விருதுநகர்வெண்பைக்குடிநாட்டு கூத்தன்குடியைச் சார்ந்த சுனைக்குடி இறைவனுக்கு கூலிச் சேவகன் மாறன்பட்டன் என்பவன் அணைக்குடியில் ஏற்பட்ட பூசலில்இறந்துவிட்டான். அவனைச் சார்த்தி மாகணக்குடி கேசவன் ஒருவன் சுனைக்குடி கோயிலுக்குப் பொன் அளித்ததைக் கூறும் கல்வெட்டாக இது இருக்க வேண்டும். கல்வெட்டின் முடிவு இல்லை. எனவே கல்வெட்டின் நோக்கத்தை முழுவதுமாக அறியமுடியவில்லை.
விருதுநகர்இவ்வூர் சிவன் கோயிலுக்கு இறையிலியாக நிலம் அளக்கப்பட்டதைக் கூறும் அரசாணை இதுவாகும். இக்கோயிலில் இருந்த பரிவார தெய்வமான சுப்பிமணியப் பிள்ளையார்க்கும் ஒரு மா நிலம் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.
விருதுநகர்தடங்கண்ணியில் (ஈஞ்சார்) சோறனுய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன் என்பவன் சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என்ற பெயரில் சிவன் கோவில் எடுப்பித்து அதற்குத் திருப்படிமாற்று உள்ளிட்டு செலவினங்களுக்குத் தேவதான இறையிலியாக நிலமளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
விருதுநகர்இவ்வூர் இறைவர்க்கு மல்லி நாட்டுக் காடனூர் கொற்றங்கிழவன் என்பவன் கொடுத்த திருநந்தா விளக்கினுக்காக கொடுத்த ஆடு முப்தொன்று பற்றிக் குறிப்பிடுகின்றது.
விருதுநகர்இவ்வூர் இறைவர்க்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக இவ்வூரினனான முற்கலன் நாராயணனான சங்கர நாராயணன் என்பன் நிலமும் கிணறு ஒன்றையும் நந்தா விளக்குப்புரமாகத் தானம் வழங்கிய செய்தியினைத் தெரிவிக்கின்றது.
விருதுநகர்இக்கோயில் இறைவர்க்கும் நித்தியபூசைக்கும் மற்றும் உள்ள தேவைகளுக்குமாக நிலமும் நிலத்தால் வந்த வரிகளும் இக்கோயில் சபையாரிடம் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தியினைத் தருகின்றது.
விருதுநகர்குண்டின கோத்திரத்தைச் சேர்ந்த திருவரங்க தேவன் குன்றெடுத்தானும் இவன் தம்பி திருவரங்க தேவனுய்யக் கொள்வானும் திருத்தங்கல் மலைமேலுள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயிலுக்கு இரண்டு மா நிலத்தை வழங்கியுள்ளனர். வைகாசித் திருவிசாக நன்னாளில் பால்மாங்காயமுது செய்யவும் இறைவன் மண்டபத்தே ஏறியருளித் திருமஞ்சனம் செய்யவும் வேண்டி இந்நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளதாக கருதலாம்.
விருதுநகர்கருநிலக்குடி நாட்டு ஆனையூரான தென்னவன் சிற்றூர் திருத்தங்கல் திருமலை மேல் நின்றருல்கின்ற பெருமாளுக்குரிய தேவதான இறையிலியாக இருந்துள்ளது. இதன்படி வெட்டப்பட்டிருந்த கல்வெட்டின்படியே கடமையிறுப்பதை உறுதி செய்யும் வாசகமாக இக்கல்வெட்டு காணப்படுகிறது.
விருதுநகர்இவ்வூர் இறைவர்க்கும், சந்திபூசைக்கும் மற்றும் உள்ள கோயில் வைஷ்ணவர், நம்பு செய்பவர்களுக்குமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தானத்தைப் பற்றிக் குறிக்கிறது. இத்தானத்தை மழவராயன் எனும் மந்திரி அரசனுக்குச் சொல்லி நடப்பித்ததாகக் குறிப்பிடுகின்றது.
விருதுநகர்திருத்தங்கல் திருமலை மேல் நின்று அருள்புரிகின்ற பெருமாள் கோயில் இறைவன் அம்மவாசை தோறும் எழுந்தருளப்பட்டு புறப்பாடு செய்யப்பட்டுள்ளார். இந்தப் புறப்பாட்டிற்கான செலவினங்களுக்காக வேண்டி ஒன்றரையே ஒருமா நிலம் நிலக்கொடையாக வழங்கப்பட்டிருந்துள்ளது.
விருதுநகர்திருப்பாலையூர் இறைவனுக்க இராசசிங்க குளக்கீழ் இராசேந்திரத்து முதலியார் பூவணவரான சிதுங்கதேவர் கூறு செய்வான் ஏம்பலை ஊரவரிடமிருந்து விலைக்கு வாங்கி தானமாகத் தந்ததைத் தெரிவிக்கிறது.