Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Inscribed on the southern jagati of the central shrine. Parakesari -A. D. 910. Records the gift of 90 sheep to burn a lamp by Vanavan Valuvakkon. Urar accepted to burn the lamp on receiving the sheep. வானவன் வாளுவக்கோன் என்பவன் இவ்வூர் இறைவனுக்கு இரவும் பகலும் எரிவதற்குச் சாவா மூவாப் பேராடு தொண்ணூறு கொடுத்த செய்தியும், அதனைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஊரார் ஒப்புக்கொண்ட செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Engraved on the adhisthtana of the central shrine. 11th C. A. D. (palae) Beginning built in. It records the arrangements made to perform the special worship on the day of punarpusam monthly in this temple. Provisions such as rice,dall, vegetables, banana, betal leaf, araca nut etc. were to be supplied through the land donation. Moreover the lands had been alloted to all those who involved in the responsibility of this worship including potter who supply terrocotta pots, fire wood supplier and others and it was con- firmed by inscribing the record on the walls of the temple. திருநெய்த்தானத்து இறைவனுக்குத் திங்கள்தோறும் புனர்பூச நாளன்று செய்யப்படும் சிறப்பு வழிபாட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு, கறியமுது, வாழைப்பழம், அடைக்காய், வெற்றிலை போன்ற வற்றுக்கும், கலமிடும் குயவனுக்கும், அமுதுசெய்ய விறகினுக்கும் ஆகும் செலவினுக்காக நிலக்கொடை அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கொடை பெற்ற நிலங்களைக் கோயில் நிர்வாகத்தினரும், நகரத்தாரும், சீகார்யம் செய்வோரும், கோயிலில் பணிபுரிவோருக்குக் காணியாகப் (சீவிதநிலம்) பிரித்துக் கொடுத்துக் கல்வெட்டி உறுதி செய்ததைக் குறிக்கிறது. கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்லை.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Engraved on the west wall of the central shrine. Parakesari - 10th C. A. D. It records the gift of 25 kalanju of gold for burning a perpetual lamp by Korran Arumoli alias Vanavan Peraraiyan. The village sabaiyar, urar and devakanmis sold their land after receving the gold. கொற்றன் அருண்மொழி என்ற வானவன் பேரரையன் என்பவன் இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்கு 25 கழஞ்சுப் பொன் கொடுத்ததையும், அப்பொன்னைப் பெற்றுக்கொண்ட, இவ்வூர்ச் சபையாரும், ஊராரும், தேவகன்மிகளும், நிலத்தை விற்றுக்கொடுத்த செய்தியும் உள்ளது. நிலத்தில் எல்லைகள் கூறப்பட்டுள்ள பகுதியில், நங்கை வரகுணபெருமானார் விளக்கெரிக்கக் கொடுத்த நிலமும் இடம்பெறுகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Engraved on the north wall of the central shrine. 10th C. A. D. Seems to record the gift of 96 sheep to burn a perpetual lamp. The urar and sabaiyar accepted to supply one ulakku of ghee daily. திருநெய்த்தானத்து இறைவனுக்குத் தொண்ணூற்றாறு ஆடுகளைப் பெற்றுக்கொண்டு தினமும் உழக்கெண்ணெயால் நொந்தா விளக்கொன்றினை எரிக்க இவ்வூர்ச் சபையாரும், ஊராரும் ஒப்புக் கொண்ட செய்தினைத் தெரிவிக்கிறது. தொடக்கப் பகுதிகள் பெரிதும் சிதைந்துவிட்டன.