திருவாரூர்திருவீழிமிழலை சபையோர், ஒருவனுக்குக் காணியாக நிலம் கொடுத்த செய்தி பற்றியும், குறிப்பிட்ட ஒரு குளத்திலிருந்து நீர் எடுக்கும் போது தோட்டப் பாழுக்கு இறை கட்டப் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இறுதியில் சில வரிகள் சிதைந்துள்ளன.
திருவாரூர்விஷ்ணுவர்த்தனபுரத்து நகரத்தார்கள். அந்நகரத்திலுள்ள நிலங்களுக்கு முன்னர் கிராமகாரியம் பேசினபடி கோயிலுக்குத் தர வேண்டிய இறையைச் செலுத்த முடியாத காரணத்தால், கோயில் தேவகன்மிகள், மாகேஸ்வர கண்காணி செய்வார் ஆகியோரை அழைத்து விவரத்தைக் கூறி அந்நிலங்களைக் கோயிலுக்கே விற்று இறையிலி செய்து கொடுத்து விலைக் காசுகளைப் பெற்றுக் கொண்ட செய்தியும், அந்நிலங்களின் எல்லைகள் மற்றும் அந்நிலத்து வருவாயிலிருந்து எந்தெந்த இறைவனுக்கு அமுது படைக்கப் பட்டது என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்திருவீழிமிழலை கோயிலில் சிறுகாலைச் சந்தியிலும் இரவு சந்தியிலும் விளக்கு எரிவதற்கும், அப்போது நடைபெறும் வழிபாட்டின் போதும் இறைவன் ஸ்ரீபலி எழுந்தருளி திரும்பும் வரை திருப்பதியம் பாடுவதற்கும் தேவையான செலவிற்கும் நெல் கொடுப்பதற்கு இவ்வூர் மகாசபையோர் நிவந்தஞ் செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
திருவாரூர்வீர விருப்பண்ண உடையார் காலத்தினைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டு இருக்கலாம். திருவீழிமிழலை உடையாருக்கு நாட்டார்கள் இறையிலியாக நிலம் கொடுத்த செய்தியைக் கூறுகிறது.
திருவாரூர்ஊர்ச்சேதம் ஏற்பட்டு இறை பற்றாமை காரணமாக குடிமக்கள் இறை இறாத செய்தி பற்றியும், மகாசபையோரே கோயிலுக்காக இறை இறுத்தது பற்றியும் கோயிலுக்குத் தண்ணீரமுதுக்கு ஏற்பாடு செய்த செய்தியும் கூறப்பட்டுள்ளன கல்வெட்டு வரிகளின் இறுதிப் பகுதிகள், பிற்காலத்துக் கட்டடப் பகுதியால் மறைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர்இரண்டாம் இராஜேந்திரச் சோழனின் 3-வது ஆட்சியாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு மிகவும் சிதைந்து காணப்படுகிறது. திருவீழிமிழலை நாயகருக்குத் தேவதான இறையிலியாக நிலம் கொடுத்து அதனை உரிய வரிப் புத்தகத்தில் குறித்துக் கொள்ளவும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டு, அதனைப் பல அதிகாரிகளும் செயல் படுத்திய செய்தி கூறப்பட்டுள்ளது. மன்னன் பிறந்த நாளான திருவாதிரை நாட்களில்திருவிழா நடத்துவதற்காக மேற்கூறிய ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தெரிய வருகிறது.
திருவாரூர்இரண்டாம் இராஜேந்திரச் சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டில் அணுக்கியார் பல்லவன் பட்டாலி நங்கையார் பெண்டாட்டி திருவந். . . என்பவளிட மிருந்து முப்பத்து இரண்டு காசுகளை இக்கோயிலைச் சேர்ந்த பன்னிரண்டு சிவபிராமணர்கள் பெற்றுக் கொண்டு அதற்கு வட்டியாக (பொலிசையாக) வரும் நெல் கொண்டு தலை உவா [அமாவாசை] 12-ம், கடை உவா [பௌர்ணமி ] 12-ம், ஆக 24 உவாக்களுக்கும் இறைவனுக்கு அப்பமுது படைப்பதற்கு செய்யப் பட்ட ஒப்பந்தத்தைக் குறிப்பிடுகிறது.
திருவாரூர்திருவீழிமிழலை உடையார் கோயிலுக்கு முதலாம் இராஜாதிராஜனின் 31-ஆம் ஆட்சி ஆண்டு முதல் தேவதான இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டதைக் குறிக்கிறது. அவ்வாறு அளிக்கப்பெற்ற நிலத்தின் அளவுகளும், அந்நிலத்திலிருந்து வரும் நெல்லின் அளவும் கூறப்பட்டுள்ளன. வெள்ளான் வகையின், கீழ் இருந்த, இந்நிலத்தை தேவதான இறையிலியாக மாற்றியபின் இப்பகுதியின் பெயர் ஜயங்கொண்ட சோழ நல்லூரென்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டு மன்னனின் திருமுகம் (ஆணை) ஆதலின் திருவோலை, திருவோலை நாயகம் போன்ற அதிகாரிகளும், பிற அதிகாரிகளும் கையொப்ப மிட்டுள்ளனர்.
