Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
On the West wall of the central-shrine in the same temple. Rājakēsarivarman - 7th regnal year. Registers the gift of land as tax- free for the food-offerings to the deity at the mid-night service of the temple in this village by the assembly of Palaiya Sembiyaṇmādēvi chaturvedimangalam, a brahmadeya on the southern bank [of the river Kaveri] தென்கரை பிரம்மதேயம் பழைய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார், இவ்வூர்க் கோயிலுக்கு அர்த்தசாம வழிபாட்டின்போது திருவமுது படைப்பதற்காக இறையிலியுடன் கூடிய நிலக்கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரியிலும் பிற்பகுதி காணப்படவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
On the West and South wall of the central shrine of the same temple. Parakēsarivarman [Parantakachōla] 6th regnal year - 913 A. D. Registers a sale of land as tax-free by the assembly of this village to the Karkaḍisvarattu Perumal temple of the same place. Mentions Mahāmattirar land and Chittirakūḍattu dēvar land as the boundaries of the above said land. இவ்வூர் மகாசபையார் இவ்வூரிலுள்ள கற்கடகஈஸ்வரத்துப் பெருமாள் கோயிலுக்கு இறையிலியாக நில விற்பனை செய்த தகவல் கூறப்பட்டுள்ளது. நிலத்திற்கு எல்லைகள் கூறும்போது மகாமாத்திரர் நிலம், சித்திரகூடத்து தேவர் நிலம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
On the West wall of the central shrine of the same temple. In characters of about 11th century A. D. Fragment. Seems to the gift of land for food-offerings to the deity of the temple. கல்வெட்டு சிதைந்துள்ளது. இறைவனுக்கு மூன்று சந்தியும் திருவமுது படைப்பதற்காக நிலக்கொடை வழங்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டு புலப்படுத்துகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
On the same wall In characters of about 11th century A. D. Fragment. Seems to made tax-free on a land by the assembly after receiving twenty Ilakkāsu for it. கல்வெட்டு சிதைந்துள்ளது. பெருங்குறிப் பெருமக்கள் 20 ஈழக் காசுகளைப் பெற்றுக் கொண்டு இறைநீக்கிக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
On the same wall Kōpparakēsarivarman [Uttama chōla] 15th regnal year 985 A. D. This record is damaged and the portion at the end is lost. It records the sale of land as tax-free to the temple Chandrasekara Perumal at Thirumayāṇam to provide food-offerings to the deity of the temple by the Peruńkuri Mahasabhā inclusive of the Nambis of Nālūr, a brahmadēya in Serrūrk-kūṛram. The original owners of the land had not been consequently paying the taxes for many years to several kings. Due to the non payment of the taxes, the assembly took the charge and paid regularly. Then the assembly take the decision about the sale of land to the temple when the meeting held in the Sattimurram of the Sambarēsvara temple at Nālūr. கல்வெட்டின் பிற்பகுதி சிதைந்துள்ளது. இறுதி வரிகள் சில காணப்பட வில்லை. செற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயம் நாலூர் நம்பிமார் உள்ளிட்ட மஹாசபையோராகிய பெருங்குறி பெருமக்கள் அவ்வூர் சம்பரேஸ்வரம் என்ற கோயிலின் சக்திமுற்றம் என்ற பகுதியில் கூடியிருந்து எடுத்த முடிவு பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவ்வூர் பிரமதேயத்தில் பங்கு பெற்றிருந்த சிலர் பல காலமாக தங்கள் நிலத்திற்கு வரி செலுத்தாதிருந்தனர். ஆனால் அந்த வரியை சபையே செலுத்தி வந்தது. இவ்வாறு பல ராஜாக்கள் காலம் வரை தொடர்ந்ததால் அந்நிலத்தை ஞானபரமேஸ்வரர் கோயில் சந்திரசேகர பெருமாளுக்கு திருவமிர்து படைப்பதற்காக திருவமிர்து புறமாக சபையோரே இறையிலியாக விற்றுக் கொடுப்பதென முடிவெடுத்துச் செயல்பட்டதைக் கூறுகிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