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Inscribed on the northern kumadam and jagati of the central shrine - Parakesari-10th C. A. D. It records gift of the village Maruttuvakkudi to the temple by the kings as tax-free devadana (Kudinikkiya devadana) which excludes the families working in it. It is mentioned that the income derived from the village would be 3000 kalam of paddy and 1834 kalanju and 31⁄2 ma of gold. சோழ அரசர், திருநெய்த்தானத்து மகாதேவரான இவ்வூர் இறைவனுக்கு மருத்துவக்குடி என்ற ஊரினை குடிநீக்கிய இறையிலி தேவதானமாகக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. இத்தானத்தின் மூலம், அவ்வூரில் 20 வேலி நிலமளிக்கப்பட்டுள்ளது. அதனின்று வரும் வருவாயாக, மூவாயிரக்கல நெல்லும், பதினெட்டே முக்காலே மும்மாவரைக் கழஞ்சுப் பொன்னும் கோயிலுக்கு அமையும் என்ற செய்தியும் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. இவ்வாணையினை மன்னர் காவிதிப்பாக்கத்தில் இருந்தபோது வழங்கியதாகத் தோன்றுகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Engraved on the northern side of adhishtana of the central shrine. Parakesari - A. D. 912. It records the gift of 96 sheep to burn a perpetual lamp. A shepherd took charge of supplying one ulakku of ghee daily on receiving the sheep. திருநெய்த்தானத்து மகாதேவராகிய இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்குத் தொண்ணூற்றாறு ஆடுகள் கொடுத்த செய்தியும், அவற்றைப் பெற்றுக் கொண்ட இவ்வூர் மன்றாடி (இடையன்) ஒருவன்? நாளொன்றுக்கு உழக்கு நெய்யட்ட ஒப்புக்கொண்ட செய்தியும் இக்கல்வெட்டிலுள்ளது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Engraved on the pillar in the mahamandapa - Parakesari - 10th C. A. D. Records the gift of 10 buffalos to burn a perpetual lamp by Maduranthakan Gandaratittan. Peruman Viran and Peruman Ganan, two shepherds of that village on receiving them accepted to supply one ulakku of ghee daily. 10 buffalos were considered equal to 90 sheep. இவ்வூர் இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன் பத்து எருமைகள் கொடுத்த செய்தியும், இவ்வூர் மன்றாடிகள் பெருமான் வீரனும், பெருமான் கணநும் அதைப் பெற்றுக்கொண்டு தினமும் உழக்கு நெய்யட்டுவதாக ஒத்துக்கொண்ட செய்தியையும் தெரிவிக்கிறது. எருமை பத்தினால் வந்த ஆடு தொண்ணூறு என்ற தொடர் மூலம் கொடையாகக் கொடுக்கப்பட்ட 10 எருமைகள், தொண்ணூறு ஆடுகளாக மாற்றப் பெற்றதும், அவை சமமதிப்புடையதாகக் கருதப்பெற்றதும் தெரிகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Engraved on the same palace - 10th C. A. D. (palae) Beginning and end of each line built into the wall. Fragmentary. இக்கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் கட்டிடத்தினுள் மறைந்துவிட்டன. முதல் துண்டு நிலைவிலை தொடர்பானதாகவும், பிற இறைவனுக்குப் பலர் அளித்த பொன், அவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள் தொடர்பானதாகவும் தெரிகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>தில்லைஸ்தானம்
Inscribed on the north wall of the mahamandapa - Rajaraja-II, A. D. 12th C. First nine lines are badly damaged. This is the record of royal order to donate land. It also records the gift of gold diadom in the name of Vijayarajendran weighing one kalanju. தில்லைஸ்தானம் இறைவனுக்கு நிலக்கொடை அளிப்பதற்கு மன்னன் ஆணை பிறப்பித்த செய்தியும், இறைவனுக்குச் சபையார் பொன் கொடுத்த செய்தியும் காணப்படுகிறது. இப்பொன்னிலிருந்து ஒரு கழஞ்சு எடையுள்ள விஜையராஜேந்திரன் என்ற பெயரால், இறைவனுக்குப் பட்டம் ஒன்று செய்தளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முதல் ஒன்பது வரிகள் மிகவும் சிதைந்துள்ளன.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திருப்பூந்துருத்தி
