Skip to main content

1146 results found

தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திருப்பனாந்தாள்
தஞ்சாவூர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் இவ்வூர், வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டு செயங்கநல்லூர்ப் பற்றைச் சேர்ந்த தனியூராக விளங்கியமைத் தெரியவருகிறது.
இவ்வூர்த் திருத்தாடகை ஈசுவரமுடைய நாயனார்க்கு இடவைப்பற்றைச் சேர்ந்த ஒரு சதுர்வேதி மங்கலத்திலுள்ள காராம்பிச் செட்டு நாராயண பட்டர் என்பவர், இக்கோயில் அங்கரங்கபோகக் கட்டளை ஒன்றினுக்கு, இறையிலியாக நிலதானம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திருப்பனாந்தாள்
தஞ்சாவூர் திருப்பனந்தாள் திருத்தாடகை ஈஸ்வரத்து இறைவனை கொள்ளிடத்திற்கு தீர்த்தமாடக் கொண்டு செல்வதற்குச் சரியான பாதையில்லாமையின் பலர் ஒன்று சேர்ந்து புதிய பாதை ஒன்று அமைக்க நிலதானம் செய்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே திருவாப்பாடி இறைவனை கொள்ளிடத்திற்கு தீர்த்தமாட எழுந்தருளுவதற்கு ஏற்படுத்திய ராஜகம்பீரன் என்ற பாதையை அமைத்திருந்தனர். அதே பாதையில் கொள்ளிடத்திற்கு வடக்கு நோக்கிச் செல்லும்படியாக பாதை அமைத்து அவ்வழியே சென்று தீர்த்தமாட ஏற்பாடு செய்தனர். அப்பாதையின் இருபறமும் 750 தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அதன் வருமானம் திருத்தாடகை யீஸ்வரமுடையார்க் கோயிலுக்கு விளக்கு எரிக்கவும் பிறசெலவுகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றன. நிலதானமளித்த பலரும் இறுதியில் கையெழுத்திட்டுள்ளனர். கல்வெட்டு சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திருப்பனாந்தாள்
தஞ்சாவூர் திருப்பனந்தாள் திருத்தடாகை ஈஸ்வரத்து இறைவன் மகாதேவர்க்கு தினமும் உழக்கு நெய்யால் நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்காக, அம்பர் நாட்டு குமாரமங்கலம் உடையானான இறையான் மாதேவன் என்பவன் தொண்ணூறு ஆடுகள் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திருப்பனாந்தாள்
தஞ்சாவூர் திருப்பனந்தாள் திருத்தாடகை ஈஸ்வரத்து மகாதேவர் கோயில் இறைவர்க்கு கருப்பூரைச் சேர்ந்த கோவன் அமுதன் என்பவன் திருநொந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு தொண்ணூறு ஆடுகள் வழங்கியமை பற்றிக் கூறுகிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>திருப்பனாந்தாள்
தஞ்சாவூர் பிற்பகுதி சிதைந்த கல்வெட்டு.
இவ்வூரிலுள்ள திருவநந்தீஸ்வரமுடைய மகாதேவர்க் கோயில் இறைவனுக்குத் திருப்பனந்தாள் மகாசபையினர் திருவமுது படைத்து வழிபாடு செய்வதற்கு வேண்டிய நிவந்தம் செய்தது பற்றிக் கூறுகிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
தஞ்சாவூர் திருந்துதேவன்குடி கோயில் தேவதான இறையிலி நிலத்துக்குத் தலைமாறாக வேறோர் இடத்தில் நிலத்தைக் கொடுத்துவிட்டு அவ்வூர் கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார்க் கோயிலுக்கு அந்நிலத்தை கங்கை கொண்ட சோழ நல்லூர் என்ற பெயரில் தனியாகப் பிரித்துக் கோயிலுக்குத் தரவேண்டும் என்று மதுராந்தக பிரம்மராசன் அரசனிடம் வேண்டுகோள் விடுவித்ததன்படி செயல்பட்டமையைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
தஞ்சாவூர் சிதைந்த துண்டுக் கல்வெட்டுகள்
முதல் துண்டுக்கல்வெட்டு கோப்பரகேசரிவர்மன் காலத்தைச் சேர்ந்தது. 2-வது துண்டுக் கல்வெட்டு. இக்கோயில் சிவபிராமணர்கள் இக்கோயில் இறைவனுக்கு ஊரார் இறுத்து வருகிறபடி தாங்கள் நெல் கொடுப்பதாகக் கூறுகிற கல்வெட்டு. முழு செய்தியை அறிந்துகொள்ள இயலவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
தஞ்சாவூர் திருந்துதேவன்குடி இறைவன் அருமருந்துடையார்க்கு ஒரு காசு கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. காசு கொடையளித்தது எதற்காக என்று அறிந்துகொள்ள இயலாதவாறு மிகவும் சிதைந்துள்ளது. விளக்கு எரிப்பதற்காக அளித்த கொடையாக இக்கொடை இருத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
தஞ்சாவூர் மிகவும் சிதைந்துள்ளது.
