விழுப்புரம்ராஜேந்திரசோழ வளநாட்டின் ஒரு பகுதியான பவித்திர மாணிக்க வளநாட்டு அமணாற்றூர் ஊரைச் சார்ந்த ஆரூரான் செம்பியன் என்பவன் திருவாமாத்தூர் இறைவனின் அபிடேகப் பயன்பாட்டிற்கு இராஜேந்திர சோழன் என்னும் பெயர் கொண்ட தங்கத்தினால் ஆன பாத்திரம் செய்ய பொன் தானம் வழங்கியுள்ளான்.
விழுப்புரம்வேசாலிப்பாடி நிர்வாகப் பிரிவின் ஒரு பகுதியான மேற்கூர் நாட்டு வடகரையில் அமைந்திருந்த சிறுதாம நல்லூர் ஊரைச் சார்ந்த தாமுழான் கொற்ற நங்கி என்பவன் முதலாம் இராசரானின் பணியாளராகவும் திருவாமாத்தூர் கோயில் நிர்வாகத்தையும் கவனிப்பவனுமான இவன் திருவாமாத்தூர் கோயில் நிர்வாகத்தாரிடம் கோயில் இறைவனுக்கு நடைபெற்று வரும் வழிபாட்டு முறைகளைக் கேட்டறிந்தான். அப்பொழுது கோயிலில் ஸ்ரீபலி நிகழ்வின் போது மேளம் கொட்டுபவர்கள் 21 பேருடன், கைமணி மற்றும் செகண்டை கொட்டுவதற்கு கூடுதலாக இரண்டு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்ஸ்ரீராஜேந்திரசிங்க வளநாட்டு திருவிந்தளூர் நாட்டுப் பிரிவு அரிந்தம நல்லூர் ஊரைச் சேர்ந்த நீலன் வெண்காடன் என்பவன் திருவாமாத்தூரில் இறைவனுக்கு செண்பக மலர்களால் இறைவனுக்கு மாலை அணிவிக்க வேண்டி ஸ்ரீசோழதேவ கேரளன் என்னும் செண்பக திருநந்தவனம் அமைக்கவும், ஏற்கனவே இவனால் அமைக்கப்பட்ட ஸ்ரீமதுராந்தக தேவன் திருநந்தவனத்தை பராமரிக்கவும் நிலம் ஒன்றினைத் தானமாக வழங்கியுள்ளான். மேலும், இறைவனுக்கு மந்திரபுஷ்பம் சாத்தி வழிபாடு செய்வதற்கு 5 கழஞ்சுப் பொன்னையும் வழங்கியுள்ளான். இவ்வூர் வைத்தியனுக்கு வைத்திய போகமாக நிலம் ஒன்றும் வழங்கப் பட்டுள்ளது.
விழுப்புரம்பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன் திருவாமாத்தூர் அழகிய நாயனார் கோயிலில் தனது பெயரால் ஏற்படுத்திய, பராக்கிரம பாண்டியன் சந்திக்கும், சிறப்பு திருநாள்களுக்கும் கோயில் திருப்பணிக்கும் பயன்படுத்திக் கொள்ள முஞ்சி ஆற்றுக்கு வடக்குட்பட்ட வேடன்பட்டு கிராமத்தில் இருந்த நிலங்களை இறைநீக்கி கொடையாக வழங்கியுள்ளான்.
