Skip to main content

1146 results found

தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் 5 முதல் 9 வரை வரிகள் சிதைந்திருப்பதால் கொடையளித்தவரின் பெயரினை(பெண்) அறியமுடியவில்லை. மாதந்தோறும் மாதப்பிறப்பன்று இறைவன் திருநீராட்டுக்கு, செப்பு அகல் விளக்கு முப்பத்திரண்டு வைத்ததையும், நெய்க்குச் செய்த ஏற்பாடும் குறிப்பிடப்படுகிறது. அமரகோனார் வீரன் என்பார் ஆடுகளைப் பெற்றுக்கொண்டு நெய்யளிக்க ஒத்துக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் 5 முதல் 9 வரை வரிகள் சிதைந்திருப்பதால் கொடையளித்தவரின் பெயரினை(பெண்) அறியமுடியவில்லை. மாதந்தோறும் மாதப்பிறப்பன்று இறைவன் திருநீராட்டுக்கு, செப்பு அகல் விளக்கு முப்பத்திரண்டு வைத்ததையும், நெய்க்குச் செய்த ஏற்பாடும் குறிப்பிடப்படுகிறது. அமரகோனார் வீரன் என்பார் ஆடுகளைப் பெற்றுக்கொண்டு நெய்யளிக்க ஒத்துக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் நித்தவினோத வளநாட்டு ஆயிரத்தளியான . . . . வெண்கொண்ட சோழபுரத்து விக்கிரமசோழப் பெருந்தெருவில் இருக்கும் நகரத்தார், திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்கு ஆதிசண்டேஸ்வரர் வசம் அளித்த இறையிலி நிலையாவணம், இக்கல்வெட்டு. பார்த்திவேந்திர நல்லூரில் அவர்கள் காணியாகப் பொது நிலமாய் உள்ள கொல்லையும், புன்செய்யும், பொன்றியுமாகக் கிடக்கிற நிலம் முக்காலும், ஓடைநீர் நிலையாய் பயிர்செய்யத்தக்கதான நிலம் காலும் ஆக நிலம் வேலியினை திருமாளிகைக் கோலால் அளந்து திருச்சோற்றுத்துறை உடையாருக்குத் திருப்பள்ளியெழுச்சிப் புறமாக நகரத்தார் ஆதிசண்டேஸ்வரர் வசம் விற்று விலையாவணம் செய்து கொடுத்ததையும், அந்நிலம் காசுகொள்ளா இறையிலியாக்கப் பட்டதையும் இக்கல்வெட்டுக் கூறுகிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் இறைவனுக்கு நிசதி நொந்தா விளக்கெரிக்க 25 கழஞ்சு பொன், ஆடு, நிலம் ஆகியன அளித்த செய்தி இத்துண்டுக் கல்வெட்டால் பெறப்படுகிறது. பல்வேறுகொடைகளைத் தொகுத்து எழுதப்பட்ட கல்வெட்டாகலாம்.
தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் இக்கோயில் இறைவன் திருமுன்பு விளக்கெரிப்பதற்காக மண்ணி நாட்டுக் கயலூரைச் சேர்ந்த நம்பன் ஆன கண்டக சண்ட வாரணப் பேரரையன் என்பார் இருபத்தைந்து கழஞ்சுப் பொன் அளித்தார். அதைப் பெற்றுக்கொண்டு மிறைக் கூற்றத்துப் பிரமதேயம் களப்பாழ்குடி மகாசபையார் தேவர் நாழியோடொக்கும் உழக்கினால் நிசதி உழக்கு நெய் கொண்டு சென்று அட்டியதை இக்கல்வெட்டுக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்குத் திருநொந்தா விளக்கெரிக்கத் தொண்ணூறு ஆடுகள் வழங்கப்பட்டமையையும், வைகாசி விசாகத்தன்று இறைவனுக்கு நீராட்டு செய்ய வழங்கப்பட்டிருந்த கொடையையும் இக்கல்வெட்டுக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் தஞ்சாவூர் மஞ்சனத்தார் வேளத்தைச் சேர்ந்த மல்லன் அரங்கன் என்பவன் திருச்சோற்றுத்துறை இறைவன் கோயிலில் இரவும் பகலும் ஒரு நொந்தாவிளக்கெரிவதற்காகப் பதிபாதமூலத்தாரிடமும் தேவகன்மிகளிடமும் இருபத்தைந்து பொன் தருகிறான். அவ்விருபத்தைந்து பொன்னால் வரும் வட்டியைக் கொண்டு அவர்கள் கோயிலில் விளக்கெரித்த செய்தி இக்கல்வெட்டால் பெறப்படுகிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்கு .. வானவன் வாளுவக்கோன்* என்பான் நொந்தா விளக்கொன்று எரிக்க ஊர் மன்றாடி சேந்தன் செ . . . வசம் தொண்ணூறு ஆடுகளைக் கொடுத்தான். மன்றாடியும் அவ்வாடுகளைப் பெற்றுக் கொண்டு இறைவனுக்கு நிசதி உழக்கு நெய் அட்டிய செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>திருச்சோற்றுத்துறை
