Skip to main content

1146 results found

விருதுநகர்>திருச்சுழி>கல்லுமடை
விருதுநகர் இக்கல்வெட்டு சாழநாட்டுத் திருப்பாலையூர் சிவன் கோயில் இறைவனுக்குப் பருத்திக்குடி நாட்டு மேன்முக்குளத்து கேரள சிங்க முத்தரையனான மாதேவன் மருதன் என்பவன் திருநந்தா விளக்கு எரிப்பதற்காக இருபத்தைந்து பசுக்கள் தானமாகத் தந்ததைக் தெரிவிக்கிறது.
விருதுநகர்>திருச்சுழி>கல்லுமடை
விருதுநகர் சாழாட்டுத் திருப்பாலையூர் இறைவனுக்குக் கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன் என்பவன் மேன்முக்குளத்து தன்காணிபற்றினைச் சார்ந்த புலக்குளத்துச் சேல்கல்நிலம் தானமாகத் தந்ததைக் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு செப்பேடு போன்று எழுதப்பட்டுள்ளது.
விருதுநகர்>திருச்சுழி>பள்ளிமடம்
விருதுநகர் பருத்திக்குடி நாட்டுத் தேவதானம் திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈஸ்வரத்து இறைவன் கோயிலில் திருநந்தா விளக்கு இரண்டு எரிப்பதற்காக நூறு ஆடுகள் தானமாகத் தரப்பட்டன. இதனைத் தானமாகத் தந்த பொழியூர் நாட்டு சூடுவூர் மூவேந்த வேளானாயின அரங்கம் பூதியும், தானமாகத் தந்த ஆடுகளைப் பெற்றுக் கொண்டு கோயிலுக்கு நெல்லளக்க ஒப்புக்கொண்ட இடையர்கள் பெயர்களும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன.
விருதுநகர்>திருச்சுழி>பள்ளிமடம்
விருதுநகர் பருத்திக்குடி நாட்டுத் தேவதானம் திருச்சுரியல் சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவனுக்கு அளற்று நாட்டுக் கலிசல்மங்கலத்து தச்சன். . ன் உலகன் என்பவன் விளக்கு எரிப்பதற்காக 25 ஆடுகள் அளித்ததைக் கூறுகிறது. இக்கல்வெட்டில் வெண்புநாட்டுப் பிரமம் வானவன் மாதேவி ஊர்ச் சபையார் குறிப்பிடப்படுகின்றனர். கோயிலுக்கு அளிக்கப்பட்ட ஆடுகளைப் புணையாகப் பெற்றவர்கள் பெயர்களும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன.
விருதுநகர்>திருச்சுழி>பள்ளிமடம்
விருதுநகர் கோயில் வழிபாட்டிற்கும், திருநந்தவனத்திற்கும் இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டு அவற்றிக்குரிய வரிகள் தொடர்பான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனை மதுரையிலுள்ள அரண்மனையிலிருந்து வழங்கினான் என்று இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் வானவன் மாதேவி மங்கலத்துச் சபையார் குறிப்பிடப்படுகின்றனர்.
விருதுநகர்>அருப்புக்கோட்டை>பாலவநத்தம்
விருதுநகர் பூங்கான நாட்டுக் காஞ்சி கயிலாசநாதர் கோயில் இறைவனுக்கு அளிக்கப்பட்ட கொடைகளைப் பற்றித் இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன திருநந்தா விளக்கு எரிப்பதற்காக ஒரு செக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பல பாண்டிய அலுவலர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
விருதுநகர்>அருப்புக்கோட்டை>பாலவநத்தம்
விருதுநகர் துண்டுக் கல்வெட்டு. இறையிலியாக நிலமளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
விருதுநகர்>அருப்புக்கோட்டை>செட்டிக்குறிச்சி
விருதுநகர் கோயிலுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலங்களின் எல்லைகள் பற்றியும் அவற்றில் கல் நடப்பட்டதையும் குறிக்கிறது
விருதுநகர்>அருப்புக்கோட்டை>குலசேகரநல்லூர்
விருதுநகர் இக்கல்வெட்டு வீரதமுடிதநல்லூரில் தேவதான இறையிலியாகக் கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கிறது. இதில் இந்நிலத்திற்குரிய பல வரிகள் குறிப்பிடப்பட்டள்ளன.
விருதுநகர்>அருப்புக்கோட்டை>அருப்புக்கோட்டை
விருதுநகர் செங்காட்டிருக்கை இடத்துவளி குறள்மாணி ஈஸ்வரமுடைய நாயனார் கோயிலில் கைக்கோளன் ஒருவன் அர்த்த மண்டபத்தில் திருவாயில் நிலைக்கால் அமைத்தான். இறைவன் பெயரும்ஊரின் பெயரும் அர்த்த மண்டபம் கட்டப்பட்ட செய்தியும் இடம் பெற்றுள்ளது.