Inscribed on the same place. 11th C. A. D. (palae) Fragmentry. The weights of golden flowers; the image of Rajaraja? a flower garden named as Janavar Karpakam could be ascertained. கல்வெட்டுத் துண்டுகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட பொன், பொற்பூ போன்ற கொடைகளைக் கல்வெட்டு எடையுடன் குறிப்பிடுகிறது. ஜனவார் கற்பகம் என்ற பெயரில் இறைவனுக்காக நந்தவனம் ஒன்று செய்யப்பட்டதையும் இக்கல்வெட்டுப் புலப்படுத்துகிறது. சூற்றிதேவன், இராஜராஜப்பிடவூர் வேளான் கோவரையன் விஜ்ஜாதிரன் ஆகிய பெயர்கள் குறிக்கப்படுகின்றன. இராஜராஜதேவர் திருவுடம்பு என்ற தொடர் வருகிறது. வேறெந்த விளக்கமும் பெற இயலவில்லை.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திருப்பூந்துருத்தி
Inscribed on the north wall of the central shrine of the same temple. Parakesari - 10th C. A. D. Records the gift of 96 sheep by Nanandurudaiyan Pisangan korran alias Arkattuvelan. The sheep entrusted with the shepherd (manradi) Kaniachan Terri and Turuthi Sendan and they obliged to remit seven nali and one uri of ghee. The lamp made to burn before Goddess in the shanti festival. ஆர்க்காட்டுக் கூற்றத்து நாநாந்தூரைச் சேர்ந்த நாநாந்தூருடையான் பிசங்கன் கொற்றனாநதேவன் ஆர்க்காட்டு வேளான், திருப்பூந்துருத்தி இறைவன் திருமுன்பு விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு சாவாமூவாப் பேராடுகளை அளித்தான். இதைப் பெற்றுக் கொண்டு எரியூர் நாட்டுக் களக்குடி மன்றாடி கணிச்சன் தெற்றியும் இவனைப் புணையாகக் கொண்ட மன்றாடி துருத்தி சேந்தனும் ஏழு நாழி உரி நெய்யை அளித்தார்கள். அதனைப் பெற்றுக்கொண்டு திருத்துருத்தி சபையார் தேவி சன்னதியில் சாந்தி விழாவிற்கு நொந்தா விளக்கெரித்த செய்தி தெரியவருகிறது. .
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திருப்பூந்துருத்தி
Engraved on the patti of northern side of the central shrine of the same temple. Kulottunga III. A. D. 1204. It records the allotment of land to the Gold- smith who made ornaments for Poyyilimahadever, the God of this temple. The boundaries of the given land are mentioned and it is told that the land had been made tax free by perunguri mahababha. பொயிலி மாதேவர்க்கு திருவாபரணம் செய்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட பொற்கொல்லனுக்குக் காணியாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இது அரச ஆணையாகத் தெரிகிறது. நிலத்திற்கு எல்லைகளும், அந்நிலம் இறையிலியாக கொடுக்கப்பட்ட செய்தியையும், பெருங்குறி மகாசபையினரின் ஆணையின்படி ஊர் மத்தியஸ்தன் எழுத்திட்டுக் கொடுத்ததையும் குறிக்கிறது. இக்கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திருப்பூந்துருத்தி
Engraved on the north wall of prakara - Sadaiyavarman Sundara Pandya, A. D. 1256. Records the gift of land for providing the sacred food to the Gods and Godesses by Uyyavandan Rajarajan of Kilmandur in Kiliyurnadu. The land was made tax free by the Sabaiyar of Agarabrahmadesam. திருப்பூந்துருத்தி உடையார் கோயிலில் நாயன்மார் புஷ்பவனேஸ்வரர், நாச்சியார், திருவீதிநாச்சியார் மரகதநாச்சியார் ஆகியோரை வணங்கி, கிளியூர் நாட்டுக் கீழ்மாந்தூருடையான் உய்யவந்தான் இராஜராஜன், இந்நாயன்மாருக்கும் நாச்சியாருக்கும் அமுதுபடி வெஞ்சனத்துக்கு இறையிலியாக நிலம் அளித்தது பற்றியும், அகரபிரமதேசங்களால் ஆன சபையார் அந்நிலத்தை முதலடங்கல் இறையிலியாகச் செய்ததையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>கோவிலடி
