Skip to main content

1146 results found

தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் துற்கையார் அகரம் ஆனஇராஜேந்திர சோழச் சருப்பேதி மங்கலத்துப் பிடாகைகளான சிறுகடம்பூர், ஆரலூர், பாப்பநல்லூர், கூத்தனூர், கொடி யாலி, மணக்குடி, ஆலைவேலி ஆகிய ஊர்களில் உள்ள நிலங்கள் வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு அச் சதுர்வேதி மங்கலத்துப் பட்டர்கள் ஊர்க்கீழ் இறையிலியாக அளித்தார்கள். அவ்வாறு அவர்கள் கொடுத்த நிலங்களில் கடமை, குடிமை ஆகிய வரிகளை மேற்கூறிய பிடாகைகளாகிய ஊர்களின் ஊரவர்கள் இறையிலி செய்து கொடுத்து கையெழுத்தும் இட்டுக் கொடுத்தனர்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் அமைந்துள்ள. வெள்ளைப் பிள்ளையார்க் கோயில் தானத்தார் [ கோயில் நிர்வாகிகள்] பலவகையிலும் துன்பப்பட்டும் நோய்வாய்ப்பட்டும் வந்த காரணத்தினால் அந்த ஊரைக் காப்பதற்கும், உலகுடையப் பெருமாளாகிய அரசனின் உடல் நலன் சிறக்கவும், வெற்றியடையவும். வெள்ளைப் பிள்ளையார்க்கு பூசைக்கும் திருப்பணிக்கும் திருநாமத்துக் காணியாக நிலம் தர வேண்டும் என்று ஆனாங்கூரைச் சேர்ந்த ஒரு அதிகாரி வேண்டுகோள் விடுத்தமையால், சபையார் கூடி விவாதித்து சம்மதம் தெரிவித்து ஊர்க்கீழ் இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. நிலத்தின் அளவுகளும் அதிலிருந்து வரும் நெல்லின் அளவுகளும் எண்ணாலும் எழுத்தாலும் கொடுக்கப்பட்டுள்ளன. நிலத்தின் எல்லைகளும், கையெழுத்திட்டுள்ள சபை உறுப்பினர்களின் பெயர்களும் காணப்படுகின்றன.
இவ்வாறு சபையோர் திருநாமத்துக்காணியாக நிலம் கொடுப்பதென்று விவாதம் செய்த இடமும் கூறப்பட்டுள்ளது. விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு துற்கையார் அகரமான ராஜேந்திர சோழச் சதுர்வேதி மங்கலத்து அபிமுத்தீசுர முடையார், கோயில் திருமண்டபத்தில், பெருங்குறி சபை கூடி முடிவெடுத்தது. இவ்வாறு கூட்டம் கூடுவதை, தன்மிசெய்து அதாவது பறையறைந்து தெரிவிக்கப்பட்டது என்பதும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் திருவலஞ்சுழி உடையார் கோயில் வெள்ளைப் பிள்ளையார்க்கு ஸ்ரீபராந்தக சதுர்வேதி மங்கலத்தின் பிடாகை ஜனநாத நல்லூரில் திருநாமத்துக் காணியான நிலத்தில் இவ்வூர் சபையர்ர் ஊர்க்கீழ் இறையிலி இட்ட செய்தியும் அதன்படி வருகிற நெல்லுக்கு தலைமாறாக வேறு பல இடங்களில் நில மளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் திருவலஞ்சுழி உடையார்க் கோயிலில் உள்ள வினாயகப்பிள்ளையார் கோயில் வெள்ளைப்பிள்ளையார்க்கு திருநாமத்துக் காணியாக ஊர்க்கீழ் இறையிலியாக இட்ட நிலத்திலிருந்து அறுபது கலம் கொடுக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் வானரையன் விக்கிரமசோழனான ராஜகம்பீர வேளான் என்பவன். இக்கோயிலில் உள்ள ஞானசம்பந்தன் மடத்தில் வந்தமர்ந்து, இம்மடத்துக்குக் கீழ் புறம் உள்ள சொன்னவாறறிவான் திருநந்தவனத்திலே பூப்பறித்து நூறு, திருப்பள்ளித்தாமம் ஆக்கி இக்கோயில் இறைவனுக்கு அளிப்பதற்கு, இம்மடத்தைச் சேர்ந்த ஆண்டார்கள் மூவருக்கு அமுதுபடி உள்ளிட்ட செலவினங்களுக்கு மூன்றுமாவினால் குழி 1536-ம், நத்தமனை குழி நாற்பதும் பலரிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்நிலங்களுக்கு எல்லைகள் கூறும் போது முசுகுந்த விண்ணகர் எம்பெருமான் கோயில் திருவிடையாட்டம் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்புடையது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருவலஞ்சுழி
தஞ்சாவூர் திருவலஞ்சுழி இறைவனுக்கு வண்டுவாழ்குழலி சதுர்வேதி மங்கலத்தில் நிலத்தை விலைக்கு வாங்கி அகில்நாயகவிளாகம் என்ற பெயரால் தனி வளாகமாக்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தனி வளாகமாக சதுர்வேதி மங்கலத்திலிருந்து பிறித்தபோது அந்த வளாகத்தின் ஒரு பகுதி வண்டுவாழ் குழலி சருப்பேதி மங்கலம் என்நீ ஊரின் உட்புறத்தில் திருநந்தவனப் பகுதிகளும் சேருவதால் அதற்கு மாறாக அச்சருப்பேதி மங்கலத்திற்கு வேறோர் இடத்தில் நிலம் தரப்பட்டது. அந்த இடம் திருக்கை விலையிட்ட பற்று என்றும் இப்பற்று இவ்வூர் துரோகிகளிடமிருந்து திருக்கைப் பற்றாக பெறப்பட்டது என்றும் தெரிய வருகிறது. இந்த நிலங்களின் எல்லைகளாக அரசர் அரசியர் பெயரில் வாய்க்கால்களும் வதிகளும் கூறப்பட்டுள்ளன.
கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. இறுதிப் பகுதி கிடைக்கவில்லை.
திருவாரூர்>முத்துப்பேட்டை>வடகாடு கோயிலூர்
திருவாரூர் முடிவு Gums கல்வெட்டு. கோயிலுக்குரிய இறையிலி நிலங்களின் எல்லைகளைக் குறிக்கிறது. பெரிய தேவரான விக்கிரமசோழதேவரும் (1118-35) குறிக்கப்படுகிரர்.
திருவாரூர்>முத்துப்பேட்டை>வடகாடு கோயிலூர்
திருவாரூர் உசாத்தானமான கேரளகுலாசனிச் சதுர்வேதி மங்கலத்து சோழியவரையன் என்ற உன்னியன், உசாத்தானமுடைய நாயனாருக்கு இறையிலியாக நிலம் இரு மாவரையே முந்திரிகை அளித்த செய்தி கூறப்படுகிறது. இந்நிலத்தால் வரும் கடமை குடிமை, நினைப்பிட்டுத் தண்டும் வற்கங்களும் குறிப்பிடப்படுகின்றன. விக்கிரமசோழன் பட்டணம், சோழ திவாகர நல்லூர், கலியாணபுரங்கொண்ட சோழ நல்லூர் ஆகிய ஊர்களும் குறிக்கப்படுகின்றன.
திருவாரூர்>முத்துப்பேட்டை>வடகாடு கோயிலூர்
திருவாரூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் நாயனார்க்குப் பிராந்தகபுரத்து நகரத்தார்கள் 2 மா நிலத்தை அமுதுபடி வியஞ்சனங்களுக்கு இறையிலியாகக் கொடுத்த செய்தியையும் நிலத்திற்கு எல்லைகளையும் அத்தானத்தைக் கல்லிலே வெட்டிக் கொள்ள அனுமதியளித்தததையும் இக்கல்வெட்டுக் கூறுகிறது.
திருவாரூர்>முத்துப்பேட்டை>வடகாடு கோயிலூர்
திருவாரூர் விக்கிரமாபரணபுரத்து நகரத்தார்கள், இவ்வூர் (கேரளகுலாசனி சதுர்வேதி மங்கலத்து) கோயிலில் கிழக்குத்திருச்சுற்று மாளிகையில் உள்ள சூரியதேவருக்கு வழிபாட்டுக்காக கொம்மடிச் செய் என்ற பெயருடைய இருமாவரை நிலத்தை இறையிலியாக வழங்கிய செய்தி, அந்நிலத்திற்கு எல்லைககள் ஆகியவை காணப்படுகன்றன.
திருவாரூர்>முத்துப்பேட்டை>வடகாடு கோயிலூர்
திருவாரூர் ஸ்ரீபூவாழ்வுதந்த பெருமான் சதுர்வேதி மங்கலக்து மஹாஸபையோரும் சர்ச் கணக்கு மஹாஜனப்பிரியனும் தன்மப்பிரியனும், சாக்கானமான உசாத்தான முடைய நாயனார் கோயில் சுப்பிரமணியப் பிள்ளையாருக்குத் திருவமுதுப்படிக்கு இறையிலியாக நிலம் நீர்வார்த்துக் கொடுத்த செய்த கூறப்படுகிறது. மஹா சபையோரும் சர்க்கணக்கும கையெழுத்திட்டுள்ளனர், இதே மஹாசபை யோர், 20ஆவது ஆட்சியாண்டில் இறையிலியாக நிலம் அளித்துக் கையெழுத்திட்டிருக்கின்றனர். இக்கல்வெட்டில் ஊர்க்கணக்கர் ஜீவிதமும், சபைவினியோகமும், வேளான் விநியோகமும் குறிப்பிடப்படுகிறது.
