திருவாரூர்திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொன்டான் மூன்றாம் இராஜராஜதேவனின் பதினெட்டாம் ஆண்டு 7157-ஆம் நாளில் எழுதப்பட்ட கல்வெட்டு இது. வண்டாழை வேஜூர்க் கூற்றத்து சாத்தமங்கலத்தைச் சார்ந்த தேவதாஸ நிலங்கள் சிலவற்றை இறையிலி செய்து கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. இராஜேந்திரசிங்க மூவேந்த வேளார் திருமந்திர ஓலையாகக் குறிக்கப்படுகிருர்.
திருவாரூர்திரிபுவன சக்கரவர்த்திகள் மூன்றாம் இராஜராஜ தேவனின் 7-ஆம் ஆண்டுக் கல்வெட்டு. இ. பி. 1222 ஜூன் 19ஆம் தேதிக்குச் சமமான கற்கடக ஞாயிற்று சுக்லபக்ஷத்து திங்கட்கிழமையும் பெற்ற ஆயிலியத்து நாள். சம்வத்சர இராமகாரியப் பெருமக்கள், சோழன் சுத்தமல்லிச் சதுர்வேதி மங்கலத்து மாருதி நல்லூரில் உள்ள நிலத்தினை, திருத்துறைப் பூண்டி உடையார் கோயிலுக்குத் திருக்குளம் வெட்டுவதற்காக விற்ற செய்தியைத் தருகிறது. குளத்தைச் சார்ந்த நிலங்கள் இறையிலி செய்யப்பட்டன. இந்த ஆவணத்தில் ஊர்ச் சபையார் 50 பேரின் கையெழுத்துக்களும் உள்ளன. இறையிலி நிலத்திற்கான சலுகைகள் வறையறுக்கப்பட்டன.
திருவாரூர்திரிபுவன சக்கரவர்த்திகள் மூன்றாம் ராஜராஜதேவனின் 26-ஆம் ஆண்டுக் கல்வெட்டு. இறையமங்கலம் என்னும் ஊரைச் சார்ந்த ஒரு பெண் தன் மக்களின் நலனுக்காக ஒரு விளக்கெரிக்கக் காசு கொடுத்ததைக் குறிக்கிறது
திருவாரூர்திரிபுவன சக்கரவர்த்திகள் மூன்றாம் இராஜராஜ தேவனின் பதினொன்றும் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இ. பி. 1227 மே 15-ஆம் தேதிக்குச் சமமான, ரிஷப ஞாயிற்று சனிக்கிழமையும் கார்த்திகை நக்ஷத்திரமும் பெற்ற பதினாலாம் நாள் - சாத்த மங்கலத்தில் வாழும் மக்கள் முருக்கன் குளம் என்ற குளத்தையும், இல நிலங்களையும் தானமாகக் கொடுத்ததைத் தெரிவிக்கிறது. இவ்வூரின் ஒரு பகுதி தேவதான நிலமாகவும், ஒரு பகுதி பள்ளிச்சந்த நிலமாகவும் குறிக்கப் படுகிறது. இராஜேந்திரசோழ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து திருத்துறைப்பூண்டி இறைவனுக்கு நந்தவனம் அமைக்க அந்நிலம் பயன்படுத்தப் பட வேண்டும். இக்கல்வெட்டு மூலம் சாத்தமங்கலத்தில் குலோத்துங்க சோழீச்சுரம் உடையார் கோயில் என்ற ஒன்று இருந்ததையும் அறிகிறோம்.
திருவாரூர்இத்துண்டுக் கல்வெட்டுக்களில் குந்தவைப் பெருவழி, தேவதானபள்ளிச்சந்தம் ஆழ்வான்மயக்கல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. உமைபங்களன் என்று இறைவனின் பெயர் ஒன்று அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.
திருவாரூர்இக்கோயில் இறைவனுக்கு அமதுபடி, சாத்துபடி மற்றும் வேண்டும் நிமந்தங்களுக்கு எட்டுவேலி நிலமும் தோப்பும், தோட்டமும், தோட்டக்கூறும் இறையிலியாக அளிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுக் கூறுகிறது. இராஜாக்கள் நாயனார் £ என்ற பெயர் மாறவர்மன் விக்கரமபாண்டியனுக்குரியது. இக்கல்வெட்டு அவனுக்குரியதாகலாம்.