On the North wall of the central shrine Rājarājachōla I 24th regnal year - 1004 A. D. - Incomplete. Records a gift of land for the food-offerings to the deity Sri Raghavadēvā in the Tirunārāyana Vinnagar temple and to the food-offerings. oil bath on Saturdays, and a flower-garden to the deity of Tirumayanamuḍaiya Mahādēva temple of this village. The assembly of that village which had met at the Rājarājan maṇḍapā in front of Samparishvarattu Mahādēva in this village demarkated the boundries of the donated lands. Mentioning Sri Simhavishnu Vathi, Suriyadēvan Vathi, Rājarājan Vāykkal etc., in this record. இவ்வூர் திருநாராயண விண்ணகர் இறைவன் ஸ்ரீ ராகவதேவர்க்கு திருவமுதுபுறமாகவும், இவ்வூர் சிவன் கோயிலுக்கு சநி எண்ணைக் காப்புக்கும், திருவமுதுக்கும், திருநந்தாவனத்துக்கும் நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. ஸ்ரீசிம்மவிஷ்ணுவதி, சூரியதேவர்வதி, ராஜராஜன் வாய்க்கால் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the North wall of the same shrine - Tamil - Kōparakēsarivarman 12th regnal year 919 A. D. Records a gift of 45 sheep for burning a perpetual lamp before the image of Adittagaramuḍaiyār (Surya) by a shepherd named Tayan-Sattan of Innambar by the gracious order of the deity in Tiruppurambiyamudaiyār temple. திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்கு தினமும் உழக்கு நெய்யால் நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு பல்லவப் பேரரையர் வீரசிகாமணிப் பல்லவரையன் 90 ஆடுகள் கொடையளித்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine - Tamil - Kō-Rājakēsarivarman - [15]th regnal year - 922 A. D. Records the gift of 90 sheep to burn a perpetual lamp daily to the deity of the temple Tiruppurambiyamuḍaiyār by Pallavapperaraiyar Virasikamaṇip-Pallavaraiyar. திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்கு தினமும் உழக்கு நெய்யால் நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு இருமடி சோழ அணுக்கரில் சாம நாயகன் தேவன் என்பவன் 90 ஆடுகள் கொடையளித்ததைக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine - Tamil - Rājarājachōla I [16]th regnal year [1001] A. D. Refers a donation made by a shepherd for a perpetual lamp to the deity Mahādēva in the temple of Tiruppurambiyamuḍaiyār. Last few lines are lost. திருப்புறம்பியமுடையார்க் கோயிலின் பண்டாரத்தினை அரசு உயர் அதிகாரியான வானவன் மூவேந்த வேளான் ஆய்வு செய்து பின்னர், அரசனின் இரண்டாம் ஆண்டு முதல் ஒன்பதாவது ஆண்டுவரை முதலாக வந்து சேர்ந்திருந்த பொன்னில் செலவு போக மீதியிருந்த பொன்னைக் கொண்டு, இறைவனுக்குச் சில ஆபரணங்களைச் செய்தளிக்க உத்தரவிட்டதை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. மூன்று பட்டம், ஒரு பொற்பூ, தண்ணீரமுது செய்ய ஒரு வெள்ளி வட்டில் ஆகியவை செய்தளிக்கப்பட்ட பொருட்களாகும். அப்பொருட்களின் எடையும் குறிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine - Tamil Rājarājachōla I [16]th regnal year [1001] A. D. Records the donation of land for two perpetual lamps to the Pallikkattil of the god Adavallan and Goddess Udaiyapirāttiyār by the Valañjiyar in this village. கோயிலில் பணிபுரியும் கணக்குக் காணியுடையார்கள் சிலர் கோயிற் பணத்தைத் தமது சொந்தப் பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயிலில் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார்க்கும், அஷ்ட பரிவார தேவர்களுக்கும் இறைவனுக்கும் தனித்தனியே கணக்குக் காணியுடையார்கள் இருந்தனரென்பது தெரிகிறது. இவர்கள் தம் நிலங்களைச் சண்டேஸ்வரப் பெருவிலைக்கு விற்றுப் பண்டாரத்தில் செலுத்தியுள்ளனர். 40, 000 காசுகளை இவ்வாறு கொடுத்ததற்கான நிலவிலை ஆவணம் இது. இடையிடையே கல்வெட்டு பெரிதும் சிதைந்துள்ளது-
