Skip to main content

1128 results found

திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This 4th regnal year record of Rajendra 1, refers to the donation of a grove, by one Adiyiraman Rajarajan. This 500 Kuli of grove was situated on the western side of the village Salappagaippundi, and was donated as Nandavanappuram. ஊர்க் கல்வெட்டு எண் 126 இறுதி வரியினைத் தொடர்ந்து இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது, தாமரைப்பாக்கத்து இறைவனுக்கு நந்தவனம் அமைப்பதற்காகப் பங்கள நாடுடைய அதியிராமன் ராஜராஜன் என்பவன் சலப்பகைப் பூண்டியின் மேற்குப்பகுதியில் அமைந்த தென்னந்தோட்டம், பலா, இலுப்பை முதலிய மரங்கள் அடர்ந்த 300 குழி பரப்புள்ள நிலத்தினைக் கொடையாகக் கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது, இவனது ஆணைக்கிணங்க இவனது கன்மி (அலுவலர்) அங்கமூழான் என்பான் இச்செய்தியை ஆவணமாக எழுதிக் கல்லில் பொறித்துள்ளான்.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This inscription is dated ix the 41st reginal year of Madurai koada parakesari, Parantaka cholal. Engraved in coatinuation of No 11 above. Records the gift of 9) sheep to burn a parp2tual lamp to th: deity of Tamaraippakkam by Singatti Kuruman, a landlord of Tamaraippakam for the merit of his mother Kesinangai. கல்வெட்டு எண்12 இறுதி வரியினைத் தொடர்ந்து இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தாமரைப்பாக்கத்துக் இழான் ங்குட்டி குறும்பன் என்பான் தனது தாய் கேசிநங்கையின் ஈறப்பிற்காகத் தாமரைப்பாக்கத்து இறைவனுக்கு ஒரு நந்தா விளக்த எரிப்பதற்காகத் தொண்ணாறு ஆடுகள் கொடையளித்த செய்தியை, இக்கல்வெட்டு கூறுகிறது.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This inscription belongs to the Chola king Madurai konda Rajakesari Sundara chola. Engraved in continuation of No. 9 above, records a grant of land in Salappagaipundi to make some provision for feeding brahmanas (uttamagram) daily in the Mahadeva temple of Tamaraip- pakkam by Irumadi Prithiyangaraiyan of Pangala nadu. The 32nd regnal year mentioned in this record raises a doubt. Maduraikonda Rajakesari Sundra Chola s highest known regnal year is only 19. As the inscription is reengraved, some errors might have been occured whils doing so பங்களநாடுடைய : பிரிஇயங்கரையர் என்பவர் தாமரைப்பாக்கத்து இறைவனுக்கு நாள்தோறும் இரண்டு சலம் சிறப்பு உணவு (உத்தமாக்ரம்) படைப்பதற்காசுச் சலப்பகைப் பூண்டியில் தூணி அளவு நிலம் கொடுத்ததை இக்கல்வெட்டுச் சொல்கிறது. மதுரை கொண்ட ராஜகேசரி என்ற விருதுப் பெயர் சந்தரசோழனுக் குரியதாகக் கருதப்படுகிறது. ஆனால் சுந்தர சோழன் 19 ஆண்டுகளே ஆட்சி செய்தான். இங்கு குறிப்பிடப்படும் 88-வது ஆண்டு ஐயப்பாட்டைத் தருகிறது. இக்கல்வெட்டு பழைய சுல்வெட்டொன்றைப் படியெடுத்து மீண்டும் பொறிக்கப் பட்டதாகும். அப்படிப் பொறிக்கப்பட்ட போது ஆட்சி ஆண்டு தவறுதலாகப் பொறிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This Inscription is dated in the 16th regnal year of Parantaka Chola I Records a gift of ninety sheep to burna perpetual lamp to the deity of