1128 results found
தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
On the left wall of the East side of Mahamandapa of the same temple Kulōttunga chōla III 22nd regnal year - 1200 A. D. Damaged. Registers a newly prepared doccument for the house-sites and lands to the temple by Nāgadevan Thiruchchirrambalamuḍaiyan, a tapasvi of Sri Sivapādasēkharamangalam, a Mahēsvarasthānam, in Thirunaraiyūr-nādu, a sub-division of Arumolideva-valanādu, instead of the old document given by his father Kulōttunga chōla pichchan earlier, which had been lost, due to some reasons. அருமொழிதேவ வளநாட்டு, திருநறையூர் நாட்டு ஸ்ரீமாகேஸ்வரத்தானம் சீசிவபாதசேகரமங்கலத்து தபஸி திருச்சிற்றம்பலமுடையான் இராரா தேவநாந இராசேந்திரசிங்க பிச்சன் என்பவன் தனது தந்தை குலோத்துங்க சோழப் பிச்சர் முன்னரே எழுதிக் கொடுத்திருந்த ஒரு பிரமாணப் பத்திரம் தொடர்பாக மீண்டும் புனப் பிரமாணம் என்ற பெயரில் [மீண்டும் எழுதுகிற பிரமாணப்பத்திரம்) புதிய பிரமாணப்பத்திரம் பண்ணிக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எழுதிக்கொடுத்த பத்திரம் [சாதனம்] ஏதோ காரணத்தினால் இல்லாது போய்விட்டதால் மீண்டும் அவரது மகனால் எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பத்திரம் கோயில் திருமுற்றம், சிவபிராமணர்க்கு மனைக்குடியிருப்பு, இறைவனுக்கு திருவமுது, திருவிளக்கு தொடர்பாக கொடுத்த நத்தம், விளைநிலம் தொடர்பானது எனத் தெரிகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
On the same place - 12th-13th century A. D. Palaeography. Damaged. King s name lost. Seems to the gift of land as Jivitham to somebody and the Goddess of Tirukkāmakkōttamuḍaiya [nachchiyār] in the temple, according to the royal order of the king. மிகவும் சிதைந்த கல்வெட்டு. மன்னனின் பெயர் சிதைந்துள்ளது. ஜீவிதமாக நிலமளித்த செய்தியும், திருக்காமக் கோட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னனது ஆணையின்படி திருக்காமக்கோட்டமுடைய இறைவிக்கு நிவந்தம் அளிக்கப்பட்டிருக்கலாம்.தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
On the same place - Kulōttunga chōla III - 25th regnal year - 1203 A. D. Badly damaged. Seems to state that a gift of land for food- offerings to the deity of the temple. கல்வெட்டு சீராக இல்லாமல் கற்கள் ஆங்காங்கே மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு வேண்டிய திருவமுது படைப்பதற்காக நிலம் நிவந்தமளித்த செய்தியைக் கூறுவதாக இருத்தல் வேண்டும்.தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
On the same place 11th 12th century A. D. Palaeography. Badly damaged. Seems to state that the gift of land to the deity, consecreated in the temple, after purchased it from many persons. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இறைவனை பிரதிட்டை பண்ணி, பலரிடத்திலும் நிலம் விலைக்கு வாங்கி கொடையளித்த செய்தியைக் கூறுவனவாக இருக்கலாம்.தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
On the same place - Kulōttunga chōla III? - 9th regnal year - 1187 Badly damaged. records a gift of land to the food-offerings to the deity. Mentions the lands given to the temple in the days of Periya nāyaṇār Rājādhirāja(dēva). கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. மாகேஸ்வரத்தானமாகிய சிவபாதசேகரமங்கலத்து தபஸி தில்லைக் கூத்தனான ஈசான சிவ.... என்பவன் இக்கோயில் இறைவனுக்கு அமுது படைப்பதற்காக நிலக்கொடையளித்த செய்தியைக் கூறுவதாகத் தெரிகிறது. பெரிய நாயனார் ராஜாதிராஜதேவர் காலத்தில் அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. மிகவும் சிதைந்துள்ளதால் முழு செய்தியையும் அறியமுடியவில்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>மருத்துவக்குடி