தஞ்சாவூர் இக்கோயிலுக்கு மழநாட்டு வேள் விளக்கு வைத்த செய்தி முதல் ஆறு வரிகளில் பாடலாக உள்ளது. தென்னவன் மழநாட்டு வேளானாயின கொற்றன் மாறன் என்பவன் 20 பொன் தானமளித்தான். அப்பொன்னிலிருந்து வரும் வட்டி கொண்டு விளக்கெரிக்க வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவனே திங்கள் சங்கிராந்திதோறும் இறைவன் நெய்யாடுவதற்கு 20 பசுக்கள் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் இவ்வூர் வண்ணக்கன் முள்ளிக் குறும்பில் உடையான் வழக்கே துணை குணசீலன் என்பவன் தான் விரும்பியவாறு நெய்த்தானத்து இறைவனுக்குத் தானம் செய்யவிரும்பியதால், பதிபாத மூலத்தார், பஞ்சாசார்யர், திருக்கோயிலுடையார்கள், தேவகன்மிகள் ஆகியோர் மூன்று வெவ்வேறு இடங்களில் /2+12+1% மா அளவினதாகிய மொத்தம் 3/42 மா நிலத்தினை விற்றுக் கொடுத்தனர். அவ்வாறு வாங்கிய நிலத்தினை மீண்டும் கோயிலில் பல்வேறு நிவந்தங்களுக்காக அவன் அளித்தான். நிவந்தங்கள் சிலவற்றைக் கோயிலுடையாரும், சிலவற்றை இவ்வூர்ச் சேனையாரும் பொறுப்பேற்று நடத்தியதையும், மேற்படி நிலம் இறையிலி ஆக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு விவரிக்கின்றது.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் திருநெய்த்தானத்து மகாதேவர் கோயிலில் விளக்கெரிக்க முப்பது கழஞ்சு பொன் அளித்தார் சோழப்பெருமானடிகள் போகியார் நங்கை சாத்தப்பெருமானார். அப்பொன் கொண்டு இறைவன் நமநமாட மண்டபம் கட்டியதோடு, விளக்கெரிப்பதற்காகப் பெரும்புலியூர்ச் சபையாரிடமிருந்து அரசன்சிலநிலங்களை வாங்கி அந்த நிலத்தின் வருவாய் மூலம் விளக்கெரிக்கப்பட்டது என்ற செய்தியைத் தருகிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் திருநெய்த்தானத்தில் உள்ள ராஜகேசரி மகாகாளத்துப் பரமேஸ்வரி கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகள் அனைத்தும் காணி இறை, எச்சோறு, வெட்டி, வேதினை உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்குப்பெறுகிறது என்பதைப் பதிபாதமூலத்தார், தேவகன்மிகள், திருக்கோயிலுடையார்கள் ஆகியோர் உறுதி செய்ததை இக்கல்வெட்டு புலப்படுத்துகிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் ஸ்ரீகாரியம் ஆராயும் பவதாயநக்கனார் அரசனின் திருமுகம் (கடிதம்) கொண்டு வந்துதர, நகரவாரியப் பெருமக்கள் கூடியதையும் நகரவாரியக் கூட்டத்திற்கு வராதோர்க்குத் தண்டம் விதித்துப் பெறப்பட்ட பொன்னால் இறைவனுக்குப் பட்டம் செய்தளிக்கப் பட்டதையும் தெரிவிக்கிறது. இரண்டாம் பகுதி வைகாசி, சித்திரைத் திருவிழாக்களுக்கான கொடையளித்து கவராமொழி மாதவன் என்பான், ஏற்பாடு செய்ததையும் இதற்கான விரிவான செய்திகள் கோயிலில் எங்கெங்கு பொறிக்கப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் பாண்டிய அரசன் மானாபரணனின் [இராஜசிம்மன்] தேவி தேசப்புகழ், இவ்வூர் இறைவனுக்குத் தினமும் உழக்கு