Skip to main content

1146 results found

திருப்பூர்>தாராபுரம்>பிரம்மியம்
திருப்பூர் அரசன் பிரமதேய சபை அளிக்க வேண்டிய இறை ஒரு கழஞ்சும் மேலும் இருபத்தெட்டுக் கழஞ்சும் சந்தனப்புறத் துக்காக அளித்துள்ளான்.
திருப்பூர்>தாராபுரம்>பிரம்மியம்
திருப்பூர் வீரசங்காதச் சதுர்வேதி மங்கலத்து வியாபாரி உலோகபாலன் என்பவன் இறைவனுக்குத் திருசாந்து சாத்தி பூசை செய்ய ஆனை அச்சு ஒன்று கொடையாகக் கொடுத்தச் செய்தி.
திருப்பூர்>தாராபுரம்>பிரம்மியம்
திருப்பூர் திருவலஞ்சுழி மகாதேவர்க்கு தினமும் மூன்று சந்தியின் போதும் அபிஷேகமும், சந்தனக் காப்பும் செய்திட வேண்டி 15 கழஞ்சு பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட நிலத்தினை பிறம்மாதிராசன் இறை இழித்துக் கொடுத்துள்ளான்.
திருப்பூர்>காங்கேயம்>மறவபாளையம்
திருப்பூர் தென்கரை நாட்டுக் கொற்றனூரில் உள்ள அப்பரமேஸ்வரர் கோயில் இறைவனுக்கு விடியல் வழிபாட்டிற்கு நீலன் பேரூரில் மேல்கரையிலுள்ள ஏழுமா நிலம் அளித்த செய்தி. இந்த ஏழுமா நிலத்தின் வாயிலாக இராசகேசரி மரக்காலால் 24 கலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்>தாராபுரம்>அலங்கியம்
திருப்பூர் வீரராசேந்திர அதியமான் என்பானின் அண்ணன் விருதராயர் என்பவன் திருப்புதியதுக்கு இறைவனுக்கு முதல் விளைவைக் கொண்டு படையல் செய்யும் ஓர் உணவு அதாவது இதில் குறிப்பிட்டுள்ள திருப்பண்ணியாரம் எனலாம். ) ஒதுக்கிய நிலம் போதமையால் இவனும் ஒரு குறிப்பிட்ட நிலத்தை திருப்புதியதுக்குத் தானமாக வழங்கியுள்ளான்.
திருப்பூர்>தாராபுரம்>கொங்கூர்
திருப்பூர் அரசன் தேவதான இறையிலியாக மகா மண்டலவாணராய நல்லூர் என்னும் ஊர் ஒன்றினைக் கொடுத்தச் செய்தி. பசுபத்சுவரர் கோயில் இறைவன் வழிபாட்டிற்கு தேவையான அழுதபடி மற்றும் கோயில் திருப்பணிக்காக வேண்டி ஒரு கிராமத்தினை தேவதான இறையிலியாக அளித்துள்ளான்.
திருப்பூர்>தாராபுரம்>கொங்கூர்
திருப்பூர் குலோத்துந்க சோழ அனுத்திர பல்லவராயன் என்பவன் பசுபதீசுவரர் கோயில் இறைவனுக்கு அமுதுபடிக்காக நிலம் கொடுத்தச் செய்தி.
திருப்பூர்>காங்கேயம்>பரஞ்சேர்வழி
திருப்பூர் பரஞ்சேர்பள்ளி இறைவனுக்கு பரஞ்சேர்பள்ளிபடாகையைக் கொடையாக அளித்த செய்தி.
திருப்பூர்>காங்கேயம்>வள்ளியிறைச்சல்
திருப்பூர் வள்ளியெறிச்சில் வெள்ளாளர்கள் மாந்தளீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு அமுதுபடிக்காகக் நிலம் கொடுத்தச் செய்தி கூறப்பெறுகின்றது.
திருப்பூர்>காங்கேயம்>வள்ளியிறைச்சல்
திருப்பூர் துண்டு கல்வெட்டு. இக்கோயில் இறைவிக்கு (திருக்காமக் கோட்டட நாச்சியார்) அரிசிக் கொடை கூறப்பெறுகின்றது.