Tamaraippakkam by an individual, Arai alias Viranarayana Kavara-~ chetti, son of Singutti, a merchant of Arisanicheri of Kaccippedu. தாமரைப்பாக்கத்து இறைவனுக்குக் காஞ்சிபுரத்து அரிசாணிச்சேரியைச் சேர்ந்த தெலுங்குச் செட்டியும் வணிகனுமான சிங்குட்டி மசன் அறையாக வீர நாராயணன் என்பவன் ஒரு தந்தாவிளக்கிற்காகத் தொண்ணூறு ஆடுகள் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This inscription, belonging to the 29th regnal year of Rajadhiraja I, records the sale of 3000 Kuli of land, to the village temple by the urar of Tamaraippakkam. This sale was effected torepay the loan, the urar already obtained from the treasury during the 31st regnal year of Rajendral. The record also reveals, the migration of the urar, who were unable to bear the torture perpetrated on them, by the authorities to collect a tax called Adimaikkasu. முதலாம் இராசேந்திரசோழன் காலத்தில் அரச பரிவாரத்தினர் தாமரைப் பாக்கத்து ஊராரை வதைத்து அடிமைக்காசு கேட்டபோது உழு குடிகள் ஓடிப் போய் அக்காரினைச் செலுத்த இயலாதநிலை ஏற்பட்டது. ஊரினர் கோயில் கருவூலத்திலிருந்து 30 காசு பெற்று அதைச் செலுத்தினர், கோயிலில் காசு பெற்ற ஆண்டான முதல் இராசேந்திரசோழனின் Slag ஆண்டு முதல் இராசாதிராசனின் 89-ஆவது ஆண்டு வரை கோயிலுக்கு முதலும் வட்டியும் செலுத்தப் படாமல் நிலுவை இருந்தது. அதற்காகத் தாமரைப்பாக்கத்து களரார். கோயில் இறைவனுக்கு ஒரு நிலத்தை விலையாகக் கொடுத்து நிலவிலை ஆவணம் எழுதித் தந்தனர், இதனை இக்கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் நிலத்தின் எல்லைகளும், நிலத்திற்குண்டான வரிகளும் சொல்லப் படுகின்றன.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
The record of Parattaka 0111, dated in his 32. 4 regial year is engraved in continuation of No: 6. It records than an iudividual called Peruvengavudaiyan of Palurkkurram in Miladu, gifted ninty sheep to burn perpetual lamp in the Mahadeva templeat Tamaraip- pakkam, in memory of Mallan Nakkan son of Akkirama Gopan. ஊர்க் கல்வெட்டு எண் 6-ன் இறுதி வரியில் தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது இக்கல்வெட்டில் தாமரைப்பாக்கத்து இறைவனுக்கு மிலாடுநாட்டுப் பாலூர்ச் கூற்றத்துப் பெருவெங்காவுடையான் என்பவன் நக்கன் அக்கிர மகோபன் மகன் மல்லன் நக்கனது நினைவாக ஒரு நந்தா விளக்கெரிக்கத் தொண்ணூறு ஆடுகள் கொடையளித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This inscription is engraved in continuation of the last line of the inscription No: 4 and it records that an individual named Kalamulan Thonnurruvan Nagatti, donated ninty sheep to burn a perpetual lamp to the deity of Mahadeva at Tamaraippakkam. ஊர்க் கல்வெட்டு எண் 4-ன் இறுதி வரியை தொடர்ந்து பொறிக்கப் பட்டுள்ளது. கல்வெட்டு படியெடுக்கப்பட்டு மீண்டும் பொறிக்கப்பட்டதை இது உணர்த்துகிறது. அண்ணாநாம்டுக் களமுழாந் தொண்ணூற்றுவன் நாசுத்தி என்பவர் தாமரைப்பாக்கத்து இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 80 ஆடுகள் அளித்த செய்தி கூறப்படுகிறது.