திருவாரூர்>முத்துப்பேட்டை>வடகாடு கோயிலூர்
திருவாரூர் ஸ்ரீசுத்தவல்லிச் சதுர்வேதி மங்கலத்து கிராம காரியம் செய்கின்ற கூட்டப்பெரு மக்கள் அனைவரும், கேரளகுலாசனிச் சதுர்வேதி மங்கலத்து [வடகாடு கோயிலூர்] இருவுசாத்தானமுடையார் கோயிலுக்குத் திருநாமத்துக் காணியாகவும் இறையிலியாகவும் நிலம் அளித்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்நிலம், அக்கோயிலிலுள்ள உலகுடைய பெருமாளுக்குக் கள்யாண திருமேனி: எழுந்தருளுவிக்கவும், பிள்ளை இருங்கோளர் என்பவர் வெற்றிக்காகவும் [விஜயார்த்தமாக] பிள்ளை புரோசைக் குடையார் இக்கோயிலில் எழுந்தருளுவித்த காமக்கோட்ட முடைய பெரிய நாச்சியார்க்கு திருவமுதுப்படிக் குடலாகவும் அளிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இந்நிலம், மன்னனின் இருபத்தொன்றாவது ஆட்சியாண்டு மூதல் தரம்மாற்றி அளிக்கப்பட்டிருக்கிறது இந்நிலத்தால் வருகிற கடமையும், நினைப்பிட்டுத் தண்டும். குடிமையும் கோயிலுக்குச் செலுத்துமறு கூறப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டில் கோமடம் என்ற தொருமடம் இஞுந்த செய்தியும் காணப்படுகிறது. அம்மடத்தைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
திருவாரூர்>முத்துப்பேட்டை>வடகாடு கோயிலூர்
திருவாரூர் இருவுசாத்தானமுடையார் கோயிலுக்கு உரிய இறையிலி நிலத்திற்கும் திருவிளக்குப் புறமாக அளிக்கப்பட்ட நிலத்திற்கும் எல்லைகள் கூறப்பட்டிருக்கின்றன. எல்லைகளாகக் கூறப்படும் நிலத்திற்கும் அளவுகள் எண்ணாலும் எழுத்தாலும் கூறப்படுகின்றன. நிலத்திற்கு நீர்பாய்கிற வாய்க்கால்கள், ஆறுகளின் பெயர்களும், அந்தணர்கள் பலரின் நிலங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டிலிருந்து இக்கோயிலுக்கு திருவிளக்குப்புறமாக ஏராளமான நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டிருந்த செய்தி தெரிய வருகிறது. ராஐமஹேந்திர விண்ணகர ஆழ்வார் திருவிடையாட்ட நிலம் இரு இடங்களில் கூறப்படுகிறது.
திருவாரூர்>முத்துப்பேட்டை>வடகாடு கோயிலூர்
திருவாரூர் கேரளகுலாசனி சதுர்வேதி மங்கலத்து நிலம் தேவதான இறையிலியாககொடுக்கப்பட்டது. ஊரின் பெயரும் விக்கிரமசோழ நல்லூர் என்று மாற்றப் பட்டது. சகரணநல்லூர் என்ற ஊரின் நிலத்தையும் அந்நிலத்தோடு சேர்த்து கொடுத்துள்ளனர். இச்செய்தியில் நிலஎல்லைகள் கூறப்படுமிடத்து சில வாய்க்கால்கள் பெயரும், ஏரிகளின் பெயரும் தெரிகின்றன.
நாகப்பட்டினம்>வேதாரண்யம்>பஞ்சநதிக்குளம்
நாகப்பட்டினம் துண்டுக் கல்வெட்டு, அதிகாரிகள் இலர் கையெழுத்திட்ட இக்கல்வெட்டு இறைவனுக்கு அமுது படைப்பதற்காக நிவந்தம் அளிக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது.
நாகப்பட்டினம்>வேதாரண்யம்>பஞ்சநதிக்குளம்
நாகப்பட்டினம் ஸ்ரீமாஹேஸ்வரபூசைக்கும் திருப்போகசக்இத் திருமேனிக்கும் அமுது படைப்பதற்குஇறையிலியாக நிலம் விடீப்பட்ட செய்திக் கூறப்படுகிறது. எதிரிலி சோழ பட்டணம், எதிரிலி சோழன் சாலை, ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
நாகப்பட்டினம்>வேதாரண்யம்>பஞ்சநதிக்குளம்
நாகப்பட்டினம் தென்கோடீஸ்வரமுடையார் கோயில் இறைவியை இலர் எழுந்தருளுவித்து திருப்படி மாற்றுக்கு உபயமாக நாற்பது வராகன் பணம் கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுக் கூறுவதாகத் தெரிகிறது.
நாகப்பட்டினம்>வேதாரண்யம்>பஞ்சநதிக்குளம்
நாகப்பட்டினம் தனுஸ்கோடீஸ்வரமுடையாருக்கு எதிரிலிசோழ பட்டணத்தைச் சேர்ந்த சிலர் திருநுந்தா விளக்கு எரிப்பதற்கு நிலம் இறையிலியாக பண்ணிக்குடுத்த செய்தி கூறப்படுறது. நிலம் கொடுத்தோரின் பெயர்களும் கூறப்பட்டிருக்கின்றன.
திருவாரூர்>திருத்துறைப்பூண்டி>தீவாம்பாள் பட்டணம்
திருவாரூர் தற்கால எழுத்துக்களில் உள்ளது. தலைக்காகட்டு இறைவனுக்கு ஏதோ கொடுத்த செய்தி உள்ளது. மிகவும் சிதைந்து விட்டது.