திருப்பூர்>காங்கேயம்>பட்டாலி
திருப்பூர் பட்டாலியூரார் அரசனுக்கு அளிக்க வேண்டிய 40 அச்சு இறை(வரி) அமுதுபடிக்காக நெல் அளப்பதாகச் கூறிய செய்தி.
திருப்பூர்>காங்கேயம்>பட்டாலி
திருப்பூர் வீரராசேந்திரனின் பெயரால் இக்கோயிலில் ஏற்படுத்தப்பட சந்தியின் போது இறைவனுக்கு அமுதுபடிக்காக ஆண்டுத் தேவைக்கு நாற்பத்தைந்து கலம் நெல்லுக்காக முக்கழஞ்சேய் முக்காலே மஞ்சாடி பொன் அண்ணி அனிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி>திருநெல்வேலி>நகரம்
திருநெல்வேலி மழவராயர் என்ற அதிகாரி தான் வழிபட்டு வந்த இறைவர்க்குக் கொடுத்த தானம்.
திருநெல்வேலி>திருநெல்வேலி>நகரம்
திருநெல்வேலி ஜெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு இக்கோயில் இறைவர் திருமுன்பு திருஞானம் ஓதும் பேர்களுக்கு கொடுக்கப்பட்ட தானத்தைப் பற்றித் தெரிவிக்கின்றது. நிலம் மற்றும் போஜனம் உள்ளிட்டனவுக்கும் வழங்கப்பட்ட தானச்செய்தி இடம்பெற்றுள்ளது. திருஞானம் ஓதுவார்கள் குருசிஷ்ய பரம்பயைராக வழிவழி வந்துள்ளனர் என்பதும் தெரிகின்றது.
திருநெல்வேலி>திருநெல்வேலி>நகரம்
திருநெல்வேலி இக்கோயில் இறைவர் முன்பு திருஞானம் ஓதுதற்காக விடப்பட்ட நிலம் ஒன்றே எட்டுமா கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. தேவாரம் பாடுகின்றவர்கள் வம்ச பாரம்பரியமாக இருந்து வந்தனர். குரு சிஷ்ய பரம்பரையாக இருந்தனர். இத்தானம் திருஞானப்புறம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
திருநெல்வேலி>திருநெல்வேலி>நகரம்
திருநெல்வேலி மதுரை நாயக்கர் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் இக்கோயில் திருமஞ்சனம் மற்றும் பிறசெலவுக்காக விட்ட இறைஇலிக் கொடை கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி>திருநெல்வேலி>நகரம்
திருநெல்வேலி இக்கோயில் தானத்தாரிடம் கொடுக்கப்பட்ட நிலத்தானம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இறைவியின் முன்னர் அமாவாசை தோறும் வேதம் ஓதும் பட்டர்க்கு ஒருமாவும், விநாயகர்க்கு திருநந்தவனம் செய்பவனுக்கு நிலம் ஒருமாவும் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
திருநெல்வேலி>திருநெல்வேலி>நகரம்
திருநெல்வேலி இறைவனுக்கும், இறைவிக்கும் தினமும் அமுதுபடி, சாத்துப்படி, முதலானவை படைக்க செய்யப்பட்ட கொடை.
திருநெல்வேலி>திருநெல்வேலி>டவுன்
திருநெல்வேலி ஓடைப்புறமாக ஒன்றரை வேலி நிலம் இறையிலியாக வழங்கப்பட்ட செய்தியைத் தருகிறது. திருநெல்வேலியில் பொன்னாம்பலம் கட்டிய செய்தி சொல்லப்படுகிறது.
திருநெல்வேலி>பாளையங்கோட்டை>குறிச்சி
திருநெல்வேலி நட்டுவனார் ஒருவர் செய்த இறைச் செயலை விளக்க அவர் பெயருடன் காணப்படுகின்றது இதே பெயர் இருமுறை வந்துள்ளது வெவ்வேறான இடங்களில்