Skip to main content

1128 results found

தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துப் பிரமதேயம் பேராலத்தூர் ஸபையார் கருந்திட்டைக்குடி மகாதேவர்க்கு, ஆதிசண்டேஸ்வரர் வசம் எழுபத்தைந்து காசுகள் பெற்றுக் கொண்டு விலைக்கு விற்ற நிலத்திற்கு இறையிலி செய்து கொடுத்தது பற்றியும் அதற்கான எல்லை பற்றியும் இக்கல்வெட்டு கூறுகிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- கல்வெட்டில் வரிகளின் இடையிடையே சிற்சில சொற்கள் காணப்படவில்லை. கருந்திட்டைக்குடி உடையதேவர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் நந்தியாவட்டம் போன்ற செடிகளை அமைக்க இவ்வூர் நாற்பத்தெண்ணாயிரவர் இறையிலியாக நிலம் அளித்ததையும், குருகாடிக் கிழான் அரயன் விக்ரம சோழனான இராஜகம்பீரன் இந்த ஆவணத்தை எழுதியுள்ளதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- இராஜராஜன் படைவீரரில், குதிரைச் சேவகரில் அரங்கன் காரியான சோழ விச்சாதிர முத்தரையனும், இளையபடை இருமடி சோழ வீரரில் காரிகுளிர் வாகையும் ஸ்ரீ இராஜராஜதேவர் காண அவர் முன்னிலையில் வில்லால் சண்டையிட்டபோது காரிகுளிர் வாகை இறந்து பட்டமையில், காரிநக்கத்தின் மகன் கண்டன் காரியும், காரி கொற்றத்தின் மகள் பொற்காரியும் இவள் கொழுந்தன் குட்டி பொன்னாடையும் இக்கோயிலில் இறைவனுக்கு விளக்கு எரித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த வில் பொருது சண்டையிட்ட நிகழ்ச்சி வீரர்கள் தங்கள் திறம் காட்டுவதற்காகவும் மன்னர் கண்டு களிப்பதற்காகவும் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- பாண்டிகுலபதி வளநாட்டு ஏரியூர் நாட்டு கருவுகுல வல்லத்து உடையார் குலசேகரமுடைய நாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளிடம் வல்லம் ஊரார், இக்கோயிலுக்கு ஆடித்திருநாள் நடத்துவதற்கும் அப்போது யாகமண்டலத்தில் இறைவனை எழுந்தருளச் செய்தல், திருக்கோட்டுத் திருநாள் முதல் நாச்சியார் திருநாள் இறைவனுக்கு அமுதுபடி சாத்துபடி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தாங்களை ஊராரிடமிருந்து பெற்று மேற்குறிப்பிட்ட அனைத்துத் திருநாள்களையும் நடத்துவதாகவும், இதைத் தடைபடாமல் நடத்துவதாகவும் இசைவு தெரிவித்து எழுதித் தந்த செய்தியைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் இறுதியில் ஊரார் அனைவரும் கையொப்பமிட்டுள்ளனர்.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- அரசனுடைய நேரடி ஆணையாக உள்ளது இக்கல்வெட்டு. பாண்டிகுலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டு வல்லத்து உடையார் கரிகால சோளீசுவரமுடையார்க்கும், வல்லத்து விக்கிரமசோழ விண்ணகராழ்வார்க்கும் வேண்டும் நிமந்தங்களுக்கும் இறுப்பதற்காக பருதிக்குடி வண்டாழைநிலத்து நீர் நிலத்தையும் புன்செய் நிலத்தையும் திருத்தித் தியாக சமுத்திர நல்லூர் என்றும், கூத்துக்குடி நிலத்தில் நீர் நிலம் புன்செய் நிலத்தையும் திருத்தி விக்கிரமசோழநல்லூர் என்னும் பயரால் அந்தராயம் பாட்டம் உடபட இறையிலியாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- அரசனுடைய நேரடி ஆணையாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. பாண்டிக்குலாசனி வளநாட்டு வல்லத்துடையார் கரிகால சோளீசுவரமுடையார் கோயில் சீகாமகோட்டமுடைய நாச்சியார்க்கு வேண்டும் நிமந்தத்துக்கு இறுப்பதாக தேவதான இறையிலி நிலம் அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>வல்லம்
- கரிகால சோளீசுவரமுடையார் கோயிலுக்கு இறையிலியாக நிலம் கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திருவேதிக்குடி
- முதலாம் இராஜராஜ சோழனின் ஆணையின்படி, அவனது அதிகாரியாகிய மீனவன் விளத்தூர் நாட்டுக்கோன் என்பவன், இரவில் நடைபெறும் ஸ்ரீபலி நிகழ்ச்சியில் இறைவனை எழுந்தருளச் செய்யும் போது 30 விளக்கு எரிப்பதற்கு தேவையான எண்ணைக்கும், இவ்விளக்குகளை படிப்பவர் நால்வர், மலர் பறித்து பூமாலையாக்கித் தருவதற்கு இருவர், நந்தாவனத்தை பராமரிப்போர் மூவர், ஸ்ரீபலியின் போது வழிபாட்டிற்கு திருவமுது தயாரிப்பவன் ஒருவன் காள முதுவோர் நால்வர் ஆகியோருக்கு மன்னன் அளித்த நிவந்தம் கொண்டு ஏற்பாடு செய்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>திட்டை
