1146 results found
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் தென்கரை பிரம்மதேயம் பழைய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார், இவ்வூர்க் கோயிலுக்கு அர்த்தசாம வழிபாட்டின்போது திருவமுது படைப்பதற்காக இறையிலியுடன் கூடிய நிலக்கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரியிலும் பிற்பகுதி காணப்படவில்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் இவ்வூர் மகாசபையார் இவ்வூரிலுள்ள கற்கடகஈஸ்வரத்துப் பெருமாள் கோயிலுக்கு இறையிலியாக நில விற்பனை செய்த தகவல் கூறப்பட்டுள்ளது. நிலத்திற்கு எல்லைகள் கூறும்போது மகாமாத்திரர் நிலம், சித்திரகூடத்து தேவர் நிலம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் கல்வெட்டு சிதைந்துள்ளது. இறைவனுக்கு மூன்று சந்தியும் திருவமுது படைப்பதற்காக நிலக்கொடை வழங்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டு புலப்படுத்துகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் கல்வெட்டு சிதைந்துள்ளது. பெருங்குறிப் பெருமக்கள் 20 ஈழக் காசுகளைப் பெற்றுக் கொண்டு இறைநீக்கிக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளது. இறுதி வரிகள் சில காணப்பட வில்லை. செற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயம் நாலூர் நம்பிமார் உள்ளிட்ட மஹாசபையோராகிய பெருங்குறி பெருமக்கள் அவ்வூர் சம்பரேஸ்வரம் என்ற கோயிலின் சக்திமுற்றம் என்ற பகுதியில் கூடியிருந்து எடுத்த முடிவு பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவ்வூர் பிரமதேயத்தில் பங்கு பெற்றிருந்த சிலர் பல காலமாக தங்கள் நிலத்திற்கு வரி செலுத்தாதிருந்தனர். ஆனால் அந்த வரியை சபையே செலுத்தி வந்தது. இவ்வாறு பல ராஜாக்கள் காலம் வரை தொடர்ந்ததால் அந்நிலத்தை ஞானபரமேஸ்வரர் கோயில் சந்திரசேகர பெருமாளுக்கு திருவமிர்து படைப்பதற்காக திருவமிர்து புறமாக சபையோரே இறையிலியாக விற்றுக் கொடுப்பதென முடிவெடுத்துச் செயல்பட்டதைக் கூறுகிறது இக்கல்வெட்டு.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் இவ்வூர் திருநாராயண விண்ணகர் இறைவன் ஸ்ரீ ராகவதேவர்க்கு திருவமுதுபுறமாகவும், இவ்வூர் சிவன் கோயிலுக்கு சநி எண்ணைக் காப்புக்கும், திருவமுதுக்கும், திருநந்தாவனத்துக்கும் நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. ஸ்ரீசிம்மவிஷ்ணுவதி, சூரியதேவர்வதி, ராஜராஜன் வாய்க்கால் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்கு தினமும் உழக்கு நெய்யால் நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு பல்லவப் பேரரையர் வீரசிகாமணிப் பல்லவரையன் 90 ஆடுகள் கொடையளித்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்கு தினமும் உழக்கு நெய்யால் நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு இருமடி சோழ அணுக்கரில் சாம நாயகன் தேவன் என்பவன் 90 ஆடுகள் கொடையளித்ததைக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் திருப்புறம்பியமுடையார்க் கோயிலின் பண்டாரத்தினை அரசு உயர் அதிகாரியான வானவன் மூவேந்த வேளான் ஆய்வு செய்து பின்னர், அரசனின் இரண்டாம் ஆண்டு முதல் ஒன்பதாவது ஆண்டுவரை முதலாக வந்து சேர்ந்திருந்த பொன்னில் செலவு போக மீதியிருந்த பொன்னைக் கொண்டு, இறைவனுக்குச் சில ஆபரணங்களைச் செய்தளிக்க உத்தரவிட்டதை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. மூன்று பட்டம், ஒரு பொற்பூ, தண்ணீரமுது செய்ய ஒரு வெள்ளி வட்டில் ஆகியவை