1146 results found
தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் வானவன் வாளுவக்கோன் என்பவன் இவ்வூர் இறைவனுக்கு இரவும் பகலும் எரிவதற்குச் சாவா மூவாப் பேராடு தொண்ணூறு கொடுத்த செய்தியும், அதனைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஊரார் ஒப்புக்கொண்ட செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் திருநெய்த்தானத்து இறைவனுக்குத் திங்கள்தோறும் புனர்பூச நாளன்று செய்யப்படும் சிறப்பு வழிபாட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு, கறியமுது, வாழைப்பழம், அடைக்காய், வெற்றிலை போன்ற வற்றுக்கும், கலமிடும் குயவனுக்கும், அமுதுசெய்ய விறகினுக்கும் ஆகும் செலவினுக்காக நிலக்கொடை அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கொடை பெற்ற நிலங்களைக் கோயில் நிர்வாகத்தினரும், நகரத்தாரும், சீகார்யம் செய்வோரும், கோயிலில் பணிபுரிவோருக்குக் காணியாகப் (சீவிதநிலம்) பிரித்துக் கொடுத்துக் கல்வெட்டி உறுதி செய்ததைக் குறிக்கிறது. கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்லை.தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் கொற்றன் அருண்மொழி என்ற வானவன் பேரரையன் என்பவன் இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்கு 25 கழஞ்சுப் பொன் கொடுத்ததையும், அப்பொன்னைப் பெற்றுக்கொண்ட, இவ்வூர்ச் சபையாரும், ஊராரும், தேவகன்மிகளும், நிலத்தை விற்றுக்கொடுத்த செய்தியும் உள்ளது. நிலத்தில் எல்லைகள் கூறப்பட்டுள்ள பகுதியில், நங்கை வரகுணபெருமானார் விளக்கெரிக்கக் கொடுத்த நிலமும் இடம்பெறுகிறது.தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் திருநெய்த்தானத்து இறைவனுக்குத் தொண்ணூற்றாறு ஆடுகளைப் பெற்றுக்கொண்டு தினமும் உழக்கெண்ணெயால் நொந்தா விளக்கொன்றினை எரிக்க இவ்வூர்ச் சபையாரும், ஊராரும் ஒப்புக் கொண்ட செய்தினைத் தெரிவிக்கிறது. தொடக்கப் பகுதிகள் பெரிதும் சிதைந்துவிட்டன.தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் சோழ அரசர், திருநெய்த்தானத்து மகாதேவரான இவ்வூர் இறைவனுக்கு மருத்துவக்குடி என்ற ஊரினை குடிநீக்கிய இறையிலி தேவதானமாகக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. இத்தானத்தின் மூலம், அவ்வூரில் 20 வேலி நிலமளிக்கப்பட்டுள்ளது. அதனின்று வரும் வருவாயாக, மூவாயிரக்கல நெல்லும், பதினெட்டே முக்காலே மும்மாவரைக் கழஞ்சுப் பொன்னும் கோயிலுக்கு அமையும் என்ற செய்தியும் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. இவ்வாணையினை மன்னர் காவிதிப்பாக்கத்தில் இருந்தபோது வழங்கியதாகத் தோன்றுகிறது.தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் திருநெய்த்தானத்து மகாதேவராகிய இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்குத் தொண்ணூற்றாறு ஆடுகள் கொடுத்த செய்தியும், அவற்றைப் பெற்றுக் கொண்ட இவ்வூர் மன்றாடி (இடையன்) ஒருவன்? நாளொன்றுக்கு உழக்கு நெய்யட்ட ஒப்புக்கொண்ட செய்தியும் இக்கல்வெட்டிலுள்ளது.தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன் பத்து எருமைகள் கொடுத்த செய்தியும், இவ்வூர் மன்றாடிகள் பெருமான் வீரனும், பெருமான் கணநும் அதைப் பெற்றுக்கொண்டு தினமும் உழக்கு நெய்யட்டுவதாக ஒத்துக்கொண்ட செய்தியையும் தெரிவிக்கிறது. எருமை பத்தினால் வந்த ஆடு தொண்ணூறு என்ற தொடர் மூலம் கொடையாகக் கொடுக்கப்பட்ட 10 எருமைகள், தொண்ணூறு ஆடுகளாக மாற்றப் பெற்றதும், அவை சமமதிப்புடையதாகக் கருதப்பெற்றதும் தெரிகிறது.தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் இக்கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் கட்டிடத்தினுள் மறைந்துவிட்டன. முதல் துண்டு நிலைவிலை தொடர்பானதாகவும், பிற இறைவனுக்குப் பலர் அளித்த பொன், அவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள் தொடர்பானதாகவும் தெரிகிறது.தஞ்சாவூர்>திருவையாறு>தில்லைஸ்தானம்
தஞ்சாவூர் தில்லைஸ்தானம் இறைவனுக்கு நிலக்கொடை அளிப்பதற்கு மன்னன் ஆணை பிறப்பித்த செய்தியும், இறைவனுக்குச் சபையார் பொன் கொடுத்த செய்தியும் காணப்படுகிறது. இப்பொன்னிலிருந்து ஒரு கழஞ்சு எடையுள்ள விஜையராஜேந்திரன் என்ற பெயரால், இறைவனுக்குப் பட்டம் ஒன்று செய்தளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முதல் ஒன்பது வரிகள் மிகவும் சிதைந்துள்ளன.தஞ்சாவூர்>திருவையாறு>திருப்பூந்துருத்தி
தஞ்சாவூர் கல்வெட்டுத் துண்டுகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட பொன், பொற்பூ போன்ற கொடைகளைக் கல்வெட்டு எடையுடன் குறிப்பிடுகிறது. ஜனவார் கற்பகம் என்ற பெயரில் இறைவனுக்காக நந்தவனம் ஒன்று செய்யப்பட்டதையும் இக்கல்வெட்டுப் புலப்படுத்துகிறது. சூற்றிதேவன், இராஜராஜப்பிடவூர் வேளான் கோவரையன் விஜ்ஜாதிரன் ஆகிய பெயர்கள் குறிக்கப்படுகின்றன. இராஜராஜதேவர் திருவுடம்பு என்ற தொடர் வருகிறது. வேறெந்த விளக்கமும் பெற இயலவில்லை.தஞ்சாவூர்>திருவையாறு>திருப்பூந்துருத்தி
தஞ்சாவூர் ஆர்க்காட்டுக் கூற்றத்து நாநாந்தூரைச் சேர்ந்த நாநாந்தூருடையான் பிசங்கன் கொற்றனாநதேவன் ஆர்க்காட்டு வேளான், திருப்பூந்துருத்தி இறைவன் திருமுன்பு விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு சாவாமூவாப் பேராடுகளை அளித்தான். இதைப் பெற்றுக் கொண்டு எரியூர் நாட்டுக் களக்குடி மன்றாடி கணிச்சன் தெற்றியும் இவனைப் புணையாகக் கொண்ட மன்றாடி துருத்தி சேந்தனும் ஏழு நாழி உரி நெய்யை அளித்தார்கள். அதனைப் பெற்றுக்கொண்டு திருத்துருத்தி சபையார் தேவி சன்னதியில் சாந்தி விழாவிற்கு நொந்தா விளக்கெரித்த செய்தி தெரியவருகிறது. .தஞ்சாவூர்>திருவையாறு>திருப்பூந்துருத்தி