Rajaraja III - 1246 C. A. D. It records the donation of land to Tirukkamakkotta Akilanayaki who was consecrated in the temple of Tiruppuratturaivar by Kasyapan Tirunilakanda Alagiya Manavala bhatta as Tirunamattukkani by which the sacred services (pujai), food etc., to be provided. The descrip- tion of land and measurements are recorded in detail. After the donar s de- mise (Sivaloka prapti panninapinbu) two of his sons made more land do- nation to the same goddess as tirunamattukkani. It is instructed that all the lands should be entered in the name of the goddess according to pokkolai and the taxes to be remitted. The excess yield to be utilised for the expences for maintenance. திருப்புறத்துறைவார் கோயிலில் காஸ்யபன் திருநீலகண்டன் அழகிய மணவாளபட்ட சோமகிரதுயாஜி என்பவன் இறைவி திருக்காமக் கோட்ட அகிலநாயகியாரை எழுந்தருளுவித்தான். அத்தேவியின் பூஜைக்கும் அமுதுபடி சாத்துப்படிக்கும் மற்றும் திருவிளக்குகள் உள்ளிட்ட அனைத்திற்கும் திருநாமத்துக் காணியாக நிலம் கொடுத்திருக்கின்றான். இந்நிலத்திற்கு எல்லைகளும் அளவுகளும் கூறப்பட்டிருக்கின்றன. திருநாமத்துக் காணியாகப் பூலாஞ்செய், மேலைக் கடவைச் செய், வீரட்டன், காடுகள் ஓடை என்றழைக்கப்பட்ட நிலங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலங்கள் மொத்தம் நாலுமாகாணி முந்திரிகைக் கீழ் மூன்று மாவாகும். இந்நிலங்களைக் கொடுத்த மேற்குறிப்பிட்ட காஸ்யபன் திருநீலகண்டன் அழகியமணவாளபட்ட சோமகிரதுயாஜி என்பவன் இறந்து விடவே (சிவலோக ப்ராப்தி பண்ணின பின்பு), அவனது மகன்கள் (பிள்ளைகள்) நீலகண்ட பட்டனும், இவன் தம்பி நாராயண பட்டனும் களரிக்குடையான் என்று அழைக்கப்பட்ட நிலம் ஒன்றே காலே காணிக்கீழ் மூன்றுமா நிலத்தைத் தங்கள் தந்தை கொடுத்த நிலங்களுடன் சேர்த்துத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்தனர். இந்நிலங்களுக்கும் எல்லைகள் கூறப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட நிலங்கள் நாச்சியார் திருநாமத்தில் வரிப்பித்துக் கொள்ளவேண்டும் என ஊர்க்கணக்கர்க்கு எழுதின போக்கோலைப்படி வரிப்பித்துக் கொண்டு எதிர் வரும் ஆண்டிற்குள் இந்நிலங்களுக்குக் கடமை, குடிமை போன்ற வரிகள் இறுத்து, மீதியைக் கொண்டு பூஜை, திருப்படி மாற்று, திருவிளக்கு போன்றவைகள் எதுவும் தாழ்வுபடாமல் செலுத்த வேண்டும் என கல்வெட்டு வெட்டிக்கொடுத்தார்கள். இதில் ஊரார் பலரும், பிரமாணம் எழுதின மத்தியஸ்தனும் (கணக்கன்) கையெழுத் திட்டுள்ளனர்.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>கோவிலடி
On the south wall of the mandapa - Vikrama Chola A. D. 1129. This is the record of tax-freeing of land without receiving any money as lump-sum. (kasukolla iraiyili). It is said that the land measured 500 sinnam has been donated by Kavisiyan Srivasudevar Sridara bhattarar as a gratitude to God for the fulfillment of his desire. Tax free was granted by the perunguri mahasabaiyar of Thirupper, because the donar has done some goodness to the community, while in distress. விக்கிரமசோழன் காலத்தில் ஏதோவொரு குழப்பத்தால், (காலம் பொல்லாததாகி) ஊரும் அழிந்து, குடிகளும் ஊரைவிட்டு வெளியேறி ஊரழியும் நிலையேற்பட, திருப்பேர் பெருங்குறி மகாசபையார் பெருமாளிடம் முறையிட, கவிசியன் ஸ்ரீவாசுதேவன் ஸ்ரீதரபட்டரான மதுராந்தக பிரம்மாதிராயர் என்பார் இவ்வூரைக் காத்தார். பின்னர் அவர் நினைத்த காரியம் நிறைவேறியமைக்காகத் தமது காணியான 500 சிந்ந நிலத்தினைத் திருப்படி மாற்றுக்காகக் கொடையாக அளித்தார். முன்னர் அவர் ஊருக்குச் செய்த நன்மையினை கருத்தில் கொண்டு இந்நிலத்தினைக் காசுகொள்ளா இறையிலியாக்கித்தர திருப்பேர் பெருங்குறி மகாசபையார் முடிவுச் செய்ததைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>கோவிலடி
