1128 results found
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்பனாந்தாள்
Rājarājachōla II - 18th Regnal year 1164 A. D. Registers a sale of land to a certain Kungiliyakkalaiyar alias Aliyaviratankondar Thainum Piriyāthār for one thousand Kasu by an individual called Senthan Kuttaduvan alias Rājarāja vaṁgāra muttaraiyan, who had Pallikkāni in the Pennagadam alias Mudikondachōla chaturvēdi-mangalam, a brahmadēya and a Taniyur in Vadagarai - Virudharāja bhayankara valanādu. விஜயநகர மன்னர்கள் காலத்தில் இவ்வூர், வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டு செயங்கநல்லூர்ப் பற்றைச் சேர்ந்த தனியூராக விளங்கியமைத் தெரியவருகிறது.இவ்வூர்த் திருத்தாடகை ஈசுவரமுடைய நாயனார்க்கு இடவைப்பற்றைச் சேர்ந்த ஒரு சதுர்வேதி மங்கலத்திலுள்ள காராம்பிச் செட்டு நாராயண பட்டர் என்பவர், இக்கோயில் அங்கரங்கபோகக் கட்டளை ஒன்றினுக்கு, இறையிலியாக நிலதானம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்பனாந்தாள்
Malligarjuna Māhārāya - Saka 1369 -1447 A. D. Badly damaged and unfinished. Registers a gift of land, free of taxes for a service called Angarangabhoga to the temple. Karambichchetty Nārāyana Bhattar, native of a chaturvēdimangalam of Idavaipparru. Thiruppananthā! was listed as a Taniyur in Seyanga nallūrppaṛru in Manni-nādu, a sub-division of Virudharāja bhayaṁkara vaļanāḍu. திருப்பனந்தாள் திருத்தாடகை ஈஸ்வரத்து இறைவனை கொள்ளிடத்திற்கு தீர்த்தமாடக் கொண்டு செல்வதற்குச் சரியான பாதையில்லாமையின் பலர் ஒன்று சேர்ந்து புதிய பாதை ஒன்று அமைக்க நிலதானம் செய்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே திருவாப்பாடி இறைவனை கொள்ளிடத்திற்கு தீர்த்தமாட எழுந்தருளுவதற்கு ஏற்படுத்திய ராஜகம்பீரன் என்ற பாதையை அமைத்திருந்தனர். அதே பாதையில் கொள்ளிடத்திற்கு வடக்கு நோக்கிச் செல்லும்படியாக பாதை அமைத்து அவ்வழியே சென்று தீர்த்தமாட ஏற்பாடு செய்தனர். அப்பாதையின் இருபறமும் 750 தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அதன் வருமானம் திருத்தாடகை யீஸ்வரமுடையார்க் கோயிலுக்கு விளக்கு எரிக்கவும் பிறசெலவுகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றன. நிலதானமளித்த பலரும் இறுதியில் கையெழுத்திட்டுள்ளனர். கல்வெட்டு சிதைந்துள்ளது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்பனாந்தாள்
Parāntaka chōla I 29th regnal year - 936 A. D. Damaged and few lines are lost at the end. Gift of the land to the deity of Perumal in Thiruttāḍakai īsvaran of Thiruppananthā! for the food-offerings during the mid-night - worship by Kaman Thali, a chief and native of Karambiyam in Eyi-nādu. திருப்பனந்தாள் திருத்தடாகை ஈஸ்வரத்து இறைவன் மகாதேவர்க்கு தினமும் உழக்கு நெய்யால் நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்காக, அம்பர் நாட்டு குமாரமங்கலம் உடையானான இறையான் மாதேவன் என்பவன் தொண்ணூறு ஆடுகள் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்பனாந்தாள்
Parantaka chōla I - 29th regnal year 936 A. D. Records a gift of ninety sheep for a perpetual lamp to the temple of Thiruttāḍakai isvarattu Mahādēva at Thiruppananthāļ a dēvadāna village in Vadagarai Manni-nādu, by Iraiyān Mādēvan of Kumāramangalam in Ambar-nādu. திருப்பனந்தாள் திருத்தாடகை ஈஸ்வரத்து மகாதேவர் கோயில் இறைவர்க்கு கருப்பூரைச் சேர்ந்த கோவன் அமுதன் என்பவன் திருநொந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு தொண்ணூறு ஆடுகள் வழங்கியமை பற்றிக் கூறுகிறது இக்கல்வெட்டு.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருப்பனாந்தாள்