நெய்யளித்து ஒரு விளக்கு எரிப்பதற்கு 30 கழஞ்சுப் பொன்னளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. அந்த முப்பது பொன்னைச் சங்கரப்பாடியான் மானாயன் ஆன மாயான் வேம்பன் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புக்கொண்டான். பின்னர் இம்மன்னனின் 16-ஆம் ஆண்டில் இவ்வூர் சங்கரப்பாடியார் (எண்ணெய் வணிகர்) மூவர், ஆளுக்கு 10 கழஞ்சு வீதம் பெற்றுக்கொண்டு இப்பணியினை ஏற்றனர். அதன் பின்னர் (ஆட்சியாண்டு தெரியவில்லை) தாம் பெற்ற பொன்னுக்குப் புணையாக நிலத்தினை ஈடாக்கியதை அடுத்த பகுதி குறிக்கிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் பொய்கை நாட்டுத் திருநெய்த்தானத்து இறைவன் கோயிலில் விளக்கெரிக்க சமரகேசரி தெரிஞ்ச கைகோளரில் மல்லன் அரையனைச் சார்த்தி மற்றொருவன் தானம் அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் கல்வெட்டுப் பெரிதும் சிதைந்தும், முடிவு இன்றியும் உள்ளது. இறைவனுக்குச் சார்த்தத் திருப்பள்ளித்தாமத்(மலர் மாலைகள்)திற்கான மலருக்காகச் செய்யப்பட்ட ஏற்பாட்டினைத் தெரிவிப்பதாகக் கொள்ளலாம்.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் முதலும், முடிவும் இல்லை. கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும், நித்தபுசங்கர், சூலதேவர், ஆதித்தகர முடையார், அமரசுந்தரர், நம்பிராட்டியார் ஆகிய இறைத்திருமேனி களுக்குத் திருவிழாவின் போது செய்யப்பெறும் சிறப்பு வழிபாடு களுக்காகப் பொன்னும், அதனால் பெறப்படும் நெல்லின் அளவுகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் இவ்வூர் இறைவனுக்கு இரண்டு விளக்குகள் எரிப்பதற்காக, பராந்தகப் பல்லவரையன் ஆன நக்கன் அறிஞ்சிகையும் பூன்னூரியாரும் ஆளுக்கு 30 கழஞ்சுப் பொன் அளித்ததையும் அப்பொன் கொண்டு வாங்கிய பத்து மாச் செய்யால் விளக்கெரித்ததும் குறிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் பொய்கை நாட்டிலமைந்த தேவதானம் திருநெய்த்தானத்து இறைவனுக்கு, இரண்டு திருநொந்தா விளக்கெரிக்க, தென்னவன் பிருதிமாராயன் ஆயின கட்டி ஒற்றியூரன் என்பானும், பராந்தக இளங்கோ வேளாரின் மனைவி வரகுணப் பெருமானாரும், ஆளுக்கு 25 பொன் கொடுத்ததைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. கொடைப் பொன் கொண்டு, கோயிலுக்குச் சொந்தமான பத்துசெய் நிலம் புதிதாகக் கல்லி நன்செய்யாக்கப்பட்டு அதன் வழி விளக்கெரிக்கப் பட்டதாகத் தெரிவிக்கிறது. நிலத்தின் எல்லைகளைக் குறிக்குங்கால், விஷ்ணுபடாரர் துடவை எனப்படுதலின் அங்கு ஒரு விஷ்ணு கோயிலிருந்ததும் பெறப்படுகிறது. கரிகாலக்கரை என்ற ஆற்றின் கரையும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் ஆதித்தனின் கோக்கண்டன் என்ற சிறப்புப்பெயரையும் சேர அரசன் தாணுரவியின் பெயரையும் சுட்டும் சிறப்பான கல்வெட்டு இது. ஆதித்தனின் தொண்டை நாட்டு வெற்றியைக் குறிக்கும் கல்வெட்டும் இதுவே. சேர சோழ மன்னர்களால் செம்பியன் தமிழவேள் என்ற பட்டத்தையும், ஆசனம், சாமரை, சிவிகை, திமிலை போன்ற சிறப்புச் சின்னங்களையும் வழங்கப் பெற்றவனான விக்கியண்ணனின் மனைவி கடம்பமாதேவி தில்லைஸ்தான இறைவனுக்கு விளக்கெரிக்க 100 ஆடுகள் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.