1128 results found
திருநெல்வேலி>பாளையங்கோட்டை>இராஜவல்லிபுரம்
- இராசவல்லிபுரத்து நகரத்தோம் அமுதுபடி சாத்துப் படிக்காக கடமை போக மீதம் உள்ள வரு வாயினை இறைவனுக்கு வழங்கிய செய்தியைத் தருகிறது.திருநெல்வேலி>பாளையங்கோட்டை>இராஜவல்லிபுரம்
- மஹாசபையார் தேவதான இறையிலியாக 9 மாநிலம் கொடுத்த செய்தியைத் தருகிறது. சுந்தரபாண்டியன் சந்தி என்ற பெயரில் வழிபாடு நடைபெற இந்நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி>பாளையங்கோட்டை>பாளையங்கோட்டை
- இறைவனுக்குத் திருப்போனகவகைக்கும், பாசியம் படிப்பதற்காகவும் விட்டலதேவ மஹாராயரின் காரிய கர்த்தர் இராமப்ப நாயக்கர் அய்யன் நிலதானம் வழங்கிய செய்தியைக் கூறுகிறது.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- திருக்கோடிகா உடையார் கோயில் தேவகன்மிகள், கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் மனுவூருடையார் வலந்தரும் கூத்தப் பெருமாளுக்கு எழுதிக்கொடுத்த பிரமாண இசைவுத் தீட்டு இது. தியாக வினோத விழுப்பரையரின் காணியான அரைமாவும், இவரது குருவான வலந்தரும் கூத்தப்பெருமாளுக்குக் கொடையாகக் கொடுத்த நிலம் அரைமாவும் ஆக ஒருமா நிலம் இறையிலி செய்து கொடுக்கப் பட்டது.இந்நிலம் இறையிலி செய்து கொடுத்ததற்கு மாற்றாக, இக்கோயிலின் தேவதானம் கண்ணமங்கலத்திலுள்ள இரண்டு மா நிலத்தினைத் திருநாமத்துக் காணியாக்கி, அதிலிருந்து வரும் நெல்லினைப் பண்டாரத்தில் அளக்க வேண்டும் எனவும், அந்நிலத்தினைத் திருநாமத்துக் காணியாக அளிக்க வேண்டுமெனவும் இக்கோயில் தானத்தாரும், மாஹேஸ்வரரும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இது அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. மேலும் திருக்கோடிக்காவுடையார் கோயில் திருப்பணிக்கு 150 காசு கொடுக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு மூலம் அறிகிறோம். வலந்தரும் கூத்தப் பெருமாள் ஒரு குரு என்பதையும், அவர் இத்திருக்கோடி காவுடையார் கோயிலில் குருஸ்தானமாகத் திருப்பெருந்துறை ஆளுடையாரை எழுந்தருளுவித்தார் என்ற செய்தியையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கோயில் கணக்கர், தேவகன்மி, ஸ்ரீகார்யம், சைவாச்சார்யர், மாஹேஸ்வரக் கண்காணி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். கல்வெட்டு இடையிடையே பெரிதும் சிதைந்து விட்டதால் தெளிவாகத் தொடர்ச்சியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- பரதாளூரைச் சேர்ந்த சங்கரதேவன் திருக்கோடிக்காவுடையாரை அமாவாசை தோறும் எழுந்தருளுவித்துத் தீர்த்த மாடச் செய்யும் ஏற்பாட்டுக்கு அளித்த நிலக்கொடையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதற்காக இவர் அளித்த இரண்டுமா நிலத்திலிருந்து பெறும் 24 கல நெல்லினைக் கொண்டு, ஆண்டுக்கு வரும் 14 அமாவாசைகளிலும் இறைவனை எழுந்தருளுவிக்கச் செய்தல் வேண்டும். நிலத்தின் எல்லைகளும் குறிக்கப் படுகின்றன. அவைகளில் குறுக்கை வாய்க்கால், பூவேந்திரசோழன் வாய்க்கால் ஆகியன குறிக்கப்படுகின்றன.