Kulōttunga chōla I - [31]st regnal year - [1101] A. D. Seems to be a gift of land for providing worship and Abhisekha etc., to the deity of the temple Thiruvidaikkulamuḍaiyār in Anaichchūl. Damaged record. திருவிடைக்குளமுடைய மகாதேவர்க் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட கொடை பற்றித் தெரிவிக்கிறது. இறைவனுக்கு அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நிகழ்த்துவதற்கு இக்கொடை அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.தஞ்சாவூர்>கும்பகோணம்>மருத்துவக்குடி
Rājarāja III - 21st regnal year 1237 A. D. Records the gift of land as Thirunamattukkāņi seperated from some chatūrvēdimangalams and it was made as tax-free devadāna land from the 21st regnal year of the king Periyadevar Tribhuvanavīradēva [Kulōttunga chōla III] the predecessor, according to the order of the king. இருவேறு சதுர்வேதி மங்கலங்களிலிருந்து சில நிலங்களைப் பிரித்து செம்பியன் நெற்குப்பை என்ற பெயரில் திருநாமத்துக்காணியாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இம்மன்னனின் 21-ஆவது ஆட்சியாண்டு முதல் அந்நிலம் தேவதான இறையிலியாக்கப்பட்டது. மேலும் இம்மன்னனுக்கு முன்னர் ஆண்ட பெரிய தேவர் திரிபுவந தேவரின் 40-வது ஆட்சியாண்டு வரை உள்ள காலத்திற்கு வரிக்கணக்கிட்டு வசூலிக்கப்படவேண்டும் என்றும் ஆணையிட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>மருத்துவக்குடி
Rājarāja III - 21st regnal year - 1237 A. D. Registers the gift of tax- free dēvadāna land and the collection of 476 Kalam of paddy which was a due of Andharaya (tax) up to the 40th regnal year of the Tribhuvanavīradēva (Kulōttunga III), as it is mentioned in the inscriptions of No. 1 and 2. Revenue officials have signed in it. ஆனைச்சூழ் திருவிடைக்குளமுடையார்க்கு கல்வெட்டு எண் 1-2ல் போன்று தேவதான இறையிலியாக சில நிலங்கள் கொடுக்கப்பட்ட செய்தியும், திரிபுவன வீரதேவரின் (மூன்றாம் குலோத்துங்கன்) 40-ஆவது ஆட்சியாண்டு வரை தண்ட திருவாய்மொழிந்தருளியதால் (ஆணைப் பிறப்பித்ததால்] நானூற்று எழுபத்தாறு கல நெல் அந்தராயமாக வசூலிக்கப்பட்ட செய்தியும் புரவுவரி [வருவாய்த்துறை] அதிகாரிகள் பலரும் பிற அதிகாரிகள் சிலரும் கையெழுத்திட்டுள்ள செய்தியும் கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>மருத்துவக்குடி
Rājarāja III - 21st regnal year -1237 A. D. Registers the royal order of the king for making the gift of lands seperated from some chatūrvēdimangalams as dēvadāna with tax-free to meet out some expenditure to the temple of Thiruvidaikkulamuḍaiyār at Anaichchul through the royal officer Minavan Mūvēnda Vēlār. It is known from the ARE that it belongs to the period of Rājarāja III. ஆனைச்சூழ் உடையார் திருவிடைக்குளமுடையார்க்கு தேவதான இறையிலியாக சில நிலங்கள் கொடுக்கப்பட்டன. அந்நிலங்கள் சில சதுர்வேதி மங்கலங்களோடு சேர்ந்திருந்த நிலங்களில் இருந்து பிரிக்கப் பட்டவையாகும். இந்த நிலத்திற்கு அந்தராயம் போன்ற காணிக்கடன் செலுத்துவதற்கும் வேலி ஒன்றுக்குப் பதின்கலம் நெல்லு தரப்பட்டிருந்தது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருத்தல் வேண்டும் என இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கைத் தெரிவிக்கிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>மருத்துவக்குடி