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This record belongs to the 39th regnal year of the chola king Parantakal. A person called Mangalottaman who had been working as Madhyastha of Kamappullur, donated ninty sheep to burn a perpetual lamp to the Mahadeva temple in presence of the residents of Tamaraippakkam to the temple authorities. காமப்புல்லூரைச் சேர்ந்த மத்பஸ்தன் மங்கலோத்தமன் தாமரைப்பாக்கத்து இறைவனுக்குச் சந்திரன் சூரியன் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிய 90 ஆடுகளை தாமரைப்பாக்கத்து ஊரார் மூலம் இருக் கோயிலுடையார்கள் வசம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This inscription belongs to the 32 regnal year of the chola king Parantaka I. It states that the shepherds who grazing the sheep of the deity of Tamaraippakkam have decided to pay the tax Attuk kirai to the temple at Tamaraippakkam, excluding the sheep of the deity. The shepherds are mentioned as Nattukkotta manradigal. It is learnt that a seperate body or forum of shepherds was in existence by this inscription within the limits of Nadu and Kottam. தாமரைப்பாக்கத்து இறைவனது ஆடுகளை மேய்க்கும் இடையர்கள், (மன்றாடிகள்) அவர்களிடம் உள்ள இறைவனது ஆடுகள் போக அதிகமாக உள்ள ஆடுகளுக்கான வரியை இறை) இறைவனுக்கே செலுத்த நாட்டுக் கோட்ட மன்றாடிகள் ama செய்ததை இக்கல்வெட்டுக் குறிக்கின்றது. நாடு : மற்றநும்கோட்டம் அளவில் இடையர்களுக்கான ஒரு பொது அமைப்பு இருந்தமைதெரிறது.
திருவண்ணாமலை>செங்கம்>தாமரைப்பாக்கம்
This inscription belongs to the 30th regnal year of the chola king Sundara chola, records that a chief called Irumudi cho!a Prithiyanga- raiyan endowed 250 velis of land at the village Alampalli to the Mahadeva temple of Tamaraippakkam. : The source of income from these lands were utilised to perform two Sandhis pujas) in this temple i. e. offering food twice a day, to burn two perpetual lamps, to play musical instruments by five persons during the occasion of Sribali andto feed two brahmanas in the temple. The epithet Madurai konda Rajakesari belongs to the chola king Sundara chola. But he did not have ruled more than 19 years. As it seems most of the inscriptions are reengraved there might have occured some errors. பங்கள நாடு உடைய திருமடிச்சோழப் பிரிதியங்கரையன் என்பான் தாமரைப் பாக்கம் இறைவனுக்குத் தரமரைப்பாக்கத்தோடு சேர்ந்த ஆலம்பள்ளி என்ற இடத்தில் 250 (வேலி) புரவு நிலங்களைந் தாரைவார்த்துக் கொடையாகக் கொடுத்துள்ளான், இந்நிலங்களில் வருவாய் கொண்டு தாமரைப்பாக்கம் கோயிலில் இரண்டு பொழுது திருவமிர்து படைக்கவும், இரண்டு நந்தா விளக்குகள் எரிக்கவும், சிறுபலி பூசையின் போது 5 பேர் வாத்தியங்கள் வாசிக்கவும், இரண்டு பிராமணர்களுக்கு உணவு வழங்கலம் வகை செய்யப் பட்டது, பிராமணர்களுக்கான உணவுக்கு ஒருவருக்கு 2 நாழிப்படி அரிசி, 4 காய்கறிகள், தயிர் 8 நாழி, நெப் 1 ஆழாக்கு, பாக்கு (வெறுங்காய் ) 2, மற்றும் வெற்றிலை என்று இருவர்க்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1௦, துரை கொண்ட இராசகேசரியாகச் சுந்தரசோழன் கருதப்படுகின் நான் ஆனால் அவன் 89 ஆண்டுகள் ஆட்டி செய்ததாக வேறு கல்வெட்டுகள் இதுகாறும் கிடைக்கவில்லை, கஸ்வெட்டு படியெடிக்கப்பட்டு மீண்டும் பொறிக்கப்பட்ட தில் தவறு நிகழ்த்திருக்கலாம்.