இவ்வூர்க் கோயில் இறைவன் அருமருந்துடையார்க்கு இரண்டு சந்தி விளக்குகள் எரிப்பதற்கு இரண்டு காசுகள் கொடையளித்த செய்தியும், திருமடைப்பள்ளியில் திருமஞ்சனக் கிணறு வெட்டியவன் மருதூருடையான் வேளான் காக்கு .... என்பதும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
தஞ்சாவூர் மிகவும் சிதைந்த துண்டுக் கல்வெட்டு. பிரமதேயம் திருந்துதேவன்குடி உடையார்க் கோயில் இறைவனுக்கு பூசைக்கும் ஒரு நொந்தா விளக்கு எரிக்கவும் கொடையளித்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு.
விருதுநகர்>இராஜபாளையம்>தேவதானம்
விருதுநகர் இம்மன்னன் இக்கோயில் இறைவர்க்கு காலசந்தி பூசைக்குத் தேவையான அமுது படி சாத்துப் படிக்குத் தேவையான செலவுக்குவிட்ட நிலத்தானம் பற்றிக் குறிப்பிடுகின்றது.
விருதுநகர்>இராஜபாளையம்>தேவதானம்
விருதுநகர் கிரந்த எழுத்துக்களுடன் தொடங்கும் இக்கல்வெட்டு மூன்று வரிகளை மட்டும் கொண்டுள்ளது. இவ்வூர்க் கோயிலுக்கு இறையிலியாக விட்ட இரண்டுமாவறை நிலத் தானத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
விருதுநகர்>இராஜபாளையம்>இராசபாளையம்
விருதுநகர் இடையிடையே சிதைந்து காணப்படுகின்றது. இக்கோயில் இறைவர்க்கு ஒரு நந்தா விளக்கு முட்டாமல் எரிப்பதற்குத் தானம் வழங்கப்பட்டுள்ளது. அந் நந்தா விளக்கு எரிக்கத் தவறும் பட்சத்தில் இரண்டு நந்தா விளக்கு எரிப்பதாகவும் தண்டமாக ஒரு பணமும் தரச் சம்மதித்த செய்தியினைத் தெரிவிக்கின்றது.
விருதுநகர்>இராஜபாளையம்>சோழபுரம்
விருதுநகர் ஆண்மர் நாட்டு சோழபுரத்து உத்தமசோழ விண்ணகர் ஆழ்வார் கோயிலில் எழுந்தருளிவிக்கப்பட்டிருந்த மன்னார் மற்றும் நாச்சியார் திருமேனிகளுக்கு அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட நித்த நிவந்தங்களின் செலவினங்களுக்காக இறையிலியாக நிலக்கொடை வழங்கப்பட்டிருந்தமையைத் தெரிவிப்பதாகக் காணப்படுகிறது.
விருதுநகர்>இராஜபாளையம்>சோழபுரம்
விருதுநகர் இறைவனுக்குரிய திருவிடையாட்ட பிரம்மதேயமாக விளங்கிய உத்தமசோழச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த திருநல்லூருக்குரியவரான நாராயணன் நாராயண பட்டர் என்பவர் கோயிலில் திருநந்தா விளக்கு மற்றும் சந்தியா தீபம் எரிப்பதற்காக வேண்டி 812 அச்சு [பணம்] வழங்கியுள்ள மையைத் தெரிவிக்கிறது.
விருதுநகர்>இராஜபாளையம்>சோழபுரம்
விருதுநகர் இடையிடையே சிதைந்துள்ள இக்கல்வெட்டு இக்கோயில் இறைவர்க்கு மன்னனால் கொடுக்கப்பட்ட நிலத்தானத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மன்னனின் பெயரால் அவனி வேந்தராமன் சந்தி ஏற்படுத்தப்பட்டிருந்ததை இக்கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது.
விருதுநகர்>இராஜபாளையம்>சோழபுரம்
விருதுநகர் இக்கோயில் இறைவர்க்கு திருஆடல் திருப்பவனிக்கு வேண்டிய நித்தநிவந்தங்களாகக் கொடுக்கப்பட்ட தானம் பற்றிக் குறிப்பிடுகின்றது.
விருதுநகர்>வேம்பக்கோட்டை>எதிர்கோட்டை
விருதுநகர் முற்றுப் பெறாத இக்கல்வெட்டில் இவ்வூர் இறைவனான விக்கிரம பாண்டீசுவர முடையார்க்கு அமுதுபடி சாத்துப் படிக்காக விடப்பட்ட அரைநிலம் தேவதானமாக விடப்பட்டதைத் தெரிவிக்கின்றது.
விருதுநகர்>வேம்பக்கோட்டை>எதிர்கோட்டை
விருதுநகர் தென்புறச் சுவர் மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியுடன் தொடங்கும் இவ்வட்டெழுத்துக் கல்வெட்டில் கூத்தங்குடி நகரத்தார் இறையிலியாகக் கொடுத்த நிலம்பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.
விருதுநகர்>வேம்பக்கோட்டை>எதிர்கோட்டை
விருதுநகர் வெண்பைக்குடிநாட்டு உத்தன்குடியைச் சார்ந்த அணைக்குடி இறைவனுக்கு அவ்வூரைச் சார்ந்த அறுவை வாணியச் சேரி ஆச்சன் என்பவன் திருநந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்காக ஐம்பத்தைஞ்சு ஆடுகள் அளித்ததைக் கூறுகிறது.