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine - Tamil - Rājarājachōla III - 9th regnal year 1225 A. D. Registers the sale of lands for 40,000 Kasu by the temple accountants, those who had the Kani right in the temple for the payment of fine due to the misappropriation of money which was find out at the inspection. திருப்புறம்பியத்து இறைவனுக்கு, நொந்தாவிளக்கு ஒன்று எரிக்க வகை செய்ததை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. முதலிலும், இடையிடையேயும் சிதைந்துவிட்டது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine Tamil - Parakēsarivarman - regnal year lost - 10th century A. D. Very badly damaged. Mentions Potters, Formers who refining the lands etc., திருப்புறம்பியம் இறைவனுக்குத் திருப்பள்ளித்தாமம் சாத்துவதற்குக் களக்குடியுடையான் வேளான் என்பவர் கொடையளித்ததைக் குறிக்கிறது. கல்வெட்டு இடையிடையே சிதைந்திருப்பதால் முழுமையாக அறிய இயலவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine - Tamil - Rajarajachōla I - regnal year lost 10th Century A. D. Badly damaged inscription. Seems to be the gift of twilight and the celebration of Panguni Uttiram day in the temple. திருப்புறம்பியமுடையார்க் கோயிலில் எட்டுப் பரிவார தேவர்களை எழுந்தருளச் செய்து அத்தேவர்களுக்குத் திருவிளக்காகிய சந்தி விளக்கு எரிப்பதற்குப் பத்துமாப்பத்து பொன் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தராயம் பிடலிகை போன்ற வரிகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டிருந்தன. பத்துமாப் பொன்னால் வரும் வருமானம் மட்டும் கொண்டு விளக்கெரிக்க வேண்டும் என்றும் அதற்கு மேற்பட்டதை இறைவன் பண்டாரத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine Tamil - Rājarājachōla I 10th regnal year - 995 A. D. Records the gift of gold for a twilight to the Parivaradevatās, consecrated in the temple of Tiruppurambiya- ḍaiyār. Earlier to it the taxes Andharāyam and Pidaligai donated to the same purpose. It is also said that after the expenditure of burning lamp the rest of the income would be deposited to the temple-treasury. திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்குத் திருநொந்தாவிளக்கு ஒன்றினை தினமும் உழக்கு நெய்யால் எரிப்பதற்கு நாட்டு மன்றாடிகள் முப்பது ஆடுகள் அளித்த செய்தியையும், அவ்வாடுகளைப் பராமரித்து நெய்யளக்கும் பொறுப்பை மறப்பகை என்பவர் ஏற்றுக்கொண்ட செய்தியையும் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine Tamil Parantaka chōla I - regnal year lost 10th century A. D. Registers the gift of 30 sheep for a perpetual lamp to the deity of Tiruppurambiyamuḍaiyār by the country shepherds, and a person named Marapagai who took the charge of it to provide ghee to the temple. திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்கு திருநொந்தாவிளக்கு ஒன்றினை தினமும் உழக்கு நெய்யால் எரிப்பதற்கு நாட்டு மன்றாடிகள் முப்பது ஆடு ஆடுகள் கொடையளித்த செய்தியையும், அவ்வாடுகளைப் பராமரித்து நெய்யளக்கும் பொறுப்பினை தழையன் மாதேவன் என்பவன் ஏற்றுக்கொண்ட செய்தியையும் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same wall of the same shrine - Tamil - Parāntaka chōla I 15th regnal year - 921 A. D. Records the gift of Ninety sheep for burning a perpetual lamp in the temple of Tiruppurambiya- muḍaiyar by the country shepherds. Trivedi Sendan received the sheep and gave the acceptance to burn the lamp. கண்டன் மாதேவி என்பவர் திருப்புறம்பியத்து இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிக்க, கொற்றங்குடி என்ற ஊரில் நிலம் அளித்ததைக் குறிக்கிறது. கல்வெட்டின் முற்பகுதி காணக்கிடைக்கவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the same place. Kōvirājakēsaripanmar - 6th regnal year - 10th century A. D. Very badly damaged. Mentions the merchantile guild Tisaiyāyirattaiññūṛruvar. இவ்வூர் கோயில் இறைவனை திருமஞ்சன நீராட்டுச் செய்ய உத்தம சோழ தேவர்க்காக அவரது தாயார் செம்பியன் மாதேவியார் வெள்ளிக்கலசம் ஒன்று அளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அதன் எடை மூன்று விதங்களில் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகக் காணப்படுகிறது.
