-திருவலஞ்சுழி மகாதேவர்க்கு தினமும் மூன்று சந்தியின் போதும் அபிஷேகமும், சந்தனக் காப்பும் செய்திட வேண்டி 15 கழஞ்சு பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட நிலத்தினை பிறம்மாதிராசன் இறை இழித்துக் கொடுத்துள்ளான்.
-தென்கரை நாட்டுக் கொற்றனூரில் உள்ள அப்பரமேஸ்வரர் கோயில் இறைவனுக்கு விடியல் வழிபாட்டிற்கு நீலன் பேரூரில் மேல்கரையிலுள்ள ஏழுமா நிலம் அளித்த செய்தி. இந்த ஏழுமா நிலத்தின் வாயிலாக இராசகேசரி மரக்காலால் 24 கலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-வீரராசேந்திர அதியமான் என்பானின் அண்ணன் விருதராயர் என்பவன் திருப்புதியதுக்கு இறைவனுக்கு முதல் விளைவைக் கொண்டு படையல் செய்யும் ஓர் உணவு அதாவது இதில் குறிப்பிட்டுள்ள திருப்பண்ணியாரம் எனலாம். ) ஒதுக்கிய நிலம் போதமையால் இவனும் ஒரு குறிப்பிட்ட நிலத்தை திருப்புதியதுக்குத் தானமாக வழங்கியுள்ளான்.
-அரசன் தேவதான இறையிலியாக மகா மண்டலவாணராய நல்லூர் என்னும் ஊர் ஒன்றினைக் கொடுத்தச் செய்தி. பசுபத்சுவரர் கோயில் இறைவன் வழிபாட்டிற்கு தேவையான அழுதபடி மற்றும் கோயில் திருப்பணிக்காக வேண்டி ஒரு கிராமத்தினை தேவதான இறையிலியாக அளித்துள்ளான்.
-ஜெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு இக்கோயில் இறைவர் திருமுன்பு திருஞானம் ஓதும் பேர்களுக்கு கொடுக்கப்பட்ட தானத்தைப் பற்றித் தெரிவிக்கின்றது. நிலம் மற்றும் போஜனம் உள்ளிட்டனவுக்கும் வழங்கப்பட்ட தானச்செய்தி இடம்பெற்றுள்ளது. திருஞானம் ஓதுவார்கள் குருசிஷ்ய பரம்பயைராக வழிவழி வந்துள்ளனர் என்பதும் தெரிகின்றது.
-இக்கோயில் இறைவர் முன்பு திருஞானம் ஓதுதற்காக விடப்பட்ட நிலம் ஒன்றே எட்டுமா கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. தேவாரம் பாடுகின்றவர்கள் வம்ச பாரம்பரியமாக இருந்து வந்தனர். குரு சிஷ்ய பரம்பரையாக இருந்தனர். இத்தானம் திருஞானப்புறம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
-இக்கோயில் தானத்தாரிடம் கொடுக்கப்பட்ட நிலத்தானம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இறைவியின் முன்னர் அமாவாசை தோறும் வேதம் ஓதும் பட்டர்க்கு ஒருமாவும், விநாயகர்க்கு திருநந்தவனம் செய்பவனுக்கு நிலம் ஒருமாவும் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.