- தென்குடித் திட்டை உடையார் கோயில் திருவிழா, பூசைகளுக்காகக் கோயிற் தானத்தார் வசம் ஆனி மாதம் இருபத்தொன்றாம் தேதி முதல் அடைப்பான் நிலத்தில் ஐவேலி நிலம் முதலடங்க இறையிலியாக அளிக்கப்பட்டது. இரண்டு போகம் பயிர் செய்து கொள்ளவும், நீக்கப்பட்டுள்ள வரிகள் எவை எவை என்பது பற்றியும் இக்கல்வெட்டு குறிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>கடுவெளி
- தற்போது இக்கல்வெட்டு பெரிதும் சிதைந்துவிட்டது. ஆயின் இக்கல்வெட்டு தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள் பாகம் 2-ல் காணப்படுகிறது. அதன் வாசகம் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் மூலவாசகம் முழுவதும் இல்லாததால் திருந்திய வடிவத்தைக் கொடுக்க இயலவில்லை. இராஜராஜனுடைய பதினாலாவது ஆட்சியாண்டில் இக்கோயில் இறைவனுக்கு நான்கு மா நிலம் அளிக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>கடுவெளி
- தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கடுவெளி கிராமத்திலிருக்கும் ஆகாசபுரீஸ்வரர் கோயிலில் தென் பக்கத்திலிருக்கும் நந்தவனத்தை விருத்தி செய்து இறைவனுக்குப் படைக்கப் பலவித பூச்செடிகளைப் பயிரிடுவதற்காகப் பனையூரிலிருக்கும் மருதையா பிள்ளை மகன் வெள்ளாளச் சாதியைச் சேர்ந்த குப்ப பிள்ளை, சூரிய மூர்த்தி குருக்களிடம் 50 ரூபாய் கட்டினார். அதிலிருந்து வரும் வட்டியினைக் கொண்டு இந்த நந்தவனப் பரிபாலனம் நடந்து வர வேண்டுமென்றும் இடையில் தடங்கல் ஏற்பட்டால் வேறு யாரேனும் எடுத்து நடத்த வேண்டுமென்றும் இக்கல்வெட்டில் கூறப்பட்டள்ளது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>இராஜேந்திரம் அம்மன்பேட்டை
- உடையார் பொதுமுத்தீஸ்வரமுடையார் கோயிலில் பூசை முதலானவை நடைபெறாமல் போனமையினால் மீண்டும் பெருமாள் திருமேனி கலியாண திருமேனியாகவும், பூசை முதலாவை நடைபெறவும் திருநாமத்துக்காணியாக அரைமாக்காணிக் கீழ் நாலு மா நிலம் இவ்வூர் சபையாரால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>தஞ்சாவூர்>இராஜேந்திரம் அம்மன்பேட்டை
- இராசேந்திரசோழ நல்லூர் உடையார் பொதுமுத்தீஸ்வரமுடையார் கோயில் திருநாமத்துக் காணியான நிலங்கள் பயிர் விளைச்சலின்றிப் போனமையில் அதற்கான நெல் : முதலானவற்றை இறுக்க மாட்டாமையினால் அக்கோயில் சிவப் பிராமணன் ஓடிப் போய் விட கோயில் வழிபாட்டில் தடை ஏற்பட்டது. மீண்டும் கோயிலில் வழிபாடு, விழாக்கள் நடத்துவதற்குத் திருநாமத்துக்காணியாக அரைமா அரைக்காணி நிலத்தை அவ்வூர்சபையார் இறையிலியாகக் கொடுத்த செய்தி இக்கல்வெட்டால் அறியப்படுகிறது.
கடலூர்>ஸ்ரீ முஷ்ணம்>ஸ்ரீ முஷ்ணம்
- திருமுட்டம் இறைவன் பெயர் ஆதிவராகநாயனார் என்று குறிப்பு காணப்படுகிறது.
கடலூர்>ஸ்ரீ முஷ்ணம்>ஸ்ரீ முஷ்ணம்
- நடுவில் மண்டலம் வழுதலம்படடூச சாவடியில் வெள்ளாற்றுக்கு வடக்கிலுள்ள புவனேகவீரன் பட்டணத்தில் ஆலம்பாடி பற்றிலுள்ள சன்னாந நத்தம் மற்றும் கிளாவுடைய நத்தம் ஆகிய இரண்டு கிராமங்களை திருமுட்டம் ஆதிவராகப் பெருமாள் கோயில் இறைவனுக்கு நைவேத்தியம், நெய்விளக்கு. திருநந்தவனம் அகிய தேவைகளுக்காக வேங்கடயர் என்பவர் அளித்தச் செய்தி.
கடலூர்>காட்டுமன்னார் கோயில்>கூடலையாத்தூர்
- துண்டுக் கல்வெட்டு. இக்கோயில் இறைவனுக்கு தினசரி அமுதுபடிக்கு இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டச் செய்தியைத் தெரிவிக்கின்றது.
கடலூர்>காட்டுமன்னார் கோயில்>கீழக்கடம்பூர்
- இறைவன் பெயர்களும் சில நாயன்மார் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள்: அர்த்த மண்டபம், மகா மண்டபச் சுவர்களில் உள்ள தேவகோட்டம் மற்றும் பீடங்களின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளன.
கடலூர்>காட்டுமன்னார் கோயில்>திருநாரையூர்
- துண்டுக் கல்வெட்டு. சர்வமானியமாக இறையிலியாக நிலம் அளிக்கப்பட்டச் செய்தி.
கடலூர்>காட்டுமன்னார் கோயில்>திருமூலஸ்தானம்
- இக்கோயில் இறைவனுக்கு கால் விளக்குக்கு இக்கோயில் சிவபிராணர் 4 காசுகள் அளித்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது.
கடலூர்>காட்டுமன்னார் கோயில்>திருமூலஸ்தானம்
- துண்டுக் கல்வெட்டு. திருமூலஸ்தானத்து இறைவனுக்கு பல்லவபேராயன் என்பவன் 5 கழஞ்சு பொன்னும், வரி இறையிலியாக நிலம்தானம் அளித்தச் செய்தி.