திருவாரூர்குலசேகரபாண்டியன் காலத்தில் இக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் திருப்பணி நடந்திருக்கிறது, அதற்காக இறையிலியாக அவ்வூர் கைக்கோளர்களில் ஒருவன் நிலம் கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. ஒவ்வொரு வரியும் இறுதியில் சிதைந்துள்ளது.
திருவாரூர்வீதிவிடங்கப் பெருமாளான வில்லவராயன் தம்பேரால் வில்லவராயன் சந்தி என்ற பூஜை நடைபெறுவதற்கும், தன்பேரில் அமைந்த திருநந்தவனத்திற்கும், திருநந்தவனக்குடிகளுக்கும், சுப்பிரமணியப்பிள்ளையார்க்கு பூஜை நடைபெருவதற்கும் இறையிலியாக நிலம் கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுக் கூறுகிறது.
திருவாரூர்திருக்கொள்ளிக்காடுடைய மஹாதேவர் கோயில் ஆதிசண்டேசுவரதேவற்கு இறையிலியாகச் சாசனம் செய்து கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுக் கூறுகிறது, முற்றுப் பெறவில்லை.
திருவாரூர்கோயிலில் இருந்து காணியாக நிலம் பெற்ற அமரசுந்தரன் அணுக்கள், அமர சுந்தர மதுராந்தகதேவன், ஆட்கொண்டான் பெரிய பிள்ளை. அட்கொண்டான் பெரிய வேளான் அமரசுந்தரன் தூணி நற்சோதி ஆகிய ஐவர் தங்கள் நிலத்தை கோயில் தேவகன்மிகளாகய ஆதிசண்டேசுர தேவரிடம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்படுகின்றது. அவர்கள் விற்றுக் கொடுத்த நிலம் மூன்று மா என குறிபி பிடப்படுகின்றது. ஆதிசண்டேசுரதேவரிடமிருந்து அவர்கள் இறை காவலாக பத்துகாசு பெற்ற செய்தியும் உள்ளது. மேற்கூறப்பட்ட ஐவரும் ஒரே குலத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இவர்கள் குலத்தைச் சேர்ந்த விழுப்பரையன் என்பவனின் நிலமும் இவர்கள் நிலத்தின் அருகிலேயே இருந்திருத்தல் வேண்டும். ஆகவேதான் இவர்கள், எங்கள் குலத்தில் விழுப்பரையன் மயக்கலில் வடக்கு என்று, தங்கள் நிலத்திற்கு எல்லைகள் கூறும் போது குறிப்பிடுகின்றனர்.
திருவாரூர்இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியுடன் கல்வெட்டு தொடங்குகிறது. ஆர்வலக் கூற்றத்துப் பிரமதேயமான பூதிக்குடி சபையினர், கொள்ளிக்காட்டு மகாதேவருக்கு இறையிலி சாசனம் செய்து கொடுத்த செய்தியைக் குறிக்கிறது. கல்வெட்டின் முடிவு இல்லை, பிற்பகுதி கட்டிடத்தினுள் சென்றுவிட்டது.
திருவாரூர்இருக்கொள்ளிக்காட்டிலுள்ள சிலர், கோயில் நிலத்தை உத்தமசோழனின் மூன்றாம் ஆட்யொண்டு முதல், முதல் ராஜேந்திரசோழனின் இருபத்தி மூன்றாம் ஆட்யொண்டு வரை அனுபவித்து வந்தனர். இதற்காகத் இருவெண்டுறை அன்னதானயோகிகள் உள்ளிட்ட ஸ்ரீமாஹேஸ்வரர்கள் ( கோயில் நிர்வாகிகள்) மன்னனிடம் (முதலாம் இராஜேந்திரன்) சென்று வழக்குத் தொடர்கின்றனர். மன்னன் அதிகாரி ஸ்ரீஇராஜேந்திரசோழ மூவேந்த வேளானை அழைத்து, அதனை விசாரிக்குமாறு கூறுகிறான். இராஜேந்திரசோழ மூவேந்தவேளார், அன்னதானயோகிகள் உள்ளிட்ட ஸ்ரீமாகேஸ்வரர்களை அழைத்து விசாரித்தான். இவர்கள் நிலத்தை அனுபவித்து வந்தது உண்டு என்று அறிகிறான். அதனால் அவர்களைத் தண்டிக்கிறான். தண்டீமாக, முன்பிருந்த இருநூறு காசுகளை இரட்டித்து நானூறு காசுகளாகச் செலுத்தவேண்டும் என்று ஆணையிடுகிறான். அக்காஇற்குப் பதிலாக அந்நிலத்தையே இறையிலி செய்து கொடுத்து விடுவதாக வேண்டிக் கொள்கின்றனர். அவர்கள் சம்மதித்த பின்னர், மாண்டவயன் சந்திர சேகரன். மாண்டவயன் திருமூலட்டான தேவன் ஆகியோர் கூடியிருந்து, அந் நிலத்தை இறையிலி நிலமாகச் செய்து கொடுத்த செய்தியும் இந்நிலங்களுக்கு எல்லைகளும் கூறப்பட்டிருக்கின்றன.