திருவாரூர்விக்கிரமசோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் வேளான் செந்தாமரைக் கண்ணனான காங்கயராயன் என்பவன் வேண்டிக் கொண்டதற்கிணங்க திருவீழிமிழலை மஹாசபையோர் உள்ளூர் பிராமணருக்கு உணவளிப்பதற்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி குறிக்கப்படுகிறது.
திருவாரூர்விக்கிரமசோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் வேளான் செந்தாமரைக் கண்ணநாந காங்கயராயன் என்பவன் திருவீழிமிழலை மஹாசபையோரிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க மஹாசபையோர் திருளிழிமிழலை உடையாருக்கு அழுது செய்தருளவும் உச்சிசந்தி திருமந்திரபோனகத்துக்கும் இரவு சந்தி திருமந்திர போனகத்துக்கும் அமுது செய்தருளவும் தத்தமங்கலம் என்ற பெயருள்ள நிலத்தை இறையிலி செய்து கொடுத்ததைக் குறிக்கிறது.
திருவாரூர்முதலாம் குலோத்துங்கச் சோழனின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டில் இவ்வூர்க் கோயிலிலே மஹாசபை உறுப்பினர்கள் கூட்டங்குறைவறக் கூடியிருந்து உடன்படிக்கை செய்த செய்தி கூறப்பட்டுள்ளது. தற்போது உள்ள வருவாய்ப் பற்றாமையில் மேலும் சில காசுகளை ஆடவல்லான் கங்கை கொண்டானான இருக்கோளந் என்பவனிடமிருந்தும், கோயில் கருவூலத்திலிருந்தும் பெற்றுக் கொண்டு இறையிலி செய்து கொடுத்த செய்தி காணப்படுகிறது. இக்கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்த நிலையிலுள்ளது.
தஞ்சாவூர்திருவலஞ்சுழியில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருக்குடமுக்கு உடையார் என்றும் திருவலஞ்சுழி உடையார் என்றும் வழங்கப்பட்டார். இக்கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்கு திருநாமத்துக்காணியாக நிலம் விற்றுக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு நிலம் அவ்வாறு நிலம் விற்றுக் கொடுத்தவர்கள் சொட்டைப்பட்ட நம்பி பட்டன் என்பவனும் அவனுடைய தாய் திருவாலிடங் கொண்டாள் சாநி என்பவர்களுமாவர். இவர்கள் பதினோராயிரம் காசுகள் நிலத்திற்கு விலையாகப் பெற்றுக் கொண்டு விற்றுக் கொடுத்தார்கள் என்பது குறிக்கப்படுகிறது.
தஞ்சாவூர்திருநாமத்துக் காணியாகவும் இறையிலியாகவும் எட்டு குழி நிலம் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையாருக்கு விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்திருவலஞ்சுழி, உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாகவும் இறையிலியாகவும் நிலம் விற்றுக் கொடுக்கப் பட்டது. இந்நிலத்தை விற்றுக் கொடுத்தவர் [சிற்றம்]பல பட்டனை முது கண்ணாகக் கொண்ட உமையாண்டாள் சாநி என்ற பெண்ணாவார். இவர் விற்ற நிலம் இரண்டு மா என்றும் இதற்கு விலை முப்பத்தோராயிரம் காசுகள் என்றும் தெரிய வருகிறது இடையிடையே ! சிதைந்துள்ள இக்கல்வெட்டில் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
தஞ்சாவூர்திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார்க் கோயில் பூஜைக்காக, ஸ்ரீபிராந்தகச் சதுர்வேதி மங்கலத்து கிராம காரியம் செய்கின்ற கூட்டப் பெருமக்கள் நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த நிலதானம், அவ்வூர் நெடுநாட்களாக பயிர் செய்ய முடியாமல் அழிந்து கிடந்ததால், ஊர் நன்மைக்காகவும் மன்னனின் நலனிற்காகவும் ஆனாங்கூர் ஆண்டார் ஒருவர் கூறிய ஆலோசனையின் பேரில் கோயிலுக்கு தரப்பட்டது. இந்நிலம் ஊர்க்கீழ் இறை செய்து திருநாமத்துக்காணியாக தரப்பட்டிருந்தது. சபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
தஞ்சாவூர்உடையார் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு திருநாமத்துக்காணியாகவும் ஊர்க்கீழ் இறையிலியாகவும் மதனமஞ்சரி சதுர்வேதி மங்கலத்துச் சபையார் நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்இராயனூர் என்ற ஊரிலுள்ள வல்லங்கிழையார் என்பவரின் தேவியார் பெற்றுடையார் என்பவர் தமக்கு நன்மைகள் ஏற்படுவதற்காக இறைவனுக்கு திருவமுது படைப்பதற்காக நிலமும் மனையும் தானமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.