Rajarajachōla III - 21st regnal year 1237 A. D. Records the royal order of the king to the revenue officers to grant of some taxes on the gifted lands which were seperated from some chatūrvēdi- mangalams. The royal officer Minavan Müvēnda Vēļān executed by issuing the order. ஆனைச்சூழ் உடையார் திருவிடைக்குளமுடையார்க்கு வேண்டும் நிவந்தங்களுக்காக பல சதுர்வேதி மங்கலங்களிலிருந்து சில பகுதிகளை எடுத்து மொத்தம் பதினொன் ஆறுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே மாகாணிநிலம் 21-ஆவது பசான முதல் தேவதான இறையிலியாக, இந்நிலத்திற்கு இறை கட்டுவதற்குச் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. இந்நிவந்தத்தை வரியிலாரும் வரிக்கூறு செய்வார்களும் எழுத, திருமந்திர ஓலை மீனவன் மூவேந்த வேளான் நிவந்தம் பண்ணுக என்று மன்னனின் ஆணையை நிறைவேற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
Kulōttunga chōla I - 40th regnal year 1110 A. D. Fragment. Begins with the introduction Pugalmādhu Vilanga etc., Records a gift of land after being refined it, which was lying waste, for the Oil-bath of the deity in the temple of Thirunagisvara-muḍaiyär. ஒவ்வொரு வரியிலும் இறுதியில் சில சொற்கள் சிதைந்துள்ளன. இறுதியில் சில வரிகள் காணப்படவில்லை. திருநாகீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு எண்ணைக்காப்பு சாத்துவதற்காக பாழாய் கிடந்த நிலம் திருத்தித்தரப்பட்ட செய்தியைக் கூறுவனவாக இருத்தல் வேண்டும்.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
Rājēndrachōla - 32nd regnal year [1044] A. D. Built in at the right end. Records a gift of land to the Thirunāgisvaramuḍaiyār temple at Kuḍamukku in Pambūr-nāḍu, a sub-division of Uyyakkoṇḍār- valanādu by Nārakkan Krishnan Rāman of Keralanthaka chaturvēdi- mangalam in Vennṇādu, of the same Valanādu. Two other gifts are also mentioned which seems to made in 32nd and and 24th regnal years of the king. Mentions a name of currency as Rājēndrachōlan - Kasu, which might have used at the present transaction. இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு குடமூக்கிலுள்ள திருநாகீசுரமுடைய மகாதேவர் கோயிலுக்கு அதே வளநாட்டு வெண்ணாட்டு கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து நாரக்கண் கிருஷ்ணன் ராமன் என்ற அதிகாரி நிலக்கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.* மேலும் அரசியார் ஒருவர் இக்கோயில் இறைவனுக்கு தினந்தோறும் தும்பைப்பூ திருப்பள்ளித்தாமம் சாத்துவதற்கு நிலக்கொடையளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இவர் முதலாம் ராஜாதிராஜசோழனின் அரசியாராக இருத்தல் வேண்டும்.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
Rājēndrachōla II - 2nd regnal year 1054 A. D. Records that the assembly (Mula-parudaiyar) of Tirukkuḍamukkil received 100 Kasu from Manikkan Māvali alias Vikkiramasinga Pallavarian, a native of Marudam in Venkunra-kōṭṭam, a sub-division of Jayangondachola- mandalam. This money was utilised by them for repairing the damages caused by floods to the irrigation channel. Interests at the rate of 1 Kalam of paddy on each Kasu was set apart for providing offerings in the temple of Thirunagisvaramuḍaiyār and for expounding the Sivadharmam in the assembly hall called Tiruchchirrambala- muḍaiyār built in the temple by the above mentioned Vikkiramasinga- Pallavaraiyan.ARE 214/1911 is given here. இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதம் என்ற ஊரைச் சேர்ந்த மாணிக்கன் மாவலியாகிய விக்கிரமசிங்க பல்லவரையன் 100 காசுகளை திருகுடமூக்கு மூலபருடை சபையாரிடம் அளித்து, வெள்ளத்தால் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுகின்ற போது அதை சரிப்படுத்துவதற்கும், இறைவனுக்கு திருவமிர்து படைக்கவும், அக்கோயிலில் உள்ள திருச்சிற்றம்பலமுடையான் என்ற மண்டபத்தில் சிவதர்மம் வாசிக்கவும் ஏற்பாடு செய்தமைத் தெரியவருகிறது. அக்காசுகள் 100-க்கும் 1 காசுக்கு ஒரு கலம் நெல் வீதம் வட்டி வசூலிக்கப் பட்டு அதிலிருந்து மேற்கூறிய செலவினங்களுக்குப் பயன்படுத்தப் பட்டமையும் கூறப்பட்டுள்ளது.*