1. பொதுவான நிறை : நூற்று நாற்பத்து முக்கழஞ்சே முக்காலே இரண்டு மஞ்சாடி
2. விரையாக்கலி என்னும் : பதின்மூன்றே மூன் .... பலம் பதின் கழஞ்சே துலாக்கோலால் நிறை கால்
3. இவ்வூர்க்கல்லால் நிறை : நூற்று நாற்பதின் கழஞ்சு முக்காலே மூன்று மஞ்சாடி
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்புறம்பியம்
On the North wall of the same shrine - Tamil - Rājēndrachōla I 23rd regnal year 1035 A. D. Registers the gift of money by a woman servant who was working in a regim called Ilarkesvara- kulakālath theriñja vēlam for providing offerings and worship to the images of Aḍal-vallān and Uma-Parameshvari, set up in the temple of Tiruppurambiyam in Aṇḍārrukkūṛram, a sub-division of Rājēndrasinga valanāḍu. திருப்புறம்பியமுடையார்க் கோயில் இறைவனுக்கு சாவாந்தி குமரன் மாதேவன் என்பவன் திருவிளக்கு ஒன்று எரிய வைப்பதற்காக நிலக்கொடையளித்த செய்தியும், அந்நிலத்தைப் பெற்றுக்கொண்டு விளக்கெரிக்கும் பொறுப்பைத் தேவகன்மிகளே ஏற்றுக்கொண்ட செய்தியும் கூறப்பட்டுள்ளன. அண்ட நாட்டினின்றும் நீங்கிய தேவதானமாகக் திருப்புறம்பியம் குறிக்கப்பட்டிருக்கிறது. அந்நிலத்திற்கு உரிய எல்லைகளும் கூறப்பட்டிருக்கின்றன.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்பனாந்தாள்
Jatavarman Sundara Pandya - year lost 13th century A. D. Built in at the end. Records the gift of 100 Kuli of land as Thirunāmattukkāṇi for the expenditure of the food-offerings, Sandal paste, oil for lamp, and the persons who bear Sripatham in the festival days of the Nachchiyar temple in the Thiruttaḍakai isvaramuḍaiya nayanār, to the Ādichaṇḍēsvaradēvā by the assembly of the village. Grooves and flower garden were also existed in the above said land. மிகவும் சிதைந்துள்ளது. இக்கோயில் இறைவனாகிய மஹாதேவர்க்கு பஞ்சகவ்யம் ஆடியருளுவதற்காக நான்கு பசுக்களும் காசுகளும் உபையமாகக் கொடுக்கப்பட்டிருந்த தகவலை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்பனாந்தாள்
Kulōttungachōla III - 8th regnal year - 1185 A. D. Built in at the beginning. Gift of land, exempted from tax for offerings to the images of Thirukkaḍavūr Kungiliyakkalaiya Nāyaṇār and other Saiva devotees set up in the temple at Thiruppananthal by a person bearing the same name [See No. 14] திரு அஜனீஸ்வரமுடையார்க் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்திற்கு இறையிலி செய்து கொடுப்பதற்காக பொன் கொடுத்த செய்தியும், திரு ஆபரணங்கள் செய்ய 60 காசுகள் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளமைத் தெரிகிறது. விக்கிரம சோழனின் 15-ஆம் ஆட்சி யாண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் மேலும் விவரங்களை அறிய இயலவில்லை.