செய்தளிக்கப்பட்ட பொருட்களாகும். அப்பொருட்களின் எடையும் குறிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் கோயிலில் பணிபுரியும் கணக்குக் காணியுடையார்கள் சிலர் கோயிற் பணத்தைத் தமது சொந்தப் பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயிலில் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார்க்கும், அஷ்ட பரிவார தேவர்களுக்கும் இறைவனுக்கும் தனித்தனியே கணக்குக் காணியுடையார்கள் இருந்தனரென்பது தெரிகிறது. இவர்கள் தம் நிலங்களைச் சண்டேஸ்வரப் பெருவிலைக்கு விற்றுப் பண்டாரத்தில் செலுத்தியுள்ளனர். 40, 000 காசுகளை இவ்வாறு கொடுத்ததற்கான நிலவிலை ஆவணம் இது. இடையிடையே கல்வெட்டு பெரிதும் சிதைந்துள்ளது-தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் திருப்புறம்பியத்து இறைவனுக்கு, நொந்தாவிளக்கு ஒன்று எரிக்க வகை செய்ததை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. முதலிலும், இடையிடையேயும் சிதைந்துவிட்டது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் திருப்புறம்பியம் இறைவனுக்குத் திருப்பள்ளித்தாமம் சாத்துவதற்குக் களக்குடியுடையான் வேளான் என்பவர் கொடையளித்ததைக் குறிக்கிறது. கல்வெட்டு இடையிடையே சிதைந்திருப்பதால் முழுமையாக அறிய இயலவில்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் திருப்புறம்பியமுடையார்க் கோயிலில் எட்டுப் பரிவார தேவர்களை எழுந்தருளச் செய்து அத்தேவர்களுக்குத் திருவிளக்காகிய சந்தி விளக்கு எரிப்பதற்குப் பத்துமாப்பத்து பொன் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தராயம் பிடலிகை போன்ற வரிகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டிருந்தன. பத்துமாப் பொன்னால் வரும் வருமானம் மட்டும் கொண்டு விளக்கெரிக்க வேண்டும் என்றும் அதற்கு மேற்பட்டதை இறைவன் பண்டாரத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்குத் திருநொந்தாவிளக்கு ஒன்றினை தினமும் உழக்கு நெய்யால் எரிப்பதற்கு நாட்டு மன்றாடிகள் முப்பது ஆடுகள் அளித்த செய்தியையும், அவ்வாடுகளைப் பராமரித்து நெய்யளக்கும் பொறுப்பை மறப்பகை என்பவர் ஏற்றுக்கொண்ட செய்தியையும் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்கு திருநொந்தாவிளக்கு ஒன்றினை தினமும் உழக்கு நெய்யால் எரிப்பதற்கு நாட்டு மன்றாடிகள் முப்பது ஆடு ஆடுகள் கொடையளித்த செய்தியையும், அவ்வாடுகளைப் பராமரித்து நெய்யளக்கும் பொறுப்பினை தழையன் மாதேவன் என்பவன் ஏற்றுக்கொண்ட செய்தியையும் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் கண்டன் மாதேவி என்பவர் திருப்புறம்பியத்து இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிக்க, கொற்றங்குடி என்ற ஊரில் நிலம் அளித்ததைக் குறிக்கிறது. கல்வெட்டின் முற்பகுதி காணக்கிடைக்கவில்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
தஞ்சாவூர் இவ்வூர் கோயில் இறைவனை திருமஞ்சன நீராட்டுச் செய்ய உத்தம சோழ தேவர்க்காக அவரது தாயார் செம்பியன் மாதேவியார் வெள்ளிக்கலசம் ஒன்று அளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அதன் எடை மூன்று விதங்களில் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகக் காணப்படுகிறது.1. பொதுவான நிறை : நூற்று நாற்பத்து முக்கழஞ்சே முக்காலே இரண்டு மஞ்சாடி
2. விரையாக்கலி என்னும் : பதின்மூன்றே மூன் .... பலம் பதின் கழஞ்சே துலாக்கோலால் நிறை கால்
3. இவ்வூர்க்கல்லால் நிறை : நூற்று நாற்பதின் கழஞ்சு முக்காலே மூன்று மஞ்சாடி