விழுப்புரம்திருவாமாத்தூர் கோயில் பண்டாரத்து நிர்வாகிகள் கரணிக்கம் மங்கராசய்யர் மூலம் விசயநகர அரசர் கிருஷ்ணதேவ மகாராயருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். சிற்றரசூர் கிராமம் திருவாமாத்தூர் கோயிலுக்கு ஆண்டு தோறும் குத்தகையில் 200 கலம் நெல் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் முறையிட்டு தன் பேரில் மீளப்பெறப்பட்டது. மேலும், இரண்டு வீட்டு மனைகள் மற்றும் 8 மா நிலம் ஆகியவற்றின் மீதான இறைநீக்கி இரண்டு கோயில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு வாவலூர் நாட்டுத் தனியூர் திருவாமாத்தூர் அழகிய நாயனார் கோயில் தானத்தார் சீலசிந்தாமணி நல்லூர் ஊரவர்க்கு செய்து கொடுத்த உடன்படிக்கை. அழகிய நாயனார் தேவதான ஊராக இருந்த உறத்தூர் என்கிற இராசாக்கநாய நல்லூரில் தாங்கள் வேண்டும் பயிர் செய்து இறை நீக்கிய தேவதானமாக இருந்தது. தற்போது குடிகள் மீது வசூலிக்கப்படும் வரியினை கோயில் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்பல்வேறு ஊர்களில் நெல் மற்றும் காசாக வசூலிக்கப்படும் வரிகளை திருவாமாத்தூர் அழகிய நாயனார் கோயில் இறைவனுக்குப் பூசை, அங்கரங்க வைபோகம் போன்ற வழிபாட்டுச் செலவினங்களுக்கும் கோயில் திருப்பணிக்கும் பயன்படுத்திக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்இராமகிருகாரா கோயில் இறைவனுக்கு நெற்றிப்பட்டம் ஒன்றினை மாதவ என்னும் இளவரசனால் வழங்கப்பட்டுள்ளதாக இக்கல்வெட்டுத் தெரிகிறது. இராமகிருகாரா என்று இவ்வூர் வடமொழியில் குறிப்பிட்டிருக்கலாம்.
விழுப்புரம்திருவாமாத்தூர் ஆழ்வார் கோயிலில் இறைவனுக்கு அமுதுபடிப் படைப்பதற்கு வெள்ளி மண்டை மற்றும் வெள்ளித் தட்டு ஆகிய பாத்திரங்களை தாமுழான் கொற்ற நங்கி என்பவள் கொடையாக அளித்துள்ளச் செய்தி இடம்பெற்றுள்ளது.
விழுப்புரம்சீர்காழி உடைய நாயனார் சம்பந்தப் பெருமாள் நாயனார் வழிபாட்டுச் செலவினங்களுக்கும் திருப்பணிகளுக்கும் தேவைகளுக்காக முஞ்சி ஆற்று வடகரையில் உள்ள தாவணிப்பாக்கம் கிராமத்தில் 4 வேலி நிலத்தினை இறைநீக்கி இராசநாராயணன் ஆணையிட்டுள்ளச் செய்தி.
விழுப்புரம்சோழகுலவல்லி நல்லூர் ஊரிலுள்ள திருவட்டார் உடைய நாயனார் ஆடும் அடிகள் இறைவன் வழிபாட்டுக்கும் இராசநாராயணன் சந்திக்கும் வேண்டி முஞ்சி ஆற்றுக்கு வடக்கே கீழ்புல்லூர் ஊரிலுள்ள 12 மா நிலத்தினை இறைநீக்கி கீழ்புல்லூர் ஊரவர்க்கு சம்புவராய மன்னன் இராச நாராயணன் வழங்கிய ஆணை.
விழுப்புரம்திருவாமாத்தூர் அழகிய நாயனார் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்ட திருவாமாத்தூர் மற்றுமுள்ள தேவதான ஊர்களில் வசூலிக்கப்பட்ட வரிகளைத் திருவாமாத்தூர் இறைவனுக்கு அமுதுபடி, சாத்துப்படி, திருவிளக்கு எண்ணை, திருநுந்தாவிளக்கு, திருநாள் செலவு ஆகியவற்றிகு 5- ஆம் ஆட்சியாண்டுவரை பயன்படுத்தியதற்கு போக மிகுதியாக ஆண்டொன்றுக்கு மீதம் உள்ள 100 பொன்னினை 6-ஆம் ஆட்சியாண்டு முதல் கோயில் திருப்பணிச் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வரிகளையும் இக்கோயிலுக்கே பயன்படுத்திக் கொண்டு பூசையும் திருப்பணியும் இடையூறு இன்றி நடத்திவர ஆணையிடப்பட்டுள்ளது.
விழுப்புரம்பாண்டி மண்டலத்து கப்பலூர் ஊரைச்சார்ந்த ஆத்த தேவன் என்கிற காலிங்கராயன் என்னும் அதிகாரி பாண்டிய மன்னனிடம் அனுமதி பெற்று திருவாமாத்தூர் அழகிய நாயனாற் கோயிலில் பத்து திருநுந்தா விளக்கு எரிக்க அவ்வியூர் ஊரில் பத்து மா நிலத்தினை திருநந்தா விளக்குப் புறமாக இறைநீக்கித் தானமாக வழங்கியுள்ளான்.