விருதுநகர்>அருப்புக்கோட்டை>அருப்புக்கோட்டை
விருதுநகர் சுந்தரபாண்டியனின் பதினோறாம் ஆட்சியாண்டில் விழுப்பாதராயர் என்னும் தலைவன் வைத்த திருவீதி நாயனாற்கு இறையிலி தேவதானமாகப் புகலோகக் கண்ட பேரேரி நிலத்தைக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் சிதைந்த துண்டுக் கல்வெட்டு. நாட்டார்கள் சில வரிகளை கோயிலுக்கு இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் திருவீழிமிழலை உடையார் கோயிலில் உள்ள நின்றருளிய நாயனாரும், நெறி வார்க் குழலியும் எழுந்தருளியிருக்கும் சந்நிதியிலும் மேலும் இக்கோயிலிலுள்ள நாயன்மார் திருக்கோயில்களிலும் திருப்பணிக் குறைகள் இருந்தது. அதனால் இவ்வூரிலுள்ள தச்சாசாரியன் நந்துணையாழ்வானான திருச்சிற்றம் பல ஆசாரியன் என்பவன், திருவீழிமிழலை உடையார் கோயிலிலுள்ள, ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களையும், ஸ்ரீகாரியஞ்செய்வார்களையும், தேவர் கன்மிகளையும், கோயில் கணக்களையும் சந்தித்து மேற்கூறிய திருப் பணிக் குறைகளை (repairs] தான் செய்வதாகவும், கோயில் தச்சாசாரியக் காணி நிலத்தை தனக்குத் தச்சாச்சார்யக் காணியாகவும் பிரதிஷ்டை செய்வதற்கான அன்பளிப்பாகவும் இறையிலி செய்து தர வேண்டுமென்று கேட்க, அவர்களும் அவ்வாறே ஆசாரியனுக்கும் அவன் வழிவந்தார்க்கும் கோயில் குடிமை அந்தராயம் போன்ற வரிகளைத் தவிர்த்து இறையிலியாக வழங்கிய செய்தி கூறப்படுகிறது. அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலம் காலும், குடியிருப்பு மனை நிலம் குழி இருபதும் ஆகும். இந்நிலங்களை கோயில் மாஹேஸ்வரக் கண்காணி திருவீதிகோட்பிலியாண்டானும், ஸ்ரீகாரியம் தில்லையம்பல மூவேந்த வேளானும் கையெழுத்திட்டு கொடுத்தனர் என்றும் தெரிய வருகிறது.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் இக்கல்வெட்டு கோயிலுக்கு அளிக்கப்பட்ட சில நிலக்கொடைகள் பற்றி குறிப்பிடுகிறது. திருவீழிமிழலை உடையார் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தணிந்தயத்தணீஸ்வரமுடையார்க்கு பிராமணன் வாச்சியன் திருவெண்ணாடுடையான் என்பவனும் திருவாணைக்கா நம்பி என்பவனும் தூமொழி ஞான சம்பந்தன் என்ற பெயரில் பலதரப்பட்ட மலர்களைக் கொண்டு நூறு திருப் பள்ளித் தாமமாக்கப்பட நந்தவனம் அமைத்த செய்தியும், ஸ்வாமி தேவர் என்பவர் திருப்பள்ளித் தாமமாக்குகிற திருத்தொண்டர்களுக்கு நிலமளித்துள்ள செய்தியும் கூறப்பட்டுள்ளன. மேலும் திருநந்தவனம் திருத்தொண்டு செய் வார்க்கு பல இடங்களில் இருந்த ஒன்றே எழுமாக்காணி அரைக்காணி நிலம் காணிக்கு மன்னன் இறையிலி அளித்து ஆணையிட்ட செய்தியும். அவ்வாறு மன்னன் கொடுத்தது தமது ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் அபிவிருத்தி ஆகியவை மேலும் பெருகுவதற்காக என்றும் கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு மன்னனது ஆணையை எழுதி செயல்படுத்தியவன் வீர வினோதப் பல்லவரையன் என்ற அதிகாரியாவான், என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் இராசேந்திர சோழனின் இருபத்து மூன்றாவது ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. குலோத்துங்கச் சோழ வளநாட்டு திருநறையூர் நாட்டு இராஜராஜபுரத்தில் திருச்சத்திமுற்றமுடையார் கோயிலில் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் கோயில் உள்ளது. இக்கோயிலின் கீழைத் திருமட விளாகத்தில் திருஞானசம்பந்தர் மடம் இருந்தது. இம்மடத்தில் பூஜை கொண்டருளுகிற மாருதிப் பெருமாள் சந்தானத்து திருச்சத்திமுற்ற முதலியாரின் தொண்டர்களில் (சிஷ்யர்) ஒருவரான தவப் பெருமாள் என்ற ஞானசிவர் திருவீழிமிழலையுடைய நாயனார் கோயில் திருமடைவிளாகத்துத் திருமஞ்சண ஒழுக்கைக்குக் கீழ்ப்புறத்தில் திருச்சிற்றம்பல முடையார் திருமடம் என்னும் ஒரு மடம் அமைத்தார். இம்மடத்துக்கு இறையிலி