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- விருதராசபயங்கர வளநாட்டுக்கு உட்பட்ட நல்லாற்றூர் நாட்டுத் திருக்கோடிக் காவில் எழுந்தருடியிருக்கும் இறைவன் திருக்கோடிக்காவுடையார்க்கு நொந்தா விளக்கெரிப்பதற்கான நெய்க்காக நிலம் கொடையாக வழங்கப்பட்டதை இக் கல்வெட்டு காட்டுகிறது. கொடுக்கப்பட்ட நிலம் இருமா வரை என்பதும், அதிலிருந்து வரும் நெல் முப்பத்து ஏழு (கலம்) என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- திருக்கோடிக்காவாகிய கண்ணமங்கலத்துச் சபையாரிடம் மாசேனன் மாதன் என்பவன் எட்டு மா நிலத்தை விலைக்கு வாங்கிக் கோயிலுக்குக் கொடை அளித்திருக்க கின்றான். அந்நிலத்திற்கு இறையும் எச்சோறும் ஆகிய வரிகள் செலுத்த வேண்டாது காத்துக் குடுப்பதாகக் இறையிலியாக) கண்ணமங்கலத்துச் சபையோர் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் அவனிடமிருந்து ஒரு கழஞ்சுப் பொன்னைப் பெற்றுக்கொண்ட திருக்கோயிலுடை சர்கள், காவிரியிலிருத்து ஒரு பொழுதுக்கு ஐந்து குடம் நீர், இறைவனை நீராட்டுவதற்காகக் கொண்டுவந்து தருவதாக ஒப்புக் கொண்டனர். இந்த பொன்னிலிருந்து கிடைக்கப்பெறும் (பலிசையால்) வட்டிப் பணத்தால் தூணி (நான்கு மரக்கால்) அளவு நீர் கொள்ளும் குடம் ஒன்று வாங்கிக் கொள்வதாகவும் இசைந்திருக்கின்றனர்.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- திருக்கோடிக்காவாகிய கண்ணமங்கலத்திலுள்ள ஆலங்கொல்லை என்ற பெய ருடைய அரையே இரண்டு மா நிலத்தை, இவ்வூர் மகாதேவர் கோயிலுக்குப் பழையாற்று நந்திபுரத்தைச் சேர்ந்த குமரன் கணவதி என்ற வியா ஒரி, மட விளாகமாக அளித்திருக்கிறான். இந்த நிலத்தை இறையிலி செய்துகொடுப்பதற்காக அவனே ஐங் கழஞ்சரை பொன்னையும் கொடுத்திருக்கிறான். இந்தப் பொன்னைப் பெற்றுக் கொண் திருக்கோடிக்காவாகிய கண்ணமங்கலத்துச் சபையோர் இறையிலி (வரி நீக்கம்) செய்து கொடுத்திருக்கின்றனர்.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- திருக்கோடிக்காவல் இறைவனுக்கு இறையிலியாக (காவிரியின்) வடகரை நல்லாற்றூர் நாட்டு பிரமதேசம் நாரணக்கச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோர்கள், நிலம் விலைக்கு வாங்கிக் கொடுத்தனர். இந்த நிலத்தின் அளவு முக்கால் செய் ஆகும். இந்த நிலத்தின் எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.இக்கல்வெட்டும் பழைய கல்வெட்டின் புதிய படி. முன்னர் கூறியதுபோலவே, பழைய கல்வெட்டுப் பொறித்த தனிக்கல் பயன்படாத காரணத்தினால் அது தவிர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- திருக்கோடிக்கா மகாதேவர் கோயிலில் இறைவனுக்குத் திருவமுது படைத்து வழிபாடு செய்வதற்காகப் பேராவூர் நாட்டுக் காவனூருடையான் பன்னிரண்டு கழஞ்சுச் செம்பொன் வழங்கியிருக்கிறான். இப்பொன்னிற்கு வட்டி (பலிசை) விகிதம் கலனேய் முக்குறுணி நெல்லாகும். இதன்படி ஆண்டு ஒன்றுக்குப் பதினைந்து கலநெல் வட்டியாகிறது. இந்த வட்டி நெல்லின் மூலமாக இவ்வூர் மகாதேவருக்குத் திருவமுது படைத்து வழிபாடு செய்வதற்காக, நாள் ஒன்றுக்கு நானாழி நெல் வீதம் இக்கோயிலில் அர்ச்சனை செய்து வருபவனிடம் கொடுக்கப்பட்டது.இவ்வாறு தானமாகக் கொடுக்கப்பட்ட மூலதனமாகிய பன்னிரண்டு கழஞ்சுச் செம்பொன்னைப் பெற்றுக்கொண்டு மேற்கூறிய விகிதத்தில் வட்டியளிக்க சம்மதித் தவர்கள் கஞ்சனூர் உள்ளிட்ட மகேந்திரக் கோட்டூர்ச் சபையோர் ஆவர். இவர்கள் சம்மதித்தபின், கோயில் நிர்வாகிகளாகிய பன்மாயேசுவரர்கள், மேற்கூறிய வட்டி நெல்லினைக் கொண்டு, நாள் ஒன்றுக்கு நான்கு நாழி நெல் வீதம் திருவமுதுக்குப் பயன்படுத்துவதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் கஞ்சனூர் உள்ளிட்ட மகேந்திரக்கோட்டூர்ச் சபையார் தாங்கள் பன்னிரு கழஞ்சுப் பொன்னை மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு இணங்கப் பெற்றுக்கொண்டதனையும் எழுதிக் கொடுத்தனர்.