விழுப்புரம்நடுவில் மண்டலத்து திருவாமாத்தூர் அழகிய நாயனார் கோயிலில் பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியன் இக்கோயிலில் தனது பெயரில் ஏற்படுத்திய விக்கிரம பாண்டியன் சந்தி வழிபாட்டுத் தேவைகளுக்கும் தனது பிறந்த நாளான புரட்டாசி மாத திருநாளில் இறைவனை எழுந்தருள செய்வதற்கும் நிலம் ஒன்றினைக் கொடையாக வழங்கியுள்ளான்.
விழுப்புரம்சோழநாட்டு வடகரை நல்லாற்றூர் நாட்டுப் பிரமதேயம் ஊரான விடேல் விடுகு சதுர்வேதி மங்கலம் ஆகிய வல்லிய நல்லூர் ஊர் நிர்வாகம் செய்யும் ஆளுங்கணத்தாருள் அவிசாகை மகாதேவர் பட்டர் மகன் கோவத்தன கிரமவித்தன் என்பவன் திருவாமாத்தூர் இறைவனுக்கு சிறுகாலைச் சந்தியில் பால் அபிஷேகம் செய்வதற்கு மூன்று கழஞ்சுப் பொன் அளித்துள்ளான். இவ்வூர் சபையார், ஊரார், திருவுண்ணாழிகை சபையார் பெற்றுக் கொண்டு தினமும் நாழி உழக்குப் பால் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
விழுப்புரம்அருவா நாட்டு மீவழி வாவலூர் நாட்டுப் பிரிவைச் சார்ந்த தேவதானம் ஊரான திருவாமாத்தூர் ஊரிலுள்ள பரமசுவாமி கோயில் இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கு எரிக்க சிக்கலுடையான் நக்கன் கணிச்சன் என்கிற சோழ மூவேந்த வேளான் என்னும் அதிகாரி 15 கழஞ்சுப் பொன் அளித்துள்ளான். இந்தப் பொன்னிலிருந்து தினசரி உழக்கு நெய் அளக்க ஏற்பாடு செய்துள்ளான்.
விழுப்புரம்பாண்டி நாட்டு சோழகோனார் தம்பிக்கு நல்லான் என்பவர் இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டுப் பிரமதேயம் மற்றும் தனியூர் ஆன இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்து திருப்பாதாளீசுவரர் கோயிலில் திருக்காமக்கோட்ட முடைய நாச்சியார் அன்னமென்னடையார் கோயிலின் அர்த்த மண்டபத்தினைக் கட்டியச் செய்தி. மேலும், இந்நாச்சியார் வழிபாட்டுச் செலவினங்களுக்கு இறைநீக்கி நிலம் ஒன்றினைத் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலம் நன்கு விளையும் நீர் நிலமாக (நஞ்சை) மாற்றிக்கொள்ள அனுமதியும் நீர்ப்பாசனக் குளம் (ஏந்தல்) வெட்டிக் கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்துண்டுக் கல்வெட்டுகள். திருப்பாதாளீசுவரமுடைய நாயனார் கோயிலில் தினசரி வழிபாட்டு செலவினங்களுக்கு கோலியபுர நல்லூரில் இருந்த சில நிலங்கள் மீதான இறையை நீக்கி வழங்கியுள்ளனர். மேலும், குலசேகர பாண்டியன் பெயரில் சந்தி வழிபாடு நிகழ்ந்த செய்தி அறியப்படுகிறது.
விழுப்புரம்நமச்சிவாய என்று இக்கல்வெட்டுத் தொடங்குகின்றது. முதலாம் இராசேந்திரனின் அரசியார் பராந்தகன் சுத்தமல்லியர் என்கிற முக்கோக்கிழானடிகள் மன்னனின் வெற்றிக்காக திருப்பாதாளீசுவரமுடைய நாயனார் கோயில் இறைவனுக்குத் திருவாராதனை, திருவமுது மற்றும் இக்கோயிலில் இவ்வரசியால் ஏற்படுத்தப்பட்ட பவித்திர மாணிக்க சாலையில் 25 சிவயோகியார் உண்பதற்காக நிலம் தானமாக வழங்கியச் செய்தி. சிவயோகிகள் வேதம் வல்லவராய் சைவதீக்ஷை பெற்றவராய் நாள்தோறும் வழிபாடு செய்பவராய் இருத்தல் வேண்டுமென்று குறிக்கப்பட்டுள்ளது.