Rājēndra chōla - 2nd regnal year 2nd regnal year - 11th century A. D. Gift of money [Thirty Coins] to burn a perpetual lamp in the temple of Thiruvananthisvaramuḍaiyar temple in this village by certain Ganapathy Adittan from the market of horse riders. The gifted money was received and accepted to burn that lamp during the day and night in the temple by three Sivabrāhmanās of this temple. பிற்பகுதி சிதைந்த கல்வெட்டு.இவ்வூரிலுள்ள திருவநந்தீஸ்வரமுடைய மகாதேவர்க் கோயில் இறைவனுக்குத் திருப்பனந்தாள் மகாசபையினர் திருவமுது படைத்து வழிபாடு செய்வதற்கு வேண்டிய நிவந்தம் செய்தது பற்றிக் கூறுகிறது இக்கல்வெட்டு.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
Parantaka Chōla I - 28th regnal year 935 A. D. Registers a gift of land after being refined it with a well to the deity Perumanadigal who was pleased to stand in Thiruppananthāl, a dēvadāna village of Vadagarai [Northern Bank] in Manni-nādu, by the mother of Chōla mādēviyār, Queen of the Chōla King Kōpparakēsarivarman. திருந்துதேவன்குடி கோயில் தேவதான இறையிலி நிலத்துக்குத் தலைமாறாக வேறோர் இடத்தில் நிலத்தைக் கொடுத்துவிட்டு அவ்வூர் கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார்க் கோயிலுக்கு அந்நிலத்தை கங்கை கொண்ட சோழ நல்லூர் என்ற பெயரில் தனியாகப் பிரித்துக் கோயிலுக்குத் தரவேண்டும் என்று மதுராந்தக பிரம்மராசன் அரசனிடம் வேண்டுகோள் விடுவித்ததன்படி செயல்பட்டமையைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
A single line inscription of 11, 12th century A. D. States that the name of this Thirumandapam is Kulottungachōlan. சிதைந்த துண்டுக் கல்வெட்டுகள்முதல் துண்டுக்கல்வெட்டு கோப்பரகேசரிவர்மன் காலத்தைச் சேர்ந்தது. 2-வது துண்டுக் கல்வெட்டு. இக்கோயில் சிவபிராமணர்கள் இக்கோயில் இறைவனுக்கு ஊரார் இறுத்து வருகிறபடி தாங்கள் நெல் கொடுப்பதாகக் கூறுகிற கல்வெட்டு. முழு செய்தியை அறிந்துகொள்ள இயலவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
Vikkiramachōla - regnal year lost - 12th century A. D. Records the gift of 12 Kasu to the temple of Arumarunthuḍaiyār in Thirunthu- devankuḍi by a Saiva saint called. . . . Mandai, a Vellālā of Cuddalore residing in the Western hamlet of Chōlamārttāṇḍa-chaturvedimangalam of Manni-nādu, a sub-division of Virudharāja- bhayankara-valanādu. திருந்துதேவன்குடி இறைவன் அருமருந்துடையார்க்கு ஒரு காசு கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. காசு கொடையளித்தது எதற்காக என்று அறிந்துகொள்ள இயலாதவாறு மிகவும் சிதைந்துள்ளது. விளக்கு எரிப்பதற்காக அளித்த கொடையாக இக்கொடை இருத்தல் வேண்டும்.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருத்துதேவன்குடி
Fragment Vikkiramachōla regnal year lost 12th century A. D. Records the gift of money for burning a twi-light lamp in the temple and a well in the kitchen called Thirumañjanakkinaru, by an individual named Vēlān kākku native of Marudur. Vikkiramachōla - regnal year lost - 12th century A. D. Badly damaged. Seems to be the gift of money for burning a lamp in the temple of Arumarunthudaiyar in the village Thirunthudēvankuḍi. மிகவும் சிதைந்துள்ளது.இவ்வூர்க் கோயில் இறைவன் அருமருந்துடையார்க்கு இரண்டு சந்தி விளக்குகள் எரிப்பதற்கு இரண்டு காசுகள் கொடையளித்த செய்தியும், திருமடைப்பள்ளியில் திருமஞ்சனக் கிணறு வெட்டியவன் மருதூருடையான் வேளான் காக்கு .... என்பதும் கூறப்பட்டுள்ளது.