தஞ்சாவூர் பொயிலி மாதேவர்க்கு திருவாபரணம் செய்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட பொற்கொல்லனுக்குக் காணியாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இது அரச ஆணையாகத் தெரிகிறது. நிலத்திற்கு எல்லைகளும், அந்நிலம் இறையிலியாக கொடுக்கப்பட்ட செய்தியையும், பெருங்குறி மகாசபையினரின் ஆணையின்படி ஊர் மத்தியஸ்தன் எழுத்திட்டுக் கொடுத்ததையும் குறிக்கிறது. இக்கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.தஞ்சாவூர்>திருவையாறு>திருப்பூந்துருத்தி
தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி உடையார் கோயிலில் நாயன்மார் புஷ்பவனேஸ்வரர், நாச்சியார், திருவீதிநாச்சியார் மரகதநாச்சியார் ஆகியோரை வணங்கி, கிளியூர் நாட்டுக் கீழ்மாந்தூருடையான் உய்யவந்தான் இராஜராஜன், இந்நாயன்மாருக்கும் நாச்சியாருக்கும் அமுதுபடி வெஞ்சனத்துக்கு இறையிலியாக நிலம் அளித்தது பற்றியும், அகரபிரமதேசங்களால் ஆன சபையார் அந்நிலத்தை முதலடங்கல் இறையிலியாகச் செய்ததையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.தஞ்சாவூர்>பூதலூர்>கோவிலடி
தஞ்சாவூர் திருப்புறத்துறைவார் கோயிலில் காஸ்யபன் திருநீலகண்டன் அழகிய மணவாளபட்ட சோமகிரதுயாஜி என்பவன் இறைவி திருக்காமக் கோட்ட அகிலநாயகியாரை எழுந்தருளுவித்தான். அத்தேவியின் பூஜைக்கும் அமுதுபடி சாத்துப்படிக்கும் மற்றும் திருவிளக்குகள் உள்ளிட்ட அனைத்திற்கும் திருநாமத்துக் காணியாக நிலம் கொடுத்திருக்கின்றான். இந்நிலத்திற்கு எல்லைகளும் அளவுகளும் கூறப்பட்டிருக்கின்றன. திருநாமத்துக் காணியாகப் பூலாஞ்செய், மேலைக் கடவைச் செய், வீரட்டன், காடுகள் ஓடை என்றழைக்கப்பட்ட நிலங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலங்கள் மொத்தம் நாலுமாகாணி முந்திரிகைக் கீழ் மூன்று மாவாகும். இந்நிலங்களைக் கொடுத்த மேற்குறிப்பிட்ட காஸ்யபன் திருநீலகண்டன் அழகியமணவாளபட்ட சோமகிரதுயாஜி என்பவன் இறந்து விடவே (சிவலோக ப்ராப்தி பண்ணின பின்பு), அவனது மகன்கள் (பிள்ளைகள்) நீலகண்ட பட்டனும், இவன் தம்பி நாராயண பட்டனும் களரிக்குடையான் என்று அழைக்கப்பட்ட நிலம் ஒன்றே காலே காணிக்கீழ் மூன்றுமா நிலத்தைத் தங்கள் தந்தை கொடுத்த நிலங்களுடன் சேர்த்துத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்தனர். இந்நிலங்களுக்கும் எல்லைகள் கூறப்பட்டுள்ளன.மேற்குறிப்பிட்ட நிலங்கள் நாச்சியார் திருநாமத்தில் வரிப்பித்துக் கொள்ளவேண்டும் என ஊர்க்கணக்கர்க்கு எழுதின போக்கோலைப்படி வரிப்பித்துக் கொண்டு எதிர் வரும் ஆண்டிற்குள் இந்நிலங்களுக்குக் கடமை, குடிமை போன்ற வரிகள் இறுத்து, மீதியைக் கொண்டு பூஜை, திருப்படி மாற்று, திருவிளக்கு போன்றவைகள் எதுவும் தாழ்வுபடாமல் செலுத்த வேண்டும் என கல்வெட்டு வெட்டிக்கொடுத்தார்கள். இதில் ஊரார் பலரும், பிரமாணம் எழுதின மத்தியஸ்தனும் (கணக்கன்) கையெழுத் திட்டுள்ளனர்.