நத்தங்கள் கொடுக்கப் பட்டன. அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலத்தின் மொத்த அளவு நூற்றி அய்ம்பத்தாறே கால் குழியாகும். இந்நிலத்தினை திருவீழிமிழலை உடையார் கோயில் கணக்கு, தேவர் கன்மி, மாஹேஸ்வரக் கண்காணி, ஸ்ரீகாரியம் ஆகியோர் கையொப்பமிட்டு திருச்சிற்றம்பலமுடையார் மடத்திற்கு எழுதிக் கொடுத்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் இக்கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்லை. சாந்தணிமார்பன் என்பவன் திருவீழிமிழலைக் கோயில் இறைவனுக்கும் இறைவிக்கும் நுந்தா விளக்கு எரிக்க திருநாமத்துக் காணியாக நிலம் கொடுத்த செய்தியும், அந்நிலத்தின் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. மூன்றாம் இராசராச சோழன் கால கல்வெட்டுக்களுக்கு இடையில் இடையில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு அதே எழுத்தமைதியைக் கொண்டு விளங்குவதால் இக்கல்வெட்டும் மூன்றாம் இராசராச சோழன் காலத்தைச் சேர்ந்தது எனலாம்.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் ஊர் வாரியப் பெருமக்கள் வசம் இறைவனுக்குத் திருநாமத்துக் காணியாய் கொடுத்து விளக்கெரிக்கும்படி ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த கால் நிலம் வெள்ளம் புகுந்து பயிர் செய்விக்க முடியாமையில். திருவீழிமிழலை உடையார் கோயில் ஸ்ரீகாரியஞ் செய்வார்களும், மாகேஸ்வரக் கண்காணி செய்வார்களும் தேவர்கன்மி கோயில் கணக்கரும் பரிவர்த்தனையாக வேறு இடத்தில் நிலம் கொடுத்த செய்தியும், பரிவர்த்தனைப் பிரமாண விலைப்படி காசு பதினாயிரமும் ஸ்ரீபண்டாரத்திலே கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் திருவீழிநாதர் கோயில் நாச்சியார்க்கு திருவமுதுக்காக நாலு மா நிலத்தை இவ்வூர் செருங்குறி மகா சபையோர் இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் திருவீழிமிழலை உடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளுக்கு பலர் நிலம் இறையிலி செய்து கொடுத்து ஸ்ரீபண்டாரத்திலிருந்து 200 காசுகள் பெற்றுக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இறையிலி செய்து கொடுத்த அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
திருவாரூர்>குடவாசல்>திருவீழிமிழலை
திருவாரூர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டில் அன்னியூர் ஊரார் மூவர், திருவீழிமிழலை உடையார் கோயிலில் இருக்கும் நாட்டியத் தாங்குடி கோட்புலியாண்டார் என்பவருக்கு மடப்புறமாக இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது
இக்கோட்புலியாண்டார், விக்கிரமசோழனின் ஆறாம் ஆட்சியாண்டிலேயே ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு, குறும்பூர் நாட்டு தேவனாங்குடி தேவனாங் குடையான் காலகாலன் சுப்பிரமணியனான திருச்சிற்றம்பல மூவேந்த வேளான் என்பவனிடம் நிலம் விலைக்கு வாங்கி, இறையிலி மடப்புறம் செய்வதற்கு மேற்கூறிய அன்னியூர் ஊரார் மூவரிடம் நாற்பது காசுகள் கொடுத்ததாகவும் ஆனால் அவர்கள் இறையிலி செய்து தருவதில் காலதாமதம் செய்தனராகையால் கோட்புலியாண்டார். மாகேஸ்வரர்கள் கூடும் கூட்டங்களிலெல்லாம் அன்னியூர் ஊராரை பழி சொல்லி வந்தார் என்றும் இனியும் இவ்வூரார்க்கு பழி வரலாகாதென்று, அன்னியூர் ஊரார் கோட்புலியாண்டார்க்கும். அவர் வம்சத்தார்க்கும் மடப்புறம் இறையிலி செய்து கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கோட்புலியாண்டார் நிலம் விலைக்கு வாங்கியது, திருவீழிமிழலை உடையார் கோயிலில் இரண்டு நாட்கள் திருவிழா சேவிக்க வரும் ஆண்டார்களுக்கு உணவளிப்பதற்காக என்றும், கோட்புலியாண்டார் அன்னியூர் திருவகத்தீசுவரமுடையார் திருப்பணிக் குடலாக 10 காசுகள் ஒடுக்கி தரவு கொள்ள வேண்டும் என்றுமுடிவெடுக்கப்பட்டதென்றும் தெரிய வருகிறது.