திருவாரூர்கொள்ளிக்காடுடையான் அணுக்கம் பு[த்த]னான ஆர்வலநாட்ட£ மூவேந்தவேளான் கோயில் வழிபாட்டிற்காகவும் நிவந்தத்திற்காகவும் அருமுளைச்சேரியான / மறை/ய மங்கலத்தில் 1 வேலிநிலம் அளித்ததோடு 200 காசு பொன் இறை காவலாக அளித்த மாராயமங்கலத்து மகாசபையார் இறையிலி நிலமாக ஆக்குகிருர்கள் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது.
திருவாரூர்முதலாம் இராஜராஜனின் மெய்கீர்த்தியோடு ஆரம்பமாகிறது இக்கல்வெட்டில் ut ghee ஆச்சன் குன்றன், அவனுடைய தம்பி ஆச்சன் அடிகள் இருவரும் : கோயிலில் சங்கு, காளம், செகண்டிகை ஆகியவை ஒலிப்பதற்கு நிவந்தவாக நிலம் ஒன்றே அரைக்காலும், பழைய மனை ஒன்றும் கொடுத்த செய்தி குறிக்கப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரும் செகண்டிகை ஒன்றும் சங்கு காளம் இரண்டும், ஓலிப்பதற்கு தேவைப்படும் ஆட்கள் மூன்று பேருக்கு நிலம் அரையே மாகாணி கொடுத்திருக்கின்றனர். அந்நிலங்களுக்கு எல்லைகளும் இந்நிலத்தை இறையிலிசெய்து ஊரார் கல்வெட்டுக் கொடுத்தச் செய்தியும் கூறப்பட்டிருக்கின்றன.
திருவாரூர்இராஜராஜன் மெய்க்கீர்த்தியடன் தொடங்குகிறது. திருக்கொள்ளிக்காட்டு இறைவனுக்கு (திருவமுது) வழிபாட்டுக்கும், அங்கு பணிபுரிய இரண்டு ஆட் களுக்கும் நிலம் அளித்த செய்தி குறிக்கப்படுகிறது. அந்நிலத்தின் எல்லைகள் கூறப்படுகின்றன. அந்நிலத்து உரிய வரிகளைத் திருக்கொள்ளிக்காக்டு ஊர்ச்சபை ஏற்றல் வேண்டும். பின்னர் அதனையும் நீக்கி இறையிலி செய்து கொடுத்தமை தெரிகிறது. ஒரு காலத்திற்கு நான்கு நாழி வீதம் மூன்று கால வழிபாட்டுக்கும் அரிசி குறுணி நானாழியும், ஆளிருவருக்கும் தினம் பதக்கு நெல் வீதமும் அளிக்கப் பட்டது. இதற்கெனக் கொடுத்த நிலத்தின் அளவு ஒன்றே ஒருமாமுக்காணி நிலம் ஆகும்.
திருவாரூர்திருவரங்கநாராயண பட்டன். . . ராசானி என்பான் இக்சோயில் இறைவன் இருவாண்டளந்தருளிய நாயனாருக்குத் திருவிளக்குப்புறமாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. அந்நிலத்தின் எல்லைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
நாகப்பட்டினம்இக்கால தமிழ் எழுத்தில் உள்ளது. கல்வெட்டு முடிவில் சிதைந்துள்ளது, இருவாய்மியூர் இறைவன் தம்பிரானாருக்குச் சொந்தமாக ஆலங்குடியைச் சேர்ந்த 25 வேலி நிலம் குறிப்பிடப்படுகின்றது.