On the north wall of the mandapa - Jatavarman Sundara Pandya - 13th C. A. D. Records the sale deed of land executed by Araiyan Tirukkattupalli Udaiyar alias Solavadarayar, a land lord of Sirrarkadu in Arkattukkurram, Araiyan Tirumalapadi Udaiyar alias Tennavatarayar, lord of Iraiyur, Araiyan Ponnar Menian of Sirrarkadu with Adichandesvara of Tiruppurathuraivay temple. The measure- ments of lands, the witnesses are all detailed in the record. இக்கல்வெட்டு திருப்புறத்துறைவாய்க் கோயில் ஆதிசண்டோவர தேவர்க்கு ஆற்காட்டுக் கூற்றத்துச் சிற்றாற்காடு கிழான் அரையன் திருக்காட்டுப்பள்ளி உடையாரான சோழவதரையர், இரையூர்க் கிழவன் அரையன் திருமழபாடி உடையாரான தென்னவதரையர், சிற்றாற்காடு கிழான் அரையன் பொன்னார்மேனியன் ஆகிய மூவரும் இறையிலியாக நிலத்தினை விற்றுக் கொடுத்த நில விலைப் பிரமாண இசைவுதீட்டு. அவர்கள் விற்றுக் கொடுத்த நிலத்தின் அளவு, சாட்சிக் கையெழுத்திட்டோர் பற்றியும் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>பெரும்புலியூர்
Fragmentary - 10th C. A. D palaeography - from these we can infer that the original temple belonged to 10th c. and the deity was named as Perumpuliyur Mahadeva. 10-ஆம் நூற்றாண்டில் இவ்வூர்க் கோயில் இருந்ததும், இறைவன் பெரும்புலியூர் மகாதேவரென அழைக்கப்பட்டதும் தெரிய வருகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
On the same place - Rājarājachōla III - 5th regnal year - 1221 A. D. Badly damaged. Seems to refer the gift of land as Thirunāmattukkāņi to the deity of the temple and the temple servants. Details are lost. மிகவும் சிதைந்த துண்டுக் கல்வெட்டுகள். இக்கோயில் இறைவனுக்கும் பணியாளர்களுக்கும் திருநாமத்துக்காணியாக நிலமளித்த செய்தி கூறப்படுவதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
On the left side of the Eastern entrance of the Mahamandapā of the same temple - 12th century A. D. Paleography. Damaged bit inscription. Seems to refer the details of gold for making ornaments to the deity of the temple. சிதைந்த துண்டுக் கல்வெட்டு. நூற்று ஒரு கழஞ்சு மூன்று மஞ்சாடி பொன் பற்றி கூறப்பட்டுள்ளது. இறைவனுக்கு திருவாபரணம் செய்வது தொடர்பான செய்தியைக் கூறுவனவாக இருத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
On the North-wall of the same mandapā in the same temple. Kulottunga chōla III 25th regnal year 1203 A. D. Damaged and the last few lines are lost. Registers a gift of land by two individuals for providing food-offerings and burning lamp to the deity Dēvakanāyakar, sep up in the temple by Dēvakanāyakan Rājarājadēvan alias Chōlendrasinga Pichchan at Sivapādasekhara mangalam. அருமொழிதேவன் அகமுடையாந் மனைவி உடையநாச்சி என்பவள் திருவிளக்கு எரிப்பதற்கும் திருவமுது படைப்பதற்கும் அரையே இரண்டுமா நிலம் தானமாக அளித்த செய்தியும், இவ்வூர் தேவனாயகன் இராசராச தேவனான சோளேந்திரசிங்கபிச்சன் என்பவன் உடையார் தேவகனாயகர் என்ற இறைவனை எழுந்தருளுவித்த செய்தியும் கூறப்பட்டுள்ளன. அந்த இறைவனுக்கு அவரும் மேலும் ஒருவரும் தானமாக நிலமளித்திருக்க வேண்டும். இறுதிப்பகுதி சிதைந்து விட்டதால் அதனை அறிந்துகொள்ள இயலவில்லை.