம் வாங்கி அளித்ததைக் குறிக்கிறது. அந்நிலத்தினை இறையிலியாக்கிக் கொடுத்ததையும் தெரிவிக்கிறது.