நாகப்பட்டினம்திரிபுவனவீரதேவனான மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதலாண்டு 45-ஆவது நாளில் அழகிய கூத்தர் எழுந்தருளுவிக்கப்பட்டதையும் இராஜேந்திர சோழனின் 8-ஆவது ஆட்சியாண்டில் அவ்வழகய கூத்தருக்குத் திருவமுது மற்றும் வேண்டும் நிவத்தங்களுக்கு இறையிலியாகக் கொடுத்த நிலம் பற்றிக் குறிக்கிறது.
திருவாரூர்கல்வெட்டின் தொடக்கம் இல்லை. எனினும் இறைவனின் அமுதுபடிக்காக வேதவன நாயகநம்பி என்பான் நிலம் அளித்ததைக் குறிக்கிறது. உ. லோகம இத்த மங்கலம் அவனது ஊரெனத் தெரிகிறது, அந்நிலத்தின் எல்லைகள் குறிக்கப்படுகின்றன.
திருவாரூர்இக்கல்வெட்டில் ஊர் நத்தத்து இறையிலி மனைக்கு எல்லைகளாகச் சில தெருக்கள், நிலம் ஆகியவைகளும் அவ்வாறு கூறப்படும் நிலம் மும்மாவரைக்கு அந்தராயம் எனும் வரி செலுத்துவது பற்றியும் கூறப்படுகின்றன. யாரால் எதற்குக் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள இயலவில்லை கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.
திருவாரூர்மன்னன் பெயர் காணப்படாத இக்கல்வெட்டு, இவ்வூர் சபையார், பொன்னைப் பெற்றுக் கொண்டு ஊர் நிலத்தை, இறையிலியாக விற்றுக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது.
திருவாரூர்கச்சனத்தைச் சேர்ந்த நிலப்படி உடையான் சிவந்தவனப்பெருமான் என்பவரிடமிருந்து 2, 800 காசுகளைப் பெற்றுக் கொண்டு சிவப் பிராமணர்கள் இறைவனுக்கு விளக்கு எரிக்க ஒப்புக்கொண்ட செய்தி உள்ளது.
திருவாரூர்முதல் நான்கு வரிகளின் இறுதி காணப்படவில்லை, அரியலூர் ஆளுடையான் இல்லை நாயகன் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இறைவனுக்கு விளக்கெரிக்க ஒப்புக் கொண்டதைத் தெரிவிக்கிறது.
திருவாரூர்சிவப் பிராமணர்கள் கோயிற்கணக்கரிடமிருந்து 100 காசினைப் பெற்றுக் கொண்டு இறைவனுக்கு நொந்தா விளக்கு எரிப்பதற்கு ஒத்துக் கொண்ட செய்தியைத் தருகிறது. .
திருவாரூர்கல்வெட்டுச் சிதைந்துள்ளது. ராஜேந்திரசோழ வளநாட்டு, ஆர்வலக் கூற்றத்துத் திருக்கச்சனத்துக் கோயில் சிவப் பிராமணர்கள் தனியார் ஒருவரிடமிருந்து 100 காசினைப் பெற்றுக் கொண்டு இறைவனுக்கு ஒரு நொந்தா விளக்கு எரிக்கச் சம்மதித்த செய்தி காணப்படுகிறது.
நாகப்பட்டினம்அரசன் உடல்நலம் பெறுவதற்காக திருவகத்தியான்பள்ளி உடையார் கோயிலில் திருவிழாகொண்டாடப்பட்டது. இத்திருவிழாவிற்காக ஐந்து வேலி நிலம் இறையிலியாக அளிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுக் குறிக்கிறது.
திருப்பூர்உலகுடைய பிராட்டிச் சதுர்வேதி மங்கலத்து விக்கிரமசோழ விண்ணகர் எம்பெருமானுக்கு திருப்போனகம்இறைவனுக்கு படைக்கும் உணவு) செய்ய 23 அச்சுப் பொன்னினை கோயில் பண்டாரத்தில் அளித்து, ஒரு பருவத்திற்கு இருபத்து முக்கல நெல் அளிக்க இவ்வூர் சபையாருக்கு அரசன் ஆணையிட்டுள்ளான்.
திருப்பூர்சிதைந்த கல்வெட்டு. வீரசோழன் திருமடைவிளாகத்து கைக்கோளரில் கண்டன் கணடறுசதி என்பவன் இக்கோயில் இறைவியான நானாதேசி நங்கை என்றழைக்கப்படும் பிடாரி அம்மனுக்கு சந்தியா தீபம் ஒன்று வைக்க துளை கழஞ்சு பொன் வைத்தச் செய்தி.
திருப்பூர்இக்கோயில் இறைவி பெருங்கருணைச் செல்விக்கு அமுதுபடிக்காக நிலக்கொடை அளித்தச் செய்தி திருக்கடைக்குறிச்சி, நீர் பாய்கிற கவரூ ஆகிய சொற்கள் குறிப்பிடத்தக்கவை.
திருப்பூர்சொக்கநாத நாயினார் கோயில் திருக்காமகோட்ட நாச்சியார் அழகிய சொக்கியார்க்கு அரசன் இறையிலியாக இரண்டுமா அரைக்காணி நிலம் அளித்தச் செய்தி. வீரசோழ மன்னறை, குலோத்துங்க சோழ மன்னறை, குமணராயன் பற்று ஆகிய நிலப் பெயர்கள் குறிப்பிடத்தக்கவை.
திருப்பூர்பெருமாள் வாளிலாரில் (அரசர்படை வாள்வீரர்) கேரளகேசரி அமரபயங்கரன் கோட்புலியார் என்பவன் இறைவன் நீராடுவதற்கு அன்றாடம் மூன்று குடம் நீர் கொண்டு வர பொற்காசுக் கொடை அளித்த செய்தி.