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- இக்கல்வெட்டு சிதைந்துள்ளது. அய்ப்பசி விசு விசேட வழிபாடு குறிப்பிடப்பட்டுதீளள்ளது. இறைவனுக்குத் திருவமுது படைக்கவும், பிராமணர் இருபது பேருக்கு உணவு வழங்கவும் கொடையளிக்கப்பட்டிருந்த செய்தி காணப்படுகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- துண்டுக் கல்வெட்டு. இரண்டு மா நிலம் வழங்கப்பட்டமையைக் குறிப்பிடுகிறது. இந்நிலத்துக்கு இறை செலுத்துவதற்காகப் பத்துக் காசும் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பத்துக் காசு முதல் கெடாமல் அதன் பலிசையால் ஆண்டாண்டுதோறும் இந்நிலத்துக்கு இறை செலுத்தி வரப்பட்டது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- இறைவனுக்குச் சிறுகாலைச் சந்தியின் போது திருவமிர்து செய்வதற்கு நெல் முதலியன அளித்தது பற்றி இத்துண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- இறைவனுக்குச் சிறுகாலைச் சந்தியில் அளித்த திருவமிர்து பற்றி இத்துண்டுக் கல்வெட்டால் அறியப்படுகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- முதலாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி மட்டுமே காணப்படுகிறது. இறையிலியாக நிலம் விலைக்கு வாங்கியது பற்றிக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- திரிபுரஈஸ்வரமுடையார் கோயில் சொக்க நாயனார்க்கு தேவதான இறையிலியாக நிலமும், குளமும் அளித்தது பற்றி இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டின் பெரும் பகுதி சிதைந்துள்ளது. முழுமையாக செய்தியைத் தெரிந்து கொள்ள இயலவில்லை.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- பூதலூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் இறைவனுக்கு ராஜா சரபோஜி அபிஷேகக் கட்டளைக்காகக் கார் நிலம் அரை வேலியும் பசானத்தில் அரை வேலியுமாக தானமளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- பாண்டிகுலாசனி வளநாட்டு எயிநாட்டு வளம்பகுடித் திருநட்டமாடியான விஜயாலய முத்தரையன் என்பான பூதலூர் வட்டம் பூதலூரில் எழுதந்தருளவித்த குலோத்துங்க சோழ ஈஸ்வரமுடையார்க்குப் பன்னிரண்டாவது பசான முதல் நிலத்திற்கு முன்னர் வரி செலுத்தியது போலல்லமால் அவ்வரிகளை நீக்கி தேவதான இறையிலியாக அளித்தமையும் அதற்குச் சிலர் சாட்சிக் கையெழுத்திட்டிருப்பதும் இக்கல்வெட்டால் அறிய வருகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- பூதலூர் வட்டத்து பூதலூரில் எழுந்தருளுவித்த குலோத்துங்க சோழ ஈஸ்ரமுடையார் கோயில் தேவகன்மிக்கும், கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வானுக்கும் இக்கோயிலுக்கு வேண்டிய நிவந்தங்கள் இறுப்பதற்காக எத்திகிரி கொண்ட சோழ நல்லூர். . . மருத்] துவக்குடி உட்பட்ட இடத்தில் நிலம் அளிக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. பின்னர் அந்நிலங்கள் தேவதான இறையிலியாக ஆக்கப்பட்ட ஆணையைத் திருமந்திர ஓலை இராசநாராயண மூவேந்தவேளான் எழுத, சாட்சிக் கையெழுத்தும் பலர் இட்டனர் என்பதை இக்கல்வெட்டால் அறியலாம்.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- மூன்றாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு. இறையிலி இட்ட திருமுகத்திற்கும் உள்வரிக்கும் கல்வெட்டுப் படியாகப் பொறிக்கப்பட்டுள்ளது.